adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 164 (5.12.17)
. மார்ட்டின்திருச்சி - 1.
கேள்வி :
45 வயதாகியும் எனக்குதிருமணம் ஆகவில்லைஎப்போது திருமணம்ஆகும்? நல்லவேலைவாய்ப்பு எப்போது? குழந்தை பாக்கியம்ஆயுள் மற்றும்எதிர்காலம் பற்றி சொல்ல  வேண்டுகிறேன்.
பதில்:
 சனி கே
 28-12-1972 இரவு9.14 திருச்சி
 ல
சூ குரு செவ் பு,சுக்  சந்
ஒருவருக்கு கடுமையான புத்திரதோஷ அமைப்பு இருந்தாலும், அவயோக தசைகள் நடந்து கொண்டிருந்தாலும் திருமணம் தாமதமாகும். உங்கள் ஜாதகத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து, சனியின் பார்வையில் அந்த வீடு இருப்பதும், புத்திரகாரகன் குரு ஆறில் மறைந்து, ராகுவுடன் கிரகணமாகி, சூரியனுடனும் இணைந்து அஸ்தமனம் பெற்று முழுக்க வலிமை இழந்தது புத்திரதோஷம். தற்போது கடகலக்னத்திற்கு கொடிய பாவியான எட்டுக்குடைய சனியின் தசை நடப்பதும் குற்றம்.
ஜாதக அமைப்பின்படி அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சுக்கிர புக்தியில் பரிகாரங்களுக்கு பிறகு உங்களுக்கு திருமணம் நடக்கும். சனி தசை முடியும் வரை வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சனிதசையில் குறைவுதான். அடுத்த புதன் தசை ராசிநாதன் தசை என்பதால் நல்ல எதிர்காலத்தைத் தரும். தீர்க்காயுள் உண்டு.
கே. சுப்பிரமணியன்திருப்பூர்.
கேள்வி :
விவரம் தெரிந்த நாள் முதல் இதுநாள் வரை கடன்தொல்லைதொழில் நஷ்டம்குடும்ப பிரச்சினை என்றுதான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதுபைனான்ஸ் தொழில் செய்து  கொண்டிருக்கிறேன்நடக்கும் ராகு தசை எப்படி இருக்கும்? நல்லது செய்யுமா?
பதில்:
சூ ரா சந் சு,சனி
பு
21-3-1969, அதிகாலை3.36, தாராபுரம்
 ல
செவ்  குரு கே
இளம்பருவமான 22 வயதிற்குப் பிறகு உங்களுக்கு நடந்த அத்தனை தசைகளும் மகர லக்னத்திற்கு வரக் கூடாத சூரிய, சந்திரன் மற்றும் பாதகாதிபதி செவ்வாயின் தசைகள் என்பதால் முக்கியமான காலகட்டத்தில் உங்களுக்கு பிரச்னைகள் மட்டும்தான் இருந்திருக்கும். ஜாதகம் வலுவாக இருந்தாலும் ஒரு மனிதனுக்கு அவயோக தசைகள் நடந்தால் பொருளாதார முன்னேற்றம் இருக்காது. அதைவிட மேலாக கடன் தொல்லைகளும், பிரச்சினைகளும் இருக்கும்.
உங்கள் ஜாதகப்படி தற்போது மூன்றில், குருவின் வீட்டில், குருவின் பார்வையில் அமர்ந்த ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. ராகுவுடன் சூரியன் இணைந்திருக்கிறார். மகரத்திற்கு சூரியன், சந்திரன் சம்பந்தம் பெற்ற கிரகங்கள் யோகங்களைச் செய்யாது. ஆயினும் குருவின் பார்வை ராகுவிற்கு இருப்பதால் இதுவரை இருந்த கஷ்டங்களை விடுத்து ஓரளவு நன்மைகளை ராகுதசை செய்யும்.
அஷ்டமச் சனி என்பது எப்படிப்பட்ட யோக ஜாதகத்தையும் பதம் பார்க்கும் ஒரு  அமைப்பு என்பதால் கடந்த மூன்று வருடங்களாக தூக்கம் இல்லாத அளவிற்கு கடுமையான சிக்கல்களைச் சந்தித்திருப்பீர்கள். புத்தாண்டு பிறந்ததும் நல்ல வழி பிறக்கும். படிப்படியாக அனைத்து பிரச்சினைகளும் தீர ஆரம்பிக்கும். வட்டித் தொழிலுக்கு காரகனான குருவின் வீட்டிலும், குருவின் பார்வையிலும் தசானாதன் இருப்பதால் ராகு தசையில் பைனான்ஸ் தொழில் நன்றாக நடக்கும்.
ஆர். எம். சிராஜூதீன்கோவை - 23.
கேள்வி :
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத நான் உங்கள் கட்டுரைகளையும்மாலைமலரில் செவ்வாய் அன்று வெளிவரும் கேள்வி-பதில்களையும் படித்து இதில் நம்பிக்கை வைத்து உங்களிடம் என் எதிர்காலத்தைதெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்கடுமையாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்ஆனால் சரியான பலன் இல்லவே இல்லைஎல்லா சுவாமிகளையும் கும்பிடுவேன்மதவெறுப்புகள் எனக்கு கிடையாதுஆயினும் எந்த தெய்வமும் எனக்கு உதவி  செய்யவில்லைஎன் ஜாதகத்தை பார்த்தாலே உங்களுக்கு என் நிலைமை தெரியும்என்  எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
கே
சந்
15-9-1959, அதிகாலை5.30, கோவை
 ல,சூ பு,சுக்
சனி குரு  செவ் ரா
உங்களுடைய 36 வயதிற்கு பிறகு சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாத- யோகங்களை செய்யாத-சனியின் தசை 19 வருடங்களாக நடந்ததால் உங்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாக கடன் தொல்லைகளில் சிக்கியிருப்பீர்கள். ஒரு ஜாதகத்தில் வருமானத்தை குறிக்கும் தன ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடமும், பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாமிடமும் வலுவிழந்தாலோ, பாபத்துவம் பெற்றாலோ ஒருவருக்கு நிரந்தமான நல்ல வருமானமுள்ள தொழில் அமைவதில் குறைகள் இருக்கும்.
ஆயினும் உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது மிகச் சிறந்த யோகம். எனவே வாழ்வின் பிற்பகுதியில் 60 வயதிற்கு மேல் யோகத்தை அனுபவிக்கும் ஜாதகம் உங்களுடையது. ஜாதகப்படி இரண்டாம் இடத்தில் செவ்வாய், ராகு அமர்ந்து சனியின் பார்வையை பெற்றிருப்பது ஒரு பொருளாதார முன்னேற்ற தடை அமைப்பு. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் புதன்தசை, சுக்கிரபுக்தி முடிந்ததும் ஆரம்பிக்கும் சூரியபுக்தியில் 2019ம் ஆண்டு முதல் உங்களுக்கு தொழில் முன்னேற்றமும், நிரந்தர வருமான அமைப்பும் உண்டாகி வாழ்வின் பிற்பகுதியில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.
பரிகாரம் செய்தால் தலைவிதி மாறுமா?
எஸ். லலிதா, சென்னை - 93.
கேள்வி :
நாம் பிறக்கும் போதே நமது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டது. அது மாறாது என்று கூறுகிறார்கள். ஆனால் கஷ்டம் வரும்போது ஜோதிடர்களைப் பார்த்து பரிகாரம் செய்கிறோம். அதனால் தலைவிதி மாற வாய்ப்புள்ளதா?
பதில் :
பிரபல ஜோதிடர், ஆசான், காழியூர் நாராயணன் அய்யா அவர்கள் அடிக்கடி “பரிகாரம் என்பது மழை பெய்யும் போது குடையைப் பிடித்துச் செல்வதைப் போல” என்று அற்புதமாக விளக்குவார்கள். இதன்படி மழை பெய்வதை உன்னால் தடுக்க முடியாது, ஆனால் குடையின் மூலம் மழையின் தாக்கத்தில் இருந்து உன்னைப் பாதுகாத்து கொள்ள முடியும் என்று அவர் சொல்லுவார். இதுவே சுருக்கமான பரிகார விளக்கம்.
ஜோதிடக் கலைக்கு பரிகார சாஸ்திரம் என்றும் பெயர் உண்டு. பரிகாரங்கள் இருக்கிறது என்பதை விளக்கவே பனிரெண்டு வயதில் அற்பாயுளில் இறந்து போக தலைவிதி நிர்ணயிக்கப்பட்ட மார்க்கண்டேயன், எமன் வரும் சமயத்தில் பரிகாரமாக சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டதால் சிரஞ்சீவியாக மாற்றப்பட்டான் என்ற கதை நமக்கு சொல்லப்பட்டது.
இதில் ஒரு கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், பனிரெண்டு வயதில் சாக வேண்டியவன், 80, 90 வயதுவரை தீர்க்காயுளாக இருந்து பின்னர் மரணிக்கும்படி விதிக்கப்படவில்லை. மாறாக என்றுமே இறவாதவனாக, சிரஞ்சீவியாக இருக்கும்படி இறைவனால் அருளப்பட்டான் என்றும் அந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது. இறப்பு வரும் போது மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிப் பிடித்து கொண்டான் என்பதை இங்கே துன்பம் வரும் வேளையில் அவன் இறையைப் பற்றிக் கொண்டான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே சூட்சும விளக்கம்.
இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் “எதுவும் மாற்றப்படக் கூடியதுதான் அதை மாற்ற முடிந்தவர்களால்..” என்பதுதான்.
இந்தப் பிறவி எனும் வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போன்றது. நாம் செல்லும் இந்த ரயில் எங்கே கிளம்பியது, எங்கே நிற்கப் போகிறது என்பது எவருக்கும் தெரியாது. பிறவிகளின் கர்மாவினால் ரயிலில் ஒரு இடத்தில் ஏறி இன்னொரு இடத்தில் இறங்குகிறோம். ரயில் எங்கே போய் நிற்கப் போகிறது என்பதை அறிந்தவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும். இங்கே தலையெழுத்து என்பதை நிர்ணயித்தவனும், நடத்துபவனும் அவன் ஒருவனே.
ஒரு உத்தரவைப் போட்டவனுக்கு அதை மாற்றும் அதிகாரம் இருக்கிறது அல்லவா? “அய்யா.. தவறு செய்து விட்ட என் புருஷனுக்கு மரணதண்டனை கொடுத்து விட்டீர்களே.. நண்டும் சிண்டுமாய் இந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?” என்று தண்டனையை விதித்த அதிகார மனிதனிடம் போய் கதறி அழுதால், அவன் மனம் இரங்கி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறான் இல்லையா? இங்கே அழுததுதான் பரிகாரம். கண்ணீர் விட்டதால் தண்டனை குழந்தைகளுக்காக குறைக்கப்பட்டது.
அதைப் போலத்தான் எதற்கு இங்கே வந்தோம் என்று தெரியாத நாம், ஏன் இங்கே நம்மை அனுப்பினோம் என்று தெரிந்த, அதிகாரம் உள்ள பரம்பொருளிடம் நமது குறைகளை முறையிடும்போது, எதையும் மாற்றும் வல்லமை உள்ள அந்த மகாசக்தியால் தண்டனை குறைக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ ஆகிறது. அதேநேரத்தில் ஒருமித்த எண்ணக் குவிப்போடு, சிறிதும் பிசிறின்றி, முழு ஈடுபாட்டோடு, ஆழ்மனதில் இருந்து வரும் சிரத்தையோடு கேட்கப்படும் தண்டனைக் குறைப்பு மட்டுமே உடனே கொடுக்கப்படும். மேம்போக்காக கேட்டால் கிடைக்காது.
புருஷனுக்கு மரணதண்டனை என்றவுடன் உள்ளம் பதறும். எதிர்காலத்தை நினைத்து மனம் அழுது புலம்பும். ஏதாவது வழி இருக்கிறதா என்று அறிவும் தேடும். அதே புருஷனுக்கு இரண்டு வருஷம் மட்டும் சிறைத்தண்டனை என்றால் “அப்பா.. ஒரு இரண்டு வருஷம் இவனிடமிருந்து விடுதலை” என்று வெளியே தெரியாமல் மனதின் ஒரு ஓரத்தில் சந்தோஷம் எட்டிப் பார்க்கும் இல்லையா? அந்த நிலையில் தண்டனை இன்னும் குறையுமா என்று எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று மேம்போக்காக முறையிடுவோம். அப்போது கேட்டது கிடைக்காது.
நான் அடிக்கடி குறிப்பிடும் முறையான பரிகாரங்கள் என்பது இறை வழிபாடும், நமக்கு நல்லது செய்ய வேண்டிய கிரகங்களின் வலு குறைவாக இருந்தால் அதனை முறையான சூட்சும வழிகளில் அதிகப் படுத்திக் கொள்வது மட்டுமே. எல்லோரும் எல்லாக் கோவில்களுக்கும் போகக் கூடாது என்பது இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்? குறிப்பாக நவக்கிரக சுற்றுலா என்ற பெயரில் ஒருவர் ஒன்பது நவக்கிரக கோவில்களுக்கும் போவதே தவறு.
உங்களுக்கு எந்தக் கிரகம் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கிரக ஸ்தலமாக குறிப்பிடப்படும் திருக்கோவில்களுக்கு மட்டுமே நீங்கள் சென்று வழிபடவோ, பரிகாரங்களையோ செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நேர்மறை ஆக்க சக்தி கிடைக்கும். மாறாக கர்மாவின்படி சாதகமற்றவைகளை செய்ய விதிக்கப்பட்ட கிரக வலுவுள்ள கோவில்களுக்கு செல்லும்போது உங்களின் எதிர்மறை சக்திகள் அதிகப்படுத்தப்டும். பிரச்னைகள் தீராது.
உதாரணமாக மிதுன லக்னத்தில் பிறந்த ஒருவர் செவ்வாயின் திருக் கோவில்களுக்கோ, மகர லக்னத்தில் பிறந்த ஒருவர் சூரியனின் திருக் கோவில்களுக்கோ செல்லும்போது எதிர்மறை சக்திகள் மட்டுமே உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். உங்கள் குறைகள் தீராது. எல்லாத் திருக்கோவில்களும் ஒரே விதமானது அல்ல. இதற்காகத்தான் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நமது அருள் அற்புதங்களான ஆலயங்களை தனித்தனியே இந்தக் கிரகத்தின் ஸ்தலம் இது என்று தெளிவாகக் குறிப்பிட்டார்கள்.
நல்ல அனுபவமும், பரம்பொருளால் தனிப்பட்டுத் தரப்பட்ட ஞானமும் கைவரப் பெற்ற ஒரு முறையான ஜோதிடர் மட்டுமே உங்களுடைய தடைகளுக்கான காரணிகளை ஜாதகத்தில் உணர முடியும். அந்தக் காரணங்களை போக்கக் கூடிய திருத்தலங்களுக்கு உங்களை போகச் சொல்லவும் முடியும். இங்கே அனுபவமும், சூட்சுமங்களை உணரும் ஆற்றலும் மிக முக்கியம்.
குறைகள் தீரும் அமைப்பு வரும் போதுதான் முறையான ஜோதிடரிடம் செல்ல பரம்பொருள் உங்களை அனுமதிக்கும். அந்த நேரம் வரும் வரைக்கும் நீங்கள் செக்கு மாடு போல சுற்றிச் சுற்றி வந்து ஜோதிடத்தையும், ஆண்டவனையும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பீர்கள்.
கஷ்டங்கள் தீரும் அமைப்பு இல்லாத போது, தனுசு லக்னத்தில் பிறந்து சுக்கிர தசையில் கடன்தொல்லைகளில் இருக்கும் ஒருவரை, சுக்கிரனின் கோவில்களுக்கு அனுப்பும் ஜோதிடரைச் சந்திப்பீர்கள். சோதனைகள் நிவர்த்தியாகும் நேரம் வரும் போதுதான் ஜாதகரை குருவின் கோவில்களுக்கு மட்டும் போகச் சொல்லும் ஜோதிடரைப் பார்த்து தொல்லைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.

இறை வழிபாடுகளை அடுத்து பரிகாரத்தின் இன்னொரு முறைகளான ஒரு கிரகத்தின் நிறம், குணம், வாகனம், தான்யம், கல், உலோகம், தானம் போன்றவைகளின் மூலம், உங்களுக்கு நல்லது செய்ய விதிக்கப்பட்ட கிரக வலுவை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதை நேரம் கிடைக்கும் போது ஒருநாள் மாலைமலரில் விளக்குகிறேன்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 164 (5.12.17)

  1. வணக்கம் குருஜி அவர்களுக்கு,

    நான் பிறந்த நேரம் 12:30 pm,13.07.1973,ராசிபுரம், நாமக்கல் என்னுடைய கேள்வி 2007ல் இருந்து 2015 வரை வெளிநாட்டில் வேலை (Accountant) செய்த நான் திடீரென்று ஒரு நாள் எனது வேலையை ராஜினாமா செய்து ஊர் வந்து சேர்ந்து இப்பொழுது இதுவரை எந்த வேலையிலும் சேராமல் இருக்கிறேன் இதற்கு என்ன காரணம் நான் மீண்டும் வெளிநாடு செல்வேனா எதிர்காலம் எப்படி இருக்கும்

    தயை கூர்ந்து பதில் சொல்லுங்கள்

    1. குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-24358888 or e-mail- adhithyaguruji@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *