Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 156 (10.10.2017)
வி. சரண்யா தேவி, கோவை - 2. கேள்வி : ஜோதிட அரசனின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். நான் தங்களின் நீண்டநாள் மாலைமலர் வாசகி. 15-3-2016 அன்று ஜோதிட கேள்வி-பதில் பகுதியில் எனக்கு ஒரு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தைபிறக்கும் என்று கூறினீர்கள். அதன்படியே 11-5-2017 அன்று எனக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தங்களுக்கும் மாலைமலருக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். என் போன்ற எளியோர்களுக்கும் தாங்கள்தரும் பதில்கள் தெளிவாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்கிறது. என் மகனின் ஜாதகத்தில் ஆயுள், கல்வி ஸ்தானங்கள் எப்படி உள்ளது, கடக லக்னத்திற்கு சனியும், புதனும் நன்மை