ஜி. விஜயலட்சுமி, தஞ்சாவூர்.
ரா | |||
ராசி | |||
பு,சுக் செவ் | சந் | ||
சூ கே | குரு | சனி | ல |
கேள்வி :
முதல் திருமணம் விவாகரத்தாகி இரண்டாவது திருமணத்திலும் கணவர்வெளிநாட்டில் இருப்பதால் கணவரை ப் பிரிந்து வாழ்கிறேன். பெண்குழந்தை உள்ளது. கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் இருக்கிறதா? குழந்தை நன்றாக படிப்பாளா? எங்களி ன் இருவரின் எதிர்காலம் எப்படிஇருக்கும்? பரிகாரம் எதாவது செய்ய வேண்டுமா?
பதில்:
(கன்னிலக்னம், சிம்மராசி. இரண்டில் சனி. மூன்றில் குரு. நான்கில் சூரி, கேது. ஐந்தில் புத, சுக், செவ்.)
மகளுக்கு ராகுதசை, உங்களுக்கு சந்திரதசையில் ராகுபுக்தி என சமராகு நடப்பதால் குடும்பம் இணையமுடியவில்லை. 2016ம் வருடம் டிசம்பர் மாதம் உங்களுக்கு குருபுக்தி ஆரம்பித்ததும் கணவருடன் இணைவீர்கள். ஜீவன ஸ்தானத்தில் ராகு அமர்ந்து தற்போது வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்தில் அமர்ந்த சந்திரனின் தசை நடப்பதாலும் அடுத்து எட்டுக்குடைய உச்சசெவ்வாயின் தசை நடக்க இருப்பதாலும் நீங்களும் வெளிநாடு செல்வீர்கள். குழந்தையின் ஜாதகம் யோகமாக இருப்பதால் நன்கு படிப்பாள். எதிர்காலத்தில் உயர்ந்த நிலையில் இருப்பாள். உங்கள் கஷ்டங்கள் ஒருபோதும் அவளுக்கு வராது.
தாய் மகள் இருவருக்கும் ராகுதசை புக்தி நடப்பதால் சென்னை மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். மிகக் குறைந்த கட்டணத்தில் ஆத்மார்த்தமாக சேவைமனப்பான்மையுடன் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ராகுதசையோ புக்தியோ நடந்தால் இதுவே நல்ல பரிகாரம்.
எம். சுப்பிரமணியம், சேலம்.
ரா | |||
செவ் | ராசி | ||
சந்,பு சூ,சுக் | ல | ||
கே | குரு | சனி |
கேள்வி :
உங்கள் வியாழக்கிழமை ரசிகன் நான். சனி தனித்து உச்சம் பெற்றால்நல்லது செய்யமாட்டார் என்று கட்டுரைகளில் சொல்கிறீர்கள். என்ஜாதகத்தில் அப்படிதான் உள்ளது. நடக்கும் குருதசையும் அடுத்தசனிதசையும் என்ன பலன் செய்யும்?. திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாவது திருமணம் உண்டா? இல்லையா? ஆறுவருடங்களாக பெண் பார்த்து வெறுத்துவிட்டேன். இரண்டாவதுவாழ்க்கை நிம்மதியாக இருக்குமா?
பதில்:
(சிம்மலக்னம், மகரராசி. மூன்றில் சனி. நான்கில் குரு. ஐந்தில் கேது. ஆறில் சூரி, புத, சுக். ஏழில் செவ்.)
ராசிக்கு இரண்டிலும் லக்னத்திற்கு ஏழிலுமாக செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தைப் பார்த்து, உச்சசனி ராசிக்கு ஏழாமிடத்தை பார்த்ததால் உங்களுக்கு இருதார யோகம். இதுபோன்ற ஜாதகங்களுக்கு 33 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்திருக்க வேண்டும்.
சிம்மலக்னத்திற்கு மூன்றாமிடத்தில் மறைந்து உச்சமடையும் சனி கெடுதல்களைச் செய்யமாட்டார் என்று அதே கட்டுரைகளில் எழுதுகிறேனே... அதையும் படியுங்கள். உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியனுக்கு வீடு கொடுத்த சனி உச்சமடைந்தது யோகம் என்பதால் சனி மறைந்து வலுவடைந்தது நல்லதே.
வரும் ஆகஸ்டுமாதத்திற்கு மேல் நடக்கும் குருதசை சனிபுக்தியில் இரண்டாவது திருமணம் அமையும். இரண்டாவது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். லக்னாதிபதி தசையும் ராசிநாதன் தசையும் கெடுபலன்களைச் செய்யாது என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான சனிதசை நன்மைகளையே தரும்.
ஏ. மகேந்திரன், சேலம்.
செவ் | சூ,பு கே | சுக் | |
சனி | ராசி | ||
சந் | |||
ரா | குரு | ல |
கேள்வி :
டிப்ளமோ முடித்து விட்டு அரசுவேலைக்கு முயற்சி செய்கிறேன். கிடைக்குமானால் இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதனைக் கணித்து தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
(கன்னிலக்னம், சிம்மராசி. இரண்டில் குரு. ஆறில் சனி. எட்டில் செவ். ஒன்பதில் சூரி, புத, கேது. பத்தில் சுக்)
ராசிக்குப் பத்தில் சூரியன் அமர்ந்து லக்னத்திற்குப் பத்தாமிடத்தை குரு பார்த்து பத்துக்குடைய புதன் பரிவர்த்தனை ஆனதால் அரசுவேலை உங்களுக்கு நிச்சயம் உண்டு. நடக்கும் வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கும் சுக்கிரதசை புதன்புக்தியில் 2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் அரசு வேலை கிடைக்கும்.
ஆர். கண்ணன், சேலம்.
ரா | சூ சந் | ||
குரு | ராசி | பு சுக் | |
செவ் | ல சனி | கே |
கேள்வி :
வலதுகால் சற்றே போலியோவால் பாதிக்கப்பட்டு சிறிது ஊனத்துடன்நடக்கும் எனக்கு 30 வயது ஆகிறது. மருந்துக் கடையில் பணிபுரிகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய், தந்தையர்கள் கவலைப்படுகிறார்கள். எனக்கு எப்போது திருமணம் ஆகும்? எதிர்காலம் எவ்வாறுஉள்ளது?
பதில்:
(விருச்சிகலக்னம், மிதுனராசி. இரண்டில் செவ். நான்கில் குரு. ஆறில் ராகு. எட்டில் சூரி. ஒன்பதில் புத, சுக்.)
லக்னத்தில் எவ்வித சுபர் பார்வையும் இல்லாத பாபத்துவம் பெற்ற சனி அமர்ந்து அவர் நவாம்சத்தில் உச்சமாகி வலுப்பெற்றதால் போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஊனத்தைக் கொடுத்தார். ஆயினும் லக்னாதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்து சந்திரனின் பார்வையைப் பெற்று தர்மகர்மாதிபதி யோகம் அமைந்த யோகஜாதகம் உங்களுடையது. தர்மகர்மாதிபதிகளை குருவும் பார்ப்பது மிகுந்த சிறப்பு.
நடக்கும் குருதசை சுக்கிரபுக்தியில் கண்டிப்பாக உங்களுக்கு இந்த வருடம் ஆவணி மாதத்திற்கு மேல் அடுத்து வருடம் தை மாதத்திற்குள் நிச்சயம் திருமணம் நடக்கும். சுறுசுறுப்பாக பெண் பார்க்கவும். யோக ஜாதகமாகி தசாபுக்திகளும் நன்றாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.
ஏ. வெங்கடசுப்பிரமணியம், கணியூர்.
ல கே | சனி | ||
குரு | ராசி | ||
பு | |||
சுக்,சூ சந் | செவ் ரா |
கேள்வி :
நிரந்தரமாக தொழில் இல்லை. திருமணம் அமையவில்லை. குடும்ப சூழ்நிலைகளில் எப்போது மாற்றம் வரும்? எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(ரிஷபலக்னம், தனுசுராசி. இரண்டில் சனி. ஏழில் செவ், ராகு. எட்டில் சூரி. ஒன்பதில் புத, சுக். பத்தில் குரு.)
கடந்த பதினெட்டு வருடங்களாக ஏழாமிடமான விருச்சிகத்தில் செவ்வாயுடன் இணைந்து சனியின் சாரத்தில் அமர்ந்து சுபத்துவமோ சூட்சும வலுவோ பெறாத ராகுதசை நடந்ததால் உங்களுக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. ஆனால் தற்போது லக்னத்திற்கு அஷ்டமாதிபதியானாலும் ராசிநாதனான குருவின் தசை ஆரம்பித்து விட்டபடியால் அடுத்த வருடம் முதல் நிரந்தரமான தொழில் அமைந்து வாழ்க்கையில் மிக வசதியாக முன்னுக்கு வருவீர்கள்.
லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராகு அமர்ந்து ராசிக்கு ஏழில் சனி அமர்ந்ததால் இதுவரை திருமணமாகவில்லை. லக்னத்திற்கு இரண்டிலும் சனி அமர்ந்து அவரை செவ்வாய் பார்த்ததும் கடுமையான தாரதோஷம். ராகுபகவானுக்குரிய முறையான பரிகாரங்களை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன். அவற்றை ஶ்ரீகாளகஸ்தியில் முறைப்படிச் செய்யுங்கள். உடனடியாகத் திருமணம் நடைபெறும்.
