adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 144 (18.7.2017)
சிசதீஷ்குமார், திண்டுக்கல்.
கேள்வி :
பரம்பரையாக பரம்பரையாக சித்த வைத்தியம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் தடையாக உள்ளது. எப்போது நடக்கும்? தொழில் விருத்தி எப்போது?
சூ,பு செவ் சுக் ராகு
லக் ராசி சந்
 கேது குரு சனி
பதில் :
(கும்ப லக்னம், கடக ராசி. 2-ல் சூரி, புத, செவ். 3-ல் சுக். 5-ல் ராகு. 6-ல் சந். 9-ல் சனி. 10-ல் குரு. 11-ல் கேது. 25.3.1983, 5.10 அதிகாலை, திண்டுக்கல்) மருத்துவத்துக்குரிய கிரகமான செவ்வாய் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி 2-ல் அமர்ந்து, பத்தில் இருக்கும் குருவுடன் பரிவர்த்தனையானதால் மாற்றுமுறை மருத்துவமான சித்தவைத்தியம், அக்குபஞ்சர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நேரிடையாக செவ்வாய் தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருந்தால் ஆங்கில மருத்துவராக இருப்பீர்கள். லக்னத்திற்கு 2-ல் செவ்வாய் அமர்ந்து, ஐந்தாமிடத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு ஐந்தாம் அதிபதி நீசமானதால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உங்களுக்கு 35 வயதுவரை திருமணம் ஆகவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் சுக்கிரதசை, குருபுக்தியில் தசா, புக்தி நாதர்கள் இருவரும் சஷ்டாஷ்டகமாக அமர்ந்திருப்பதால் வரும் நவம்பர் வரை திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை. அடுத்து நடக்க இருக்கும் புக்திநாதன் சனி, சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருப்பதால் திருமணத்தின் மூலமாக தாம்பத்திய சுகத்தை கொடுத்தாக வேண்டும். எனவே 2018 ல் திருமணம் நடைபெறும். தந்தை ஆனதற்குப் பிறகு தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருப்பீர்கள். ஜாதகம் வலுவாக இருப்பதால் எதிர்காலமும் நன்றாகவே இருக்கும். ஜெபாரதி, பாக்கம் - 605106.
கேள்வி :
8 வயதில் தாயை இழந்து, குழந்தை இல்லாத என் அத்தை-மாமாவிற்கு மகளாகவும், என் தங்கைக்கு நானே தாயாகவும் வளர்ந்து வருகிறேன். என்ன ஒருவர் விரும்புகிறார். நானும் அதை வீட்டில் கூறி சம்மதம் பெற்று விட்டேன். ஆனால் ஜாதகத்தில் அவருக்கு நாகதோஷம் இருப்பதாக இங்குள்ள ஜோதிடர்கள் சொல்வதால் இப்போது பயந்து மறுக்கிறார்கள். எனக்கு என் பெற்றோரை மீறி திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அவர்கள் சம்மதித்து ஆசீர்வதித்து எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விருப்பம் நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும்? கஷ்டத்தை சமாளிக்கும் தைரியம் கொண்ட எனக்கு ஏமாற்றத்தை தாங்கும் மனம் இல்லை. எனவே குடும்ப சம்மதத்தோடு என் திருமணம் எப்போது நடக்கும் என்பதை கூறவும்.
சந் சூரி, கேது
ராசி புத,செவ் குரு
சனி  லக், சுக்
ராகு
பதில் :
(சிம்ம லக்னம், மீன ராசி. 1-ல் சுக். 5-ல் ராகு. 6-ல் சனி. 8-ல் சந். 11-ல் சூரி, கேது. 12-ல் புத, செவ், குரு. 5.7.1991, காலை 10.15, விழுப்புரம்) நாக தோஷம் இருப்பவர், அது இல்லாதவரை திருமணம் செய்து கொண்டால் யாராவது ஒருவர் இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் அனுபவம் இல்லாத, ஜோதிடம் என்றால் என்னவென்று தெரியாத ஜோதிடரின் கருத்து. ஜோதிடத்தை அருளிய ஞானிகள் இப்படியெல்லாம் சொல்லவே இல்லை. யானையைக் குருடன் பார்த்த கதையாகத்தான் இங்கே ஜோதிடம் சொல்லப் படுகிறது. இரு மனம் பொருந்திப் போனாலே அங்கே பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றுதான் நமக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.  தற்போது உனக்கு சுக்கிர தசை நடந்து கொண்டிருப்பதால் உனக்கு இஷ்ட திருமணமே நடக்கும். அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் ராகு புக்தியில் தான் உனக்கு திருமணம் நடக்கும் என்பதால் பொறுமையாக இருக்கவும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை விசுலோசனா, சென்னை- 73.
கேள்வி :
மகனுக்கு 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. 2014-ம் ஆண்டில் திருமணம் நிச்சயித்தும் நின்று விட்டது. அதன் பிறகு ஒரு மணமகள் கூட அமையவில்லை. இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஜாதகங்கள் பார்த்தும் எந்த வரனும் பொருந்தி வரவில்லை. நாங்கள் ஜாதகப் பொருத்தம் நன்றாக உள்ளது என்று சொன்னால் பெண் வீட்டார் எந்த பதிலும் சொல்வது இல்லை. இதற்கு என்ன காரணம்? மகன் எம்.பி.. முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார். எப்போது திருமணம் நடக்கும்? ஜோதிடர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களையும் செய்து விட்டோம்.
ராகு சூரி
ராசி  புத, சுக்
சந்
குரு கேது லக்,செவ் சனி
பதில் :
(துலாம் லக்னம், மகர ராசி. 1-ல் செவ், சனி. 2-ல் கேது. 3-ல் குரு. 4-ல் சந். 8-ல் ராகு. 9-ல் சூரி. 10-ல் புத, சுக். 14-7-1984, மதியம் 2.15, திருச்சி) லக்னத்தில் செவ்வாய், சனி இணைந்து திருமண ஸ்தானமான ஏழாமிடத்தை பார்ப்பதாலும், ராசிக்கு ஏழாமிடத்தையும், சுக்கிரனையும் உச்ச சனி பார்ப்பதாலும் மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. முறையான பரிகாரங்களை நீங்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை. எட்டில் ராகு இருப்பதால் ஜென்ம நட்சத்திரம் அன்று ஶ்ரீகாளகஸ்தியில் முதல்நாள் இரவு தங்கி ருத்திராபிஷேக பூஜை செய்யவும். மூன்று மாதங்களுக்கு முன்புதான் உங்கள் மகனை தந்தையாக்கக் கூடிய குருவின் தசை ஆரம்பித்து இருப்பதால் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு மேல் திருமணம் நடக்கும். எம்முத்துலட்சுமி, மதுரை.
கேள்வி :
கணவரின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். கல்யாணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை தங்குவது இல்லை. அவரின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது என்றும் சொல்கிறார்கள். கணவருக்கு வயது 34 ஆகியும் நிரந்தர தொழில் இல்லை. குழந்தை பிறப்பதிலும் அத்தனை முயற்சிகளும் தோல்வியாக உள்ளது. ஆஸ்பத்திரியில் இவ்வளவு செலவு செய்தும் குழந்தை இல்லையே என்று கணவர் குடும்பத்தில் ஏங்குகின்றனர். குழந்தையால் சண்டை சச்சரவு வருகிறது. எங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? கணவரின் தொழில் அமைப்புகள் எப்போது சரியாகும்?
ராகு  சந்
ராசி  லக்,சூ செவ்
புத, சுக்
குரு, கேது  சனி
பதில் :
(கடக லக்னம், மிதுன ராசி. 1-ல் சூரி, செவ். 2-ல் புத, சுக். 4-ல் சனி. 5-ல் குரு, கேது. 11-ல் ராகு. 12-ல் சந். 7-8-1983, அதிகாலை 5.50. மதுரை) காலசர்ப்ப தோஷம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்பதை ஏற்கனவே மாலைமலரில் எழுதியிருக்கிறேன். ஜோதிடத்தில் உள்ள ஏராளமான இடைச் செருகல்களில் காலசர்ப்ப தோஷம், பித்ருதோஷம் போன்றவைகள் அடங்கும். இவையெல்லாம் தன் பங்கும் ஜோதிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்த சில ஜோதிட மாமேதைகளின் கைவண்ணம்தான். குழந்தை எப்போது பிறக்கும் என்பதை துல்லியமாகச் சொல்வதற்கு கணவன்-மனைவி இருவரின் ஜாதகமும் வேண்டும். நீ உன் கணவன் ஜாதகத்தை மட்டும்தான் அனுப்பி இருக்கிறாய். கணவனுக்கு புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் நீசமாகி, உச்ச சனியின் பார்வையும் பெற்று வலுவிழந்திருக்கிறார். புத்திர காரகனான குருபகவானும் ராகு-கேதுக்களுடன் இணைந்து பலமிழந்து இருக்கிறார். ராசிக்கு ஐந்தாம் இடத்திலும் உச்ச சனி அமர்ந்து அந்த இடம் பலவீனமாகி இருக்கிறது. கணவரின் ஜாதகப்படி 2018-ம் ஆண்டுவரை குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு தடை இருக்கிறது. பரிகாரம் சொல்ல வேண்டும் என்றாலும் உங்கள் இருவரின் ஜாதகமும் வேண்டும். நீயே ஒருவர் ஜாதகம் மட்டும் அனுப்பி இருப்பதால் பரிகாரமும் சொல்ல முடியாது. இன்னும் ஆறுமாதம் கழித்து இருவரின் ஜாதகத்தையும் சேர்த்து அனுப்பி பரிகாரம் கேள். நந்தகுமார், திருப்பத்தூர்.
கேள்வி :
நகராட்சியில் வேலை செய்கிறேன். ஆரம்பம் முதல் இதுநாள் வரை வேலையில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்து வருகிறேன். சுக்கிர தசை, சந்திர புக்தியில் பொய் வழக்கில் சிக்கி சிறை வாசம் அனுபவித்து, வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனக்கு சாதகமான தீர்ப்பு வருமா? சிறுநீரகத்தில் கட்டி உள்ளதாகவும், அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். செய்து கொள்ளலாமா? அல்லது சித்தா, ஆயுர்வேத சிகிச்சை எடுக்கலாமா?
சனி, ராகு
ராசி
சுக்
 லக்,சூ புத சந் குரு,கேது செவ்
பதில் :
(தனுசு லக்னம், விருச்சிக ராசி. 1-ல் சூரி, புத. 2-ல் சுக். 4-ல் சனி, ராகு. 10-ல் செவ், குரு. கேது. 12-ல் சந். 18.12.1968, காலை 6.42, திருப்பத்தூர்) ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவருக்கு அல்லது ஓரளவு ஜோதிடம் தெரிந்தவருக்கு ஆறுக்குடையவன் தசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போது கடுமையான கெடுபலன்கள் நடக்கும் என்பது தெரியாதா? அதிலும் “ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்ற கதையாக இந்த அமைப்பு நடக்கும் போது ஏழரைச் சனியும் சேர்ந்தால்  மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? நீங்கள் குறிப்பிட்டிருந்த சுக்கிர தசை, சந்திர புக்தி ஆறு, எட்டுக்குடையவர்கள் என்றாகி சந்திரன் பனிரெண்டில் நீசமானதால், உங்களின் ஆயுளைப் பங்கமாக்குவதற்குப் பதிலாக மானத்தை பங்கமாக்கி சிறைக்குள் வைத்து விட்டது. எந்த ஒரு நடுத்தர வயது விருச்சிக ராசிக்காரரும் கடந்த சில வருடங்களாக நன்றாக இல்லை என்றுதானே எழுதியும், தொலைக்காட்சிகளில் பேசியும் வருகிறேன். அதற்கு நீங்கள் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? குருவின் லக்னங்களான தனுசு, மீனத்தில் பிறந்தவர்கள் சுக்கிர தசை ஆரம்பிக்கிறது என்றாலே மிகவும் கவனத்துடனும், புலனடக்கத்துடனும் மாறி விட வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பதாலும், குருவும், புதனும் பரிவர்த்தனையாகி உள்ளதாலும் நிரந்தரமாக வேலை போவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த வருடம் தீபாவளிக்கு பிறகு ஜென்மச் சனி விலகியதும் வழக்கு உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வரும். நடப்பது ஆறுக்குடைவன் தசை என்பதாலும், புக்திநாதன் பாபர் சம்பந்தம் பெற்றுள்ளதாலும் உடம்பில் கத்தி பட்டுத்தான் ஆகும். மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள். எல்லா மருத்துவ முறைகளும் நோயைத் தீர்ப்பவைதான். வழிமுறைகள்தான் வேறு. ஆனால் உடனே நோய் தீர்வது, நிதானமாக குணமடைவது என்ற சில விஷயங்கள் இதில் உள்ளன. இன்னும் சில வாரங்களில் உங்கள் பிரச்னைகள் தீர ஆரம்பித்து குருபுக்தி முதல் நீங்கள் பிரச்னையில்லாத ஆரோக்கியமான நிம்மதி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதால் அறுவைச் சிகிச்சையே ஏற்றது.
ஏழரைச் சனி என்றாலே கஷ்டம்தானா?
சே. ராஜலிங்கம், வேளச்சேரி.
கேள்வி :
குருநாதரின் திருவடிகளுக்கு வணக்கம். இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் உங்களின் எழுத்துக்களை படித்து ஓரளவுக்கு ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன். விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் எழுதுவது நிச்சயமாக சரியாகத்தான் இருக்கிறது. எனது பிளாட்டில் மூன்று விருச்சிகராசி குடும்பங்கள் உள்ளது. மூவருமே கணவன் மனைவி பிரிவு, விவாகரத்து என்றுதான் இருக்கிறார்கள். என் விருச்சிக ராசி நண்பர்களும் கடுமையான கடன், வழக்கு சிக்கலில் இருக்கிறார்கள். நீங்களும் அடிக்கடி அலுவலகத்தில் நான் உள்ளே நுழைத்ததும் பார்க்கின்ற முதல் ஜாதகர் விருச்சிக ராசிக்காரர்தான் என்று எழுதுகிறீர்கள். ஏழரைச் சனியையும் மீறிய காரணம் இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
பதில் :
தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் துலாம் ராசியும், அதற்கு முன் கன்னி ராசியும் வாழ்க்கையில் நிலை பெற முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது விருச்சிகத்தின் முறை. அதேநேரத்தில் விருச்சிகம் சற்று அதிகமான பிரச்னைகளைச் சந்திப்பது உண்மைதான். பொதுவாக ஏழரைச் சனி ஆரம்பித்த முதல் இரண்டரை வருடங்கள் பாதிப்புகளை யாரும் உணர முடியாத வண்ணம் மென்மையாகத்தான் இருக்கும். ஜென்மச் சனி ஆரம்பமானதும் தான் கடுமையான சிக்கல்கள் இருக்கும். இப்போது தனுசுக்கு இரண்டு வருடங்களாக சனி நடந்து கொண்டிருந்தாலும் பாதிப்பை இன்னும் அவர்கள் உணரவில்லை. ஆனால் பனிரெண்டு ராசிகளிலும் விருச்சிகத்திற்கு மட்டும் சனி ஏழரையாக ஆரம்பிக்கும் போதே உச்ச நிலையில் வலுவாக இருக்கிறார் என்பதால் உள்ளே நுழையும் போதே கெடுபலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுவார். தொடர்ந்து ஜென்மத்தில் அவர் செவ்வாயில் பகை வீட்டில் அமருவதால் கடுமையை அதிகரிப்பார். அதுதான் இப்போது விருச்சிகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை இப்போது அறுபது தாண்டிய வயதுகளில் இருக்கும் விருச்சிகத்தினரிடம், முப்பது ஆண்டுகளுக்கு முன் உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இப்படியெல்லாம் ஆய்வு செய்து உறுதிப் படுத்திக் கொண்டால்தான் ஜோதிடத்தை உணர முடியும். வரும் அக்டோபர் கடைசியில் ஜென்மத்திலிருந்து சனி விலகியதும் விருச்சிகத்தின் வேதனைகள் படிப்படியாக விலகத் துவங்கும். உங்கள் நண்பர்களை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 144 (18.7.2017)

  1. மிக்க நன்றி குருஜி, உங்களின் விளக்கம்,எனை ோன்ற சீடனை பட்டை தீட்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *