adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சனி ப்ரீத்தியாக என்ன செய்யலாம்?…

எஸ். பெரியசாமி, கோவில்பட்டி.

கேள்வி :
நினைவு தெரிந்த நாள் முதல் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சினைகள். கடன் தொல்லை, உடல்நலக்குறைவு, குறைந்த ஊதியமுள்ள நிரந்தரமற்ற தனியார் வேலை. இவற்றுக்கு மத்தியில் 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது நல்ல வருமானமுள்ள நிரந்தர வேலை, கடன் இல்லாத வாழ்க்கையும் அமையும்? திருமணம் எப்போது? தொழில் எப்போது செய்யலாம்? லக்னத்தை பலப்படுத்தி எனது வாழ்க்கையை வளப்படுத்த ஏதாவது பரிகாரங்கள் செய்யலாமா?

பதில் :
கே சூ குரு
15.7.1978 மாலை 9.30 கோவில்பட்டி
பு
செ சனி சுக்
சந் ரா
லக்னமும், லக்னாதிபதியும் வலுவிழந்த நிலையில், ஆறு எட்டாமிடங்களோடு சம்பந்தப்பட்ட தசைகள் நடக்கும்போது ஒருவருக்கு வயதிற்கேற்ற கடுமையான பிரச்சினைகள் இருக்கும்.
உங்கள் ஜாதகப்படி கும்ப லக்னத்தை செவ்வாய், சனி இருவரும் இணைந்து பார்ப்பது குற்றம். லக்னாதிபதியே ஆயினும் சனி பாபத்துவம் பெற்ற நிலையில் லக்னத்தை பார்க்கக் கூடாது.
மேம்போக்காக உங்கள் ஜாதகத்தில் லக்னம், ராசிக்கு குரு பார்வை இருப்பது போல தோன்றினாலும் சூரியனுடன் 4 டிகிரி இணைந்த குருவின் பார்வைக்கு வலிமை இல்லை. எனவே இங்கே குருவின் பார்வை லக்னத்திற்கும், ராசிக்கும் இருப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. லக்னத்தையும் ராசியையும் பகை வீட்டில் அமர்ந்து பாபத்துவ சனி பார்ப்பதுதான் இங்கே முன்னிற்கும்.
மிக முக்கியமாக 26 வயது முதல் பகை வீடான ஆறில் அமர்ந்திருக்கும் புதன் தசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. ஐந்து, எட்டுக்குடைய புதன் 6ல் மறைந்திருப்பதால் தன்னுடைய நல்ல பலன்கள் எதையும் அவர் தர மாட்டார். அடுத்து நடைபெற இருக்கும் கேதுதசை உங்களுக்கு நன்மைகளைச் செய்யும். அது சுக்கிர தசையிலும் நீடிக்கும்.
தற்போது நடைபெறும் புதன் தசையில், அடுத்த வருடம் ஆரம்பிக்கும் சனி புக்தியில் திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கேது தசை முதல் கடன், நோயற்ற வாழ்க்கை வாழ்வீர்கள். இரண்டு, எட்டில் ராகு-கேதுக்கள் அமர்ந்திருப்பதால், ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று வாருங்கள்.

லக்னம் வலுவிழந்திருப்பதால் நீங்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவராகவும், எதிலும் மந்தமான குணம் கொண்டவராகவும் இருப்பீர்கள். வருடம் ஒருமுறை சனிக்கு ப்ரீத்தியான சில தானங்களைச் செய்யுங்கள். இரும்பு இஸ்திரிப் பெட்டியை வைத்து தொழில் செய்யும் சலவைத் தொழிலாளர்கள் சிலருக்கு 19 கிலோ அடுப்புக்கரி வாங்கி சனிக்கிழமை மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 லிருந்து 9 மணிக்குள் சனி ஓரையில் தானம் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். இதே கிழமை, இதே நேரத்தில் ஒரு ஊனமுற்றவருக்கோ அல்லது பார்வையற்றவருக்கோ உங்களால் இயன்ற ஒரு உதவியை செய்யுங்கள். வாழ்க்கையில் மிகுந்த மாற்றம் வரும். திருமணமும் நடக்கும். வாழ்த்துக்கள்.

One thought on “சனி ப்ரீத்தியாக என்ன செய்யலாம்?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *