ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
மணிவண்ணன். திருப்பூர்.
கேள்வி:
வேதஜோதிடத்தில் முரண்பட்ட பல விதிகளை எளிமையாக்கி, அனைவருக்கும் புரியும் வண்ணம் சுபத்துவ சூட்சும வலு என்ற கோட்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஜோதிட பிதாமகருக்கு வணக்கம். நல்லவைகளை முதன்மைப்படுத்தி தீயவைகளை நாசுக்காக சொல்லும் தங்களின் மாலைமலர் பதில்களை ஜோதிட உலகமே உற்றுப் பார்க்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ, அதன் தொழில்தான் அமையும் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் எனது மகன் என்ன தொழில் செய்வான்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது சொந்தத் தொழில் செய்வானா? அவனது தொழில் என்னவிதமாக அமையும்? மிக மிக முக்கியமாக எனது மகன் சுழல் விளக்கு வைத்த வாகனத்தில் வலம் வருவானா?
பதில்:
(சிம்ம லக்னம், மேஷ ராசி, 1ல் குரு, 3ல் கேது, 7ல் சூரி, புத, 8ல் சுக், 9ல் சந், செவ், ராகு, 11ல் சனி, 24-2- 2004 மாலை 5-45 தாராபுரம்)
ஒருவருடைய ஜாதகத்தில் அதிக சுபத்துவம் பெறும் கிரகத்தின் தொழில் அமையும் என்ற என்னுடைய சுபத்துவ சூட்சுமவலு கோட்பாட்டினை அநேக ஜாதகங்களில் நிரூபித்துக் காட்டி இருக்கிறேன். ஜோதிடத்தில் ஒரு விதி பலமுறை நன்கு சோதிக்கப்பட்ட பிறகே நிரந்தர விதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதன்படி எனது காலத்திற்கு பிறகு வரும் ஜோதிடர்கள் நிச்சயமாக இந்த விதியினை ஏற்றுக்கொண்டே தீருவார்கள்.
உங்களுக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும் என்று நினைக்கிறேன்.
ஆகவேதான் மகனின் ஜாதகத்தில் உள்ள ஒரு கருத்தை மையப்படுத்தி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஒரு ஜாதகத்தில் குரு லக்ன சுபராகி, அதிக வலு பெற்று, எத்தனை கிரகங்களோடு தொடர்பு கொள்கிறதோ அத்தனை கிரகங்களும் மிகுந்த நற்பலனை செய்யும் என்பதோடு, அந்த கிரகங்களின் தசையும் தொடர்ச்சியாக வருமாயின் அவன் கொடுத்து வைத்தவனாக இருப்பான். இந்த அமைப்பு உங்கள் மகனுக்கு இருக்கிறது.
மகனின் ஜாதகப்படி குரு திக்பலம் பெற்று, அதிநட்பு வீட்டில் லக்னத்தில் அமர்ந்துள்ள நிலையில், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, புதன் ஆகிய ஐந்து கிரகங்களோடு தொடர்பு கொள்கிறார். மகனுக்கு தற்போது நடக்கும் சுக்கிரதசை 26 வயதில் முடியும். பிறகு 32 வயது வரை சூரிய தசை, 42 வயது வரை சந்திரன், 49 வரை செவ்வாய், 67 வரை ராகு 83 வயது வரை குரு என வாழ்நாள் முழுவதும் குருவின் சம்பந்தம் மற்றும் பார்வை பெற்ற தசைகள் வருவது மகனின் ஜாதகம் முதல் தரமான யோக ஜாதகம் என்பதை காட்டுகிறது.
சிம்ம லக்னத்திற்கு வரவே கூடாது என்று நான் சொல்லும் சனிதசை உங்கள் மகனின் அந்திம காலத்தில்தான் வருகிறது. அதிலும் 6-க்குடைய சனி அந்த ஆறாம் வீட்டிற்கு 6ல் மறைந்திருப்பதால் தீமைகளை தன்னுடைய புக்திகளில் கூட செய்யமாட்டார். ஒரு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் வலுத்தால் அந்த ஜாதகர் எதையும் நேர்மையான முறையில் நல்ல பருவத்தில் அனுபவிக்கப் பிறந்தவர். மகனது ஜாதகத்தில் சூரியனே அதிக சுபத்துவமுள்ள கிரகம். குருவின் நேரடிப் பார்வையில் சிவராஜ யோகத்தில் சூரியன் அமர்ந்து தன்னுடைய வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தி, சிம்மம் குருவின் இருப்பால் வலுவாகி, சிம்மாதிபதியும் குருவின் பார்வையால் சுபத்துவம் அடைவதால், உங்கள் மகன் சுழல் விளக்கு வைத்த காரில் வருவார். வாழ்த்துக்கள்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆத்திய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.
(28.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.