adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 166 (19.12.17)

டி.வி. சத்யநாதன், சென்னை-17.

கேள்வி:

எனது வீட்டிற்கு 2015-ல் குடிவந்த ஒரு குடும்பத்தினர் தற்போது வாடகை தராமலும், காலி செய்ய மறுத்தும் அடாவடி செய்கின்றனர்.  தகாத முறையில்  திட்டியதாக பொய்ப் புகார் கொடுத்து என்னை ஜெயிலில் தள்ளி விடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். தற்போதய கிரக நிலையில் நான் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் பொய்ப் புகார் கூறி என்னை சிறையில் தள்ளி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். அப்படிப்பட்ட துன்பம் வருவதற்கு ஜாதக நிலைமை உள்ளதா? இதை எப்படி தீர்ப்பது? கருணை காட்டுங்கள்.

பதில்:
 குரு சந் செவ்
ராகு
28-7-1951 காலை 11.15 மதுரை
 சூ
 பு, சு கேது
 ல,சனி

கன்னி லக்னமாகி, லக்னத்தில் அமர்ந்த சனி தசையில் தசாநாதனுக்கு ஆறுக்கு எட்டாக ஆறாமிடத்தில் அமர்ந்த ராகுவின் புக்தி உங்களுக்கு நடப்பதாலும், ரிஷப ராசிக்கு அஷ்டமச் சனி தொடங்கி இருப்பதாலும் நீங்கள் சட்டப்படி காவல்துறை அல்லது நீதித்துறை மூலமாக நடவடிக்கை எடுத்துதான் அவர்களை வெளியே அனுப்ப முடியும்.

வம்பு, வழக்குகளை குறிக்கும் சனியின் ஆறாம் வீட்டில் பாபத்துவத்துடன் இருக்கும் ராகு மன உளைச்சலை தர வேண்டும் என்பதால், இந்த வயதிற்கேற்ற பலனாக வாடகைதாரர்கள் மூலமாக உங்களுக்கு பிரச்சினை வந்திருக்கிறது. அஷ்டமச் சனி காவல் நிலையம், கோர்ட்டுகளுக்கு செல்ல வைப்பார்  என்பதால் நீங்கள் ஒரு நிலையில் சட்ட அமைப்புகளை நாடி போக வேண்டியது இருக்கும்.

சட்டப்படியே அவர்களை காலி செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனவரி மாதத்திற்கு பிறகு எடுங்கள். எக்காரணம் கொண்டும் தனிநபர்களிடம் கட்டப் பஞ்சாயத்து போன்ற வழிகளில் போக வேண்டாம். அது உங்களுக்கு சிக்கல்களை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தி பணச்செலவையும் கொடுக்கும். ஜாதகப்படி ஒருவரின் மேல் புகார் கொடுக்க காவல் நிலையம் அல்லது நீதிமன்றம் செல்ல அமைப்பு இருக்கிறதே தவிர நீங்கள் ஜெயிலுக்கு போகும் அமைப்பு இல்லை.

பி. உமாதேவி, மலேசியா.

கேள்வி:

இணையத்தின் வாயிலாக மாலைமலர் இ-பேப்பரில் உங்கள் ராசிபலன்கள், கேள்விபதில்களை தவறாமல் படித்து வருகிறேன். மிகவும் உபயோகமாக இருக்கிறது. என் கணவருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. நிறையமுறை மருத்துவமனைக்கு சென்றும் பார்த்தாகிவிட்டது. அவரது கெட்ட பழக்கத்தால் சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஷார்ஜாவில் பார்த்துக் கொண்டிருந்த நல்லவேலை போய் விட்டது. படிப்பு, அனுபவம் இருந்தும் இன்னும் வேறு வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லாததால் நிறைய கடன்கள் ஆகிவிட்டது. சொத்துக்களையும் விற்க முடியவில்லை. என்னுடைய இரண்டு மகன்களும் நன்றாக படித்து கொண்டிருக்கிறார்கள். கணவருக்கு வேலை போய் விட்டதால் அவர்களை மேற்கொண்டு எப்படி படிக்க வைப்பது என்று தெரியவில்லை. மகன்கள் மேற்படிப்பு படிப்பார்களா? கணவர் எப்போது திருந்துவார்? மறுபடியும் அவருக்கு எந்த நாட்டில், எப்போது வேலை கிடைக்கும்?

