adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தப்பாகப் பார்த்து விடுகிறேன்….

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஈஸ்வரன், சங்கரன்கோவில்.

கேள்வி:

மானசீக குருவிற்கு வணக்கம். கடந்த இரண்டு வருடங்களாக எனது பார்வை முற்றிலும் தவறான நோக்கத்துடன், தவறான இடத்தில் மற்றவர்களைப் பார்க்கிறது. இதை கவனிக்கும் அனைவரும் என்னைக் கேவலமாக பேசுகின்றனர். அர்த்தாஷ்டமச் சனியின் காரணமாக இப்படி நடக்கிறதா? அல்லது வாழ்க்கை முழுவதும் என் பார்வை இப்படித்தானா? மற்றவர்களை இப்படித்தான் பார்ப்பேனா? அரசு வேலை கிடைக்குமா? சொந்தத் தொழில் செய்யலாமா? உங்களுடைய சுபத்துவ சூட்சுமவலு கோட்பாட்டின்படி எனது ஜாதகத்தில் எந்த கிரகம் மிகுந்த சுபத்துவமாக உள்ளது என்று கூறவும்.


பதில்:

(தனுசு லக்னம், கன்னி ராசி, 1ல் புத, சுக், செவ், ராகு, 2ல் சூரி, சனி, 7ல் கேது, 9ல் குரு, 10ல் சந், 25-1-1992 அதிகாலை 5-30 சங்கரன்கோவில்)

கடந்த ஒரு வருட காலமாக சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் தசை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்து அம்சத்தில் ஆட்சியாக இருக்கிறார். தற்போது நீங்கள் 28 வயதை நெருங்கி கொண்டிருக்கிறீர்கள். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாலுறுப்புகளை பார்க்க ஆசை வரும் வயதுதான் இது. இது போன்ற எண்ணங்களால் தூண்டப்படுவது எல்லோருக்கும் இயற்கையாக வருகின்ற ஒரு நிகழ்வுதான். உலகில் பிறக்கும் ஆண் பெண் அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை கடந்துதான் வருகிறோம்

ஒருவகையில் பார்த்தால் மனிதன் ஒரு சமூக மிருகம் என்றே அழைக்கப்படுகின்றான்.  மனதில் நாம் என்ன நினைக்கிறோம் என்பது வெளியே யாருக்கும் தெரியாத வகையில் எல்லோரும் இங்கே நல்லவர்கள்தான். ஆனால் மனதைக் கடந்து உள்ளே சென்று அடுத்தவர்களின் எண்ணங்களை படிக்க நம்மால் முடியுமானால் நாம் எல்லோரும் வகை வகையான மிருகங்கள்தான். உள்ளுக்குள் என்ன நினைக்கிறோம் என்பதை வெளியே தெரியப்படுத்தாத வரை எல்லோரும் நல்லவரே.

நாசுக்கு எனப்படும் ஒருவகையான நிலை உங்களுக்கு சரிவர கைவராததால்தான்  கிளர்ச்சியூட்டும் உறுப்புகளை வெளிப்படையாக, சற்றுக் கூடுதலான நேரம் பார்த்து விடுகிறீர்கள். அவ்வளவுதான். இதில் ஒன்றும் வெட்கப்படுவதற்கோ, தலைகுனிந்து நிற்பதற்கோ ஒன்றுமில்லை. லக்னாதிபதி சுபராகி, லக்னத்தை பார்க்கும் அமைப்புள்ள நீங்கள் நல்ல பையன்தான். உண்மையைச் சொல்லப்போனால் பார்ப்பதை தவிர வேறு எதையும் உங்களால் தைரியமாக செய்ய முடியாது. செயலில் காட்டுவதற்கு “ஒர்த்” இல்லாத ஜாதகம் உங்களுடையது. ஆகவே கவலைப்பட வேண்டாம்.

தசாநாதன் சுக்கிரனின் சாரம் வாங்கி இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு உங்களின் “பார்க்கும்” ஆர்வம் நீடிக்கும். அருகில் இருக்கும் நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள். இது கவுன்சிலிங் மூலம் குணப்படுத்தக் கூடியதே. ஜாதகப்படி செவ்வாய் ராகுவுடன் இணைந்து மூன்று டிகிரிக்குள் இருந்தாலும், சுக்கிரன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களின் தொடர்பிலிருந்து அம்சத்தில் குருவுடன் இணைந்திருப்பதால் செவ்வாயே உங்களுடைய ஜாதகத்தில் அதிகமான சுபத்துவம் உள்ள கிரகம். செவ்வாயின் ரியல் எஸ்டேட், நெருப்பு, கட்டிடம், சிகப்பு நிறம் போன்ற காரகத்துவங்களில் உங்களுக்கு தொழில் அமையும். எதையும் நேரிடையாகப் பார்க்காமல், மறைமுகமாக பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

(07.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.