கு. சதீஷ்குமார், கொருக்குப்பேட்டை.
கேள்வி:
கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளேன். நடனம் ஆடுவது, பாடுவது, பல குரலில் பேசுவது போன்றவைகள் தானாக வருகிறது. அதில் ஈடுபடலாமா? மேடைகளில் அரசியல் பேசி வருகிறேன். ஒத்து வருமா? சொந்தமாக ஆட்டோவும், அவ்வப்போது கார், வேனும் ஓட்டுகிறேன். இதையே தொடரலாமா? அல்லது சினிமாவை நாடிச் செல்லலாமா? இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன பாவம் செய்தானோ என்று சகோதரர்களே கேலி செய்கிறார்கள். திருமணம் ஆகுமா? பிறந்தது முதல் தாய் என்பதையே அறியாத எனக்கு தாரத்தின் அன்பாவது கிடைக்குமா? உங்களின் கோடி சீடர்களில் ஒருவருக்கு பதில் தர வேண்டுகிறேன்.
ராகு | |||
சுக் செவ் | 5.30Am 2-2-1983 சென்னை | ||
லக் சூரி | |||
புத கேது | குரு | சனி | சந்த |
பதில்:
ஜாதகப்படி இரண்டு, பத்துக்குடைய சுக்கிரனும், சனியும் பரிவர்த்தனை அடைந்துள்ளதாலும் லக்னாதிபதி சனி சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும் உங்களுக்கு கலைத்துறை மீது அளவுக்கு அதிகமான ஈடுபாடு இருக்கும். அதே நேரத்தில் சோறு போடப் போவது ராசிக்கு பத்தாம் வீட்டில் இருக்கின்ற ராகுவால் உண்டான டிரைவர் தொழில்தான். என்ன சொன்னாலும் கலைத்துறை முயற்சிகளை நீங்கள் விட மாட்டீர்கள். சினிமா என்னும் பாறாங்கல்லை முட்டி முட்டி நகர்த்தத்தான் பார்ப்பீர்கள். டிரைவர் தொழிலை கைவிடாமல் அதிலேயே கவனத்தை செலுத்தினால் முன்னேற்றம் இருக்கும். நடக்கும் குருதசை, சனிபுக்தியில் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு மேல் திருமணம் நடக்கும். ஜெ. ஜெயலட்சுமி, வளரசவாக்கம்.கேள்வி:
குழந்தை பாக்கியம் உண்டா? மருத்துவ சிகிச்சைக்குச் செல்ல வேண்டுமா? தற்போது வியாழன் மற்றும் சஷ்டியில் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வருகிறேன். இது போதுமா? வேறு பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா? குழந்தை பாக்கியம் இல்லையெனில் தத்தெடுத்து வளர்க்கலாமா?பதில்:
2019-ம் வருடம் பிற்பகுதியில் பெண் குழந்தை பிறக்கும். மருத்துவத்திற்குச் செல்ல வேண்டும். கிருஷ்ணன் கோவிலுக்கு போவது வழிபாடு மட்டும்தான். பரிகாரம் அல்ல. இருவரின் ஜாதகத்திலும் புத்திரக்காரகன் குரு பலவீனமாகி இருப்பதால் குருவிற்குரிய முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். அவற்றை மாலைமலரில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அ. கிரேஸ் லில்லி, புதுச்சேரி - 3.கேள்வி:
2010-ம் ஆண்டு கம்ப்யூட்டர் அலுவலகம் திறந்தோம். 2 வருடங்கள் நடந்து பிறகு தோல்வி ஆனது. 2012-ம் ஆண்டு அவரின் தங்கைக்கு வட்டிக்கு வாங்கி திருமணம் முடித்தோம். வருமானம் இல்லாததால் கடனையும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் தவித்து, சென்ற வருடம் இருந்த ஒரு இடத்தையும் விற்று முக்கால்பாகம் மட்டும் கடன் அடைத்தோம். அதே சமயத்தில் மெஸ் ஒன்றை நடத்தி தினமும் 2000 நஷ்டமாகி அந்தக் கால்வாசி கடன் பெருகி திரும்பவும் 20 லட்சம் கடனாக மாறி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை. உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. என்ன நடக்கும் என்று பதில் தாருங்கள்.கேது | 8.25Am 10-11-1979 சிதம்பரம் | சந் | |
செவ்,ராகு குரு | |||
ல,சுக் புத | சூரி | சனி |
பதில்:
கணவரின் ஜாதகப்படி கடந்த ஆறு வருடங்களாக கேதுதசை நடந்து அடுத்த வருடம் முடிய இருக்கிறது. கணவரின் ஜாதகப்படி நீ குறிப்பிட்டிருக்கும் மிகப் பெரிய கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் குடும்பத்தில் யாருக்காவது ஏழரைச்சனி அமைப்புகள் நடக்கும்போது பிறந்த ஜாதகம் செயலற்று போகும். என்னுடைய கணிப்பின்படி உனக்கோ அல்லது உன்னுடைய குழந்தைகளுக்கோ விருச்சிக ராசியாக இருக்கும். விருச்சிகத்தை குடும்ப உறுப்பினராகக் கொண்டவர்கள் கடந்த 2012 முதல் கடுமையான சோதனைகளை அனுபவித்து வருகிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் உன்னுடைய அத்தனை கஷ்டங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும். கவலைப்படாதே. சோதனைகளை சந்திப்பவர்களின் வாழ்க்கை, வாழ்நாள் முழுவதும் வேதனையாகவே இருந்தது இல்லை. வாழ்க்கை என்பது ஒரு வட்டம்தான். சோதனையும், சாதனையும் மாறி, மாறி வருவதுதான். இந்த வருடக் கடைசியில் இருந்து கஷ்டங்கள் படிப்படியாக நீங்கத் துவங்கி, அடுத்த வருட ஆரம்பத்தில் தொழில் நிலைமைகள் சீரடையும். 2019-ம் ஆண்டு முதல் கடனை அடைக்கும் அளவிற்கு வருமானம் வந்து எல்லா வகையிலும் நிம்மதியாக இருப்பீர்கள். டி. கவிதா, சேலம்.கேள்வி:
எனது அண்ணன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு மிக்கவனாகவும், பெற்றோருக்கு அடங்கிய நல்ல மகனாகவும் நல்லமுறையில் இருந்தார். தங்கைக்கு திருமணம் ஆகும் வரை தனது திருமணம் வேண்டாம் என்றும் சொல்லிக் காத்திருந்தார். சென்ற வருடம் எனக்கு மணமாகிவிட்டது. இப்போது திருமணப் பேச்சை எடுத்தால் வயது போய்விட்டது இனி திருமணம் வேண்டாம் என்கிறார். வேறு சில விஷயங்களும் காதில் விழுகின்றன. ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். இது எதாவது கிரக கோளாறா? பரிகாரம் எதும் செய்தால் சரியாவாரா? இவருக்குத் திருமணம் உண்டா? எப்போது?லக் கேது | சந் | குரு | |
ராசி | சூரி | ||
சுக்,புத சனி | |||
செவ் ராகு |
பதில்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகமாக உன் அண்ணனுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் அவர் ஒரு நிலையில் இல்லை. 2015-ம் ஆண்டு சந்திரதசை சுக்கிரபுக்தியில் ஒரு திருமணமான பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு அது இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே உன் அண்ணன் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பிறகு அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த நட்பு விலகும். அதன் பிறகே உன் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிப்பார். ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு என இரண்டு பாபக் கிரகங்கள் அமர்ந்து, ஏழுக்குடைய புதன் ஆறில் மறைந்து சனியுடன் இணைந்திருப்பதால் அண்ணனை ஒருமுறை ஸ்ரீகாளகஸ்தி சென்று ருத்திராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளச் செய்யவும். நேர்வழியில் தாம்பத்திய சுகம் கிடைக்க குருவை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்து கொள்ளவும். இரா. சுரேஷ்குமார், ராஜபாளையம்.கேள்வி:
ஜோதிடச் சக்கரவர்த்தி அவர்களுக்கு, நான் என்ன தேடி கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள்தான் கூற வேண்டும். ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து கூறுங்கள். நான் இந்த பூமியில் பிறந்தது எதற்காக? என்னால் என்ன காரியம் நடக்க வேண்டும்? நான் இந்த பூமியில் விழுந்தது முதல் ஒரே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இனி என்ன நடக்கும் என்று எனக்கே தெரியவில்லை. இது வெறும் கடிதம் அல்ல. நல்ல பதில் கூறுங்கள்.பதில்:
நீங்கள் அனுப்பியுள்ளதை வைத்து உங்கள் பெயர் சுரேஷ்குமார். ராஜபாளையத்திற்கு அருகில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கிறீர்கள் என்பதைத் தவிர வேறு எதையும் எந்த ஜோதிடச் சக்கரவர்த்தியாலும் சொல்ல முடியாது. முதலில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்ற கேள்விகளை தவிர்த்து சரியான பிறந்த விவரங்களை அனுப்பி உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்கத் தெரிந்து கொள்ளுங்கள். ஆதிலட்சுமி, சென்னை - 49.கேள்வி:
ராகுதசையில் சனிபுக்தி நடக்கிறது. அடிக்கடி கால் இடறி விழுகிறேன். பிறந்த இடத்திலும் போராட்டம், புகுந்த இடத்திலும் போராட்டம். கணவருக்கு இப்போது வேலை இல்லை. பெரியவனுக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம். தற்போது பெங்களூரில் இருக்கிறான். வரன் எதுவும் அமையவில்லை. இளையவனுக்கு மீன ராசி, உத்திராட்டாதி நட்சத்திரம். கடந்த 7 வருடங்களாக சி.ஏ. எழுதுகிறான். முடிக்க முடியவில்லை. போன ஜென்மத்தில் நிறைய பாவங்கள் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். நிறைய கோவில்களுக்கு செல்கிறேன். பசுவிற்கு தினத்தோறும் என்னால் முடிந்ததை கொடுக்கிறேன். அப்படியும் எதுவும் நல்லது நடப்பதாக தெரியவில்லை. நான் இந்த உலகை விட்டு போன பிறகுதான் என் மகன்கள் நன்றாக இருப்பார்களா என்பதும் புரியவில்லை. தயவுசெய்து பதில் அளியுங்கள்.புத | சந்த குரு | ராகு | |
லக்,சூரி சனி,சுக் | 6.50Am 7-3-1965 மதுரை | ||
செவ் | |||
கேது |
பதில்:
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி கேள்விகளுக்கு பதில் சொல்லிச் சொல்லி எனக்கே போரடித்து விட்டது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் தொண்ணூறு சதவிகிதக் கேள்விகள் இது சம்பந்தப்பட்டவையாக இருப்பதால் பதில் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
2012 ம் ஆண்டு முதல் தாய், மகன்களுக்கு சனி நடந்து கொண்டிருப்பதால் குடும்பத்தில் எந்த நல்லவைகளும் நடந்திருக்க வாய்ப்பில்லை. குழந்தைகளுடைய ஜாதகமும் பின் யோக அமைப்புள்ளவையாகத்தான் இருக்கிறது. முப்பது வயதிற்குப் பிறகு இருவருமே வாழ்க்கையில் செட்டில் ஆகி நன்றாக இருப்பார்கள். உங்களைப்போல வாழ்நாள் முழுவதும் வறுமை என்பது குழந்தைகளுக்கு இல்லை.
தாயாராகிய உங்களுக்குக் கூட ராகு தசை யோக தசைதான். ரிஷப ராகு கெடுதல்களைச் செய்யாமல் நன்மைகளை மட்டுமே செய்வார். ஆனால் குடும்பத்தில் பெரும்பாலோருக்கு கடுமையான ஏழரை, அஷ்டமச்சனி நடக்கும் போது பிறந்த ஜாதக தசாபுக்திகள் நன்மைகளைத் தராது. பாபத்துவ வலுப் பெற்ற சனி காலை நொண்ட வைப்பார். இந்த வருடம் தீபாவளிக்குப் பிறகு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அடுத்த வருடம் முதல் வேதனைகள் இருக்க வாய்ப்பில்லை. ஜாதகப்படி இளைய மகன் சி, ஏ முடித்து விடுவார். கவலை வேண்டாம்.
நீங்கள் சொன்னது 100க்கு 100 சரியாகி விட்டது..!
வீ. ஆனந்தன், புதுச்சேரி.
கேள்வி:
உங்களுடைய துல்லியமான பதில்கள் எங்களை பிரமிக்க வைக்கிறது. 11.7.2017 அன்று மாலைமலரில் எனக்கு நீங்கள் அளித்த பதிலில் நீச சுக்கிர தசை முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இனிமேல் கடன் தொல்லைகள் தீரும் என்று கூறி இருந்தீர்கள். அது 100-க்கு 100 சரியாகி விட்டது. 6-7-2017 வியாழக்கிழமை அன்றுதான் எங்கள் வீட்டைக் கிரயம் செய்தோம். என் தம்பியும் 9-7-2017 அன்று இரவு வீட்டிற்கு வந்து விட்டான். அவனை வைத்துக் கொண்டே கடன்காரர்களுக்கு பைசல் செய்து விடுவோம். எங்கள் வீட்டில் மீண்டும் அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. அதுவும் உங்களால். மிக்க நன்றி அய்யா.
பதில்:
இதுபோன்ற ஏராளமான கடிதங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்தையும் வெளியிடுவதற்கு இந்தப் பகுதியில் இடம் போதாது. ஜோதிடம் மட்டும்தான் நிலையானது. ஜோதிடன் என்பவன் வந்து செல்பவன்தான். என்னால் நடந்தது என்று நீங்கள் சொல்வது மிகவும் தவறான வார்த்தை. அனைத்து உன்னதங்களும் பரம்பொருளுக்கும், அவனிடமிருந்து இந்த மகத்தான கலையை நமக்குப் பெற்றுத் தந்த தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகளுக்கும் மட்டுமே சேரும். சாதாரண மனிதனாகிய ஜோதிடனுக்கு இல்லை.
ஜோதிடம் என்பது நான்கும், நான்கும் எட்டு எனப்படும் ஒரு சாதாரண எளிய கணக்குத்தான். என்ன ஒரு சிக்கல் என்றால், இங்கே நேரடியாக இல்லாமல் மறைமுகமாக புரியாத ஏராளமான வழிகளில் இதன் விடை உணர்த்தப்படுகிறது. இந்த விடை எனும் மர்ம முடிச்சை அவிழ்க்க முடிந்தவர்கள் பாக்கியசாலிகள். அவரவர் ஜாதகத்தில் புதன் இருக்கும் வலுவிற்கு ஏற்ப ஜோதிட சூட்சுமங்கள் ஒவ்வொரு ஜோதிடனுக்கும் உணர்த்தப்படுகிறது. அவ்வளவே.