பதில்:
 சு, சனி, ராகு
6-2-1969, மாலை 4.28, ஈரோடு
சூ, பு
செவ்  சந், கு, கேது

லக்னம், ராசி இரண்டும் பலவீனமாகி, சனி, ராகு போன்ற பாபக்கிரகங்களின்  தொடர்புகளை பெற்றிருந்தாலே ஒருவருக்கு மனக் கட்டுப்பாடு இருக்காது. மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். அவற்றை விடவும் முடியாது. கணவருக்கு லக்னம், ராசி இரண்டின் அதிபதியான புதன் லக்னத்திற்கு எட்டில் மறைந்து வக்ரமாகி, நவாம்சத்தில் நீச நிலை பெற்று சனியுடன் இணைந்திருப்பது மிகவும் வலுவிழந்த ஒரு நிலை.

ராசிக்கு குரு, சுக்கிர தொடர்புகள் இருந்தாலும் சுக்கிரன் ராகுவுடன் ஒரே டிகிரியில் கிரகணமாகி விட்டதால் அவரும் பலவீனமான நிலையில் பார்வைபலம் இன்றி இருக்கிறார். இந்த அமைப்பின்படி சனியுடன் சேர்ந்த ராகு தசையில் சனி புக்தியில் 25 வருடங்களுக்கு முன்பே குடிப்பழக்கம் உன் கணவருக்கு அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கும்.

செவ்வாய் தசையோ, புக்தியோ வரும் பொழுது மிதுன லக்னக்காரர்கள் பின்னடைவுகளை சந்திப்பார்கள் என்பதை அடிக்கடி மாலைமலரில் குறிப்பிடுகிறேன். அதன்படி நவம்பர் 2016-ல் உன் கணவருக்கு ஆரம்பித்த செவ்வாய் புக்தியில் வேலை போய் விட்டது. கிரகநிலைகளின்படி கடந்த ஒரு வருடமாக கடுமையான கடன் தொல்லைகள் உனக்கு இருக்கும். மகன்கள் இருவருக்கும் தனுசு ராசியாகி ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு உன்னுடைய கடன் பிரச்சினைகள் தீர்வதற்கோ, கணவர் திருந்துவதற்கோ வாய்ப்பு இல்லை.

லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை கணவர் செய்து கொள்வது நல்லது. தற்போது அவருக்கு ராகுபுக்தி ஆரம்பித்து விட்டதால் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு பிறகு மீண்டும் அரபு நாட்டில் வேலை கிடைக்கும். ஆனால் அது முந்தைய வேலை போன்றதாக இருக்காது. சம்பளம், பதவி, அனைத்துமே குறைவாக இருக்கும். கிடைக்கும் வேலைக்கு போவது நல்லது. மகன்கள் இருவருக்கும் ஜென்மச் சனி முடிந்தவுடன் மேற்படிப்பு, வேலை போன்றவைகள் நிறைவாக இருக்கும்.

வி. இசக்கி சேனையர்,  தச்சநல்லூர்.

கேள்வி:

பலகோடி ரூபாய் சொத்துக்களுக்கு பினாமியாக இருந்த நான், இன்றும் பல லட்சரூபாய் சொத்துக்களுக்கு பினாமியாக இருக்கும் நான், எந்த வேலையும் இல்லாமல் எனது மகன் தயவில் இருக்கிறேன். அன்றாட செலவுக்கு கூட அடுத்தவர் கையை எதிர்பார்த்து இருக்கும் நிலை ஏன்? பிறந்தவுடன் எனது பெற்றோர்கள் எனக்கு ஜாதகம் கணிக்கவில்லை. எனது தாயார் சொன்னதை வைத்து என் 33-வது வயதில் நான் ஒரு ஜோதிடரிடம் சென்று எனது ஜாதகத்தை கணித்து வாங்கினேன். உங்களுடைய கேள்வி பதிலை படித்த பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கம்ப்யூட்டரில் ஜாதகம் கணித்து வைத்திருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்தும், குழந்தைகளின் ஜாதகப்படியும் எனது ஜாதகம் சரிதானா என்று கூற முடியுமா? இந்த மாணவனுக்கு பதில் தர வேண்டுகிறேன்.

பதில்:

அனுப்பியுள்ள விவரங்களின்படி உங்களது ஜாதகம் சரியானது அல்ல. உங்களின் பிறந்த நாள் சரியாக இருந்தாலும் நேரம் தவறாக இருக்கலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள வாழ்க்கை சம்பவங்களின்படி உங்களுக்கு தனுசு லக்னம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் உங்கள் ராசி விருச்சிகராசிதான். 2018-ம் ஆண்டு முதல் அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் உங்களுடைய சொந்த உழைப்பில் இருக்க முடியும்.

ராகு-கேது தோஷத்திற்கு அதேபோன்ற வரனைத்தான் சேர்க்க வேண்டுமா?

டி.கே. ராமானுஜம், சென்னை-17.

கேள்வி:

பழம்பெரும் ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து ஓய்வு பெற்ற நானும், எனது மனைவியும் உங்களுடைய தீவிர வாசகர்கள். ஒரே மகளுக்கு கடந்த வருடம் மார்ச் முதல் வரன் பார்க்கிறோம். சரியாக அமையவில்லை. லக்னத்தில் ராகு, ஏழில் கேது இருப்பதால் அதே மாதிரியான வரனைத்தான் சேர்க்க வேண்டுமா? ஏழாம் அதிபதி பனிரெண்டில் மறைந்திருப்பதால் பரிகாரம் தேவையா? ரிஷப ராசிக்கு அஷ்டமச் சனி வரப்போவதால் இந்த நேரத்தில் திருமணம் செய்யலாமா? மகளுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளதா?

பதில்:
சந் கேது
19-12-1991 காலை 8.05 சென்னை
சனி குரு
ல, சூ, ராகு பு, செ சுக்

மகளுக்கு லக்னாதிபதியும், ஒன்பதுக்குடையவனும் பரிவர்த்தனையான யோக ஜாதகம். வாழ்வின் நடுப்பகுதியில் வலுப்பெற்ற லக்னாதிபதியின் தசை வரப் போவதால் நல்ல கணவன், குழந்தைகளுடன் மிகவும் சிறப்பான ஒரு அமைப்பில் நிரந்தரமான வேலையில் இருப்பாள். ராசிக்கு பத்தாமிடத்தை வலுத்த குரு பார்ப்பதாலும், லக்னத்திற்கு பத்துக்குடையவன் பவுர்ணமிக்கு முந்தைய சுபச் சந்திரனின் பார்வையில் இருப்பதாலும் அஷ்டமச்சனி முடியும் தருவாயில் அரசு வங்கியில் வேலை கிடைக்கும். ஜாதகப்படி உங்கள் மகளுக்கு கணக்கில் ஆர்வம் இருக்கும் என்பதால் வங்கித் தேர்வுகளுக்கு தயாராக சொல்லவும்.

லக்னத்தில் ராகு-கேதுக்கள் இருக்கும் அமைப்பிற்கு அதேபோன்ற ஜாதகத்தைதான் சேர்க்க வேண்டும் என்று மூலநூல்களில் சொல்லப்படவில்லை. இவையெல்லாம் ஜோதிடர்கள் தங்களுடைய அனுபவத்தை கொண்டு, குத்துமதிப்பாக ஒரு விதியாக தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்து கொண்டது. இதுபோன்ற ராகு-கேதுக்கள் தோஷம் இல்லாத வரனும், தோஷத்துடன் கூடிய பெண்ணும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருந்து கொண்டும் இருக்கிறார்கள். தோஷ அமைப்புள்ள பெண்ணிற்கு அதேபோன்ற ஆணின் ஜாதகத்தைதான் சேர்க்க வேண்டும் நான் என்று சொல்வதில்லை. அதேநேரத்தில் எனது கருத்தை மாப்பிள்ளை வீட்டு ஜோதிடர் ஒத்துக் கொண்டால்தான் இருவரையும் இணைக்க முடியும். நான் சொன்னாலும் அவர் அந்தப் பக்கத்தில் இருப்பவர்களை குழப்புவார்.

