மெ. முரளிதரன் , பொன்னமராவதி .
கேள்வி :
எனது பனிரெண்டாவது வயதில் என் தந்தை ஒரு கொலை சம்பவத்தில் இறந் தார். நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் ஜாதகப்படி என் அப்பா இறக்கவில்லை என்றும் , எப்படி இறந்தார் என த் தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர் .எனது தந்தையும் ஒரு ஜோதிடராக வும், ஆசிரியராகவும் இருந்தார் . அவர் அப்படி ஜாதகப்படி இ ற க்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா ? அப்பா இல்லாவிட்டாலும் என் அன்னையின் கடின உழைப்பினால் இன்று நல்ல மதிப்பெண்களுடன் கல்லூரி முடித்திருக்கிறேன் . அரசுப்பணியில் அதிகாரப் பதவியில் இருந்து எளிய மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உதவிகளை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் . தெய்வத்திடமும் இதைத்தான் கேட்கிறேன் . எனக்கு அதிகாரமுள்ள அரசுப்பணி அமைப்பு இருக்கிறதா ? எந்த வயதில் முன்னேற்றங்கள் நடக்கும் ?
பதில் :
சூ பு செ சனி கே | சுக் | ||
30-3-1996
இரவு
11-55
பொன்னமராவதி
|
சந் | ||
ல கு | ரா |
(தனுசு லக்னம், கடகராசி. 1ல் குரு, 4ல் சூரி, புத, செவ், சனி, கேது. 6ல் சுக், 8ல் சந், 10ல் ராகு, 30-3-1996 இரவு 11-55 பொன்னமராவதி)
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ஜாதகப்படிதான் நடக்கிறது எனும் போது உன் தந்தையின் மரணம் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? உன்னுடைய பதினோராவது வயதில் தனுசு லக்னத்திற்கு வரக் கூடாது என்று நான் அடிக்கடி சொல்லும் சுக்கிர தசை ஆரம்பித்தது. எந்த ஒரு கிரகமும் அதன் தசையில் வயதிற்கேற்ற பலனைத் தரும் என்பது விதி. ஆறாம் அதிபதி தசையில் ஒருவருக்கு மன அழுத்தம் வர வேண்டும்.
கவலைகள் எதுவும் இல்லாமல் துள்ளித் திரிய வேண்டிய பனிரெண்டு வயதுப் பருவத்தில், அடி வாங்கினால் கூட அடுத்த நிமிடமே மறந்துவிட்டு அடித்தவரிடம் ஓடிப் போய் பேசக்கூடிய வயதில், உனக்கு மன அழுத்தம் வர வேண்டுமென்றால் மிகப் பெரிய துன்பம் உனக்கு வந்தாக வேண்டும். அதன்படி விவரம் தெரியாத வயதில் நீ மனதளவில் மிகவும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக சுக்கிரதசை ஆரம்பித்தவுடன் தந்தையை இழந்தாய்.
உன் அப்பா இறந்த சமயத்தில் உனக்கு ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருந்தது உன் அம்மாவின் ஜாதகத்திலும் தனது கணவனை இழக்கும் அமைப்பு துல்லியமாகவே இருந்திருக்கும். ஜாதகப்படி பிதுர்க்காரகனாகிய சூரியன், திக்பலம் இழந்து, செவ்வாய், சனி, ராகு-கேது ஆகிய அனைத்து பாபக்கிரகங்களுடன் இணைந்ததால் தந்தை அமைப்பு உனக்கு இல்லை.
சுக்கிரதசை ஆரம்ப பத்து வருடங்கள் உனக்கு நன்மைகளைச் செய்ய வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ஆறாம் அதிபதியை விட லக்னாதிபதி வலுக்க வேண்டும் என்பதையும், அப்படி வலுத்தால் ஆறாமிடத்தோன் தசையில் வரும் துன்பங்களை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதையும் அடிக்கடி குறிப்பிடுகிறேன். அதன்படி உனக்கு சுக்கிரன் ஆட்சியாக இருந்தாலும் லக்னாதிபதி குரு ஆட்சியை விட மேலான மூலத்திரிகோணம் மற்றும் திக்பலத்துடன் அமைந்திருக்கின்ற காரணத்தால் தகப்பனை இழந்தாலும் தாயின் உதவியோடு வாழ்க்கையில் பெற வேண்டிய நல்ல கல்வியை பெற்றுவிட்டாய்.
சிம்மம் வலுவாகி, சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அரசு வேலை கிடைக்கும் என்பது விதிப்படியும், பாபத்துவ அமைப்பு பெற்ற ஒரு கிரகம் உயிர்க் காரகத்துவத்தை கெடுத்து, ஜடக் காரகத்துவத்தை செய்யும் என்பதன்படியும், வலுப்பெற்ற குரு தனது 9ம் பார்வையால் சிம்மத்தை பார்ப்பதாலும், நீ வளர்பிறையில் பிறந்துள்ளதாலும், அதிகாரமுள்ள அரசுப்பணி உறுதியாகக் கிடைக்கும். முறையாக படித்து தேர்வெழுதி அரசு உயர் அதிகாரியாக பணிபுரிவாய். 31 வயதிற்கு பிறகு அடுத்தடுத்து சூரிய, சந்திர, செவ்வாய் என யோக தசைகளாக வருவதால் வாழ்க்கையில் 28 வயதிற்கு பிறகு யோகத்தை அனுபவிப்பாய். வாழ்த்துக்கள்.
என் . உன்னி கிருஷ்ணன் , கொல்லங்கோடு .
கேள்வி :
28 வயதாகியும் நல்ல வேலை கிடைக்கவில்லை. 2013 ல் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வீட்டு வயரிங் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நல்ல வேலை கிடைக்குமா? அமாவாசையில் பிறந்தவர்கள் எல்லோரும் இப்படித் தானா? எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் ?
பதில் :
கு | |||
29-9-1989
அதிகாலை
2-45
திருவனந்தபுரம்
|
ல கே | ||
ரா | |||
சனி | சுக் | சந் பு சூ,செ |
(கடக லக்னம், கன்னி ராசி. 1ல் கேது, 3ல் சூரி, சந், புத, செவ். 4ல் சுக், 6ல் சனி, 7ல் ராகு, 12ல் குரு. 29-9-1989 அதிகாலை 2-45 திருவனந்தபுரம்)
2013-ல் கல்லூரிப் படிப்பை முடித்ததிலிருந்தே உனக்கு ராகு தசையில் ஆறு எட்டுக்குடையவர்களின் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. சஷ்ட, அஷ்டமாதிபதிகளான குருவும், சனியும் தசாநாதன் ராகுவிற்கு ஆறு பன்னிரண்டிலும், லக்னத்திற்கு ஆறு, பனிரண்டிலும் இருக்கிறார்கள். தசா நாதனுக்கு, புக்திநாதன் மறைந்தாலே அந்த புக்திகள் நல்ல பலனை தருவதில்லை.
ஜாதகப்படி இரண்டு வாரங்களுக்கு முன் கடக லக்ன பாவியான சனியின் புக்தி முடிந்து விட்டதால் இனி உன் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். அடுத்து நடைபெற இருக்கும் புக்தினாதன் புதன், ராகுவுக்கு திரிகோணத்தில் இருப்பதாலும், ராசிநாதன் என்பதாலும் நல்ல பலன்களைச் செய்யும். அமாவாசை யோகத்தில் பிறந்த எத்தனையோ பேர் வாழ்க்கையில் மிகுந்த சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
உன் ஜாதகத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் வீடு கொடுத்த புதன் உச்சமாக இருப்பது நல்ல யோகம். இந்த அமைப்பின்படி நீ ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும். ஜோதிடத்தை தொழிலாகவும் செய்ய முடியும். அடுத்த வருடம் முதல் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் இருக்கும். எதிர்காலம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஜாதகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ரா . சிவகுமார் , வேலூர் .
கேள்வி :
ஜோதிடப்பேரொளிக்கு வணக்கம். கடந்த 21-8-2018 மாலைமலர் நாளிதழில் “பெரும் கோடீஸ்வரர் ஆக முடியுமா?” என்ற தலைப்பில் ஒரு வாசகருக்கு பதில் அளித்திருந்தீர்கள். அவருக்கு அடுத்த நாள் அதே லக்னம் , அதே ராசியில் பிறந்து அதே போன்ற ஜாதகத்தை கொண்ட என்னுடைய மகன், சுயதொழில் செய்வதில் ஆர்வம் கொண்டு, கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழிலை ஆரம்பித்து லட்சக்கணக்கில் நஷ்டப்பட்டது அல்லாமல், அவமானத்தோடு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியவில்லை. பூர்வீகச் சொத்தை விற்றாலும் கடனை அடைக்க முடியாத நிலை உள்ளது. கடன் கொடுத்தவர்கள் மகனை கடத்திச் செல்வதாக மிரட்டுகிறார்கள். ஒரே மகனைப் பெற்ற நாங்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. இரவில் தூக்கம் வருவதில்லை. அவனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? கடனிலிருந்து மீண்டு வருவானா என்பதை தெளிவுபடுத்தி உரிய பரிகாரங்களையும் தெரிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
பதில் :
சனி கே | சூ செ | பு சுக் | ல |
3-5-1996
காலை
10-32
வேலூர்
|
|||
கு | சந் | ரா |
(மிதுன லக்னம், துலாம் ராசி. 4ல் ராகு, 5ல் சந், 7ல் குரு, 10ல் சனி, கேது. 11ல் சூரி, செவ். 12ல் புத, சுக், 3-5-1996, காலை 10-32 வேலூர்)
இரண்டு நபர்களுடைய ஜாதகங்கள் ஒன்று போலவே இருந்தால் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடக்கும் என்று அர்த்தம் இல்லை. இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து பிறக்கும் இரட்டை குழந்தைகளே வாழ்க்கையில் இரு துருவங்களாக இருக்கும்பொழுது ஒரு நாள் இடைவெளியில் பிறக்கும் இருவரை ஜாதகரீதியாக ஒப்பிடுவது தவறு.
ஜோதிடம் ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு இருபது வயது பையன் முன் அனுபவம் எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாய் கடனாகக் கூடிய தொழில் செய்கிறேன் என்று சொன்னால் தாய், தகப்பனுக்கு எங்கே போனது அறிவு? முதலில் இந்த தொழில் சம்பந்தமான ஒரு இடத்தில் வேலை செய்து அனுபவத்தை பெற்றுக்கொள். பிறகு தொழில் செய்யலாம் என்றுதானே பெற்றவர்கள் எடுத்துச் சொல்லி அவனை தடுத்திருக்க வேண்டும்?
நீங்கள் குறிப்பிடும் அந்த பதிலில் கூட எதிர்காலத்தில் நான் இந்தத் தொழிலை செய்ய திட்டமிட்டு அனுபவத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் கோடீஸ்வரன் ஆவேனா? என்றுதான் அந்தப் பையன் கேட்டிருக்கிறானே தவிர இப்போது இந்தத் தொழிலை செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கவில்லையே? எல்லாவற்றுக்கும் ஒரு நேரம், காலம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? மேற்படிப்பு படிக்கும் வயதில் உள்ளவனை தொழில் செய்ய அனுமதித்தது உங்கள் தவறு அல்லவா?
மகன் ஜாதகப்படி 2014 டிசம்பர் மாதம் முதல் அவன் கடன்காரனாக ஆகக் கூடிய அமைப்பு. இருக்கிறது. என்னுடைய கணிப்புப்படி பெற்றோராகிய உங்களுக்கு ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கலாம். அல்லது நடந்திருக்கலாம். பெற்றவர்களுக்கு தூக்கம் வரக்கூடாது என்ற அமைப்பு இருக்கும்போது அவர்களின் ஒரே நம்பிக்கையான வாரிசின் மூலமாகத்தான் மனக்கஷ்டங்கள் வரும்.
மகனது ஜாதகப்படி இன்னும் இரண்டு வருடங்களுக்கு கடன் தீருவதற்கான அமைப்பு இல்லை. 2020 மே மாதத்திற்கு பிறகு கடன்கள் தீரும். ஜாதகம் நன்றாக இருப்பதால் இப்போது ஏற்பட்ட பிரச்சனைகளை அனுபவமாக கொண்டு எதிர்காலத்தில் மகன் நன்றாகவே இருப்பார். மேம்போக்காக யோக ஜாதகமாக தெரிந்தாலும் பாவகப்படி செவ்வாய், சனி, கேது 10ல் இணைந்திருப்பதும், லக்னாதிபதி புதன் பதினொன்றில் சூரியனுடன் அமர்வதும் பலவீனம் என்பதால் புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும்.
(06.11.2018 மாலை மலரில் வெளிவந்தது)