adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
டிராவல்ஸ் அதிபர் ஆக முடியுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


ஜி. மணிகண்டன், பல்லாவரம்.

கேள்வி:

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்து மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தந்தை உள்பட அனைத்து உறவுகளும் எங்களை விட்டுச் சென்று விட்டது. யாருடைய ஆதரவும் இல்லை. என் ஒருவன் சம்பளத்தை நம்பியே அம்மாவும் தம்பியும் இருக்கிறார்கள். நிறைய அவமானம், கேவலம், அசிங்கங்களை பெற்று விட்டோம்.

சிறுவயதிலிருந்தே சொகுசு பேருந்துகள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு. அதை ரசித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். எப்பொழுதும் என் எண்ணங்கள் சொகுசு பஸ்களைப் பற்றியே இருக்கும். ஆழ்மனதில் ஆம்னி பேருந்து கம்பெனி துவங்கி ஆயிரக்கணக்கான பேருந்துகளை அனைத்து ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனது டிராவல்ஸ்தான் இந்தியாவிலேயே நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன். 

இந்த ஆர்வத்தினால் எப்போதும் யூ டியூபில் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து வருகிறேன். என்னை நானே ஆம்னி பேருந்து முதலாளியாக யூகித்துக் கொள்கிறேன். கோயம்பேடு பெருங்களத்தூர் சென்று பேருந்துகளை எவ்வாறு இயக்குகிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறேன். சொகுசு பேருந்துகளை கட்டமைத்து எந்தெந்த நாட்களில் இயக்கினால் லாபம் கிட்டும் என்பதை நன்கு அறிந்தும் இருக்கிறேன்.

எனக்கு ஏன் இந்த எண்ணங்கள் மேலோங்குகிறது? எந்தக் கிரகத்தின் தூண்டுதல்? இவைகள் அனைத்தும் என் லக்னாதிபதி குரு என்னை அழைத்துச் செல்ல இருக்கும் பாதையா? டிராவல்ஸ் எனக்கு கைகொடுக்குமா? எங்களை ஒதுக்கியவர்கள் முன் எட்ட முடியாத உயரத்திற்கு வெற்றியின் உச்சத்திற்கு செல்வேனா? எப்போது நடக்கும்?

பதில்:

(தனுசு லக்னம், தனுசு ராசி, 1ல் குரு, சந், 4ல் சூரி, செவ், சனி, கேது, 5ல் புத, 6ல் சுக், 10ல் ராகு, 10-4-1996, இரவு 11-5 சென்னை)

லக்னாதிபதி வலுவாக அமையப் பெற்ற ஜாதகருக்கு, எதிர்காலம் பற்றிய எண்ணங்களும் வழிமுறைகளும் தானாகவே உருவாகி அதுபற்றிய சந்தர்ப்பங்களும் அமையும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன்.

உங்களுக்கு தனுசு லக்னமாகி, லக்னாதிபதி குரு லக்னத்தில் மூலத்திரிகோணம் மற்றும் திக்பலமாக அமர்ந்த யோக ஜாதகம். அவருடைய தசையும் நடுத்தர வயதில் வர இருக்கிறது. அதிக சுபத்துவமுள்ள வளர்பிறைச் சந்திரனும், ஒளி பொருந்திய குருவும் வேறுவித பாபத்துவம் இன்றி இணையும் போது இருக்கும் பாவகத்தைக் எடுப்பார்கள் என்பது பாரம்பரியத்தில் ஒரு சூட்சும விதி.

லக்னாதிபதி வலுவாக அமையப் பெற்ற ஜாதகருக்கு, எதிர்காலம் பற்றிய எண்ணங்களும் வழிமுறைகளும் தானாகவே உருவாகி அதுபற்றிய சந்தர்ப்பங்களும் அமையும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன்.

உங்களுக்கு தனுசு லக்னமாகி, லக்னாதிபதி குரு லக்னத்தில் மூலத்திரிகோணம் மற்றும் திக்பலமாக அமர்ந்த யோக ஜாதகம். அவருடைய தசையும் நடுத்தர வயதில் வர இருக்கிறது. அதிக சுபத்துவமுள்ள வளர்பிறைச் சந்திரனும், ஒளி பொருந்திய குருவும் வேறுவித பாபத்துவம் இன்றி இணையும் போது இருக்கும் பாவகத்தைக் எடுப்பார்கள் என்பது பாரம்பரியத்தில் ஒரு சூட்சும விதி.

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறையாகி குருவுடன் இணைந்துள்ளதாலும், அஷ்டமி திதிவரை அவர் வந்து விட்டதாலும், குருச்சந்திர இணைவால் லக்னம் மேலும் பொலிவு பெறுகிறது. முதன்மை ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களிலும், ஜாதகத்தில் கேந்திரங்களாகவும் இருக்க அது யோக ஜாதகம் என்பதன்படி உங்களுக்கு சூரியனும் சந்திரனும் கேந்திரங்களில் அமைந்திருப்பதும் இன்னொரு யோகம்.

ஒருவர் நகர்ந்து செல்லும் பொருளின் மீது லாபம் பெற வேண்டுமெனில் எட்டு, பத்து, பன்னிரண்டாம் பாவகங்கள் வலுத்திருக்க வேண்டும். பத்தாம் இடத்தில் யோக ராகு நல்ல அமைப்பில் இருக்க வேண்டும். அதன்படி உங்களுக்கு 8-க்குடைய சந்திரன் குருவின் இணைவால் சுபத்துவமாகி, பத்தாம் அதிபதி புதன் குருவின் பார்வையில் நிற்க, பத்தாமிடம் கன்னியாகி அதில் கன்யா ராகு அமர்ந்து, 12ஆம் வீட்டை தனிச் சுக்ரன் பார்ப்பது சிறப்பு.

2-9க்குரிய சூரியனும், சனியும் கேதுவுடன் இணைந்து சூட்சுமவலு பெற்றுள்ள நிலையில், பதினொன்றாம் அதிபதி ஆட்சியாகியுள்ளது நிதி நிலைமைக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு கிரக அமைப்பு. இதுபோன்ற ஜாதக அமைப்புகளால்தான் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” எனும் முதுமொழியின்படி சிறுவயதிலிருந்தே உங்களுக்கு ஆம்னி பஸ்கள் மீது அதிகமான ஆர்வம் வந்துவிட்டது.

தனுசு ராசி, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜென்மச் சனியினால் கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய அவஸ்தைகளை சந்தித்திருப்பீர்கள். இழப்புகள், அவமானங்கள் அனைத்தும் நடந்திருக்கும். 2020 முதல் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்.

அடுத்து நடைபெற இருக்கும் ராகு தசை, சுய புக்தி முதல் உங்களால் பேருந்துத் தொழிலில் இறங்க முடியும். நம்பிச் செயல்படுங்கள். இதுபோன்ற ஜாதக அமைப்பைக் கொண்டவர் ஒருபோதும் தோல்வி அடைய மாட்டார். ராகு என்பவர் நல்ல நிலையில் இருந்தால் படிப்படியான ஒரு உயர்வை தந்து பிரமாண்ட வெற்றிக்கு கொண்டு செல்வார் என்பதால் இங்கே பத்தாமிடத்தில் அவர் சுயமாக இயங்கும் தகுதி படைத்த கன்னி வீட்டில், அம்சத்தில் தனித்த புதனுடன் சுபராக இருக்கும் ராகு, தனக்கு கேந்திரத்தில் இருக்கும் ஆறு கிரகங்களில் பலங்களை கவர்ந்து, உங்களுக்கு யோகத்தை செய்வார். உங்களுடைய தற்போதைய கனவுகள் அனைத்தும் குரு தசையில் நிஜமாகி இருக்கும். நடுத்தர வயதில் இந்தியாவின் பெயர் சொல்லக் கூடிய தொழில் அதிபராக இருப்பீர்கள், வாழ்த்துக்கள்.

(10.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.