பி. ஓபுராஜ், திருப்பூர்.
கேள்வி :
என்னுடைய 29 வயதில் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி தடம் புரண்டு மாற்று நபரோடு மும்பை சென்று விட்டார். 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவரை குழந்தைகளுக்காக மீண்டும் சேர்த்துக் கொண்டேன். அவர் மீண்டு வரவில்லை, மீண்டும் வந்திருக்கிறார் என்பது அவளுடைய நடவடிக்கைகள் மூலம் அறிய வந்ததால், அவளை நல்வழிப்படுத்த என் மாமியாரின் தயவை நாடினேன். பின்புதான் தெரிந்தது இத்தனைக்கும் காரணம் அவள் தாயார்தான் என்று. என் மகள் அப்படித்தான் இருப்பாள் எனக்கூறி மகளை அழைத்துச் சென்றவர் தற்போது விவாகரத்தும் வாங்கிக் கொடுத்து விட்டார். குழந்தைகளை பிரித்துக் கொண்டதில் மூத்த பெண் என்னுடன் இருக்கிறார். ஜீவனத்திற்கு பெட்டிக்கடை வைத்திருக்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக போகிறது. வருமானத்திற்கும் குறைவில்லை. மறுமணம் செய்யலாமா? அந்த வாழ்க்கை நன்றாக இருக்குமா? பெட்டிக்கடை தவிர வேறு தொழில் செய்யலாமா? ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது. படிக்க முடியுமா?
பதில் :
கே | செ சு | ல சூ பு கு | |
சந் |
7.6.1977
காலை
6.00
விளாத்திகுளம்
|
சனி | |
ரா |
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாபத்துவ அமைப்பில் உள்ள குருவின் தசை வந்தாலே நல்ல பலன்கள் நடக்காது. சுக்கிரனின் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு குருவின் தசை நற்பலன் தருவதில்லை.
உங்கள் ஜாதகப்படி லக்னத்தில் சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனமான குரு தசையில் உங்களுக்கு நடந்தது அத்தனையும் தவறாக இருக்கும். மேலும் லக்னாதிபதியும், மனைவியைக் குறிப்பவனுமான சுக்கிரன், செவ்வாயுடன் நெருங்கி இணைந்து சனியின் பார்வையை பெற்றிருப்பதும் தவறு. இதுபோன்ற அமைப்பினால் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும்.
தற்போது யோகாதிபதியும், ராசிநாதனான சனியின் தசை நடப்பதால் இன்னொரு தொழிலும் செய்யலாம். வரும் தைமாதம் ஆரம்பிக்கும் பதினொன்றாம் இடத்தில் உள்ள கேதுவின் புக்தியில் மறுமணம் செய்து கொள்ள முடியும். அந்த வாழ்க்கை நன்றாகவே இருக்கும். சந்திர கேந்திரத்தில், லக்னத்தில் திக்பலமுடன் புதன் அமர்ந்திருப்பதால் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும்.
வி. ஆர். சரவணன், பள்ளிகொண்டான்.
கேள்வி :
40 வயதாகியும் நிரந்தரமான வேலை இல்லை. நான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை. விரும்பிய வேலையும் அமையவில்லை. எப்பொழுதும் நிலையற்ற, நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு வேலை எப்பொழுது அமையும்? குடும்பத்தில் உள்ள குழப்பமான நிலை எப்போது மாறும்?
பதில் :
கே | கு | ||
7.12.1977
அதிகாலை
4.45
ஊத்தங்கரை
|
செ | ||
சனி | |||
பு | சூ சுக் | ல | சந் ரா |
வாழ்க்கையில் நிலை கொள்ளக் கூடிய முக்கியமான பருவத்தில் துலாம் லக்னத்திற்கு வரக்கூடாத குருவின் தசை 16 வருடங்கள் நடந்ததால் இன்னும் செட்டில் ஆகவில்லை. குருவின் தசை முடிந்த கையோடு மகனுக்கு கேட்டை நட்சத்திரமாகி ஏழரைச்சனி நடந்ததும், கடந்த மூன்று வருடங்களாக குழப்பங்களை செய்துவிட்டது.
வரும் நவம்பர் முதல் யோகாதிபதி சனிதசையில், சுயபுக்தி முடிவதால் இனிமேல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சிம்மம் வலுவாகி, சூரியன் சுபத்துவமாக இருந்தால்தான் அரசு வேலை அமையும். இதற்கு பத்தாம் இடமும் வலுவாக இருக்க வேண்டும். உங்களுக்கு சிம்மத்தில் சனி இருப்பதும், பத்தாம் அதிபதி பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் இணைந்திருப்பதும் அரசுவேலை கிடைப்பதற்கான தடை அமைப்புகள். லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள் இனிமேல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
எம். மேகநாதன், வேட்டவலம்.
கேள்வி :
என் தங்கைக்கு மூன்று வயதாகும்போது என் தந்தை வாகனவிபத்தில் இறந்து விட்டார். அப்போது எனக்கு ஐந்து வயது. தந்தை இறந்த ஒரு வருடத்தில் என் தாய் எங்கள் இருவரையும் தாத்தா, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றவர் வேறு திருமணம் செய்துகொண்டதாக தெரிய வந்தது. இதுநாள் வரை தாத்தா, பாட்டியின் ஆதரவில் இருக்கும் எங்களை பெரியப்பாவும், பெரியம்மாவும் அவர்களின் பிள்ளைகளைப் போல கவனித்து படிக்க வைத்து வருகிறார்கள். எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.
பதில் :
செ | குரு சனி | சந் | |
சூ பு |
13.2.2000
இரவு
10.37
வேட்டவலம்
|
ரா | |
சுக் கே | |||
ல |
தங்கையின் ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தை நீச சனி, செவ்வாய் இருவரும் பார்த்து, 9-க்குடைய புதன் மற்றும் தந்தைக்காரகன் சூரியன் இருவரும் அம்சத்தில் நீசமாகி, ராசிக்கு 9-ஆம் இடமும் வலுவிழந்து போனதால் தகப்பன் அமைப்பு இல்லை. தாயைக் குறிக்கும் நான்காமிடத்திலும் நான்காம் அதிபதி நீசமாகி, நான்கில் ராகு கேதுக்கள் சம்பந்தப்பட்டு, மாதாகாரகன் சந்திரன் எட்டில் மறைந்தாலும், உச்சம் அடைந்ததால் தாயார் உயிருடன் இருக்கிறார். ஆனால் தாயாக இல்லை. உன்னுடைய ஜாதகத்திலும் ஒன்பதில் சனி, நான்கில் செவ்வாய் என்ற அமைப்பும் உங்கள் இருவருக்கும் தாய், தகப்பன் அமைப்பு இறுதிவரை இல்லை என்பதை குறிக்கிறது
அண்ணன், தங்கை இருவருக்குமே ராகுதசை நடக்கிறது. இளம்வயதில் சுபத்துவமற்ற அமைப்பில் வரும் ராகுதசை மன அழுத்தங்களை மட்டுமே கொடுக்கும். இருவரின் ஜாதகங்களிலும் லக்னாதிபதி வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் 30 வயதிற்கு மேல் ராகு தசை முடிந்த பிறகு நன்றாக இருப்பீர்கள். 30 வயதிற்கு மேல் யோகதசைகள் வருவதால் உங்களின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். கடைசிவரை பெரியம்மாவும், பெரியப்பாவும் உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வார்கள்.
ஆர். மித்ரா, பெங்களூர்.
கேள்வி :
ஐந்து வருடங்களாக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகிறேன். விவரம் தெரிந்த நாள் முதல் மற்ற பெண்களால் மனவேதனைக்கு உள்ளாகிறேன். என்னைத் தவறாக பேசுவது வாடிக்கையாகப் போய், எல்லை மீறி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகின்றனர். மனது மரத்துப் போய் விட்டது. ஆண்டவன் மீது இருக்கும் நம்பிக்கையால் என் வழியைப் பார்த்துக் கொண்டு செல்கிறேன். என் மாமியாரும் எனக்கு பிரச்சினை செய்கிறார். இவரைப் பார்க்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. ஆனால் எவ்வளவுதான் நல்ல விதமாக, அன்பாக பார்த்துக் கொண்டாலும் பிரச்சினையே மிஞ்சுகிறது. வருங்காலத்திலும் இதுபோல சங்கடப்படுவேனா? நான் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் மத்தியில் வாழ்ந்து காண்பிக்க விருப்பப்படுகிறேன். அது நடக்குமா? சாப்ட்வேர் படிப்பு படித்து வேலைக்கு செல்ல முடியுமா அல்லது ஏதேனும் தொழில் செய்யலாமா? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில் :
ரா | |||
20.8.1983
பகல்
1.37
நாகப்பட்டினம்
|
செ | ||
சூ சு | |||
சந் | கே ல குரு | சனி | பு |
ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று, உச்சவலுப் பெற்ற சனி, ராசி லக்னாதிபதி இரண்டையும் பார்ப்பதால், உன்னிடம் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாத குணம் இருக்கும். கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், வார்த்தைகளை கொட்டி எதிரிகளை ஏற்படுத்திக் கொள்பவளாக நீ இருப்பாய்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் பெரிய நன்மைகள் எதுவும் செய்வதில்லை. புதனின் தசை, புக்தி வரும்போது வயதிற்கேற்ற பின்னடைவுகள் இருக்கும். கடந்த வருடங்களில் ராகு தசையில் புதன் புத்தி உனக்கு நடந்ததால் ஆரோக்கிய குறைவு கடுமையாக இருந்திருக்கும்.
40 வயதுக்கு உட்பட்ட தனுசுராசி இளைய பருவத்தினர் அனைவரும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று எழுதி வருகிறேன். அதற்கு நீயும் விதிவிலக்காக இருக்க முடியாது. லக்னாதிபதி வலுவிழந்தாலே வாழ்க்கையில் முற்பகுதியில் சோதனைகள் வந்து பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும். உனக்கும் அந்த அமைப்பு இருக்கிறது வரும் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் சூரிய புக்தி முதல் உனக்கு குடும்பச் சிக்கல்கள் தீரும். ஒரு இரண்டு வருடங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இரு.
ராகுதசை, சூரிய புக்தி முதல் வாழ்க்கை உனக்கு சாதகமாக மாறும். நீ சொல்வதை அனைவரும் கேட்பார்கள். அடுத்து நடக்க இருக்கும் குருதசை லக்னத்தில் கேதுவுடன் இணைந்து, கேளயோகத்துடன் இருப்பதால் சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும் நன்மைகளைச் செய்யும். புதன் உச்சமாக இருப்பதால் சாப்ட்வேர் படிப்பு படிக்க முடியும். இப்போது படிக்கலாம். ஜென்மச் சனி முடியும் வரை எவ்வித தொழில் முயற்சிகளும் வேண்டாம். குரு தசையிலிருந்து வாழ்க்கை எவ்வித கஷ்டங்களும் இல்லாமல் சீராக இருக்கும். வாழ்த்துக்கள்.