adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒரு லட்சத்தை மொத்தமாகப் பார்ப்பேனா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பரஞ்சோதி, காஞ்சிபுரம்.

கேள்வி:

58 வயது முடியப்போகிறது. சரியாகச் சொன்னால் 28 வயதிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். 30 வருடங்களாக வாட்ச்மேன் வேலை செய்து வருகிறேன். முன்னேற்றம் வரும் வரும் என்று எதிர்பார்த்து இந்தக் கேள்வி எழுதும் வரை வெறும் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து வருகிறேன். இத்தனை வருடங்களில் என் கையில் ஒரு லட்சம் ரூபாயை வைத்து பார்த்ததே இல்லை. மணவாழ்க்கையும் முறை இல்லை. இல்லாதவன் சொல் சபை ஏறாது, இல்லானை இல்லாளும் மதியாள். இதுதான் என் வாழ்க்கையில் இப்போது நடக்கிறது. சர்ச், மசூதி, பாபா கோயில், திருப்பதி, கபாலீஸ்வரர் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் என எல்லா கோயில்களுக்கும் சென்று வந்தேன். ஒரு விமோசனமும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்வதைவிட சாவதே மேல் என்று என்றுதான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இனிமேலாவது பொருளாதாரரீதியாக ஏதேனும் முன்னேற்றம் வருமா அல்லது வெறும் எதிர்பார்ப்பிலேயே என் வாழ்க்கை முடிந்து விடுமா?


பதில்:

(ரிஷப லக்னம், தனுசு ராசி, 2ல் செவ், 4ல் ராகு, 8ல் சந், குரு, சனி, 9ல் சூரி, புத, 10ல் சுக், கேது, 15-1-1961 மதியம் 2-30 பொள்ளாச்சி)

ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில் அமையும் என்பதை என்னுடைய சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டின்படி எழுதிவருகிறேன். அதைப் போலவே ஒருவர் பொருளாதார நிலையில் மிக உயர்வான நிலைக்குச் செல்லவேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் 2, 9, 10, 11ம் பாவகங்கள் மிகுந்த சுபத்துவமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்பது விதி.

உங்களுடைய ஜாதகப்படி காவல்துறை, இராணுவம், வாட்ச்மேன் போன்ற யூனிஃபார்ம் அணியும் துறைகளுக்கு காரணமான செவ்வாய், தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து, அவரை அமாவாசைக்கு மிக அருகில் இருக்கும் கிட்டத்தட்ட சனிக்கு நிகரான தேய்பிறைச் சந்திரனும், அவருடன் இணைந்திருக்கும் சனியும் பார்த்து பாபத்துவம் அடைந்த நிலையில், அங்கே இருக்கும் ஆட்சி பெற்ற குருவும் செவ்வாயைப் பார்ப்பதால் செவ்வாயின் வலுவிற்கேற்ப நீங்கள் வாட்ச்மேன் தொழிலில் இருக்கிறீர்கள். இதே செவ்வாய், வளர்பிறை சந்திரனின் பார்வையிலிருந்தால் காவல்துறையில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள்.

நவாம்சத்தில் செவ்வாய், சனியுடன் இணைந்திருப்பதும் குற்றம். ஆயினும் செவ்வாய்க்கு ராசியில் சனியுடன் இணைந்துள்ள குருவின் பார்வையும், அம்சத்தில் அவர் குருவின் வீட்டில் இருப்பதாலும், உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் காவலாளியாக வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

பொருளாதார நிலைமை என்று எடுத்துக்கொண்டால், இரண்டாம் அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்து, இரண்டில் செவ்வாய் அமர்ந்து, இரண்டை சனி பார்த்து, ஒன்பதாம் வீட்டில் சூரியன் அமர, 10-ஆம் இடத்தில் ராகு-கேது சேர்க்கை, பதினொன்றாம் அதிபதி குரு, செவ்வாய், சனி சேர்க்கை என, 2, 9, 10, 11 ஆம் பாவகங்கள் வலுவிழந்துள்ள நிலையில் மிகப் பெரிய பொருளாதார அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

மேலும் ஒரு மனிதன் முன்னேற்றம் அடைவதற்கு தசாபுத்தி அமைப்புகளும் ஆதரவு கொடுக்கவேண்டும். கடந்த 22 வயதிற்கு பிறகு உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை தசைகளும் சூரிய, சந்திர, செவ்வாய், ராகு என அவயோக தசைகளாகவே அமைந்திருப்பதால், இது வரையில் பொருளாதார முன்னேற்றம் இல்லை.

வாழ்வின் பிற்பகுதியில் சனியின் இணைவு கொண்ட குருதசை உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க இருப்பதால் ராஜயோகாதிபதி சனி இணைவு பெற்ற குரு ஓரளவிற்கு நன்மையை செய்வார். குருதசை முதல் உங்களுக்கு வாழ்க்கையில் ஓரளவிற்கு பொருளாதார முன்னேற்றமும் நிம்மதியான சூழலும் ஏற்படும். குரு ஆட்சி பெற்று இருப்பதால் குழந்தைகள் மூலமான சந்தோஷம் உங்களுக்கு இருக்கும்.

கர்மாவினை அனுபவிப்பதற்காக பிறந்த பிறவியாகிய நீங்கள், இம்முறை அந்திம காலத்தில் மட்டுமே நிம்மதியையும், ஓரளவிற்கு பொருளாதார செழிப்பையும் பெற இயலும். ஜாதக அமைப்பின்படி பன்னிரெண்டாம் வீட்டையும், பன்னிரெண்டாம் அதிபதியையும் சுபர் பார்த்து, குரு-சனி சேர்க்கை உள்ளதால் அடுத்த பிறவி உங்களுக்கு மேம்பட்ட நிலையில் அமையும். வாழ்த்துக்கள்.

(14.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.