adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
என்ன தொழில் செய்வீர்கள்.! (A-004)

#adityagurujitamilarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

தஸம பாவன நதோகேந்த்ரகோண, தனஸ்தே,

பாலவதி ஜனாயனம் ப்ரஸ்னராஜ விஸேஷ்தஹ!

(பத்தாம் பாவகத்தின் அதிபதி, கேந்திரம், கோணம் அல்லது இரண்டாம் வீட்டில்இருந்தால், அந்த ஜாதகர் தொழில் விஷயத்தில் மிகுந்த புகழ் அடைவார்.)


ஒரு மனிதன் என்ன தொழில் செய்து பிழைப்பான் அல்லது அவனுக்கு ஏற்ற தொழில் என்ன என்பதை அவனுடைய ஜாதகத்தின் பத்தாம் பாவகமும், பத்தாம் அதிபதியும்  நிர்ணயிப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு மனிதனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஜாதகத்தின்படி அலசி ஆராய, துல்லியமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்த நமது ஜோதிட ஞானிகள் அவனது தொழில் விஷயத்தைக் குறிக்கும் ஜீவன ஸ்தானத்தை மட்டும் விரிவாகக் குறிப்பிடாமல் சுருக்கமாகவே கூறிச் சென்றிருக்கின்றனர்.

மக்கள் தொகை குறைந்த, விஞ்ஞான வளர்ச்சியற்ற, நவீனகருவிகள்  இல்லாத, விரல் விட்டு எண்ணக் கூடிய தொழில்களே இருந்த, முக்கியமாக குலத்தின் வழக்கப்படி தொழில்களைப் பிரித்துக் கொண்ட அந்தக் காலத்தில் அவர்கள் சுருக்கமாகக் கூறியது பொருத்தமானதே.

மிகப் பெரும்பாலான நம்முடைய கிரந்தங்கள், லக்னத்தின்படியோ, ராசியின்படியோ பத்தாம் பாவகாதிபதி இருக்கும் நவாம்ச அதிபதியைப் பொருத்து, ஒரு மனிதனின் தொழில் அமையும் என்று சொல்லுகின்றன. மேற்கண்ட விதி, தற்போதைய பத்து சதவிகித ஜாதகங்களில் கூட பொருந்தி வரவில்லை.

ராஜயோகம் கொண்ட ஜாதகமாயினும், ஒருவரின் குலத்தைக் கணக்கில் கொண்டே அவரது தொழிலைக் கூற வேண்டும் என இன்னொரு ஸ்லோகம் கூறுகிறது. இதுவும் இக்காலத்திற்கு முற்றிலும் பொருந்தாது என எல்லோருக்கும் தெரியும்.

அன்று குருகுலவாசமாய், ஒரு குருவின் கீழ் இருந்து, அவருக்குத் தெரிந்ததை மட்டும் கற்றுக் கொண்ட மாணவச் சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன? எத்தனை விதமான படிப்புகள்? எத்தனை விதமான கல்வி முறைகள்? அதேபோல் விதவிதமான வேலை வாய்ப்புகளும், சுய தொழில்களும் இன்று எண்ணிக்கைக்கு அடங்காது.

ஐ.டித் துறையிலும், விஷுவல் கம்யூனிகேஷனிலும் இன்றைய மாணவர்கள் புகுந்து விளையாடும் நிலையில், நவீன விஞ்ஞானம் மிகவும் முன்னேறியுள்ள இந்த எலக்ட்ரானிக்ஸ் யுகத்தில், ஒரு மனிதனின் தொழில் அல்லது அவன் செய்யப் போகும் வேலையை துல்லியமாகத் தெரிந்து கொள்வது எப்படி?

லக்னமே இதில் முதலிடம் வகிக்கிறது.

ஒரு மனிதனின் எண்ணம், ஆற்றல், ஈடுபாடு, செயல்திறன் அனைத்தையும் லக்னத்தையும், லக்னாதிபதியின் சுப, பாபத்துவ, சூட்சும வலுக்களை வைத்தே கணிக்க முடியும். அதன் பிறகு, பத்தாம் வீட்டின் அதிபதி, ஆறாம் வீட்டின் அதிபதி இருவரின் நிலையும் ஆராயப்பட வேண்டும்.

இந்த இரண்டையும் அடுத்து முக்கியமானது...

நடந்து கொண்டிருக்கும் அல்லது நடக்கப் போகும் தசை, புக்தி.

நமது கிரந்தங்கள் கூறுவது போல் பத்துக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்று, பத்தாமிடம் சுபர் பார்வை பெற்று வலுவாவது மிகச் சில ஜாதகங்களில் மட்டுமே. அவர்களிலும் லக்னம், லக்னாதிபதி சுபத்துவம் பெறாதவர்களுக்கு நிரந்தர வேலை, தொழில் அமைவது இல்லை. லக்ன, லக்னாதிபதி பாபத்துவம் அடைந்த பெரும்பாலோர், தொழில் சரியின்றி அல்லது ஈடுபாடான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களே...

நவீன காலத்திற்கு ஏற்றபடி, ஜோதிடமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும், விதிகள் துல்லியமாகச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், எனது நீண்ட கால ஆய்வின் அடிப்படையில், என்னுடைய. சுபத்துவ, பாபத்துவ கோட்பாட்டின்படி, தொழிலைப் பற்றிய முதன்மை விதியாக, “ஒருவரின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் எண்ணங்களும், தொழில்களுமே அவருக்கு அமைகின்றன” என்பதை நான் உறுதியாகக் கண்டிருக்கிறேன்.

ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் குரு, சுக்கிரன், அல்லது. வளர்பிறைச் சந்திரன் போன்ற சுபர்களோடு பார்வை, இணைவு என்ற நிலையில் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் கல்வியை அவர் படித்து, அக் கிரகத்தின் தொழிலை அவர் செய்வார். ஒருவேளை, இதற்கு முரணான அமைப்புகளை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு அவயோக தசைகள் நடந்து கொண்டிருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் முதன்மை சுபத்துவமாக இருக்கிறதோ, அந்தக்  கிரகத்தின் வழியாக அவருக்கு தொழில், வேலையில் அதிக வருமானங்கள் இருக்கும். இதனை ஆயிரக்கணக்கான ஜாதகங்களில் நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த, தொழில் பற்றிய சுபத்துவ விதி, அனைத்து ஜாதகங்களிலும் மிகச் சரியாக இருக்கும். ஒருவர், அவருடைய முதன்மை சுபத்துவ கிரகத்தின் தொழிலையோ, படிப்பையோ படிக்கவில்லை எனில் அவருக்கு ஆகாத தசா, புக்திகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.

தொழில் ஸ்தானமான பத்தாம் வீடு பற்றிய வேறு சில நுணுக்கங்களை இப்போது பார்ப்போம்.

பத்தாம் அதிபதி 6, 8, 12 மிடங்களில் மறைந்து பலவீனமாகி, லக்னாதிபதி வலுவானால், நடைபெறும் தசைக்கேற்பசில நிலைகளில் தசாநாதனின் காரகத்திற்கேற்ப தொழில் அமையும்.

(தசை மாறும் போது தொழில் மாறும். அதாவது ஒவ்வொரு தசைக்கும் ஒரு தொழில் அமையும். நிரந்தரத் தொழில் இருக்காது. இயற்கைச் சுபர் தசையானால் மதிப்புள்ள தொழில்களும்பாபர் தசையானால் அடாவடி தொழிலும்நீசர் தசையானால் நீசத்தொழிலும் (மதுதோல் போன்றவை) அமையும்.)

பத்தாம் அதிபதி வலுவாகிலக்னாதிபதி பலவீனமானால் அந்த ஜாதகர் தனித்து தொழில் செய்ய முடியாது. பிறரின் கீழ் வேலைதான் செய்ய முடியும். இந்த நிலையில் ஆறாம் வீட்டுக்கு அதிபதிபத்தாம் வீட்டுடன்அல்லது பத்துக்குடையவனுடன் கொண்டுள்ள தொடர்பை வைத்து அவர் எப்படிப்பட்ட வேலையில் இருப்பார் என்று கணிக்க முடியும்.

பத்துக்குடையவன் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலோஇரண்டாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் வாக்கால் ஜீவிப்பார். அதாவது பேச்சு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பார். (சம்பந்தப்பட்ட கிரகங்களின் காரகத்துவங்களுக்கு ஏற்ப ஆசிரியர்வக்கீல்தொலைபேசி ஆபரேட்டர் போன்ற தொழில் அமையும்.)

ஜீவனாதிபதி பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதிக்கு நண்பரின் தசை நடந்து அவர் பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருந்தால், தசாநாதனின் காரகத்துவத்தின்படி ஒரு தொழில் அமைந்து குறிப்பிட்ட தசை முடிந்தவுடன் அந்தத் தொழில் கைவிட்டு போகும். 

பத்தாம் வீட்டு அதிபதி 6,8,12 வீடுகளில் மறைந்தோஅல்லது வேறு வகைகளில் பாபத்துவமாகி பலமிழந்தோ இருக்கும் நிலையில், லக்னாதிபதியும் வலுவிழந்தால் சொந்த தொழில் அமைவது கடினம். சில நிலைகளில் இப்படிப்பட்ட ஜாதகர் வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிவார்.

பத்தாம் வீட்டில் ராகு தனித்து இருப்பது சிறப்பான நிலை அல்ல. சுபருடைய பார்வையும் சேர்க்கையும் இல்லாத நிலையில், ராகு இருக்கும் வீடு பாபத்துவம் பெற்றிருப்பின், ராகு தசைபுக்தியில் வேலைதொழில் கெடும். நிரந்தரமான நல்ல வேலை அமையாது.

ஆறாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பது வேலை செய்வதற்கு ஏற்ற ஒரு நிலையாகும். அந்தக் கிரகம் பத்தாம் வீட்டில் வலுப்பெற்றால் அவர் தசையில் தலைமைப் பொறுப்பான வேலை கிடைக்கும்.

ஜீவனாதிபதி வலுப்பெறாத நிலையில்நடைபெறும் தசையின் நாதன் லக்னத்தைப் பார்த்தாலும்அல்லது சம்பந்தமுற்றாலும் அந்த தசை நாதனின் காரகத்துவத் தொழில் ஜாதகருக்கு அமையும்.

பத்தாமிடத்தில் நீச்சக் கிரகம் இருந்துலக்னாதிபதி பத்தாமிட சம்பந்தம் பெற்றாலும்லக்னத்தில் நீச்ச கிரகம் இருந்து பத்துக்கதிபதி சம்பந்தப்பட்டாலும் ஜாதகர் ஈடுபாட்டுடன் நீச்சத் தொழில் புரிவார். அல்லது நீச்ச இடங்களில் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்.

பத்துக்கு அதிபர் ராகுவுடன் சேர்வது சிறப்பான நிலை அல்ல. இதனால் நிலையான தொழில் செய்ய முடியாது. ஆனால் ராகு தசையில் ராகுவின் காரகத்துவங்களின்படி தொழில் அமைந்து சிறப்பாக நடக்கும். (மற்ற கிரகங்களின் சம்பந்தங்களையும் பார்க்க வேண்டும்)

பத்துபனிரெண்டுக்குடையவர்கள் பரிவர்த்தனையானால் வெளிநாட்டு வேலைஅயல் நாட்டுத் தொடர்புவெளிதேசவாசம் உண்டு. எட்டு, பனிரெண்டாம் அதிபதிகள் சுபத்துவ, சூட்சும வலுப் பெற்று ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, அவர்களின் தசையோ, சர ராசிகளில் இருக்கும் கிரகங்களின் தசையோ, ராகு, கேதுக்களின் தசையோ நடக்கும் போது ஒருவர் நீடித்து வெளிநாட்டில் வேலை செய்வார்.

குருவோசுக்கிரனோ 12 மிடத்தைப் பார்த்தால்அல்லது விரயத்தில் இருந்தால் ஒருவர் வெளிநாட்டு குடிமகன் ஆவார். (உண்மை என்னவெனில்குரு தசைக்கு முன் வரும் ராகு தசையும்சுக்கிரனுக்கு முன் வரும் கேதுவும் தான் வெளிநாட்டு தொடர்பை ஏற்படுத்தித் தருவார்கள்)

ஆறாம் அதிபதிபதினொன்றில் அமர்ந்துலாபாதிபதி பத்தாமிடத்தில் லக்ன அதிபதியுடன் அமர்ந்தால்ஆறாம் அதிபதி தசையில் சூதாட்டம். பங்குச் சந்தை போன்றவற்றில் பணம் கொட்டும்.

நிறைவாக...

கீழே சொல்லப்படும் ஏழு கிரகங்களின் காரகத்துவப்படி ஒருவரின் தொழில் அமையும்.

சூரியன் - தந்தைவழி தொழிலும், அதிகாரமும், அரசு சம்பந்தப்பட்ட பணிகளும், அரசுத் துறையால் லாபமும், மருத்துவமும், சிறு அலுவலகமாயினும் தலைமைப் பொறுப்பும். ஒளி மற்றும் மின்சாரம் சார்ந்தவைகளும், எலெக்ட்ரிக்கல் கடையும்,

சந்திரன் – திரவம், ஒப்பனை, நூல், காய்கறி, அரிசி, நெல், கலைகள் சம்பந்தப்பட்ட துறை, பால், ஆறு, கடல், வெண்மையான பொருட்கள், வெளிநாடு, நீர் நிலைத்துறைகளும்,

செவ்வாய் - யூனிபாரம் அணிந்து செய்யப்படும் வேலைகளும், சிலிண்டர், நெருப்பு, அதிகாரம், விவசாயம், சிகப்பு, இறைச்சி, பூமி, கட்டிடம், இஞ்சினியரிங், விளையாட்டு, உடற்பயிற்சி, மருத்துவத்துறை, மளிகைக் கடை, பேக்கரி, டீக்கடை, துரித உணவு தொழில்களும்.

புதன் – இணையம், சமூக ஊடகம், ஆடிட்டர், அக்கவுண்டண்ட், கல்வி, ஜோதிடம், புத்தகம், மீடியா, விளம்பரம், தபால், எழுத்தாளர், வியாபாரம், தரகு, நடிப்பு, பேச்சு, வானவியல், ஓவியம், சிற்பம், புகைப்படம், கம்ப்யூட்டர், ஐ.டித்துறை போன்றவைகளும். 

குரு - வட்டித்தொழில், தங்கம், மஞ்சள் நிறம், வங்கி, நிதி, ஆசிரியர், தத்துவம்,  நீதிபதி, ஆன்மிகம், புரோகிதம், சாஸ்திரம், நவதானியம், ஆராய்ச்சி போன்ற தொழில்களும்.

சுக்கிரன் - சினிமா, மீடியா, நடிப்பு, பாட்டு, துணி, டிராவல்ஸ், பெண்களின் பொருட்கள், வெள்ளி, வாசனைப் பொருள், டெய்லர், வாகனம், ஆடம்பரம், கப்பல், சொகுசு, வீடு, கால்நடை, வெள்ளையான பொருள், ஓட்டல், அழகுக் கலைகளும்.

சனி - திரவமான நீச்சப் பொருட்கள், மது, பெட்ரோல், எண்ணை, டிம்பர் டிப்போ, தோல், இரும்பு, சிமிண்ட், தார், கருப்பு, செருப்பு, பழையது, குப்பை, சொல்லத் தயங்கும் தொழில், ஆலைகள், பரிசோதனை கூடம், மருத்துவமனை, ஹார்டுவேர்ஸ், துப்புரவு பணி, விமானம், லாரி, ஏமாற்றுதல், மாந்திரீகம், திருட்டு, பணத்திற்காக வேலைமுடித்துத் தருதல், போக்குவரத்து, கலப்பட வியாபாரம் போன்றவையும்.(14.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
[ஆக 24-30, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]