கேள்வி:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான தேர்வு எழுதி வருகிறேன். இதுவரையில் முயற்சி செய்து தேர்ச்சி பெற முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்ய இருக்கிறேன். தேர்வு பெற முடியுமா? முடியுமானால் எந்த வயதில் தேர்ச்சி பெறுவேன்? அதில் எந்த வேலை கிடைக்கும்? அல்லது வேறு ஏதேனும் அரசு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
குரு ராகு | |||
2.07Am 27.10.1987 தஞ்சாவூர் | |||
லக் | |||
சந் | சனி | சூரி,புத சுக் | செவ் கேது |
பதில்:
சிம்மத்தை சனி பார்த்து, சுபர்கள் யாரும் பார்க்காமல், லக்னாதிபதி சூரியன் பரம நீசத்தில் அமர்ந்துள்ளதாலும், தற்போது உன் ராசிக்கு ஜென்மச்சனி ஆரம்பிக்க உள்ளதாலும், உனக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வாய்ப்பு இல்லை. வேறு பணிகளுக்கு முயற்சி செய்யவும். லட்சுமணன், பாண்டிச்சேரி.கேள்வி:
மகனுக்கு 49 வயதாகிறது. தனியாக மனைவியுடன் குடும்பம் நடத்துகிறான். பிள்ளை இல்லை. மாத சம்பளம் எட்டாயிரம் சம்பாதிக்கிறான். எப்போது பார்த்தாலும் என்னிடம் வந்து காசு இல்லை, எதாவது காசு இருந்தால் கொடு என்று நச்சரிக்கிறான். நானோ என் சின்ன பிள்ளையுடன் இருக்கிறேன். எனக்கு அவன் சாப்பாடு மற்றும் அனைத்தும் செய்கிறான். எனக்கு மாதம் கிடைக்கும் ரூ.2000 வைத்துக் கொண்டு என் மனைவியுடன் இருக்கிறேன். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மூத்தவன் ஏன் இப்படி இருக்கிறான்? இனிமேலாவது மாறுவானா என்ற விவரம் பார்த்துச் சொல்லவும்.சனி, ராகு | |||
புத, செவ் | 8.45Pm 30.1.1968 பாண்டி | ||
சந், சூரி | லக், குரு | ||
சுக் | கேது |
பதில்:
(சிம்ம லக்னம். மகர ராசி. 1-ல் குரு. 2-ல் கேது. 5-ல் சுக். 6-ல் சூரி, சந். 7-ல் புத, செவ். 8-ல் சனி, ராகு. 30-1-1968, இரவு 8.45, பாண்டி) ஒரு மனிதன் ஓரளவாவது பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமானால் ஜாதகத்தில் தனஸ்தானம் என்று சொல்லப்படக் கூடிய இரண்டாம் இடமும், அதன் அதிபதி கிரகமும், தனகாரகன் குருபகவானும் வலிமையாக இருக்க வேண்டும். இவர்களின் வலிமைக்கேற்ப அவனது வருமானம் இருக்கும். அனைத்திலும் மேலாக அவரது லக்னாதிபதி சுப வலிமையோடு இருந்து யோக தசைகளும் நடைபெற வேண்டும். மகனுக்கு தனஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்ட நிலையில், மற்ற இரு பாபர்களான சனி, செவ்வாய் இருவரும் அந்த வீட்டைப் பார்ப்பதால் பணத்தைத் தரும் தனவீடு மிகவும் வலிமை இழந்து போனது. மேலும் ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து அதன் அதிபதியும் ராகுவோடு இணைந்ததும் குற்றம். வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், உயர்வுக்கான லட்சியத்தையும் தரக் கூடிய லக்னாதிபதி சூரியன் ஆறில் மறைந்திருப்பதால் உங்கள் மகன் எவ்வித குறிக்கோளும் இன்றி, இருப்பதை வைத்து ஓட்டிக் கொள்ளலாம் என்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளவராக, சாதிக்கும் எண்ணம் இல்லாதவராக இருப்பார். சரியான பருவத்தில் 2006 முதல் 11 வருடங்களாக பாபத்துவம் பெற்ற ஆறுக்குடைய சனியின் தசையும் நடப்பதால் இன்னும் எட்டு வருடங்களுக்கு இவரிடம் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. சனிதசையும், அடுத்து நடக்க இருக்கும் ஏழரைச்சனியும் 2025-ம் ஆண்டு முடிவடைந்ததும் மகனிடம் ஓரளவு மாற்றம் வந்து இப்போது இருப்பதை விட ஓரளவு நன்றாக இருப்பார். அதகற்காக இன்றைக்கு எட்டாயிரம் சம்பளம் வாக்குபவர் மாதம் எட்டு லட்சம் சம்பாதித்து விடப் போவது இல்லை. இது அவருடைய கர்மா. சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளச் சொல்லுங்கள். மாற்றம் உண்டாகும். எம்.ஏ.கோவிந்தராஜ், மதனஞ்சேரி.கேள்வி:
மகன் எம்.எஸ்.சி. சாப்ட்வேர் படித்து சென்னையில் வேலை செய்து வந்தான். ஒருதலைக் காதலாக ஒரு பெண்ணை விரும்பினான். அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிட்டது. அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு வேலை இழந்து என்னையும், என் மனைவியையும் வெறுக்க ஆரம்பித்து விட்டான். என் மகன் மீண்டும் என்னோடு வந்து சேர்வானா? பழைய கம்பெனியில் வேலை கிடைக்குமா? அல்லது புதிய கம்பெனியா? எப்போது திருமணம்? மகன் வருவான் என்ன கடவுளை நம்பி வாழ்ந்து இருக்கிறோம். குருஜி எங்களுக்கு ஆறுதலான விஷயத்தை சொல்வார் என ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.செவ் | சந் குரு | ||
சூரி ராகு | 8.13Pm 13.2.1989 வேலூர் | ||
புத சுக் | லக் கேது | ||
சனி |
பதில்:
(சிம்ம லக்னம். ரிஷப ராசி. 1-ல் கேது. 5-ல் சனி. 6-ல் புத, சுக். 7-ல் சூரி, ராகு. 9-ல் செவ். 10-ல் சந், குரு. 13-2-1989, இரவு 8.13, வேலூர்.) மகனுக்கு சிம்ம லக்னமாகி லக்னாதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து பலவீனமாகி உள்ள நிலையில் ராகுவின் தசை நடப்பதால் இதுபோன்ற நிலைகள் உருவாகின. லக்னம், லக்னாதிபதியோடு பாபத்துவம் பெற்ற ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டாலே தனது தசை, புக்திகளில் மனதைப் பாதிக்கும் செயல்களைச் செய்வார்கள். மகனது ரிஷபராசிக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு அஷ்டமச்சனி நடக்க உள்ளதால் இப்போது எதுவும் சரியாக அமைய வாய்ப்பு இல்லை. 2020-ம் ஆண்டிற்கு பிறகே எதுவும் அவனுக்கு நிலையாக அமையும். தற்போதைய நிலையின் கடுமை வரும் டிசம்பர் மாதம் முதல் குறையும். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் வேலை கிடைக்கும். பழைய கம்பெனியில் வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் மகன் உங்களிடமே வருவான். கவலை வேண்டாம். டி.வி.கிருஷ்ணகுமார், சென்னை-6கேள்வி:
38 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலையும் நல்லபடியாக அமையவில்லை. வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சந்தோஷத்தை பார்ப்பேனா? திருமணம் நடக்குமா?செவ் | சூரி சுக் | ||
கேது | 8.15Am 11.7.1979 சென்னை | லக்,புத குரு | |
சந் | சனி ராகு | ||
பதில்:
(கடக லக்னம். மகர ராசி. 1-ல் குரு, புத. 2-ல் சனி, ராகு. 7-ல் சந். 8-ல் கேது. 11-ல் செவ். 12-ல் சூரி, சுக். 11-7-1979, காலை 8.15, சென்னை) 15 வயதில் இருந்து 33 வயது வரை எட்டாம் அதிபதி சனியுடன் இணைந்து தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவின் தசை நடந்து இருக்கிறது. அதன் பிறகு தற்போது உச்சமான ஆறாம் அதிபதி குருவின் தசை நடக்கிறது. வாழ்க்கையின் சரியான பருவத்தில் ஆறு, எட்டுக்குடையவர்கள் சம்பந்தம் பெற்ற கிரகங்களின் தசை நடந்தால் சோதனைகள் அதிகம் இருக்கும். லக்னத்திற்கு இரண்டாம் வீடு என்று சொல்லக் கூடிய குடும்ப பாவத்தில் இரு பெரும் பாபக்கிரகங்களான சனியும், ராகுவும் அமர்ந்து இன்னொரு பாபரான செவ்வாய் இவர்கள் இருவரையும் பார்த்து, மூவரும் குடும்ப வீட்டில் சம்பந்தம் பெற்றதாலும், ராசிக்கு 2-ல் கேது அமர்ந்து அவரைச் சனி பார்த்ததாலும் இதுவரை திருமணம் ஆகவில்லை. அதேநேரத்தில் ஏழாமிடம் சுபத்துவமாக இருப்பதால் கண்டிப்பாக அடுத்த வருடம் திருமணம் நடந்தே தீரும். 2020-ம் ஆண்டிற்கு பிறகு வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். தோஷங்கள் கடுமையாக இருப்பதால் ராகுவிற்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். பவானி, திருவிடந்தை.கேள்வி:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தம்பி அரசாங்க வேலைக்கு முழு முயற்சியுடன் படித்து வருகிறான். இருப்பினும் எதிலும் வெற்றி பெற முடியவில்லை. நானும் அம்மாவும் பலமுறை அறிவுரை கூறியும் தனியார் நிறுவனங்களில் வேலை தேட மறுக்கிறான். அரசுவேலைதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான். அவனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்?சந் | சுக் | சூரி கேது | புத |
சனி | 11.44Am 14.6.1993 சென்னை | ||
லக் செவ் | |||
ராகு | குரு |
பதில்:
(சிம்ம லக்னம். மீனராசி. 1-ல் செவ். 2-ல் குரு. 4-ல் ராகு. 7-ல் சனி. 8-ல் சந். 9-ல் சுக். 10-சூரி, கேது. 11-ல் புத. 14-6-1993, காலை 11.44, சென்னை) அரசு வேலைக்குரிய கிரகமான சூரியனே லக்னாதிபதியாகி பத்தாமிடத்தில் திக்பலத்துடன் அமர்ந்து குருபார்வை பெற்றதாலும், ஜீவனாதிபதி சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருப்பதாலும், லக்னாதிபதிக்கும் ராசிக்கும் குருபார்வை இருப்பதோடு ராசி, லக்னம் இரண்டின் தொழில் ஸ்தானங்கள் சுபத்துவம் பெற்றிருப்பதாலும் உன் தம்பிக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாத்த்திற்கு மேல் அரசு வேலை கிடைக்கும். உன்னுடைய ஜாதகத்தில் மூன்றாமிடத்தில் செவ்வாய், ராகு இருந்தாலும் அந்த ஸ்தானாதிபதியான சனியைக் குரு பார்ப்பதால் எவ்வித தோஷமும் இல்லை. கி. அம்சவேணி, மயிலாடுதுறை.கேள்வி:
மகளுக்கு இசைத்துறையில் அதிகமான ஈடுபாடு இருக்கிறது. படிப்பை விட அதில்தான் ஆர்வமாக இருக்கிறாள். படிப்பை தபாலில் தொடர வைத்து முழுநேரமும் இசையில் பயிற்சி அளிக்கலாமா?பதில்:
ஒருவருக்கு மூன்றாமிடம் சுபத்துவமாக உள்ள நிலையில் அவரால் இசையில் சாதிக்க முடியும். மகள் ஜாதகத்தில் மூன்று பத்துக்குடையவர்கள் பரிவர்த்தனை அடைந்த நிலையில், மூன்றாமிடத்திற்கு பாபர்கள் தொடர்பு இன்றி சுபர்கள் மட்டுமே அங்கு அமர்ந்திருப்பதால் இசையில் உயர்நிலைக்கு வருவாள். முழுநேரப் பயிற்சி அளிக்கலாம்.தந்தையின் புற்றுநோய் எனக்கும் வருமா?
ஜெ.சந்திரன், கோயம்புத்தூர்.கேள்வி:
சிறுவயதில் இருந்தே தலை, இதயம், அடிவயிறு போன்ற இடங்களில் நோய்களால் துன்புறுகிறேன். என் ஒரு வயதிலேயே தந்தை புற்றுநோயால் இறந்தார். பெரியப்பாவும் புற்றுநோயால்தான் இறந்தார். அடுத்து ராகுதசை நடக்க இருப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்று பயப்படுகிறேன். ராகு இருக்கும் எட்டாமிடம் நோய்களையும், ஆயுளையும் குறிக்கும் என்பதால் பரம்பரையாக வரும் புற்று நோய் எனக்கும் வரும் என்று பயப்படுகிறேன். இச்சிறுவயதில் எனக்கு பொறுப்புகள் அதிகமாக உள்ளது. என் தாய் என்னை மட்டுமே நம்பி இருக்கிறார். வாழ்வின் முக்கிய பகுதியில் வரும் ராகு மகா தசை நன்மை தருமா? தந்தையின் உயிரை மாய்த்த புற்றுநோய் எனக்கும் வருமா?சனி | |||
குரு கேது | 3.07Pm 3.9.1998 கோவை | ||
லக் சந் | செவ் ராகு | ||
சூரி,புத சுக் |
பதில்:
(மகர லக்னம். மகர ராசி. 1-ல் சந். 2-ல் குரு, கேது. 4-ல் சனி. 8-ல் செவ், ராகு. 9-ல் சூரி, புத, சுக். 3-09-1998, மதியம் 3.07, கோவை.)
மகர லக்னம், மகர ராசியாகி ஆறாம் அதிபதி புதன், 9-மிடத்தில் சுபத்துவமாக உச்சமாகி உள்ளதால், உயிரைப் பறிக்கும் நோய்கள் உனக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல சனியும் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் உனக்கு தீராத வியாதிகளும் கிடையாது. லக்னாதிபதி சனி நீசமானதால் ஏதாவது சிறு சிறு பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எனது தியரிப்படி சனிபகவான் அம்சத்தில் குருவுடனும், ஆட்சி பெற்ற புதனுடனும் சூட்சும வலுப் பெற்று இணைந்துள்ளதால் உனக்கு தீர்க்காயுள் உண்டு. ஆயுள் ஸ்தானாதிபதியான சூரியன் ராசியில் ஒன்பதில் அமர்ந்து, அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதும், இரண்டில் உள்ள குரு ஆயுள் ஸ்தானத்தை பார்த்து அதனை வலுப்படுத்துவதும் இதனை உறுதிபடுத்துகிறது.
எட்டில் இருக்கும் ராகு, குரு பார்வையால் சுபத்துவமாகி இருப்பதால் உனக்கு வெளிநாட்டில் வாழும் அமைப்புகளைக் கொடுப்பார். ராகுதசையில் நீ வெளிநாட்டில் சந்தோஷமாக இருப்பாய். பாதகாதிபதியை ஐந்து டிகிரிக்குள் ராகு கிரகணம் செய்திருப்பதால் உன் வாழ்க்கையில் அற்பாயுள் என்ற பாதகம் இருக்காது.
நவாம்சத்தில் சனி, சுக்கிரன் எட்டு, பனிரெண்டில் மறைவு என்று எழுதி இருக்கிறாய். நவாம்சத்தில் பகை, நீசம், ஆட்சி, உச்சம் மட்டும்தான் கணிக்க வேண்டும். நவாம்ச லக்னத்திற்கு இத்தனையாவது இடத்தில் கிரகம் இருக்கிறது என்று சொல்லக் கூடாது. அது தவறு. நவம்சத்திலும் திக்பலமும் கிடையாது.
பிறந்த தேதி : 18/10/1994
பிறந்த நேரம்: 6:55 AM
எனக்கு எங்கு சென்றாலும் வேலை அமைவதில்லை.அரசாங்க வேலைக்காக படித்துக்கொண்டிருக்கிறேன்.எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?.நான் நல்ல நிலமைக்கு எப்போது வருவேன்…
பிறந்த தேதி: 05.07.1996 . பிறந்த நேரம்: 2.10 PM அரசாங்க வேலை கிடைக்குமா?ஆறுக்குடைய சனி தசை நடப்பதால் என் முயற்சி வெற்றி அடையுமா?