கன்னிபாபு, சென்னை.
கேள்வி :
28 வயதாகும் மகளுக்குதிருமணம் தள்ளிபோகிறது. எப்போதுதிருமணம் நடக்கும்?
பதில்:
செவ் | |||
29.9.1990 காலை 9.20 சென்னை | குரு கே | ||
சந் ரா | பு | ||
சனி | ல | சூ சுக் |
மகளுக்கு லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி, எட்டில் செவ்வாய் அமர்ந்த ஜாதகம். ராசிக்கு ஏழில் ராகு-கேதுக்கள் சம்மந்தமும் இருக்கிறது. இதுபோன்ற ஜாதகங்களுக்கு தாமதமாக திருமணம் நடப்பதே நல்லது. 28 வயது முடிய வேண்டும். 2019-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகுதான் திருமணம் நடக்கும். அதுவரை பொறுத்திருங்கள். தாமத திருமணம் என்றாலும் திருமணத்திற்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும். கவலை வேண்டாம்.
பரிமளம், ஆத்தூர்.
கேள்வி :
மகனுக்கு 38 வயது முடிந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இங்குள்ள ஜோதிடர்கள் 2, 5, 7ம் இடங்கள் கெட்டுவிட்டது. திருமணமே நடக்காது என்று சொல்கிறார்கள். மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். மகனுக்கு திருமணம் நடக்குமா? குழந்தை பாக்கியம் உண்டா?
பதில்:
சந் சு,செ | சூ பு | ||
கே | 23-5-1979 மதியம் 1.30 சேலம் | குரு | |
ல,ரா சனி | |||
குரு |
மகன் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், காரகனுமான குருபகவான் பனிரெண்டில் மறைந்தாலும் உச்சமாக இருக்கிறார். எனவே கண்டிப்பாக அவருக்கு புத்திரபாக்கியம் உண்டு. தந்தை ஆகவேண்டும் என்றால் திருமணம் நடந்துதானே ஆக வேண்டும்? ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்து, லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனியும் பார்த்த நிலையில், லக்ன ஏழில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டதாலும் இதுவரை திருமணம் ஆகவில்லை.
நிறைய பரிகாரம் செய்து விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் முறையான பரிகாரத்தை இதுவரைக்கும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்காது. மகனின் ஜென்ம நட்சத்திரமான அஸ்வினிக்கு முதல் நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே ஶ்ரீகாளகஸ்தி சென்று ஒரு முழு இரவு தங்கி மறுநாள் காலை காளத்திநாதனுக்கும், அன்னை ஞான பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் மகனை கலந்து கொள்ள செய்யவும். தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி ஆரம்பிக்க உள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் நடக்கும்.
முத்துக்குமார், திருச்சி.
கேள்வி :
தனியார் வங்கியில் பணிபுரிகிறேன். இரண்டு ஆண்டுகளாகவே மார்க்கெட்டிங் பிரிவில் கடுமையாக கஷ்டப்படுகிறேன். தினமும் வேலை போராட்டமாகத்தான் இருக்கிறது. வேறு வேலைக்கு முயற்சி செய்கிறேன். அதுவும் கிடைக்கவில்லை. வேலை நிரந்தரம் இல்லை என்பதால் திருமணம் பற்றி முடிவெடுக்க முடியாமல் உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி அஷ்டமச்சனியாக வருவதால் வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம், வேலை மாற்றம் வர வாய்ப்பு உள்ளதா என்பதைக்கூறுங்கள்.
பதில்:
ரா | ல சந் | ||
6-9-1985 இரவு 10.53 திருச்சி | சுக் | ||
குரு | சூ,பு செவ் | ||
சனி கே |
ரிஷப ராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதால் நீங்களாகவே வேலைமாற்றத்தை இப்போது ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. இருக்கும் வேலையை கண்ணும், கருத்துமாக பார்க்கவும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேலை விஷயங்களில் நல்லபலன் சொல்வதற்கு இல்லை. வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும். 2020-க்கு பிறகு எல்லாவிதமான நன்மைகளும் உண்டு. அடுத்து நீசபங்கமான குருவின் தசை நடக்க இருப்பதால் 2019-ம் ஆண்டிற்குப் பிறகு வங்கித்துறையில் முன்னேற்றம், பதவிஉயர்வு இருக்கும். எதிர்காலத்தில் சனி, புதன் என யோகதசைகள் வருவதால் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட தேவையில்லை.
ஒரு வாசகர் சென்னை.
கேள்வி:
திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு சில வருடங்களே மனைவியுடன் சந்தோஷமாக இருந்தேன். அதன்பிறகு மனைவியுடன் சேர என்னால் முடியவில்லை. முயற்சி செய்தால் என்னையும் அறியாமல் ஒருவிதமான பயமும், படபடப்பும் தொற்றிக் கொள்கிறது. விந்தும் முந்திக் கொள்கிறது. இதற்கு மேல் எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியும், ஆண்மைக் குறைபாடும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலன் இல்லை. தெய்வத்திற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? மீண்டும் மருத்துவரை பார்க்கலாமா? மனைவி என்னுடன் பிரியாமல் இருப்பாரா? எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நீங்கள் எனக்கும் உதவுங்க ள்.
பதில்:
சனி | |||
22-9-1971 மாலை 4.00 விழுப்புரம் | கே | ||
ல,ரா செவ் | பு | ||
குரு | சந் |
சூ
சுக்
|
ஒருவருடைய நிறைவான தாம்பத்திய வாழ்க்கைக்கு ஜாதகத்தில் ஏழு, மூன்று, பனிரெண்டாம் இடங்கள் பலமாக இருக்க வேண்டும். சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும். மூன்றாம் இடம் ஒரு மனிதனின் தாம்பத்திய சுகத்தின் வீரியத்தையும் ஏழு, பனிரெண்டாமிடங்கள் அதை அனுபவிக்கும் விதத்தையும் குறிப்பிடுகின்றன.
சுக்கிரனே காமத்திற்கு காரணமானவர். ஒருவர் பூரண உறவு சுகத்தை அனுபவிப்பதற்கு சுக்கிரன் வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்களுடைய ஜாதகத்தில் சிற்றின்ப ஸ்தானமான ஏழாமிடத்தோடு செவ்வாய், ராகு, கேதுக்கள் சம்பந்தப் படுவதும், வீ\ரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தை அஷ்டமாதிபதி பார்ப்பதும், பனிரெண்டுக்குடையவன் சனி பார்வையில் இருப்பதும் உறவுநிலையில் உங்களின் செயல்திறன் குறைவை காட்டுகிறது. எல்லாவற்றையும் விட மேலாக சுக்கிரன் நீசபங்கம் இன்றி நீசமாக இருப்பதோடு அம்சத்தில் நீச சனியுடனும் இணைந்திருப்பதாலும் கடந்த 2009 முதல் உங்களுக்கு தாம்பத்திய சுக குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.
தற்போது உங்களுக்கு ஏழரைச்சனி விலகி விட்டதாலும், அடுத்த ஜூலை மாதம் முதல் சனிதசையில் சந்திரபுக்தி முடிய போவதாலும், அடுத்த ஜூலை முதல் மருத்துவம் பலனளித்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவியுடன் நிச்சயம் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த குறைபாடுக்கென உள்ள நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். ஆறு மாதத்தில் பலன் தெரியும்.
கணவனோடு மனைவி தாம்பத்திய சுகத்திற்காக மட்டும் வாழவில்லை. கணவன் மனைவிக்குள் அதைவிட முக்கியமாக ஆயிரம் சுகங்கள் இருக்கின்றன. ஒரு பெண் ஒரு ஆணை இவன் என்னையும் எனக்குப் பிறக்கும் குழந்தைகளையும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையில்தான் விரும்புகிறாளே தவிர அவன் கொடுக்கும் உடல்சுகத்திற்காக அல்ல. உங்கள் மனைவி உங்களை விட்டுப் பிரிய மாட்டார்.
சனிப்பெயர்ச்சி ராசிப்படி பார்க்க வேண்டுமா? லக்னப்படியா?
ஆர். விக்னேஷ்வரன், குளித்தலை.
கேள்வி :
ராசியை விட லக்னம் முக்கியம் என்று அடிக்கடி சொல்கிறீர்கள். ஆனால் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி பலன்களை ஏன் ராசிக்கு சொல்கிறீர்கள்? லக்னப்படி தானே சொல்ல வேண்டும்?
பதில்:
லக்னம் என்பது சூரியனை அடிப்படையாக கொண்டது. ராசி என்பது சந்திரனை அடிப்படையாக கொண்டது. கோள்களின் தினசரி இயக்கமான கோட்சார பலன்கள் சந்திரனை, அதாவது உங்கள் ராசிக்கு கிரகங்கள் எந்த அமைப்பில் இருக்கின்றன என்ற அடிப்படையில் சொல்லப்படுபவை.
சந்திரனே மனதை ஆளுகிறான். நம் எண்ணங்களை உருவாக்குகிறான். சந்திரனின் வழியாகத்தான் நம் மனதை பிற கிரகங்களும் நட்சத்திரங்களும் கட்டுப்படுத்தி வழி நடத்துகின்றன. அதனால்தான் நமது ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் போது சந்திராஷ்டம நிலை என்று சொல்லப்பட்டு அன்றைக்கு நம் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. லக்னத்திற்கு எட்டில் சந்திரன் இருக்கும்போது இது நடப்பதில்லை.
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் நமது ராசிக்கு அருகில் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு,கேதுக்கள் வரும்போது நமது மனம் பாதிப்படைகிறது. எதிர்மறை எண்ணங்களால் தூண்டப்பட்டு தவறான விஷயங்களை செய்து சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்.
ராசிக்கு அருகில் மற்றும் ராசியிலேயே முழு பாபரான சனி வருவதுதான் ஏழரைச்சனி எனப்படுகிறது. ஒருவரின் பிறந்த ஜாதக அமைப்பின்படியான லக்னத்தின் அருகில் பாபக் கிரகங்கள் வரும் போது அவரது மனம் தவறான வழியில் தூண்டப்படுவதில்லை. லக்னப்படி ஒருவருக்கு ஏழரைச்சனி வரும்போது ஒருவர் கஷ்டப்படுவதில்லை. ஆனால் ராசிப்படி சனி வரும்போது ஒருவரின் நிலை என்ன என்பது நமக்கு தெரிந்ததுதான்.
உதாரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருமே விதிவிலக்கில்லாமல் ஏதேனும் ஒரு வகையில், அவரவர் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு ராசிப்படி ஏழரைச்சனி நடப்பதால்தான்.
ஆனால் விருச்சிக லக்னக்காரர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பலன் சொன்னால் அது அபத்தமாக இருக்கும். ஒரு விருச்சிக லக்னக்காரர் நான் நன்றாக இருக்கிறேன் என்று ஜோதிடத்தை கிண்டல் செய்வார். ஆனால் ஒரு விருச்சிக ராசிக்காரர் அவ்வாறு சொல்ல முடியாது கோட்சார ரீதியிலான சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் ராசிக்கு பொருந்துவதை போல லக்னத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எனவேதான் ராசிப்படி இங்கே பலன் சொல்லப்படுகிறது.
மேலும் ஒரு மனிதனின் தற்காலநிலையை ஜாதகப்படி அறிவதற்கும் கோட்சார நிலை மிகவும் முக்கியமானதாகும். பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அடிப்படையில் பலன் சொல்லப்படும் போது கூட கோட்சாரம் எனப்படும் தற்கால கிரக நிலைகள் அந்த ஜாதகருக்கு எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் கணக்கில் கொண்டு பலன் சொல்லும் போதுதான் அது துல்லியமாக இருக்கும்.
ஒருவரின் பிறந்த ஜாதகம் மாறாதது. நிலையானது. அது லக்னத்தை மூலமாகக் கொண்டது. ராசிபலன் சொல்லப்படும் கோட்சார கிரக நிலை என்பது சந்திரனின் அடிப்படையிலானது. ஒவ்வொரு வினாடியும் மாறிக்கொண்டே இருப்பது. மாறாத ஜாதகத்தையும், மாறிக் கொண்டே இருக்கும் கோட்சாரத்தையும் இணைத்துத்தான் தனிப்பட்ட ஒருவருக்கு பலன் அறிய முடியும். அதுவே சரியானது.
சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ள உதவும் தசா புக்தி வருடங்கள் கணிக்கப்படுகின்றன. லக்னம் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து அல்ல. எனவே ராசிப்படி கோட்சார பலன் அறிவது மட்டுமே முறையானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.
சார்.ராசி=ரிஷபம் நட்சத்திரம்= மிருகசீரிடம் பிறந்த தேதி= 18/02/1986 தொழில் எப்படி இருக்கும் .திருமணம் எப்போது நடக்கும்
இருவரின் ஜாதகம் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இந்த ஜாதகம் பொருந்துமா. ராசி : சிம்மம் நட்சத்திரம் : மகம் 1 பாதம் (ஆண்) பெண் : மகம் 4 பாதம்