ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
வி. இராமமூர்த்தி, பண்ருட்டி.
கேள்வி:
வாழ்க்கையில் எவ்வளவோ இடைஞ்சல்கள், இன்னல்களை அனுபவித்து விட்டேன். இனி சொற்ப காலம் எனது பலன்கள் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் ஏதாவது சுகானுபவம் ஏற்படுமா? எவ்வளவு காலம் இந்த ஜாதகம் பலன் கொடுக்கும்? நான் தற்சமயம் பிள்ளைகளிடம் இருந்து விலகி தனிக்குடித்தனம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது சாத்தியமா? இனிமேல் வீடு கட்டும் யோகம் அல்லது வாங்கும் நிலை உள்ளதா? 20 வருடம் தர்மகர்த்தாவாக இருந்து வந்தேன். தற்சமயம் மூன்று வருடமாக கோவில் என் மேற்பார்வையில் உள்ளது. குடமுழுக்கு செய்ய முடியுமா என்பதை தெரிவிக்கவும். மனைவியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறது. நிறைய உடல் உபாதைகளை அனுபவிக்கிறார்கள். குணமாகுமா? மனைவியின் கடைசிக் காலம் எப்படி இருக்கும்? நல்ல முறையில் முடியுமா என்று அறிய விரும்புகிறேன்.
பதில்:
(கணவன் 6-6-1941 இரவு 8-30 கடலூர், மனைவி 10-8-1946 அதிகாலை 1-54 பண்ருட்டி)
1964ல் திருமணமாகி 55 வருடங்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து என் வயதில் குழந்தைகள் இருக்கும் பெரியவரான நீங்கள், இப்போது பிள்ளைகளிடமிருந்து விலகி தனிக்குடித்தனம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது, இது சாத்தியமா என்று கேட்டிருக்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே எனக்கு புரியவில்லை.
மனித வாழ்க்கை 20 வயதிற்கு முன்னர் சம்பந்தப்பட்டவரின் கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல 70 வயதிற்கு பின்னரும் அவரது வாழ்க்கை அவரது கையில் இல்லை. இதை நீங்களும், உங்கள் பிள்ளைகளும் உணராமல் போனது துரதிர்ஷ்டம். அதேபோல பெரும்பாலான ஜாதகங்களில் 75 வயதிற்கு மேல் ஆரோக்கியம், ஆயுள் மட்டும்தான் பார்க்க வேண்டுமே தவிர சராசரியாக நடுத்தர வயதில் ஒருவன் அடையும் பாக்கியங்களை 75 வயதிற்கு மேல் ஆராய்வது தேவையற்றது. 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உடல்நலமற்ற மனைவியை வைத்துக் கொண்டு, சரியில்லாத பிள்ளைகளால் தனிக்குடித்தனம் போயிருப்பது உங்களுடைய பிள்ளைகளுக்குத்தான் அவமானம்.
ஜோதிடப்படி தனுசு, மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரக்கூடாது என்பதை அடிக்கடி எழுதுவேன். கர்மாவின்படி உங்களது 70 வயதில் சுக்கிர தசை வந்திருப்பது கடுமையான ஒரு விஷயம்தான். இந்த வயதில் உங்களுக்கு என்ன நடக்கக் கூடாதோ அவை அனைத்தையும் சுக்கிரன் தருவார்.
லக்னத்தை இரண்டு சுபகிரகங்கள் வலுத்து பார்த்து, எட்டாம் இடத்திற்கு பாபத் தொடர்புகள் எதுவும் இல்லாமல், ஆயுள் காரகனாகிய சனியை, பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் பார்த்த தீர்க்காயுள் ஜாதகம் உங்களுடையது. இன்னும் சில வருடங்கள் இருப்பீர்கள். அதே நேரத்தில் மனைவியின் உடல்நிலையை பற்றி நல்ல பதில் சொல்வதற்கு இல்லை. 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர தசை குரு புக்தி 2022 ஆம் ஆண்டு மனைவியைப் பிரிய வைக்கும். அதுவரை மனைவியை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அடுத்து நடக்க உள்ள குரு, சனி புக்திகள் உங்களை ஆன்மீகச் சூழலில் இருக்க வைக்கும் என்பதால் விருப்பம் போலவே குடமுழுக்கு செய்ய முடியும். ஜோதிட சாஸ்திரத்தின் படி இதுவே உங்களின் கடைசி பிறவி என்பதால் இந்த பிறவியின் இறுதி வருடங்கள் உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். நீங்கள் குடமுழுக்கு செய்ய இருக்கும் கோவிலின் நாதன் என்றும் உங்களை கைவிடான். வாழ்த்துக்கள்.
(06.08.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.