பி. கே. பரந்தாமன், குடியாத்தம்.
கேள்வி :
ஜோதிடமேதைக்கு 13-வது முறையாக எழுதம்கடிதம். என் மகளுக்குமகப்பேறு எப்போது?
பு,சுக் | சந்,சூ ரா | செவ் | |
ராசி | |||
குரு | |||
ல,சனி |
ல, குரு | |||
ராசி | கே | ||
சுக், சனி | சூ,பு | செவ் | சந் |
பதில் :
(கணவனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி. 1-ல் சனி. 3-ல் குரு. 5-ல் புத, சுக். 6-ல் சூரி, ராகு. 7-ல் செவ். 20.4.1985, இரவு 9.32, திருவண்ணாமலை. மனைவிக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. 1-ல் குரு. 2-ல் கேது. 5-ல் செவ். 6-ல் சூரி, புத. 7-ல் சுக்,சனி. 22.11.1989. இரவு 8.55, குடியாத்தம்)
மருமகனுக்கு ஐந்திற்குடைய குருபகவான் நீசமாகி, சனி பார்வையும் பெற்று வலுவிழந்ததும், புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் அஷ்டமாதிபதி புதன் நீசமாகி இருப்பதும் புத்திரதோஷம். அவரது ராசிக்கு ஐந்தாமிடத்தையும் சனி பார்ப்பது தாமத புத்திரபாக்கிய அமைப்பு. இதேபோல மகள் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து, புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் சனி இணைந்து காரகனான குருவை பார்க்கிறார். ராசிக்கு ஐந்திலும் ராகு இருக்கிறார்.
இருவர் ஜாதகத்திலும் புத்திரதோஷ அமைப்பு இருப்பதால் புத்திரபாக்கியம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தாமதமாகும். தற்போது மாப்பிள்ளைக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதும் தாமத புத்திரபாக்கியத்திற்கு ஒரு காரணம். புத்திரதோஷத்திற்கான முறையான பரிகாரங்களும் செய்யப்பட வேண்டும். 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறக்கும்.
ஆர். முருகேசன், மதுரை.
கேள்வி :
குருஜிக்கு பணிவான வணக்கங்கள். தாங்கள் இந்த கடிதத்தை படிக்கும் இந்த வினாடியின் லக்னம், நட்சத்திரம், திதி, ராசி போன்ற அனைத்தும் மீண்டும் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
பதில் :
சாத்தியமே இல்லை. இந்த நொடியின் அனைத்து அமைப்புகளும் மீண்டும் திரும்ப வருமாயின் இந்த வினாடியில் பூமியில் பிறக்கும் ஒரு ஜீவன் மீண்டும் பிறந்தே ஆக வேண்டுமே. நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியைத்தான் நமது மூலநூல்கள் ஒருவரின் ஜாதகத்தை போல இன்னொருவரின் ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
உங்களது இந்த கேள்விக்கான பதிலை ஏற்கனவே “ஜோதிடர்கள் அனைத்தும் அறிந்தவர்களா?” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கிறேன். அதை இங்கே சுருக்கமாக விளக்குவதாக இருந்தால் பரந்து பட்ட, எண்ணிப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்தில் 2 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கேலக்சிகள் எனப்படும் மண்டலங்கள் இருக்கின்றன.
இந்த 2 ஆயிரம் கோடி கேலக்சிகளுள் பால்வெளி வீதி என்று பெயரிடப்பட்ட நம்முடைய மண்டலமும் ஒன்று. நம்முடைய பால்வெளிவீதி மண்டலத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று நம்முடைய சூரியன். இந்த 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களுக்கும் நம்முடைய பூமி போன்ற கிரகங்கள் இருக்கின்றன.
பொழுது போகவில்லை என்றால் ஓரமாக உட்கார்ந்து நம்முடைய மண்டலத்தில் மட்டும் எத்தனை பூமிகள் இருக்கும். நம்முடைய மண்டலம் தவிர்த்து வெளியே இருக்கும் இரண்டாயிரம் கோடி கேலக்சிகளில் உள்ள சூரியன்களுக்கும் எத்தனை பூமிகள் இருக்கும் என்று விரல்விட்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு மாபெரும் வெடிப்பில் பிறந்த இந்த பிரபஞ்சத்தினுள் அடங்கிய கேலக்சிகள் அனைத்தும் அவற்றினுள் அடங்கியுள்ள பூமி, சூரியன் உள்ளிட்டவைகளை இழுத்துக் கொண்டு ஒன்றை ஒன்று அதிவேகத்தில் விலகிச் சென்று கொண்டிருப்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பது. அதாவது நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பெருவெடிப்பின் நிகழ்வுகள் இன்னும் முற்றுப் பெறாமல் அதனுள் நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகிக்கொண்டே விலகிக் கொண்டிருக்கிறன.
நம்முடைய பிரபஞ்சம் வினாடிக்கு 5 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டிருக்கும் அமைப்பால் ஒரு இடத்தில் இருக்கும் எதுவும் மீண்டும் அதே இடத்திற்கு வராது. பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருவது செக்கு மாட்டு தடத்தைப் போல ஒரே பாதை எனத் தோன்றினாலும் அது “ஒரே இடத்தில்” இல்லை. (இதை விட எளிமையாகவும் விளக்க முடியாது.) இதன் காரணமாகவே நீங்கள் கேட்கும் லக்னம், நட்சத்திரம், திதி, ராசி போன்றவை மீண்டும் அதே போல அமையாது.
ஒ. கார்த்திகேயன், வேலூர் - 7.
கேள்வி :
ஜோதிட சக்கரவர்த்திக்கு என் பணிவான வணக்கங்கள். சகலைக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவைச் சிகிச்சை நடந்து இத்தனை வருடங்களாக நலமுடன் உள்ள நிலையில், திடீரென உணவுக் குழாயில் ஒரு கட்டி உருவாகி அது புற்றுநோய்க் கட்டி என்று உறுதிப் படுத்தப்பட்டு இருக்கிறது. அறுவைச் சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆயினும் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள். அவரது நிலை என்ன என்பதை ஆராய்ந்து நல்லபதிலையும், நோய் குணமடைய பரிகாரங்களையும் சொல்வீர்களேயானால் பெரும் உதவியாக இருக்கும்.
செவ், கே | |||
ராசி | ல,சுக் | ||
சூ,பு | |||
சனி | சந்,ரா குரு |
பதில் :
(கடக லக்னம், துலாம் ராசி. 1-ல் சுக், 2-ல் சூரி, புத. 4-ல் குரு, ராகு. 5-ல் சனி. 9-ல் செவ், கேது. 21.8.1958, அதிகாலை 4.20, அரக்கோணம்)
கடக லக்னத்திற்கு பாதகாதிபதியான சுக்கிரனின் தசையில் சுய புக்தி வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நடக்க இருக்கிறது. அடுத்து இரண்டுக்குடைய மாரகாதிபதியான சூரியனின் புக்தி ஆரம்பிக்கும். இன்றே உடனடியாக பூரண குணமடைந்து விடுவார், கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நடப்பை அனைத்தும் அவன் செயலே.
நான் சொல்லும் இந்தப் பரிகாரங்களை அவரே செய்ய வேண்டும். பயணம் செய்கின்ற நிலையில் அவர் இருந்தால் ஒரு பவுர்ணமி அன்று மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் சோமப்பா சாமிகளின் ஜீவ சமாதியில் வழிபட வேண்டும்.
அடுத்து, ஒரு வளர்பிறை திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் சந்திர ஹோரையில், ஒரு வெள்ளை நிற அலுமினியத் தட்டில், கேரளப் பெண்கள் அணிவது போன்ற பாதி வெண்மை நிற புடவை, ரவிக்கை வைத்து சிறிது வெள்ளை அல்லிப் பூ அல்லது இரண்டு முழம் மல்லிகைப் பூ, ஒரு ஈயப் பாத்திரத்தில் பாக்கெட் பால் இல்லாமல் பசும்பால், ஒரு ஒரிஜினல் முத்து, இரண்டு கை நிறைய நெல்லை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்து, ஒரு 40 வயதிற்கு மேலே இல்லாத நடுத்தர வயது சுமங்கலிப் பெண்ணை தென்கிழக்குத் திசை பார்த்து நிற்க வைத்து ஓடும் நீருக்கு அருகில் இவற்றை இவர் கையால் தானம் கொடுக்க சொல்லவும்.
கடக லக்னத்தில் இவர் பிறந்து சந்திரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் ஓடும் நீருக்கு அருகில் தானம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அவரை நதிக்கரைக்கு கூட்டிப் போக முடியாத சூழல் இருந்தாலோ, அல்லது பக்கத்தில் ஆறு இல்லாமலோ, தண்ணீரே இல்லாமல் வற்றிய ஆறு இருந்தாலோ, வீட்டு மொட்டைமாடியில் மழை நீர் போகும் குழாயை அடைத்து விட்டு, மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டு, சிறிதளவு தண்ணீர் தேங்கியதும், தானம் வாங்கப் போகும் பெண்ணை வரச் சொல்லி அடைத்து வைத்திருக்கும் மழைநீர் குழாயை திறந்து விட்டு, ஓடும் தண்ணீர் போன்ற ஒரு நிலையை உருவாக்கி இந்த தானத்தை செய்யவும்.
நான் சொன்ன இந்த பரிகாரங்களைச் செய்ய பரம்பொருள் அனுமதிக்குமாயின் இவர் பூரண குணமடைவார் என்பது உறுதி. எல்லாம் நல்லபடியே நடக்கும். கவலை வேண்டாம் என்று அவரது குடும்பத்தாரிடம் சொல்லுங்கள்.
நான் காதலிக்கும் பெண் ஒழுக்கமானவளா?
ஒரு வாசகர், செங்கல்பட்டு .
கேள்வி :
குருஜி அவர்களுக்கு வணக்கம். ஒரு பெண்ணை விரும்புகிறேன். அந்தப்பெண்ணிற்கு யாரும் இல்லை. அந்தப் பெண்ணின் சொந்தக்காரர் என்னிடம் வந்து அவள் தப்பான பெண் என்று சொல்கிறார். ஜோதிடரீதியாக இதற்கு விடை காண விரும்புகிறேன். அப்பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது என்ற பொறாமையாக கூறுகிறார்என்று எனக்கு தெரிகிறது. என்றாலும் குருஜி கூறும் பதிலை ஈசன் சொல்லும் பதிலாக எண்ணி காத்திருக்கிறேன். குருஜியின் பாதங்களில் என் மனக் கஷ்டங்களையும், ஜாதகத்தையும் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் கூறும் பதிலை வைத்துத்தான் என் காதலை பற்றி என் பெற்றோரிடம் பேச வேண்டும். என் திருமணம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஜாதக ரீதியாக என் மனைவியின் ஒழுக்கம் எப்படி அமையும்?
பதில் :
காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கையினாலும், அன்பினாலும் வருவது. நீ நினைப்பது போன்ற சந்தேகத்தில் வருவதல்ல. ஒரு பெண் ஒரு ஆணை அழகு பார்த்தோ, உடல் சுகத்திற்காகவோ விரும்புவது இல்லை. என்னையும், எனக்குப் பிறக்க இருக்கும் குழந்தைகளையும், இவன் அன்புடனும், ஆதரவுடனும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையில்தான் ஒரு ஆணின் மீது முழுதாக நம்பிக்கை வைக்கிறாள். அந்த நம்பிக்கை பிறந்தவுடன் உடல், மனம் இரண்டையும் அவனிடம் ஒப்படைக்கவும் தயாராகிறாள்.
எதிர்பார்ப்புகளற்ற தூய அன்பினாலும், ஆழமான நம்பிக்கையினாலும் வருவதற்கு பெயர்தான் காதல். எப்போது உனக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் வந்துவிட்டதோ நீ காதலிக்கத் தகுதியானவன் இல்லை. அவள் ஒழுக்கமானவளா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஜோதிடத்தின் மீது பழியைப் போடாதே. அதைவிட அந்தப் பெண்ணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவளுடைய கன்னித்தன்மையை பரிசோதித்துக் கொள்.
ஒருவகையில் பார்த்தால் உடல் ஒழுக்கத்திற்கும், உண்மையான காதலுக்கும் கூட சம்பந்தம் இல்லை. ஏற்கனவே ஒருவரை காதலித்து அவரால் ஏமாற்றப்பட்ட பெண்ணையும், தெரிந்தே மணந்து கொண்டு வெற்றிகரமாக குடும்பம் நடத்தும் ஆண்மைமிக்க ஆண்கள் எத்தனை பேரை உனக்கு காட்ட வேண்டும்? ஏன் சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழில் செய்தவரைக் கூட காதலித்து மணந்து வாழ்க்கை நடத்துபவர்கள் இல்லையா?
உண்மையான காதல் என்பது நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட வேண்டும். ஆனால் இங்கே உன்னுடைய அஸ்திவாரமே ஆட்டம் கண்டு இருக்கிறது. காதலிக்கும் போதே ஒரு பெண்ணை சந்தேகப்படும் உன்னால் எந்தப் பெண்ணுடனும் குடும்பம் நடத்த முடியாது. சந்தேகம் என்ற பேய் எப்போது உன் மனதில் புகுந்து விட்டதோ அப்போது நான் என்ன சொன்னாலும் என் வார்த்தையின் மீதும் உனக்கு சந்தேகம் இருக்கும்.
என் பதிலை ஈசனின் பதிலாக ஏற்கிறேன் என்று சொல்லியிருக்கிறாய். சந்தேகம் என்பது உடன் பிறந்தே கொல்லும் நோய். அந்த ஈஸ்வரனே வந்து உன்னிடம் நேரில் சொன்னாலும் அதிலும் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று நீ சந்தேகப் படுவாய்.
தயவுசெய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்காதே. அந்தப் பெண்ணை விட்டு விடு. சொந்தக்காரன் ஒன்று சொன்னான் என்பதற்காக சந்தேகப்படும் உன்னை விட ஒரு பிச்சைக்காரனிடம் அவள் சந்தோஷமாக இருப்பாள். அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை தீர விசாரித்து நீ கல்யாணம் செய்து கொள். உனக்கு காதல் ஒத்து வராது.
Guru ji
Superb answer especially for the last question.
super answer for the last question
Guruji avargaluku vanakkam, my name is TAMIZHARASAN.S, date of birth is 05/08/1992 timing-8.10am,place-chennai, Nan kadantha 5 andugalaga IPS examination ku padithu varugiren, Enal exam Nalanru matum etho agividukirathu like accident, fever,…etc Irunthalum manam thalaramal padithu varugiren Enal examinationai Vetri kolla sathagamana situation eppothu amaiyum, eppothu Nan enudaya kanavu paniku selven, Ungalin pathilukaga kathirukum ambu Magan.
Very good answer for the last question. You are great and thank you Ji.