ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
வெங்கடேசன், தொளசம்பட்டி.
கேள்வி.
இளைய மகனுக்கு, மைத்துனரிடம் பெண் கேட்டதில், அவர்களும் ஜாதகம் சரியாக இருந்தால் பெண் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இங்குள்ள ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வருவதால் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்துப்படி இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாமா என்று அருள் கூர்ந்து கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பதில்.
இருவருக்கும் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய மகன் பிறந்தநாள் 14-10-1992 என்று நீங்கள் எழுதியுள்ளபடி அன்றைக்கு மேஷ ராசியாக வருவதால், நீங்கள் எழுதியுள்ள பிறந்த தேதி தவறானது அல்லது உங்களுடைய மகனின் நட்சத்திரம் தவறானது. ஒரு முக்கியமான விஷயத்தில் கருத்துக் கேட்க வரும்போதே சில விஷயங்கள் தவறுவது அப சகுனம்.
திருமணத்திற்கு பத்துப் பொருத்தம் பார்ப்பது தேவையற்றது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். ஒரே நட்சத்திரமாக இருவரும் அமைவதால் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் சந்தோஷம் வந்தாலும் திகட்டத் திகட்ட வரும், கஷ்டம் என்றாலும் தாங்க முடியாத அளவிற்கு வரும் என்பதே உண்மை. இருவரும் மிதுன ராசியாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவருக்கும் 2022 வரை திருமணம் செய்து வைக்க கூடாது. அடுத்த வருடம் இருவருக்கும் அஷ்டமச்சனி ஆரம்பிப்பதால் கண்டிப்பாக இவர்களுக்கு தற்போது திருமணம் செய்யக் கூடாது.
2022க்குப் பிறகு இவர்களுக்குத் திருமணம் செய்யலாமா என்பதை, இருவரின் சரியான ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய், பத்து பொருத்தம் மட்டும் பார்க்காமல், செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம் என்று சொல்லாத, இரண்டில் செவ்வாய் என்றால் இரண்டில் செவ்வாய் உள்ள வரனைத்தான் சேர்க்க வேண்டும், லக்னத்தில் ராகு என்றால் லக்னத்தில் ராகு உள்ள வரனைத்தான் சேர்க்க வேண்டும் என்று சொல்லும் ஒன்றும் தெரியாத ஜோதிடரிடம் போகாமல், ஜாதக அனுகூலப் பொருத்தம் எனப்படும் இருவரின் ஜாதக நிலைகளை சரியாகக் கணிக்க தெரிந்த அனுபவமுள்ள ஜோதிடரிடம் காட்டித் தெளிவு பெறுங்கள்.
(14.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.