ஹச். ரபீக், நாகர்கோவில்.
கேள்வி :
ஜோதிட பேரொளிக்கு வணக்கம். 19 வயதுவரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத சந்தோஷ வாழ்க்கைதான் வாழ்ந்தேன். பிறகு தொடர்ச்சியாக தோல்வி, நஷ்டத்தின் மேல் நஷ்டம் என ஒரு போராட்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். பட்டப்படிப்பு முடித்தும் நல்ல வேலை கை கூடவில்லை. வெளிநாடு முயற்சிகளும் கைநழுவிப் போய் விட்டன. 30 வருடங்களாக அடுத்தவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேனே தவிர, எனக்காக சம்பாதிக்கப் போனால் ஏதோ ஒரு சக்தி துவங்க விடாமல் தடுக்கிறது. என்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் வீடு, கார், நிலம் என்ற சிறப்புக்களோடு ஏணி வைத்து அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயரத்தில் இருக்கிறார்கள். நான் மட்டும் வாடகை கொடுக்க கூட திணறிக் கொண்டிருக்கிறேன். கஷ்டங்கள் எப்போது தீரும்? ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் ஆசை இருக்கிறது. வெற்றி பெறமுடியுமா?
பதில் :
சனி | சந் | ||
ரா |
24.8.1970
3.30
மதியம்
நாகர்கோவில்
|
||
சூ செ கே | |||
ல | குரு | பு சு |
நீச சனியின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசையில், சனியின் புக்தி ஆரம்பித்த 19 வயலிருந்து உங்களுக்கு கஷ்டங்கள் ஆரம்பித்தன. ராகுவிற்கு வீடு கொடுத்தவர் வலுவிழந்தால் ராகுதசை யோகங்களைச் செய்வதில்லை. நீச சனி வக்ரம் பெற்றிருந்தால் நீசபங்கமாகி ஓரளவிற்கு நன்மைகளை செய்திருக்கும். உங்கள் விஷயத்தில் அந்த வாய்ப்பும் இல்லாது போனது.
ராகுவிற்கு அடுத்து நடப்பது லக்னாதிபதி குருவின் தசை என்றாலும், குருவும் நீசசனியின் பார்வையில் அமர்ந்து பகை பெற்று இருப்பதாலும். பாபத்துவம் அடைந்த அதே ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் போய்விட்டது. அதேநேரத்தில் காலம் முழுக்க ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் நல்ல அமைப்பு வந்துதான் தீரும்.
சனி, குரு இருவரும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருக்கும் அமைப்பில் சனியை புனிதப்படுத்தி தான் வலுவிழப்பார் குரு என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இதுபோன்ற நிலைமைகளில் குருதசை நல்ல பலன்களை செய்வதில்லை. ஆனால் சனி நீசமாக இருந்தாலும் குருவின் பார்வை பெறுவதால் அவர் நன்மையைச் செய்வதற்கு தகுதி உள்ளவராகிறார். மேலும் நீச சனி ஒன்பதில் ஆட்சி பெற்று, யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்து இருக்கும் பாக்யாதிபதி சூரியன் சாரத்தில் இருப்பது வெகு சிறப்பு. எனவே அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் சனிதசை முதல் நிச்சயமாக நன்மைகள் கிடைத்தே தீரும்.
உங்களின் ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. எட்டுக்குடையவன் உச்சமாகி 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சனி தசையில் வெளிநாடு செல்ல முடியும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலும் செய்யலாம். வாழ்வின் முற்பகுதியில் கஷ்டப்பட்டாலும் பிற்பகுதியில் யோகமாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. இறைவன் ஒருபோதும் உங்களை கைவிட மாட்டான். நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
ஆர் ராமகிருஷ்ணன் தஞ்சாவூர்
கேள்வி :
தங்களது எழுத்துக்கு நான் அடிமை. மாலைமலர், பேஸ்புக். வாட்ஸ்அப், என அனைத்திலும் உங்களைப் படித்து வருகிறேன். எனது நண்பர் கடந்த எட்டு வருடங்களாக மன இறுக்கத்துடன் வாழ்ந்து வருகிறார். மூன்று முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை. உறவுகளும் அவரை தவிர்க்கின்றன. அவருக்கு நிலையான வேலை திருமணம், நல்ல வாழ்க்கை அமையும் ப்ராப்தம் இருக்கிறதா? அடுத்து வரும் சனி தசையில் நன்றாக இருப்பாரா? இயல்பான மனநிலைக்கு எப்போது வருவார்? குடும்பம் அமையுமா?
பதில் :
கு ரா | சுக் | சூ | பு சந் செ |
29.5.1987
மதியம்
3.31
தஞ்சாவூர்
|
|||
சனி | ல | கே |
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் தசை நன்மைகளை செய்வதில்லை. அப்படி குரு நன்மைகளைச் செய்ய வேண்டுமென்றால், கடன், நோய், எதிர்ப்புகளை கொடுக்கும், தன்னுடைய ஆறாம் பாவமான நோய் ஸ்தானத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்திருக்க வேண்டும் ஒரு ஜாதகத்தில் ஆறாம் அதிபதி அந்த மனிதருக்கு தேவையான அனைத்தும் கிடைப்பதற்கு தடை செய்யும் கிரகம் ஆவார். அவரது தசை நடைபெறும்போது அந்த வயதிற்கு தேவையான எதுவும் கிடைக்காது, மற்றும் வயதுக்கேற்றார் போல கடன், நோய், எதிரிகளை உருவாக்குவார். நண்பரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு பத்தில் குரு அமர்ந்து வலுப்பெற்ற கஜகேசரி யோகம் இருக்கிறது. துலாம் லக்னத்திற்கு கஜகேசரி யோகம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சந்திர தசையிலோ, குரு தசையிலோ எதிரிகள் தொல்லை இருக்கும்.
நண்பரின் ஜாதகப்படி உறவினர்கள் அனைவரும் இப்போது அவரது எதிரிகளாக இருப்பார்கள். அனைத்து யோகங்களும் எல்லா லக்னங்களுக்கும் பலன் தருவதில்லை. ஜாதகப்படி குடும்ப பாவமான இரண்டில் சனி அமர்ந்து, ஏழில் தனித்த சுக்கிரன் களத்திர தோஷத்துடன் அமர்ந்து ராசியிலேயே செவ்வாய் இருப்பதால் 33 வயதில் குருதசை, செவ்வாய் புக்தியில் இவருக்கு திருமணம் நடக்கும். அதனையடுத்த ராகுபுக்தியில், ராகு, குருவுடன் இணைந்து, குருவின் வீட்டில் இருப்பதால் குருவின் உயிர்க் காரகத்துவமான குழந்தை பாக்கியத்தை தருவார். தந்தை ஆனதற்கு பிறகு மாற்றங்கள் அடையக்கூடிய ஜாதகம் இது.
ஒரு கிரகம் நல்ல நிலைமையில் இருக்கும்போது உயிர்க் காரகத்தை கொடுத்ததற்கு பிறகே ஜடக் காரகத்துவத்தை தரும். இங்கே குரு ஆறாமிடத்திற்கு அதிபதியாகி கெடுபலன்களை தரும் நிலையில் இருப்பதால், தனது தசையின் இறுதிப் பகுதியான ராகு புத்தியில்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் உயிர் காரகத்துவமான குழந்தை கிடைத்தபிறகு அவரது ஜட காரகத்துவமான பணம் கிடைப்பதற்குரிய வேலை, தொழில் போன்றவை அமையும்.
துலாம் லக்னத்திற்கு சனி ராஜ யோகாதிபதி என்பதால் சனி பலவீனமான நிலையில் இருந்தால் கூட சனி தசை பெரிய கஷ்டங்களைச் செய்வதில்லை. குரு தசையில் அனுபவித்த கஷ்டங்களை பார்க்கும்போது சனிதசை நன்றாகத்தான் இருக்கும். 35 வயதிற்கு பிறகு உங்கள் நண்பர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி நன்றாகவே இருப்பார். வாழ்த்துக்கள்.
Sir vanakam, name : kevin, dob 23/2/1966, tob 5.35pm , place of birth- kuala Pilah , negeri sembilan , Malaysia , i’m 52 years old…, all my thiisai started from 8m bavaam, when i’ll be in peace, pls help me n tell the truth tqvm❤️
Hello sir, I am SELVAM from sankarankovil. i have many troubles in my job.And also try do government jobs. But till now good results to me. i am working as a lecturer. can i get government job in my job. if i get which period in my life. or can i continue in my lecturer job. please tell any remedies for get government job. my parent are worry about my future. i have lot of troubles and distraction in my life. my date of birth is 11/04/1992 time 1.50 p.m