பொதுவான பத்துப் பொருத்தங்களையும், 2, 8-ல் ராகு-கேது அல்லது செவ்வாய் இருக்கிறது என்பதை மட்டும் பார்க்கத் தெரிந்த ஒரு ஜோதிடருக்கு அது தோஷம் என்பதாக மட்டும்தான் தெரியுமே தவிர அதற்கான விதி விலக்குகள் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் பத்துப் பொருத்தங்கள் என்பதே தற்போதுதான் அதிகமாகப் பார்க்கப்படுகிறது. உங்களுடைய தாய்-தகப்பனார் காலத்தில் இது இவ்வளவு இல்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்த அன்றைய தலைமுறையினர் நன்றாகத்தான் இருந்தார்கள்.

விவாகரத்து கோர்ட்டுகளில் வழக்கு போட்டிருப்பவர்களை திருமணத்திற்கு முன் பொருத்தம் பார்த்தீர்களா என்று கேளுங்கள். சொல்லி வைத்தாற்போல அனைவரும் பத்துக்குப் பத்து பொருத்தமும் இருக்கிறது என்று ஜோதிடர் சொன்னதால்தான் திருமணம் செய்தோம் என்று ஜோதிடர்கள் மேல் பாய்வார்கள். நட்சத்திரப் பொருத்தம் என்பது பொதுவான ஒன்றுதான். அதையும் ராகுகேது செவ்வாய் தோஷத்தையும் மட்டும் பார்த்து திருமணம் செய்யவே கூடாது. ஆனால் அனுபவம் இல்லாத அல்லது ஞானம் குறைவாக உள்ள ஜோதிடர்கள் இதை மட்டும் பார்த்துத்தான் பெண்களின் வாழ்க்கையை சிக்கலாக்குகிறார்கள். இதனால்தான் பத்து பொருத்தம் பார்ப்பதற்கு ஜோதிடர்கள் தேவையில்லை. பத்து ரூபாய் புத்தகம் போதும் என்று எழுதுகிறேன்.

ஜோதிடத்தில் ஒரு விதி என்பது, பெரும்பாலான எண்பது சதவீதம் பேருக்கு பொருந்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ஞானிகளால் சொல்லப் படவில்லை என்று அர்த்தம். உண்மையில் இந்த பொருத்தங்கள், விஷயம் தெரிந்த ஒரு ஜோதிட தகப்பன் ஒன்றும் தெரியாத தன் ஜோதிடப் பிள்ளைக்கு சாகும் போது இதை வைத்தாவது பிழைத்துக் கொள் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் போன ஒரு பொதுவான அட்டவணைதான்.

சமீபகாலங்களில் விவாகரத்துக்கள் பெருகி விட்டதால் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போதே ஒரு தகப்பன் ஜோதிடரிடம் முதலில் வரனுக்கு இரண்டு திருமண அமைப்பு இருக்கிறதா? (இப்போது மூன்றாவது திருமணமும் மெல்ல தலைகாட்டுகிறது.) இருவருக்கும் வழக்கைக் குறிக்கும் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசைபுக்தி எதிர்காலத்தில் வருகிறதா? ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்புகள் சமீபிக்கிறதா? மிக முக்கியமாக இருவரின் ரசனைகளும் ஒத்துப் போகுமா போன்றவற்றைக் கேட்டு பலன் தெரிந்து கொள்வது நல்லது. மகளின் ஜாதகப்படி லக்னத்திற்கு இரண்டில் சனி, ராசிக்கு ஏழில் செவ்வாய் இருந்தாலும் லக்னாதிபதி வலுத்த ஜாதகங்களில் எவ்வளவு பெரிய தோஷமும் கெடுபலன்களை தராது. அஷ்டமச்சனி முடியும் தருவாயில் திருமணம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *