adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 184 (24.04.18)

எம்.ராஜேந்திரன், பொள்ளாச்சி.

கேள்வி :

மூத்தவளுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இளையவளுக்கும், அவளுக்குப் பின் திருமணமான உறவினர்களுக்கெல்லாம் குழந்தை பிறந்து விட்டது. எங்களுக்கு சொல்லி மாளாத துயரம். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் இதே கவலைதான். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் செய்துவிட்டோம். மகளுக்கு மனதில் எப்போதுமே ஒருவித பயம் உள்ளது. மாதாமாதம் அந்த மூன்று நாட்கள் நெருங்கும்போது மனதளவில் மிகவும் நொறுங்கிப் போகிறாள். எப்போது குழந்தை பாக்கியம் கிட்டும்?

பதில் :
செ ரா
குரு கணவர் 1-1-1987 1.30,AM கோவை
சந், பு, சூ சுக் சனி கே
சூ,பு குரு சுக்
ரா மனைவி 11-4-1988 8.01PM இந்தூப்பூர் ஆந்திரா
சந் செ கே
சனி

(கணவர்: 1-1-1987, அதிகாலை 1.30, கோவை. மனைவி: 11-4-1988, இரவு 8.01, இந்தூப்பூர், ஆந்திரா)

மகள் ஜாதகப்படி ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து, ஐந்தை சனி பார்த்த அமைப்பு  இருப்பதாலும், மருமகனுக்கு ஐந்தில் தனித்த குரு அமர்ந்து, சுபத்துவமற்ற ராகு தசையோடு ஜென்மச்சனி நடப்பதாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகிறது. முறையான பரிகாரங்களை இருவரும் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

கணவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் மாலையே ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்திராபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் புத்திரபாக்கியத் தடை விலகும். இருவரும் சுக்கிரனுக்குரிய முறையான பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். 2019-ம் ஆண்டு இறுதியில் கையில் பெண் குழந்தை இருக்கும்.

த.தீனதயாளன், திருச்சி.

கேள்வி :

முப்பது வருடமாக குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. படிப்பு தடை பட்டது, அப்பாவின் தொழில் முடங்கியது, இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களும் கோர்ட்டு, கேஸ் என்று போய்விட்டது. அப்பா விரக்தி அடைந்து விட்டார். ஆனாலும் மனம் தளராமல் எங்களை வளர்த்து விட்டு தொழிலையும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். 2 வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றேன். அங்கும் பெரிய பிரச்சினையாகி திரும்ப வந்து விட்டேன். இங்கேயே இருந்து சொந்தத் தொழிலை மேம்படுத்தலாமா? அல்லது வெளிநாடு செல்லலாமா? உள்ளூரில் வேலைக்கு போகலாமா? என் அம்மா ஜாதகம் பார்த்த இடத்தில் மறுபடியும் வெளிநாடு சென்றால் கடுமையான பிரச்சினை வரும். குடும்பத்திலும் குழப்பங்கள் வரும் என்று ஜோதிடர் சொன்னாராம். நீங்கள்தான் எனது எதிர்காலம் என்ற கோட்டை புள்ளி வைத்து தொடங்கி வைக்க வேண்டும்.

பதில் :

மனதைத் தொடும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் என்று நினைத்தால் ஏதாவது ஒரு குறை அதில் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் பிறந்த நேரம் குறிக்கப்படவில்லை. நேரத்தைக் குறிக்காமல் பிறந்த நாழிகை  மட்டும் எழுதப்பட்டுள்ள ஜாதகங்கள் தவறாக இருக்கக் கூடும். உங்களுடைய பிறந்த நேரத்தை அனுப்புங்கள் பதில் சொல்கிறேன்.

மு.தங்கராசு, தரங்கம்பாடி.

கேள்வி :

சூரியதசை எப்படி இருக்கும். சொந்தமாக லாரி வாங்கலாமா? வீடு, மனை அமையுமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? எனக்கு இந்து லக்னமாக எந்த இடம் அமையும்?

பதில் :
சந் ல, குரு
10-9-1976 10.48pm கரூர் சனி
சூ
ரா பு,சு செவ்

(ரிஷப லக்னம், மீன ராசி. 1-ல் குரு. 3-ல் சனி. 4-ல் சூரி. 5-ல் புத, சுக், செவ். 6-ல் ராகு. 11-ல் சந். 12-ல் கேது. 10-9-1976, இரவு 10.48, கரூர்.)

பாப கிரகமான சூரியன் கேந்திரத்திற்கு அதிபதியாகி, அங்கேயே ஆட்சி பெற்று நீசபங்கம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரனின் சாரம் பெற்றிருப்பதால் சூரிய தசை நல்ல தொழில் வளர்ச்சியைச் செய்யும். குறிப்பாக சுக்கிர தசையை விட சூரிய தசை நன்றாகவே இருக்கும். 10-ம் அதிபதி சனி என்பதால் லாரித் தொழில் ஏற்றதுதான். சூரியதசையில் வீடு, மனை அமையும். சுக்கிர தசையில் இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் சூரியனில் இருக்காது. சூரியன் சுகாதிபதியாகி வலுவாக இருப்பதால் சுகத்தை தருவார். ரிஷப லக்னம், மீன ராசி என்பதால் இந்து லக்னமாக கன்னி அமையும்.

எஸ்.சக்திவேல், கோவை-24.

கேள்வி :

கடந்த ஐந்து வருடங்களாக பெற்றோர் வரன் பார்த்து வருகிறார்கள். திருமணம் நடகவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடை பெறும்?

பதில் :
பு, சு ரா
சூ, கு 6-3-1086, காலை10.52, கோவை
சந் செ சனி கே

(ரிஷப லக்னம். தனுசு ராசி. 6-ல் கேது. 7-ல் செவ், சனி. 8-ல் சந். 10-ல் சூரி, குரு. 11-ல் புத, சுக். 12-ல் ராகு. 6-3-1086, காலை 10.52, கோவை)

லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், சனி அமர்ந்து, லக்னம் மற்றும் ராசிக்கு இரண்டு ஏழாம் பாவங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கு 33 வயதிலும், பெண்ணிற்கு 30 வயதுகளிலும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது பொது விதி. அதற்கு முன் திருமணம் நடக்க வேண்டும் என்றால் இதுபோன்ற அமைப்பில் உள்ள செவ்வாய், சனி இருவரும் குரு அல்லது சுக்கிர தொடர்பில் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏழில் பாபத்துவ சனி, செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாயும், ராசிக்கு இரண்டாம் வீட்டை சனியும் பார்ப்பதால் திருமணம் தாமதமாகிறது. 33 வயதிற்கு பிறகு அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் நடக்கும்.

கே.அன்னபூரணி, நாகர்கோவில்-2.

கேள்வி :

நான் தங்களின் தீவிர நிரந்தர வாசகி. எனக்கு மட்டும் ஏன் இந்த கருத்து வேறுபாடான வாழ்க்கை? காலம் முழுவதும் கண்ணீர்தானா? கணவர் நல்லவர்தான். ஆனால் நிரந்தர வருமானம் இல்லை. கடன் இல்லை என்றாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கும், மகனை ஸ்கூலில் சேர்ப்பதற்கும் பணம் வேண்டுமே? இந்தக் கடிதம் எழுதும் நேரம் வரை அரசுவேலை தேர்வுக்கு படித்துக் கொண்டே இருக்கிறேன். எத்தனையோ தேர்வு எழுதியும் வேலை கிடைக்கவில்லை. அரசுவேலை கிடைக்குமா? கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பெற்றோர் வீட்டில் இருக்கிறேன். அப்பா பெரிய அதிகாரி. மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குகிறார். ஆனால் எனக்கோ வருமானம் இல்லாத வக்கீல் தொழில் உள்ள கணவர். எனது வாழ்க்கை வறண்ட நிலம்தானா? இன்னொரு குழந்தை இருந்தால் வளர்க்க முடியாதே என்று கவலைப்பட்டு தாம்பத்தியத்தையும், கணவரையும் வெறுக்கிறேன். என் எதிர்காலம் என்ன? என் கணவருக்கு நிரந்தர வருமானம் உண்டா?

பதில் :
சூ, பு சு செ ரா
கணவன் 10-4-1985, 3.45-AM நாகர்கோவில்
குரு
சந் சனி கே
 ல சந் செ
சு மனைவி 25-1-1991  10.30-AM நாகர்கோவில் குரு கே
சூ, ரா சனி
பு

(கணவன்: 10-4-1985, அதிகாலை 3.45, நாகர்கோவில். மனைவி : 25-1-1991, காலை 10.30 மணி, நாகர்கோவில்)

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசிக்காரர்களின் மனைவிகள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன்தான் இருக்கிறீர்கள். அதற்கு நீ விதிவிலக்காக இருக்க முடியாது. கடந்த மூன்று வருடங்கள் உங்களுக்கு நிம்மதி இல்லாத வருடங்கள்தான். இனிமேல் அந்த நிலைமை இருக்காது. கணவனுக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்ததால் உனக்கு எந்தவித நல்லதும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஜனவரி மாதம் நீ எழுதிய இந்தக் கடிதம் கூட எங்கெங்கோ சுற்றி இப்போதுதானே என் கைக்கு வந்திருக்கிறது.

மீன லக்னமாகி, லக்னாதிபதி உச்சம் பெற்று, பிறந்ததில் இருந்தே கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து செழிப்போடு வளர்க்கப்பட்ட செல்வக் குழந்தை நீ. ஆகவே சிறுகஷ்டம் கூட உனக்கு பெரியதாகத் தெரிகிறது. கணவருக்கு வருமானம்தான் இல்லை. அதேநேரம் கடனும் இல்லை என்று நீயே ஒத்துக் கொள்கிறாய். வருமானமே இல்லை. ஆனால் மாதாமாதம் வட்டி கட்ட வேண்டுமே என்று கலங்கிக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களைப் பார்த்தால் என்ன சொல்வாய்?

உங்கள் இருவரின் ஜாதகமும் நல்ல யோகமான ஜாதகம்தான். ஆனால் எந்த ஒரு யோக ஜாதகமாக இருந்தாலும் கடுமையான ஜென்மச்சனி நடக்கும் போது செயலற்றுப் போகும். அதுதான் இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருட பிற்பகுதியில் ஆரம்பிக்க இருக்கும் ராகுதசை, புதன் புக்தியில் உனக்கு அரசுவேலை கிடைக்கும். அதற்கான முழு முயற்சிகளைச் செய்.

வாழ்க்கையில் சாதிப்பதற்கு பிறந்தவள் நீ. வெற்றியை நோக்கி குறி வைப்பவர்கள் ஒருபோதும் புலம்பிக் கொண்டிருப்பதில்லை. ராகுதசைக்குப் பிறகு வரும் கேளயோகத்துடன் கூடிய குருதசை உன்னை உச்சத்தில் கொண்டுபோய் வைத்திருக்கும். நல்ல கணவன், அருமையான குழந்தைகளுடன் வாழ்க்கையில் அனைத்திலும் நிறைவாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

ஜோதிடத்தை துணைத் தொழிலாக செய்யலாமா?

ஜி.ராமன், சென்னை-2.

கேள்வி :

கிராமத்தில் பிறந்த எனக்கு பெற்றோர் ஜாதகம் எழுதாமல் தப்பு செய்து விட்டார்கள். உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து மாலைமலரில் படித்து வருகிறேன். தங்களுடைய பதில்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. ஜோதிடத்தில் ஆர்வம் உள்ள நான் ஜோதிடத்தை உபதொழிலாக செய்ய விரும்புகிறேன். முடியுமா?. காரகம் என்றால் என்ன? ஆதிபத்தியம் என்றால் என்ன? லக்னத்தில் பகைக் கிரகங்கள் லக்னாதிபதியோடு சேர்ந்தால் காரகம் பாதிக்குமா? அல்லது ஆதிபத்தியம் பாதிக்குமா? என் கேள்வியில் எதுவும் தவறாக இருந்தால் மன்னித்து பதில் தரவும்.

பதில் :

ஜோதிடத்தை உப தொழிலாக செய்ய விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் ஆயிரமாயிரம் நுணுக்கங்கள், லட்சோபலட்சம் சூட்சுமங்கள் அடங்கிய இந்தக் கலையை ஓரளவாவது கற்றுக் கொண்டு அதன்பிறகு தொழிலாகச் செய்யுங்கள். இப்போதெல்லாம் மூன்று மாதம் படித்துவிட்டு நானும் ஒரு ஜோதிடர் என்று போர்டு மாட்டி விடுகிறீர்கள்.

ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிவிக்கும் இந்த மாபெரும் அறிவியலின், கணிதங்கள் நமது அறிவிற்கு பிடிபட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் பத்து வருட அனுபவமாவது வேண்டும். அருகில் உள்ள முப்பது வருடங்களுக்கும் மேல் அனுபவம் உள்ள ஒரு ஜோதிடரைப் பார்த்து குருநாதராக ஏற்று முறைப்படி நேரில் கற்றுக் கொள்ளுங்கள்.

என்னதான் புத்தகத்தையும், என்னைப் போன்று எழுதுபவர்களின் கட்டுரைகளையும் படித்துத் தெரிந்து கொண்டாலும் “கற்றலிற் கேட்டல் நன்று” என்ற முதுமொழிப்படி நேரில் ஒரு குருநாதரிடம் பயில்வது ஜோதிடத்தில் முழுமை பெற வைக்கும். அதற்காக நீ எந்தக் குருநாதரிடம் நேரில் படித்தாய்? என்னால் முடியாதா என்று கேட்காதீர்கள். என்னைப் போன்ற ஜோதிடப் பைத்தியங்கள் ஒரு விதிவிலக்கு.

காரகம் என்பது ஒரு கிரகம் என்ன தரும் என்பதைச் சொல்லுகின்ற அதன் செயல்பாடுகள் ஆகும். ஆதிபத்தியம் என்பது அந்த கிரகம் அமரும் வீடு எதைத் தர விதிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகும். சுருக்கமாகச் சொன்னால் சூரியன் தந்தைவழி, சந்திரன் தாய், செவ்வாய் சகோதரம், புதன் கல்வி, குரு குழந்தைகள், சுக்கிரன் மனைவி, சனி வேலை என்பது போன்றவைகள் காரகங்கள். இவை கிரகங்கள் தரும் செயல்பாடுகள்.

ஜாதகத்தில் பனிரெண்டு ராசிக் கட்டங்கள் இருக்கின்றன இல்லையா? அவை ஒன்று முதல் பனிரெண்டு வீடுகள் என்று சொல்லப்படுகின்றன. அதில் ஒன்றாம் வீடு உங்களைப் பற்றியும், இரண்டு உங்களின் குடும்பத்தையும், மூன்று உங்களின் தைரியம், நான்கு வீடு, வாகனம், அம்மா, ஐந்து குழந்தைகள், ஆறு கடன், நோய், ஏழு மனைவி, நண்பன், எட்டு ஆயுள். அவமானம், வெளிதேசம். ஒன்பது சந்தோஷம், பத்து தொழில், வேலை, பதினொன்று இரண்டாம் திருமணம், பனிரெண்டு செலவு வெளிநாடு ஆகியவற்றைச் சொல்லுகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்தையும், அந்த ஒன்பது கிரகங்கள் அமரும் பனிரெண்டு வீடுகள் தரும் ஆதிபத்தியத்தையும் இணைத்து இவைகள் எங்கே, எப்போது, எப்படி நடக்கும் என்பதை சரியாகக் கணிப்பதுதான் ஜோதிடத்தின் வேலை.

ஒரு மனிதனின் எதிர்கால வாழ்க்கை எனும் தேவரகசியம் இந்த பனிரெண்டு வீடுகளுக்குள்தான் ஒளிந்து கிடக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக வெள்ளிக்கிழமை தோறும் மாலைமலரில் வெளிவந்து கொண்டிருக்கும் “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” தொடரில் நீங்கள் கேட்ட விஷயங்களுக்கான பதில்களைத்தான் விரிவாகத் தரப் போகிறேன். படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *