யூ. கே. பழனிச்சாமி, திருப்பூர்.
கேள்வி :
எனக்கு தற்போது 83 வயது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 31-1-1996 ல் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது ஜாதகத்தை வைத்து மூவரின் பலாபலன்களையும், மற்றும் எனது பேரன், பேத்திகள் அனைவரின் பலாபலன்களையும், நடப்பு மற்றும் எதிர்காலநிலைகளின்படி கணித்து துல்லியமாக கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில் :
சந் | கே | ||
சனி |
20-8-1935
காலை
7-34
திருப்பூர்
|
||
பு ல சூ சு | |||
ரா | செ குரு |
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு மட்டுமே துல்லியமான பலன்களைச் சொல்ல வேண்டும். தாத்தாவின் ஜாதகத்தை மட்டும் வைத்து அவரது சந்ததிகள் அத்தனை பேருக்கும் துல்லியமாக பலன் சொல்ல முடியும் என்றால் எல்லோருக்கும் தனித்தனியாக ஜாதகம் கணிக்க வேண்டியது இல்லையே?
ஒரு தேர்ந்த ஜோதிடரால் உங்கள் ஜாதகத்தை வைத்து, உங்கள் மகன் எந்த நிலையில் இருப்பார், நன்றாக இருப்பாரா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும். ஆனால் அவர் என்னவாக இருப்பார், என்ன தொழில் செய்வார் என்று உங்கள் ஜாதகத்தை வைத்து சொல்ல முடியாது. அதற்கு சம்பந்தப்பட்டவரின் பிறந்த ஜாதகம் அவசியம் தேவைப்படும்.
பொதுவான சில விஷயங்களை வேண்டுமானால் தாய், தகப்பனின் ஜாதகத்தில் பார்க்க முடியுமே தவிர, ஒருவருடைய குணம், ஆரோக்கியம், தொழில் போன்றவைகளை அவருடைய ஜாதகத்தில்தான் கணிக்க முடியும். இதைவிட மேலாக ஒருவருடைய குடும்பத்தை பற்றி அறிய வேண்டுமானால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகமும் அவசியம் பார்க்கப்பட வேண்டும்.
குடும்பம் என்பது ஒரே உயிர் என்பதால் அனைவரும் ஜாதகமும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்பாகத்தான் இருக்கும். தகப்பனுக்கு நல்லவை நடக்க வேண்டும் என்ற பலன் இருக்கும்போது, திருமணமாகாத குழந்தைகளுக்கும் அவர்களுடைய ஜாதகப்படி நல்லவை நடக்கும் தசை அமைப்புகள்தான் இருக்கும். கணவன் மனைவிக்கும் அப்படித்தான். கணவனுக்கு நல்லது நடக்கும்போது, மனைவிக்கும் அப்படிப்பட்ட ஜாதக அமைப்புத்தான் இருக்கும்.
ஜோதிடரிடம் போய் தன்னுடைய ஜாதகத்தை மட்டும் காட்டி குடும்ப சரித்திரத்தையே கேட்பது போன்ற தவறான செயல் வேறு எதுவும் இல்லை. இதுபோன்ற நிலைகளில்தான் ஜோதிடர் உங்களை சமாதானப்படுத்துவதற்காக எதையாவது சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்து, ஆயுள் ஸ்தானாதிபதியாகிய எட்டுக்குடைய குரு சந்திரனின் பார்வையில் வலுப்பெற்று, ஆயுள்காரகன் சனி மூலத்திரிகோண அமைப்பில் குருவின் பார்வையைப் பெற்றிருக்கிறார்கள்.
இதன்மூலம் லக்னம், லக்னாதிபதி, எட்டுக்குடையவன், ஆயுள்காரகன் அனைவரும் சுப அமைப்பில் உள்ளதால், நீங்கள் 85 வயது தாண்டி தீர்க்காயுள் வாழும் அமைப்பு பெற்றிருக்கிறீர்கள். சிம்மத்தை சனி பார்த்தாலும், அந்த சனி குருவின் பார்வை பெற்று புனிதமாகி இருக்கிறார். எனவே இங்கே சனி பார்வை கெடுக்கும் அமைப்பில் இல்லை.
அம்சதில் சூரியனும், குருவும் இணைந்து, ராசியில் சூரியன் சுக்கிரன் இணைந்துள்ளதால் நீங்கள் அரசு வேலை பார்த்து இன்றுவரை நிரந்தர வருமானம் பெற்று வருகிறீர்கள். 5, 9 மிடங்கள் சுபமாக உள்ளதால் உங்களின் வாரிசுகள் உங்களை விட நன்றாக இருப்பார்கள். வாழ்த்துக்கள்.
(28.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)