adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஆ. முருகன், புதுச்சேரி.

கேள்வி:

பள்ளிப் படிப்பில் முதல் மாணவனாக இருந்தேன் ஆனால் கல்லூரியில் நன்றாகப் படிக்க முடியவில்லை. பிடெக் டிகிரி முடித்தேன். வேலை சரியாக வேலை கிடைக்கவில்லை. புத்தி எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? எந்த வேலைக்கு செல்வது என்று குழப்பமாக உள்ளது. வேலை செய்வதற்கு முன் நமக்கு அந்த வேலைக்கு ஏற்ற தகுதி உள்ளதா என்ற கேள்வியும் அடிக்கடி எழுகிறது. நான் பார்த்த மூன்று ஜோதிடர்கள் எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் வெளிநாடு எண்ணமும் விருப்பமும் எனக்கு இல்லை.


ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும் என்று சொல்லியிருக்கிறீர்கள். என் ஜாதகப்படி எந்த வேலையில் சேர்ந்தால் அல்லது எந்த தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? புதன் சந்திர கேந்திரத்தில் இருந்தால் ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்படும் என்று நீங்கள் சொல்வதன் படி எனக்கும் ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது. ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியுமா?

கும்ப லக்னத்திற்கு சூரிய, சந்திர தசைகள் நடுத்தர வயதுகளில் வரக்கூடாது என்று அடிக்கடி சொல்கிறீர்கள். எனக்கு அதுபோன்ற அமைப்பு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் வரும் சூரிய சந்திர தசையில் நான் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? எனது ஆயுள் எவ்வளவு? ஏதாவது உடல் நலக் கோளாறு வந்து கொண்டே இருக்கிறது. நோய் எப்போது விலகும்? இன்னும் ஐம்பது வருடத்திற்கு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தாங்கள் தயவுசெய்து கூறவேண்டும். குழப்பமான என் மனதையும் என் வாழ்க்கையையும் நீங்கள்தான்  தெளிய வைக்க வேண்டும்.

பதில்:

(கும்ப லக்னம், கடக ராசி, 1ல் சனி, 4ல் கேது, 6-ல் சந், 8ல் சூரி, சுக், குரு, 9ல் புத, செவ், 10ல் ராகு, 11-10-1993 மதியம் 3-43 புதுச்சேரி)

இன்னும் ஐம்பது வருடங்களுக்கு இப்படித்தான் இருப்பீர்கள் என்று நான் துல்லியமாகப் பதில் சொன்னாலும் அதிலும் ஐநூறு சந்தேகம் வரும் ஜாதகம் உங்களுடையது. கேள்வி அனுப்புபவர்கள் அனைவருமே பக்கம் பக்கமாக எழுதி அனுப்புகிறீர்கள். அதில் நீங்கள் வித்தியாசமாக இன்னும் ஐம்பது வருடத்திற்கு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் என்று எழுதி விட்டீர்கள். மாலைமலர் ஜோதிடத்திற்கு என்று ஒதுக்குவது ஒரு சிறிய இடம் மட்டும்தான். இதில் உங்களின் 50 வருட வாழ்க்கை வரலாறை எழுத இடம் போதாது.

கும்ப லக்னம் என்றாலே குழப்பம்தான் என்று எழுதுகிறேன். அதை நிரூபிப்பது போலத்தான் உங்களுடைய கடிதம் இருக்கிறது. தவறான வாக்கிய பஞ்சாங்கப்படி உங்களது ஜாதகம் எழுதப்பட்டிருக்கிறது. திருக்கணிதப்படி லக்னத்திலேயே சனி ஆட்சிபெற்ற அமைப்பில் இருப்பதால் நீங்கள் எதிலும் ஒரு குழப்பவாதி யாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை என்பது சிறிதும் இருக்காது.

லக்னத்திற்கோ, ராசிக்கோ, லக்னாதிபதிக்கோ சுபத்துவம் கிடைக்காத நிலையில் சனி தனித்து ஆட்சியாக இருப்பதால் நீங்கள் எதிலும் ஒரு குழப்பவாதிதான். பள்ளிப் படிப்பிற்கு பிறகு வந்த ராகு, குரு, சனி ஆகிய புக்திகள் சஷ்டாஷ்டகமற்றும்  பாபத்துவ  நிலையில் இருப்பதால் உங்களுக்கு கல்லூரி படிப்பில் கவனம் செல்லவில்லை. தற்போது நீச்ச பரிவர்த்தனை நிலையில் இருக்கும் சுக்கிர தசையில், புதன் புக்தி நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிலும் குழப்பம்தான் மிஞ்சுகிறது. 2025 வரை இந்த குழப்பம் உங்களுக்கு நீடிக்கும்.

எட்டாமிடத்தில் குரு, சுக்கிரன் அமர்ந்து, குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்றுதான் பிழைப்பீர்கள். நடுத்தர வயதிற்கு பிறகு குறிப்பாக சந்திர தசை முடிந்த பின் வாழ்க்கையில் செட்டில் ஆகும் அமைப்புள்ள ஜாதகம் உங்களுடையது. அதுவரை வேலை. தொழில் எதுவும் உங்களுக்கு சரி வராது.

சனி பாபத்துவமாகி வலுத்த நீங்கள் எதையும் சந்தேகத்தோடு அணுகி குழப்ப நிலையில் இருப்பீர்கள் என்பதால் உங்களுடைய நிலைக்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சந்தேகம், சந்தேகம், சந்தேகம் எனக்கொண்டு யாரையும், எங்கும், எதற்காகவும் நம்ப இயலாத, முடியாத ஒரு நிலையை லக்னத்தில் இருக்கும் பாபச் சனி உங்களுக்கு தருவார் என்பதால் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சந்தேகப்பட்டு குழப்பமாக இருந்தே காலத்தைக் கழிப்பீர்கள்.

ஜாதகப்படி சூரியன் அதிக சுபத்துவமாக இருப்பதால் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் உங்களுடைய வேலை அமையும். சூரியதசை  தூர இடங்களுக்கு சென்று உங்களை பிழைக்க வைப்பதாக இருக்கும் என்றாலும் சந்திரதசை கடன் நோய் எதிரி போன்ற அமைப்புகளில் உங்களை சிக்க வைக்கும். ஆயினும் சந்திரன் நல்லவேளையாக பரிவர்த்தனை பெற்ற புதனின் சாரத்தில் இருப்பதால் பெரிய கெடுதல்கள் எதையும் செய்யாது.

சந்திர தசையில் நீங்கள் பண விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சொந்தத் தொழில் செய்யவே கூடாது. கடன்காரன் ஆகிவிடுவீர்கள். கண்டிப்பாக உண்டு என்கின்றபடி உங்கள் ஜாதகத்தில் நல்லவிதமாக சொல்லக்கூடிய ஒரே விஷயம் நீங்கள் தீர்க்காயுள் இருப்பீர்கள் என்பதுதான். 45 வயதிற்கு மேல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(24.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.