adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 81 (12.04.2016)

பிவிஜயகுமார், செங்கல்பட்டு.

கேள்வி:

தாங்கள் சொன்ன மாதிரி சொன்ன மாதத்தில் என் மகள் திருமணம் கடவுள் கிருபையாலும் உங்கள் ஆசீர்வாதத்தாலும் நடந்தது. என் இரண்டாவது மகள் 14 வயதில் காக்காவலிப்பு நோய் வந்து மருந்து , மாத்திரை சாப்பிட்டு கொண்டு வருகிறாள். நோய் எப்போது சரியாகும்? படித்து முடித்தவுடன் வேலை எதுவும் கிடைக்குமா? அவளது எதிர்காலம் எப்படி இருக்கும்?(குறிப்பு : மாலைமலரில் தாங்கள் எழுதும் ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள் புத்தகமாக வெளி வந்தால் மிகவும்நன்மை அளிக்கும்).

சந்,பு சூ,செ சனி
சு,குரு கே ராசி
பூ
பதில்:

(மிதுனலக்னம், மீனராசி. ஒன்பதில் சுக், குரு, கேது. பத்தில் புத. பதினொன்றில்   சூரி, செவ், சனி.)பதில்:

ஒரு ஜாதகத்தில் லக்னமும், லக்னாதிபதியும் வலுவிழந்தால் ராசிதான் வேலை செய்யும் என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மகளுக்கு லக்னாதிபதி புதன் நீசம் பெற்று நீசசனியும் லக்னத்தைப் பார்த்ததால் லக்னத்தை விட ராசியே முதன்மையாக நிற்கும். ராசிப்படி மகளுக்கு சுக்கிரன் அஷ்டமாதிபதி என்பதாலும் ஆறுக்குடைய சூரியன் உச்சமானதாலும் 14 வயதில் சுக்கிரதசை ஆரம்பித்தவுடன் நோயைக் கொடுத்து விட்டது.

இந்த நோய் திருமணத்திற்கு பிறகு படிப்படியாக மறைந்து முழுமையாக குணமாகும். குழந்தை படித்து முடித்து நல்லவேலைக்கு செல்வாள். சந்திர தசையில் இருந்து வாழ்க்கையின் பிற்பகுதியில் யோகத்துடன் குறையற்ற வாழ்க்கை வாழ்வாள். ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள் விரைவில் புத்தகமாக வெளியிடப்படும். மாலைமலரில் அது தெரிவிக்கப்படும்.

தீ. செந்தில், திருநெல்வேலி.

கேள்வி:

பட்டப்படிப்பு முடித்து எட்டு வருடங்களாகியும் வேலை அமையாமல் கட்டிட கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். அரசுத்தேர்வு எழுதிவருகிறேன். அரசு வேலை கிடைக்குமா? நான்கு வருடங்களாக பெண் அமையவில்லை. என்னைவிட சுமாரான பெண்ஏழ்மைநிலையில் உள்ள      பெண், 25 வயது கடந்து எப்படியாவது இந்த பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர் கூட எனக்குப்பெண் தர மறுக்கிறார்கள். எனக்கு திருமணவாழ்க்கை உண்டா? எதிர்காலம் எப்படி இருக்கும்? மனரீதியாக குழம்பிப் போய் இருக்கும்எனக்குத் தெளிவான பதில் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சு,ரா சந் சூ,பு செவ்
ராசி
குரு
 ல.கே சனி
பதில்:

(துலாம்லக்னம், ரிஷபராசி. லக்னத்தில் சனி, கேது. நான்கில் குரு. எழில் சுக், ராகு. ஒன்பதில் சூரி, புத, செவ்)

லக்னத்திற்கு லக்னாதிபதி பார்வை, ஐந்துக்குடையவன் உச்சம். ஒன்பதுக்குடையவன் ஆட்சி, ஆறுக்குடையவன் நீசம் எனும் யோக அமைப்புள்ள ஜாதகம் உன்னுடையது. ஆயினும் லக்னாதிபதி சுக்கிரன் ஏழுடிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து வலுவிழந்ததால் இதுவரை எதுவும் சரியாக நடக்கவில்லை. சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுவதோடு ராகுவிற்குரிய பிரீத்திகளையும் செய்து கொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு ஏழில் ராகு அமர்ந்து ஏழாம் வீட்டை உச்சசனி பார்த்து ராசிக்கு இரண்டில் செவ்வாய் அமர்ந்ததால் இதுவரை திருமணம் நடக்கவில்லை. மேலே சொன்ன முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ரிஷபராசிக்கு குருபலம் வருவதால் திருமணம் ஆகிவிடும். தற்போது ராகுதசை நடப்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்கு வேலை விஷயத்தில் நன்மைகள் நடப்பதற்கு இடமில்லை. அடுத்து வரும் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொண்ட குருதசையில் நிரந்தர வேலை உண்டு.

சினிமாவில் எந்தத் துறை எனக்கு ஏற்றது?

எஸ்கனிமுருகன், அனுப்பானடி.

கேள்வி:

45 வயதாகிறதுதொழில்திருமணம் எதுவும் இல்லை. எப்போது திருமணம் நடக்கும்? பிறந்ததில் இருந்து அனைத்தும் தோல்வி. உயிரைத் தவிர அத்தனையும் இழந்து விட்டேன். வீட்டில் யாருடைய ஆதரவும் இல்லை. சினிமாத்துறையில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என 24 யூனியன் உள்ளதுஎந்தத்துறையில் அதிக வாய்ப்பு உள்ளது? எப்பொழுது சென்னை போகலாம்? சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கும் வரை என்ன தொழில்செய்யலாம்? 2011 முதல் ஒரு ஜோதிடர் எம். எஸ். முருகேஷ் என்று பெயர்மாற்றி வைத்து தினமும் தவறாமல் 41 தடவை எழுதி வருகிறேன்வேறு ஏதாவது பெயர் வைக்கலாமா? நீங்கள் சொன்னால் பெயரை மாற்றிக் கொள்கிறேன். எனக்கு பரிவர்த்தனை யோகம் இருக்கிறதா? இல்லையா?

சூ,பு சுக் செவ், சனி
ராசி
ரா  ல, சந்
 குரு
பதில்:

(சிம்மலக்னம், சிம்மராசி. ஐந்தில் குரு. ஆறில் ராகு. எட்டில் சூரி, புத. ஒன்பதில் சுக். பத்தில் செவ், சனி)

சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார் ஆகி விடமுடியாது. ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்தவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தோ அல்லது தகுதிக்கு மீறி ஆசைப்பட்டோ வாழ்க்கையைத் தொலைப்பீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் லக்னமும் ராசியும் ஒன்றாகி லக்னாதிபதியும் ராசிநாதனுமாகிய சூரியன் ஆறுக்குடைய பாவி சனியின் சாரத்தில் அமர்ந்து நீசபுதனுடன் இணைந்து எட்டில் மறைந்து பலவீனமாகி நவாம்சத்திலும் நீசமாகி முற்றிலுமாக வலுவிழந்தார்.

லக்னாதிபதி வலுவிழந்தால் ஒருவர் இலக்கின்றி, லட்சியமின்றி அலைவார். இப்போது கூட சினிமாவில் இருக்கும் 24 துறைகளில் எந்தத்துறை உங்களுக்கு ஏற்றது என்று உங்களுக்கே தெரியாமல் சென்னைக்கு எப்போது போகலாம் என்று என்னைக் கேட்கிறீர்கள். சுக்கிரன் ஜீவனாதிபதி ஆவதால் இதுபோன்ற ஜாதக அமைப்புள்ள சிம்மலக்னக்காரர்கள்தான் சினிமாவை நம்பி வாழ்க்கையைத் தொலைக்கிறீர்கள்.

தற்போது நடைபெறும் தசாநாதன் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருந்து தசை நடத்துவதாலும் அடுத்து சினிமா சம்பந்தப்பட்ட ராகுவின் தசை நடக்க உள்ளதாலும் நான் வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் சினிமா ஆசையை விடமாட்டீர்கள்.

லக்னாதிபதி வலுவாக இருந்தால் மட்டுமே லட்சியத்தில் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஜோசியர் சொன்னார் என்று பெயருக்கு மேல் பெயர் மாற்றி தினசரி 4 ஆயிரம் தடவை பெயரை எழுதினாலும் ஒன்றும் நடக்காது. பெயரை மாற்றி வைப்பதால் எல்லோரும் ரஜினிகாந்த் ஆகிவிடலாம் என்றால் இங்கே தெருவுக்கு ஒரு ரஜினி இருப்பார்.

சுக்கிரனும், செவ்வாயும் பரிவர்த்தனை ஆவது தர்மகர்மாதிபதி யோகம் என்றாலும் லக்னாதிபதி வலுவிழந்தால் ராஜயோகமாக இருந்தாலும் பலன் தராது. பிறக்கும்போதே லக்னாதிபதி வலுவாகப் பிறப்பது ஒருவரின் பூர்வ ஜென்ம கர்மவினைகளைப் பொறுத்தது. அப்படிப் பிறக்காதவர்கள் பரம்பொருளை மனமுருக வேண்டி பிரார்த்திப்பதன் மூலம் மட்டுமே தங்கள் லக்னாதிபதியின் வலுவினை அதிகப்படுத்தி சாதிக்க முடியும்.

சூரியனை வலுப்படுத்தும் முறையான வழிபாடுகளை கும்பகோணம் சூரியனார் கோவில், சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு கிராமக்கோவில், கொளப்பாக்கம் சூரியன்கோவில் போன்ற சூரியத் திருத்தலங்களில் செய்யுங்கள். என்னிடம் கேள்வி கேட்காமலேயே உங்களால் சாதிக்க முடியும்.

எஸ். சுப்ரமணியன், புரசைவாக்கம்.

கேள்வி:

எனது ஜாதகத்தில் பித்ருதோஷம் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு எளிமையான பரிகாரம் இருக்கிறதா? எனது அறையில் தாய்தந்தை படத்தினை கிழக்குப் பார்த்த திசையில் வைத்தேன். தற்போது எனது மகன் தெற்குப் பார்த்த திசையில் மாற்றி வைத்து தீபம் ஏற்றி வருகிறான். எனது மகனின் ஜாதகத்திலும் பித்ருதோஷம் இருக்கிறது. எளிமையான பரிகாரத்தினை இதற்கும் கூறி எனக்கு வழிகாட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

பதில்:

எளிமையான பரிகாரம் என்றால் நான் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு என் பணப்பிரச்னையை தீர்த்து வை பகவானே என்று வேண்டிக் கொள்கிறோமே அதுபோலவா?

முதலில் நான் உட்பட எந்த ஒரு ஜோதிடருக்கும் தானே உருவாக்கி பரிகாரம் சொல்லத் தகுதியில்லை. ஒரு ஜோதிடன் சாதாரண மனிதன்தான். கடவுள் இல்லை. இந்த தெய்வீக சாஸ்திரத்தில் ஞானிகள் மறைமுகமாக ஆங்காங்கே பரிகார அமைப்புகளை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அந்த பரிகாரங்களை நகலெடுத்துச் சொல்ல வேண்டியது மட்டுமே ஒரு ஜோதிடனின் வேலை.

முறையான பரிகாரங்கள் என்பவை கிரகவலுவை அதிகப்படுத்தக் கூடிய ஆலயங்கள் என்று ஞானிகள் நமக்கு அருளிய திருத்தலங்களில் வழிபடுவதுதான். நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் இதுபோல அநேக திருக்கோவில்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள். ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடர் தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லக் கூடிய எளிமையான உண்மையான பரிகாரம் இதுதான். மேலும் பரிகாரம் என்பது கிரகஸ்தலம் கிரகநிறம் கிரகவாகனம் கிரகதான்யம் கிரகச்சுவை கிரகக்கல் என்ற ஆறுவகைப்பட்டது என்றும் நமக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

அடுத்து பித்ருதோஷம் என்பதெல்லாம் இல்லவே இல்லை. ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் இப்படிப்பட்ட தோஷங்களையெல்லாம் சொல்லவே இல்லை. இந்த தோஷங்கள் எல்லாம் இடையில் வந்த ஜோதிடர்கள் பிழைப்புக்காகச் சொன்னவை. ஒருவருக்கு நடக்கும் மோசமான பலன் எந்த கிரக விளைவால் நடக்கிறது என்பதை சரியாகக் கணிக்கத் தெரியாத ஜோதிடர்தான் பொத்தாம் பொதுவாக உனக்கு பித்ருதோஷம் இருக்கிறது என்று சொல்லுவார். முன்னோர்களின் திருவுருவப் படங்கள் கிழக்குப் பார்த்த திசையில் இருப்பதே சரி.

மி. கார்த்திகா சந்தோஷ், தம்மத்துக்கோணம்.

கேள்வி:

பிளஸ் டூ தேர்வு எழுதுகிறேன். மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்குமா? அரசுத்துறையில் வேலை செய்ய முடியுமா? எனது அப்பா வெளிநாட்டில் இருந்து வேலை வேண்டாம் என்று வந்து விட்டார். கடன்சுமை அதிகமாக உள்ளது. அப்பா வெளிநாட்டில் இருப்பாரா? உள்நாட்டில் இருப்பார?

பதில்:

உனக்கு தனுசுலக்னம் ரிஷபராசியாகி ராசிக்கு பத்தில் குரு அமர்ந்து ராசிக்கு நான்கில் ராகுவுடன் இருபது டிகிரி வித்தியாசத்தில் இணைந்த செவ்வாய் ராசிக்கு பத்தாமிடத்தைப் பார்ப்பதால் நீ மருத்துவத்துறையில் இருப்பாய். நடக்கும் செவ்வாய் தசையும் அடுத்து நடக்க இருக்கும் ராகுதசையும் இதை உறுதி செய்கின்றன.

உன் அப்பாவிற்கு மிதுன லக்னமாகி அடுத்து நடக்க இருக்கும் தசாநாதன் ராகு பத்தாமிடத்தில் பனிரெண்டுக்குடைய உச்ச சுக்கிரனுடனும் எட்டுக்குடைய சனியுடனும் சேர்ந்திருப்பதால் மறுபடியும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று கடன்களை அடைப்பார். கவலை வேண்டாம்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 81 (12.04.2016)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *