தே. பெரியசாமி, தாண்டாக் கவுண்டன்புதூர்.
சூ,பு சுக்,ல | குரு | ||
ராசி | |||
கே | |||
சந் | செவ் | சனி |
கேள்வி :
வங்கியில் பணிபுரிந்து 2012-ல் ஓய்வு பெற்று விட்டேன். ஓய்வூதியம் கிடைக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளேன். எப்போது கிடைக்கும்?
பதில்:
(மீனலக்னம், விருச்சிகராசி. 1-ல் சூரி, புத, சுக். 2-ல் குரு. 6-ல் கேது. 7-ல் சனி. 8-ல் செவ். 13.4.1952, 5.10 காலை, ராசிபுரம்)
தொழில்ஸ்தானமான பத்தாமிடம் குருவின் வீடாகி குருவின் பார்வை பெற்றதால் வங்கிப்பணியில் இருந்தீர்கள். குருவின் மீனலக்னத்தில் பிறந்திருப்பதாலும், ஏழரைச்சனி நடப்பில் இருக்கும்போது ஆறு, எட்டுக்குடையவர்கள் தசாபுக்திகள் நடக்குமாயின் கடுமையான சோதனைகள் இருக்கும் என்கிற விதிப்படியும் எட்டுக்குடைய சுக்கிரனின் தசை, பாதகாதிபதி நீசபங்க புதனின் புக்தியில் பணியில் ஓய்வுபெற்று கையில் காசில்லாமல் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பென்சன் கிடைக்கவில்லை.
தற்போது வழக்கைக் குறிக்கும் ஆறுக்குடைய சூரியதசை நடப்பதால் கோர்ட்டில் கேஸ் இருக்கிறது. இந்த அமைப்பு 2017 வரை நீடித்து சூரியதசை குருபுக்தியில் 2018 ஆரம்பத்தில் பென்ஷன் பணம் கைக்கு கிடைக்கும்.
கே. ஜெயபால், அரிசிப்பாளையம்.
கேள்வி :
பலமுறை லெட்டர் போட்டும் ஒருமுறையாவது எனக்கு பதில் எழுதவில்லை. இந்த ஏழைக்கு நல்ல பதில் தரவேண்டும் என்று வேண்டுகிறேன். 71 வயதான எனக்கு எந்தத்தொழிலும் இல்லை. நானும் என் மனைவியும் மிகுந்த கஷ்டப்படுகிறோம். முதியோர் தொகை பணம் எழுதினால் கிடைக்குமா?
பதில்:
உங்கள் கடிதங்கள் என் பார்வைக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சிம்மலக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீனராசியில் பிறந்த உங்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக இருந்து வந்த கெடுதலான நேரம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு சோதனைகள் வர வாய்ப்பு இல்லை.. ஜாதகப்படி இனிவரும் காலங்கள் நன்றாக இருக்கும். உடனடியாக முதியோர் உதவித்தொகைக்கு முறைப்படி விண்ணப்பியுங்கள். அடுத்த வருடம் தொகை கைக்குக் கிடைக்கும்.
எஸ். ராஜ்குமார், சேலம் - 2.
கே | |||
ராசி | |||
ரா,குரு செவ் சனி | |||
சுக் சூ | பு | சந் |
கேள்வி :
எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினொன்றில் நான்கு கிரகம் உள்ளது. துலாம் லக்னப்படி அந்த இடம் பாதகஸ்தானம் என்பதால் அதில் இருக்கும் கிரகங்கள் அனைத்தும் எனக்கு பாதகம்தான் செய்யுமா? அடுத்த சனிதசை யோகாதிபதி தசை என்பதால் பாதகமா? யோகமா?
பதில்:
பாதகஸ்தானத்தை விட பாதகாதிபதி வலுப்பெற்றால் மட்டுமே அவரது தசையில் பாதகம் எனப்படும் கடுமையான கெடுபலன்களைச் செய்வார். பாதகஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் பாதகாதிபதி அளவுக்குக் கெடுபலன்களைச் செய்வது இல்லை. உங்கள் ஜாதகப்படி சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை என்பதால் சூரியன் பதினொன்றில் ஆட்சிபெற்ற நிலையாகி பாதகம் செய்கின்ற அளவிற்கு வலுவாகிறார். ஆனால் சூரியதசை உங்களுக்கு வரப்போவது இல்லை. பாதகாதிபதியின் கெடுபலன்கள் அவரது தசையில் மட்டுமே நடக்கும்.
உங்களின் சிறுவயதில் இருந்தே பதினொன்றில் அமர்ந்த ராகுதசை மற்றும், ஆறாமிடத்திற்கு ஆறாமிடத்தில் மறைந்து சுபரான பாவி குருவின் தசை நடந்ததால் பாதகங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. திருக்கணிதப்படி உங்களுடைய ஜாதகத்தில் சனி பனிரெண்டில் மறைந்திருக்கிறார். துலாம் லக்னத்திற்கு சனி எந்த நிலையில் இருந்தாலும் கெடுதல்கள் செய்ய மாட்டார்.
எம். இராஜு, உசிலம்பட்டி.
சுக் செவ் | சந் ரா | ||
சூ பு | ராசி | ||
குரு | ல | ||
சனி | கே |
கேள்வி:
2015 முதல் உங்கள் மாணவனாகி ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரை சேகரித்துப் படித்து வருகிறேன். இளையவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்ட நிலையில் மூத்தவனுக்கு மணமாகவில்லை. எங்கள் இனத்தில் இதுபோன்று நடந்தால் மூத்தவன் பாடு திண்டாட்டம்தான். அவனுக்குத் திருமணம், நிரந்தரத்தொழில் அமையுமா? வாரிசு உண்டா?
பதில்:
(சிம்மலக்னம் மேஷராசி 3ல் கேது, 4ல் சனி, 6ல் குரு, 7ல் சூரி,புத, 8ல் சுக்.செவ். 24-2-1985 6—05 மாலை உசிலம்பட்டி)
நான் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல உங்கள் மகனுக்கும் லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி என்கின்ற தாமத திருமண அமைப்பு இருக்கிறது. மேலும் புத்திரகாரகனும், ஸ்தானாதிபதியுமாகிய குரு ஆறில் மறைந்து நீசமாகி சனிபார்வை பெற்றதும், மகனுக்கு அஷ்டமச்சனி நடப்பதும் வாழ்க்கையில் 33 வயதுவரை எந்த நல்லதும் நடக்காத கிரகநிலைகள். 2018 க்குப் பிறகே குடும்பமும் நிரந்தரத் தொழிலும் அமையும். லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பதால் திருமணத்திற்குப் பிறகு நன்றாக இருப்பார். திருக்கணிதப்படி 2019 சந்திரதசை குரு புக்தியில் வாரிசு ஏற்படும். முதல் குழந்தை ஆண்குழந்தை.
க. அஜய், கோவில்விளை.
கேள்வி :
எனக்கு வயது 22 ஆகிறது. என்னைவிட ஐந்துவயது குறைந்த பெண்ணை காதலித்தேன். அவளும் என்னை காதலித்து விட்டு ஏமாற்றி விட்டாள். அவள் முன் பெரிய ஆளாக, பெரிய நிலையில், நேர்மையாக வாழ ஆசைப்படுகிறேன். கடைசிவரை போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்கவும் விரும்புகிறேன். இது நடக்குமா? நானும் என் மாமா பெண்ணும் நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குத் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:
நீ அனுப்பியுள்ள உன் பிறந்தநாள் 23.8.1993, கன்னிராசி, உத்திரம் நட்சத்திரம் என்பது தவறாக உள்ளது. அன்று துலாம்ராசி, விசாகம் நட்சத்திரமாக உள்ளது. சரியான பிறந்த விவரங்களை அனுப்பினால் பதில் தருகிறேன்.
எஸ். ராஜேஸ்வரி, அயப்பாக்கம்.
கே | |||
பு | ராசி | ||
சுக்,சூ செவ் சனி | |||
ரா | குரு ல | சந் |
கேள்வி :
எனது மகன் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து, அமெரிக்கா சென்று படிக்க TOPIL, GRE, நல்ல மார்க் எடுத்துள்ளான். யுனிவர்சிட்டியில் இருந்து I-20 வந்து விட்டது. ஆனால் விசா இன்டர்வியூ வெயிட்டிங்கில்உள்ளது. கல்விக் கடன் கூட சேங்ஷன் ஆகிவிட்ட நிலையில் விசா கிடைக்காததால் நாங்கள் வருத்தத்தில் உள்ளோம். எப்போது விசாகிடைக்கும்?
பதில்:
மகன் ஜாதகப்படி வெளிநாடு போகும் யோகம் 27.8.2016 அன்றே ஆரம்பித்து விட்டதால் இனிமேல் அவரது பயணம் தாமதப்பட வாய்ப்பில்லை. துலாம் லக்னமாகி தற்போது இரண்டில் உள்ள ராகு தசையில், வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டுக்கு அதிபதி புதன்புக்தி நடப்பதால் நீண்ட காலம் வெளிநாட்டில் இருப்பார்.
ரெ. ஜெயதேவி, திண்டுக்கல்.
கே | ல | செவ் குரு | |
ராசி | |||
சந் | பு,சுக் சனி | ||
சூ ரா |
கேள்வி :
பனிரெண்டு வருடங்களுக்கு மேல் பேராசிரியாக உள்ளேன். நல்லகல்வித் தேர்ச்சி பெற்ற எனக்கு மணவாழ்க்கை மட்டும் இரண்டுவருடங்களிலேயே முடிந்து விட்டது. இந்த 38 வயதிற்கு மேல் மறுமணம் நடக்குமா? சுற்றியுள்ள உறவினர்கள் பகைவர்களாக இருக்கிறார்கள். இனி சாதகமாக மாறுவார்களா? திருமணத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் உண்டா? பரிகாரங்கள் என்ன? வாழ்க்கையில் சோதனைகளை மட்டுமே பார்த்த என்னைப் போன்றவர்களுக்கு ஒரு விடிவிளக்காக இருக்கும் குருஜி அவர்களிடம் எனக்கும் ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
(ரிஷபலக்னம், மகரராசி. 2-ல் செவ், குரு. 4-ல் புத, சுக், சனி. 5-ல் சூரி, ராகு. 22.9.1977, இரவு 10.30, திண்டுக்கல்)
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாயும், ராசிக்கு எட்டில் சனியும் அமர்ந்து, ஏழுக்குடையவன் ராகுவின் நட்சத்திரத்திலும், களத்திரகாரகன் சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்திலும் அமர்ந்தது கடுமையான களத்திரதோஷம். சாரம் கொடுத்த ராகுவின் தசை முன்பு நடந்து, தற்போது எட்டுக்குடைய குருவின் தசை நடப்பதால் திருமண வாழ்க்கை நிலைக்காமல் போனது. ஐந்தில் ராகு அமர்ந்ததும் புத்திர தோஷம்.
தற்போது சுக்கிரனுடன் இணைந்த யோகாதிபதி சனியின் புக்தி நடப்பதாலும் இரண்டு, ஐந்துக்குடைய குடும்பாதிபதி புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளதாலும் உனக்கு குடும்பமும், குழந்தையும் கண்டிப்பாக உண்டு. தாம்பத்திய சுகத்தை தருபவனும், லக்னாதிபதியுமான சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். ஏற்கனவே இவைகளை விரிவாக மாலைமலரில் எழுதி இருக்கிறேன். அஷ்டமாதிபதி தசை நடப்பதால் சொந்தக்காரர்களின் விரோதம் இருக்கத்தான் செய்யும்.
மனைவி சம்பளம் 50ஆயிரம், என் சம்பளம் 15ஆயிரம். அவமானமாக உள்ளது.!
எஸ். பிரகாஷ், சேலம்-15.
சூ பு | ரா | ல | |
சுக் | ராசி | ||
சந் குரு | செவ் கே | சனி |
கேள்வி :
என் மனைவி சம்பளம் 50 ஆயிரம், என் சம்பளம் 15 ஆயிரம் மட்டுமே. அவமானமாக உள்ளது. மனைவி எதுவும் சொல்வதில்லை என்றாலும் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எப்போது வளர்ச்சி அடைவேன்? 31 வயதுவரை கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த நான் 10 மாதங்களாக கடவுளை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கிறேன். கடன்சுமை எப்போது நீங்கும்? சொந்தவீடு எப்போது? புதிதாக ஏதாவது தொழில் செய்யலாமா? லோன் கிடைக்க வாய்ப்புள்ளதா? ஏழரைச்சனி நடப்பதால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி?
பதில்:
(மிதுன லக்னம், தனுசு ராசி. 5-ல் சனி. 6-ல் செவ், கேது. 7-ல் குரு. 9-ல் சுக். 10-ல் சூரி, புத. 24.3.1984, பகல் 12.10, சேலம்)
மனைவியின் ஜாதகம் உங்களை விட வலுவாக இருக்கும்போது சம்பளமும் கூடுதலாகத்தான் இருக்கும். கணவன்- மனைவி என்றாகி விட்டபோது உங்களுக்குள் என்ன உயர்வு,தாழ்வு? இருவரின் சம்பளமும் ஒரே குடும்பத்திற்காகத்தானே செலவாகப் போகிறது? தன்னை விட மூன்றுவயது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் அமைப்பு உங்களுக்கு இருக்கும்போது சம்பளமும் அவளுக்கு அதிகமாகத்தான் இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரிந்ததுதான்.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி நீசபங்கம் என்பதால் உங்களின் பிற்பகுதி வாழ்க்கைதான் யோகமாக இருக்கும். ஏழரைச்சனி நடப்பதால் கடன் தொல்லைகள் நீங்குவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். சனி நடக்கும் போது தொழில் ஆரம்பிப்பது லாபங்களைத் தராது. எனவே தனுசுராசிக்கு அடுத்து ஆரம்பிக்க இருக்கும் ஜென்மச்சனி முடிந்ததும் சொந்தத்தொழில் செய்யலாம்.
எங்கே கேட்டாலும் இப்போது தாராளமாகக் கடன் கிடைக்கும். ஆனால் லோன் வாங்கக்கூடாது. பிள்ளைகளின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருப்பதால் அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்கும். ஏழரைச்சனி நடக்கும்போது, இருக்கும் தொழிலை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது வேலைக்கு மட்டும் செல்ல வேண்டும். புதிதாகத் தொழில் ஆரம்பிக்க கூடாது.