adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 236 (07.05.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

ஏ. சுல்தான் பேபி அன்சர, மதுரை.


கேள்வி :

கணவருக்கு ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்துக் கொண்டார் .அவரது ஆயுள் பலம் எப்படி உள்ளது ? நண்பர்களோடு சேர்ந்து தொழில் செய்து ஏமாற்றப்பட்டு , அவர்களே தொழில் எதிரியு மா கி , கடனாளியாகி கஷ்டப்படுகிறார் . எனது ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிஷ்டம்போல் நடக்கிறார் . எப்போது என் பேச்சைக் கேட்பார் ? அவரது எதிர்காலம் எப்படி ? தந்தைக்குச் சமமான தங்களின் அருள்ஞான வார்த்தைகளை எதிர்பார்க்கிறேன் .


பதில் :

(மகர லக்னம், மீன ராசி. 3ல் சந், குரு, 4ல் கேது, 6ல் செவ், 7ல் சனி, 9ல் சுக், 10ல் சூரி, புத, ராகு, 14-11-1975 மதியம் 12 மணி மதுரை)

சனியின் மகர, கும்ப லக்னத்தில் பிறந்து லக்னத்தை சனி பார்க்கப் பிறந்தவர்கள் ஒருபோதும் அடுத்தவரின் பேச்சைக் கேட்காதவராக இருப்பார்கள். பிடிவாத குணம் இருக்கும். சனியின் சுபத்துவ, சூட்சும வலுவைப் பொறுத்து நான் சொல்லும் பலன் கூடுதல் குறைவாக இருக்கும்.

கணவருக்கு மகர லக்னமாகி குருவின் பார்வையில் இருக்கும் சனி லக்னத்தைப் பார்ப்பதால் தனக்கென தனித்த சிந்தனைகள் உள்ளவராக, மாற்றிக் கொள்ள முடியாத கொள்கைகள் உள்ளவராக இருப்பார். இது போன்றவர்கள் மனைவியின் பேச்சைக் கேட்பதில்லை. கணவருக்கு தற்போது நடந்து வரும் சுக்கிர தசையில், சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் தொழில் முன்னேற்றங்களைத் தராது. ராகு புக்தியில் இருந்து தொழில் நன்றாக இருக்கும்.

லக்னாதிபதியும், ஆயுள்காரகனுமான சனியை குரு பார்த்து சுபத்துவப்படுத்திய நிலையில், அந்த சனி லக்கினத்தை பார்ப்பதால் கணவருக்கு ஆயுள் குற்றமில்லை. தீர்க்காயுள் உண்டு. எட்டுக்குடைய சூரியன் நீசமாகி, ராகுவுடன் மிக நெருக்கமாக இணைந்து பலவீனமடைந்து இருப்பதைப் போலத் தெரிந்தாலும் சுக்கிரனின் பரிவர்த்தனையால் சூரியன் இழந்த வலுவை மீண்டும் பெறுகிறார். 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு கணவருக்கு தொழில் நன்றாக இருக்கும். சுக்கிர தசையும் அதன்பிறகு நல்ல பலன்களைத் தரும். எதிர்காலம் நன்றாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

ஆர். சங்கரநாராயணன், பம்மல்.

கேள்வி :

மூன்று வருடங்களாக மாடியில் கடை நடத்தி வருகிறேன் . வாடகைக்கு இடம் பார்க்கிறேன் . எப்போது அமையும் ? கடை வாசல் எந்த திசையை நோக்கி இருந்தால் வியாபாரம் நன்கு நடைபெறும் ? இன்னும் எத்தனை வருடம் வியாபாரம் செய்வேன் ? சந்திர தசை நடப்பதால் திங்கள் கிழமை அன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து வரலாமா ? வேறு பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா ?

பதில் :

(ரிஷப லக்கனம், மீன ராசி, 2ல் சூரி, 3ல் புத, சுக், செவ், 5ல் ராகு, 6ல் குரு, 8ல் சனி, 11ல் சந், கேது. 28-6-1959 அதிகாலை 3-30, சென்னை)

தெற்கு தவிர்த்து மற்ற மூன்று திசைகளும் உங்களுக்கு யோகம் தருபவைதான். மாடியை விட கீழே கடை வைப்பது வியாபாரத்திற்கு நல்லது. கீழே கடை அமைய இன்னும் ஒரு வருடத்திற்கு தடை இருக்கிறது. 2020 ஏப்ரலுக்குப் பிறகு கடையை மாற்ற முடியும். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அந்திமகாலம் வரை இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் நீங்கள் தொழில் செய்ய வேண்டி இருக்கும்.

சந்திர தசை நடப்பதால் பரிகாரமாக திருப்பதிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வழிபாடு எனும் முறையில் எம்பெருமான் வேங்கடவனை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசிக்கலாம். பரிகாரமாக ஒரு ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாரை தரிசித்து வாருங்கள். தொழில் இடத்தில் மாற்றம் ஏற்படும். வாழ்த்துக்கள்.

கே. பாலசுப்ரமணியன், புதுச்சேரி.

கேள்வி :

எனது மூன்று பிள்ளைகளுக்கு முறையே 45 , 43 , 41 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை . எனது குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி யை யும் , விருப்ப தெய்வமான திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனையும் வருடாவருடம் வழிபட்டு வந் து ம் இன்னும் அவர்கள் கண் திறக்கவில்லை . 75 வயதாகும் நான் என் வாழ்நாளில் என் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைப்பேன் என்ற நம்பிக்கையில் இ ரு க் கிறேன் . மூவரின் ஜாதகப்படி திருமணம் சிறப்பாக நடக்குமா ? எப்போது ?

பதில் :

குழந்தைகள் மூவருக்குமே கடுமையான களத்திர தோஷ அமைப்புள்ள ஜாதகம். மூத்த மகனுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசியாகி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி, ராசிக்கு இரண்டில் ராகு என்ற அமைப்பு உள்ளது. இரண்டாவது மகளுக்கு தனுசு லக்னம், தனுசு ராசியாகி, களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் மறைந்து, களத்திர ஸ்தானாதிபதி புதன் ஆறில் மறைந்து, ஏழில் சனி என்ற அமைப்பு உள்ளது. கடைசி மகளுக்கு கடக லக்னம், மேஷ ராசியாகி லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், சனி சேர்க்கை உள்ளது.

மூவருக்குமே கடுமையான களத்திர தோஷ அமைப்புகள் இருப்பதும், கடந்த 2012 முதல் மூவருக்கும் விருச்சிகம், மேஷம், தனுசு என ஏழரைச் சனி, அஷ்டமச் சனி ஆதிக்கத்தில் குடும்பம் உள்ளதும். எவ்வித சுபகாரியத்தையும் வீட்டில் நடக்கவிடாமல் தடுத்த அமைப்புகள். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை வீட்டில் யாருக்கும் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குள், மூவருக்கும் திருமணம் நடக்கும் அமைப்பு இருக்கிறது. ஜாதகப்படி மூவருமே நன்றாக இருப்பார்கள். தாமத திருமணம் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. வாழ்த்துக்கள்.

எம். ராஜ்குமார், இரணியல்.

கேள்வி :

ஆறு வருடங்களாக டிரைவர் வேலை செய்து எந்த பலனும் இல்லை . டிரைவர் வேலை எனக்கு பொருத்தமானது அல்ல என்று தோன்றுகிறது . என்ன வியாபாரம் செய்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும் அல்லது திரும்பவும் வெளிநாடு செல்ல முடியுமா ? என் எதிர்காலம் எப்படி இருக்கும் ? சொந்த வீடு எப்போது அமையும் ?

பதில் :

(கன்னி லக்னம், விருச்சிக ராசி, 1ல் சனி, 3ல் சந், 6ல் சூரி, புதன், கேது, 8ல் சுக், 12ல் செவ், குரு, ராகு, 9-3-1980 இரவு 8-30 இரணியல்)

கடந்த ஆறு வருடங்களாக உங்களின் விருச்சிக ராசிக்கு கடுமையான ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்ததால், நீங்கள் எந்தத் தொழில் செய்திருந்தாலும் அதில் முன்னேற்றம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. லக்னத்திற்கு எட்டில் சுக்கிரன், 12ல் குரு அமர்ந்து, 8-12ஆம் இடங்கள் சுபத்துவமாகி, 8-ஆம் இடத்தையும், பன்னிரண்டாம் அதிபதி சூரியனையும் குரு பார்த்து, எட்டாம் வீட்டோனுடன் இணைந்திருப்பதால், உங்களுக்கு வெளிநாட்டு அமைப்புகள் மட்டுமே வருமானத்தை தரும்.

தற்போது நடக்கும் சூரியதசையில், அடுத்த வருட ஆரம்பத்தில் மீண்டும் வெளிநாடு செல்ல முடியும். உள்ளூரில் விலை போகாமல் வெளிநாட்டில் நன்கு சம்பாதிக்கும் ஜாதகம் உங்களுடையது. 2022 ஆம் வருடம் சொந்த வீடு அமையும். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 236 (07.05.19)

  1. sir , why best astrology panchangam ? What I follow my birth chart panchangam ? Thirukanithama ? Vakya panchangama ? What I follow my birth chart ? Rasi chart or navamsam chart. Please reply this question sir . I am waiting for your answer. My birth place to chennai . Your articles is good explanation and very nice .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *