ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ரா. ராம்குமார், புதுச்சேரி.
கேள்வி.
மாண்புமிகு ஆதித்ய குருஜி அவர்களுக்கு, எனக்கு எம்எல்ஏ அல்லது மினிஸ்டர் அல்லது சீப் மினிஸ்டர் ஆக வாய்ப்பு உள்ளதா தெரியப்படுத்தவும்.
பதில்.
(தனுசு லக்கனம், ரிஷப ராசி, 1ல் கேது, 2-ல் புத, 3ல் சூரி, செவ், சனி, 4ல் சுக், குரு, 6-ல் சந், 7ல் ராகு, 21-2-1964 அதிகாலை 3-15 புதுச்சேரி)
முதல்வராகும் கனவில் ஒரு ஜோதிடரைக் கூட மாண்புமிகு என்றுதான் அடைமொழியிட்டு அழைப்பீர்கள் போல் தெரிகிறது. சிம்மமும், சூரியனும் சுபத்துவ, சூட்சும வலுப்பெற்று, ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது விதி.
உங்கள் ஜாதகப்படி ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் அமர்ந்து, தன்னுடைய வீடான சிம்மத்தை தானே பார்ப்பதால் உங்களுக்கு தீவிர அரசியல் ஆர்வமும், ஈடுபாடும் இருந்தே தீரும். அரசியல் தொடர்புகளும் இருக்கும். அதே நேரத்தில் ஒருவர் கவுன்சிலர், எம்எல்ஏ, மந்திரி, முதல்வர் போன்ற அரசியல் பதவிகளை அடைவதற்கு அவருடைய ஜாதகம் எத்தகைய தகுதியுடன் இருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.
மிக முக்கியமாக பாண்டிச்சேரி வேறு, தமிழ்நாடு வேறு எனும் நிலையில் சென்னையில் ஒரு கவுன்சிலர் நிர்வகிக்கும் பகுதி பாண்டிச்சேரியில் ஒரு எம்எல்ஏவுக்கு உடையதாக இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலருக்கு எத்தகைய ஜாதக அமைப்பு இருக்க வேண்டுமோ அந்த அமைப்பு பாண்டிச்சேரியில் இருக்கும் ஒருவருக்கு எம்எல்ஏ பதவிக்கு போதுமானது.
இடத்திற்கு தகுந்தார் போல ஜோதிட விதிகளும் மாறத்தான் செய்யும். என்னதான் இருப்பினும் முதலமைச்சர் பதவி என்பது அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட ஒரு மிக உயர் பதவி என்பதால், தமிழ்நாட்டில் மந்திரி பதவி வகிக்கும் ஒருவரின் ஜாதகத்திற்கு இணையாக பாண்டிச்சேரிக்கு முதல்வராக விரும்புபவரின் ஜாதகம் இருக்க வேண்டும். அந்த அமைப்பு உங்களுக்கு இல்லை.
ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து சிம்மத்தை பார்த்தாலும், சிம்மத்தோடு குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்கள் தொடர்பு கொள்ளவில்லை. எனவே நீங்கள் நினைக்கும் மந்திரி, முதலமைச்சர் போன்ற பதவிகளை உங்களால் அடைய முடியாது. கவுன்சிலர் போன்ற உள்ளாட்சி பதவிகளுக்கு காரணமான சனி, சூரியனுடன் இணைந்து சிம்மத்தை பார்ப்பதால் உங்களுக்கு உள்ளாட்சி பதவி கிடைக்கும். மக்கள் தொடர்புகளோடு, சாக்கடை கட்டுதல், குப்பை அள்ளுதல் போன்றவைகளைக் குறிக்கும் சனியின் தசை தற்போது உங்களுக்கு நடப்பதால் கவுன்சிலர் பதவிக்கு முயற்சி செய்யுங்கள். கவுன்சிலர் ஆவீர்கள். வாழ்த்துக்கள்.
(23.07.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.