adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எனது மகளின் எதிர்காலம் எப்படி?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஆர். சண்முக பிரபு, தூத்துக்குடி.

கேள்வி:

எனது மகள் 19-3-2018 மதியம் 2-43 க்கு கோவையில் பிறந்தாள். அவள் படிப்பு, வேலை, திருமணம்,  எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள விருப்பமாக இருக்கிறேன் குருஜி.

பதில்:

(கடக லக்கனம், மீனராசி, 1ல் ராகு, 4ல் குரு, 6ல் செவ், சனி, 7ல் கேது, 9ல் சூரி, சந், புத, சுக், 19-3- 2018 மதியம் 2-43 கோவை)

கடகம் லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் ஒன்பதில் வளர்பிறை நிலையில் அமர்ந்து, 4-9-க்குடைய சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை பெற்று, ஒன்பதாம் பாவகத்தில், தனாதியான சூரியன், குரு-சுக்கிரன்- புதன்- சந்திரன் ஆகிய அனைத்து சுபர்களுடனும் தொடர்பு கொண்ட நல்ல யோகஜாதகம். இக்குழந்தை பிறந்த நாள் முதல் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். இவளது இருபது வயதிற்குள் உங்களுடைய வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.

நான்காம் அதிபதி உச்சம், ஒன்பதாம் அதிபதி பரிவர்த்தனை, 4, 9ஆம் இடங்கள் சுபத்துவம் என தாய், தகப்பனை உச்சநிலைக்கு கொண்டு செல்வதற்காக பிறந்த யோக குழந்தை இது. ஜாதகத்தில் புதனுக்கு நீச்சபங்கமும் அதிக சுபத்துவமும் இருப்பதால் புத்திசாலியாகவும், புதனின் துறையான கணிதம், கணிப்பொறி ஆகிய துறைகளில் விருப்பம் உள்ளவளாகவும், அதில் படிப்பவளாகவும் இருப்பாள்.

நான்கில் இருக்கும் குருவின் பார்வையால் 8-12ஆம் இடங்கள் சுபத்தவமாகி, 30 வயதிற்கு மேல் சூரிய, சந்திர தசைகள் நடக்க இருப்பதால், பிறந்த இடத்தைவிட்டு வெளிமாநிலம் வெளிநாடு போன்றவற்றில் வேலையும் செய்து அங்கேயே நிரந்தரமாக வாசிக்கவும் கூடிய ஜாதகம். படிப்பில் மிகவும் சுட்டியாக, சொல்லிக் கொள்ளக்கூடிய அளவிற்கு புத்திசாலியாகவும் இருப்பாள்.

கடக லக்னத்திற்கு குருவின் தொடர்புகள் கிடைக்கும் அனைத்துக் கிரகங்களும் யோகம் செய்யும் என்பது ஒரு மறைமுக விதி. தசாநாதனுக்கு வீடு கொடுக்கும் கிரகம் குருவாக இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர். அல்லது தசாநாதனை குரு பார்க்க வேண்டும். இங்கே உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் ராகு, கேது தவிர்த்து மற்ற அனைத்து கிரகங்களும் குருவின் வீட்டில் அமர்ந்து, வீடு கொடுத்த குரு பரிவர்த்தனை மூலம் ஆட்சியாக இருப்பது மிகுந்த யோகம்.

30 வயதிற்கு பிறகு வரும் சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் மிகுந்த யோகம் உடையவை என்பதால் வாழ்வில் அனைத்து நல்லவைகளையும், நேர்மையான முறையில், சரியான பருவத்தில் அனுபவிக்கப் பிறந்தவள். பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் 6-ல் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை. லக்னாதிபதி சந்திரன் வளர்பிறையாகி  நேரடியாக உச்ச சுக்கிரனுடன் இணைந்து, மறைமுகமாக குருவுடன் தொடர்பு  கொள்வதால் தீர்க்காயுள் உண்டு. 24 வயதில் திருமண பாக்கியமும், 26 வயதில் குழந்தை பாக்கியமும் உண்டு. 30 வயதிற்கு மேல் யோகவாழ்க்கை வாழ்வாள். வாழ்த்துக்கள்.

(19.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.