ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
என். ராமலிங்கம், மயிலாடுதுறை.
கேள்வி:
ஜோதிடப் பேரொளிக்கு என் பணிவான வணக்கங்கள். மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் படித்து, 2012 ஆம் ஆண்டு வரை பேராசிரியராக பணிபுரிந்து, சிறப்பான மதிப்பெண்கள் கிடைத்ததால் ஐஐடி ஒன்றில் முனைவர் பட்டம் பயில இடம் கிடைத்து, ஐஐடியில் சேர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பல்வேறு இன்னல்களை
அனுபவித்து விட்டேன். இன்றுவரை முடிக்க முடியவில்லை.
ஜோதிடம், ஆன்மிகத்தில் மிகுந்த பற்று கொண்டவன். நான் மனதார ஒருவருக்கும் தீங்கு செய்ததில்லை. ஆனால் கடந்த 8 வருடங்களாக படாதபாடு பட்டு விட்டேன். குடும்பத்தை விட்டு 8 வருடமாக பிரிந்து பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வருகிறேன். நேரம், உடல் உழைப்பு மற்றும் பணம் செலவானதுதான் மிச்சம். கொடுக்கப்பட்ட காலத்தையும் தாண்டி என் ஆராய்ச்சி சென்றுவிட்டது.
இடையில் தாயாருக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு
அவதிப்படுகிறார். தாயையும் கவனிக்க முடியாமல், ஆராய்ச்சிப் படிப்பையும் முடிக்க முடியாமல், மனைவி-மகளை பிரிந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறேன். என் பிஎச்டி படிப்பு எப்போது முடியும்?
தாயின் உடல்நலம் சரியாகுமா? மனைவி மகளுடன்
சேருவது எப்போது? பிஎச்டிக்கு பிறகு என்ன மாதிரியான வேலை அமையும்?
பதில்:
(துலாம் லக்னம், துலாம் ராசி, 1ல் சூரி, சந், புத, சுக், குரு, 4ல் ராகு, 5ல் செவ், 8ல் சனி, 10ல் கேது, 16-11-1981 அதிகாலை 4-30 மயிலாடுதுறை)
தனம், வாக்கு, குடும்பம் என்று சொல்லக்கூடிய இரண்டாமிடத்தை பார்க்கும் நிலையில் எட்டில் சனி அமர்ந்திருப்பதால் சனிதசை முடியும்வரை குடும்பத்துடன் சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மூன்று சுப கிரகங்களின் பார்வையில் சுபத்துவமாக சனி இருப்பதால் படிப்பு போன்ற நல்ல விஷயத்திற்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள். இதே சனி பாப கிரகங்களின் ஆளுமையில், சேர்க்கையில் இருந்திருந்தால் கணவன் மனைவி சண்டையிட்டுப் இருந்திருப்பீர்கள்.
2022ம் வருடத்திற்கு பிறகுதான் பிஎச்டி முழுமையடையும். சனி தசையின் இறுதிப் பகுதியில்தான் குடும்பத்துடன் இணைய முடியும். புதன் தசையில் இருந்து குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்து இருப்பீர்கள். அதுவரை பொறுத்திருக்கவும். நான்காம் இடத்தில் உள்ள ராகுவின் புக்தி கடந்த ஆறு மாதங்களாக நடப்பதாலும், சந்திரனுக்கு எட்டில் சனி இருந்து தசை நடத்துவதாலும் இந்த ராகு புக்தி முழுக்க தாயாருக்கு ஆரோக்கிய குறைவு இருந்துதான் தீரும்.
தாயார் பற்றிய நல்ல பதில் இல்லை. புதன் உங்கள் ஜாதகத்தில் அதிகமான சுபத்துவம் உள்ள கிரகம் என்பதால் புதனின்
காரகத்துவங்களான சொல்லிக் கொடுத்தல், அறிவால் பிழைத்தல் போன்ற துறைகளில் உங்களுடைய ஜீவனம் அமையும். புதன்தசை முதல் எவ்வித குறையுமின்றி மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(07.04.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.