adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒரே மகன் நன்றாகப் படிப்பானா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கற்பகம், லக்னோ.

கேள்வி:

கணவரின் வேலை காரணமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் இருக்கிறோம். ஒரே மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் ரொம்ப மந்தமாக இருக்கிறான். எப்பொழுதும் டிவி பார்ப்பதும், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதுமாக இருக்கிறான். படிக்கச் சொல்லி என்ன செய்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஸ்கூலிலும் படிப்பதில்லை, கவனிப்பதில்லை எனக் கூப்பிட்டுத் திட்டுகிறார்கள். இவனால் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறோம். இவனை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை. மகன் ஒழுங்காக படித்து பட்டம் பெறுவானா? என்ன படிப்பான்? என்ன மாதிரி வேலை அமையும்? இனியாவது ஒழுங்காவானா? தயவு செய்து பதில் அளிக்கவும்.


பதில்:

(தனுசு லக்னம், துலாம் ராசி, 1ல் சூரி, புத, குரு, 3ல் ராகு, 7ல் செவ், 9ல் சனி, கேது, 11ல் சந், 12ல் சுக், 4-01-2008 காலை 6-42 சென்னை)

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்ட சுக்கிர தசையோ, புக்தியோ வரும்போதெல்லாம் வயதிற்கு ஏற்றார் போல முரண்பாடான சாதகமற்ற பலன்கள் நடக்கும். தற்போது உங்கள் மகனுக்கு சனி தசையில், சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இது அவனது பத்தாம் வகுப்பு வரை நீடிக்கும். எனவே அவனது 15 வயது வரை படிப்பு விஷயத்தில் நல்ல பதில் சொல்வதற்கு இல்லை.

பெரும்பாலும் பிள்ளைகள் படிக்காமல் போவதற்கு ஒருவகையில் பெற்றவர்களும் காரணமாக இருக்கிறோம். நமக்கே நமது பிள்ளைகளுடன் பேசுவதற்கோ அல்லது அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கோ நேரமில்லை. அதைவிட மேலாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும் சமயமில்லை. நம்முடைய முழுக் கவனமும் தொலைக்காட்சி சீரியல்களிலோ அல்லது கையகல சனியனான  செல்போனிலோதான் இருக்கிறது.

நாமே இப்படி இருக்கும் நிலையில், நம்மையே முன் மாதிரியாக கொள்ளும் நம்முடைய குழந்தைகளும் இப்படித்தானே இருக்கும்? குழந்தைகள் மட்டும் தானே படித்து தன்னாலே வளரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவனும் நம்மைப் போலவே செல்போனை உபயோகப் படுத்தி வீடியோ கேம் விளையாடத்தான் செய்வான்.

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் தகுதியை இன்றைய தலைமுறை மெதுவாக இழந்து கொண்டு வருகிறது. எப்பொழுது ஒரு தாய் தொலைகாட்சி சீரியலையும், செல்போனையும்  கட்டுக்குள் வைக்கிறாளோ அப்போதுதான் அவளது குழந்தைகளும் நன்கு படித்து கட்டுப்பாட்டுடன் வளருவார்கள். இதில் உங்களுடைய நிலை என்ன என்பதை நீங்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலம் போல ஆறு, ஏழு குழந்தைகள் இப்போது பெற்றுக் கொள்வதில்லை. அதிலொன்று இதிலொன்று என இரண்டே இரண்டுதான் பெற்றுக் கொள்கிறோம். ஆயினும் பெரும்பாலான பெற்றோர்கள் செல்போன் மாயையில் சிக்கி குழந்தை வளர்ப்பில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒருமுறை மெட்ரோ ரெயிலில் உள்ளே நுழைந்ததும் பயணிகளில் நிற்பவர், அமர்ந்திருப்பவர் ஒருவர் பாக்கியில்லாமல் தலைகுனிந்தபடி செல்போனில் ஆழ்ந்திருந்ததைப் பார்க்கையில் உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று யோசிக்க வைத்தது. அதைவிட மேலாக மனிதர்களோடு பேசிப் பழகிய இனிய எண்பதுகளுக்கு மீண்டும் திரும்ப மாட்டோமா என்று ஏங்க வைத்தது.   

மகனது ஜாதகப்படி லக்னாதிபதி குரு லக்னத்தில் வலுத்து 5-9-க்குடைய சூரியன், செவ்வாயுடனும் சம்பந்தப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் நன்றாக வருவார். தற்போது நடைபெறும் தசாநாதன் சனியைக் குரு பார்க்கிறார். அடுத்து நடைபெற இருக்கும் தசாநாதன் புதனோடு குரு சேர்ந்திருக்கிறார். அதனை அடுத்து வர இருக்கும் கேதுவையும் குரு பார்க்கிறார். 47 வயது வரை குருவின் தொடர்புள்ள தசைகள் மகனுக்கு நடக்க இருப்பதால் அவனது எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

ஜாதகப்படி நான்காம் அதிபதி வலுத்து, வித்யாக்காரகன் புதனும் வர்கோத்தமம் அடைந்திருப்பதால் உங்கள் மகன் எதையும் மனதில் நிறுத்தி படிக்கக்கூடிய புத்திசாலிப் பையன்தான். நீங்கள் வளர்க்கும் விதம்தான் சரியாக இருக்காது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு மகனிடம் நல்ல மாற்றம் தெரியும். பயாலஜி குரூப் படிப்பான். வாழ்த்துக்கள்.

(08.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.