ஆர்.மணி. வரலையூர் திருச்சி.
சுக் குரு | |||
சூ,பு ரா | ராசி | ||
சந் | |||
ல,சனி செவ் |
கேள்வி:
என் அண்ணன் மகன் பார்த்திபனுக்கு பத்து பனிரெண்டு இடங்களில் பெண் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. பெண் பிடித்திருந்தாலும் பெண் வீட்டார் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். குருஜி அவர்கள் அவன் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா என்று சொல்ல வேண்டுகிறேன்.
பதில்:
( தனுசுலக்னம் மகரராசி லக்னத்தில் செவ்வாய் சனி மூன்றில் சூரி புத ராகு ஐந்தில் சுக் குரு)
பார்த்திபனின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் சனி இணைந்து லக்னம் ராசி இரண்டின் ஏழாம் வீட்டை சனி செவ்வாய் பார்த்தது குற்றம். ராசிக்கு இரண்டில் ராகுவும் லக்னத்திற்கு இரண்டில் அஷ்டமாதிபதியும் அமர்ந்து குடும்ப வீடும் கெட்டது. சனி செவ்வாயை பரிவர்த்தனை பெற்ற குருபகவான் பார்த்தது ஒருவகையில் நிவர்த்தி என்றாலும் சுக்கிரனும் குருவும் எட்டு டிகிரிக்குள் இணைந்தது சீக்கிர திருமணத்தை தடுக்கும் அமைப்பு.
களத்திர ஸ்தானாதிபதி புதனுடன் ராகு இணைந்திருப்பதாலும் தற்போது ராகுதசை நடப்பதாலும் லக்னம் லக்னாதிபதி குடும்பாதிபதி மூவரும் கேதுவின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும் ராகுவிற்கான முறையான பரிகாரங்களை பரம்பொருள் செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் முப்பது வயதில் புதன் புக்தியில் திருமணம் நடைபெறும். இல்லாவிடில் முப்பத்துமூன்று வயதில் சுக்கிரபுக்தியில் நடைபெறும்.
வறுமையிலிருந்து மீள என்ன பரிகாரம்?
எம்.பாலசுப்பிரமணியன் ஏவூர் அய்யம்பாளையம்.
கேள்வி:
தங்களின் ஆத்மார்த்த சீடனான எனக்கு 37 வயது நடக்கிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. செங்கல் சூளை வைத்துள்ளேன். மிகுந்த கடன் சுமை. கொடுக்கல் வாங்கல் முடியவில்லை. வேலை ஆட்களுக்கு சம்பளம் கூட தர இயலவில்லை. நம்பிக்கை நாணயம் போய் தற்கொலை செய்ய மனம் போகிறது. வயதான உடல்நிலை சரியில்லாத பெற்றோர் மனைவி குழந்தைகள் நிலை என்னாகுமோ என்று பயந்து சாகிறேன். குருஜி அவர்கள் என்மீது கருணை உள்ளம் கொண்டு என் விடிவுகாலம் எதிர்காலம் பற்றி பதில் தரவும். ஏதாவது ராசிக்கற்கள் அணியலாமா? ஏதாவது பரிகாரம் செய்தால் என் குடும்பம் வறுமையிலிருந்து மீள வழி பிறக்குமா?
பதில்:
கன்னிலக்னமாகி லக்னாதிபதி புதன் பத்தில் ஆட்சிபெற்ற யோகஜாதகம் உங்களுடையது. ஆனால் கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசியாகி தற்போது உங்கள் ராசிக்கு ஏழரைச்சனியும் ஜாதகப்படி நீச சந்திரதசையும் நடப்பதே பிரச்னைகளுக்குக் காரணம். உலகில் நாற்பது வயதுக்குள் இருக்கும் எந்த விருச்சிகராசிக்காரரும் அவரவர் தகுதிக்கேற்ப பிரச்னைகளில் இருக்கிறார்கள் என்பதை மாலைமலரில் எழுதிக்கொண்டும் தொலைக்காட்சிகளில் சொல்லிக் கொண்டும் தானே இருக்கிறேன்.
என்னுடைய கணிப்புப்படி உங்களுடைய மனைவி குழந்தைகளுக்கும் தற்போது ஏழரை அல்லது அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கும். எனது குருநாதர் ஜோதிடபானு அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியம் அய்யா அவர்கள் அடிக்கடி சொல்லும் பரிகாரமான திங்கள்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகத்திற்கு பால் கொடுங்கள். சனிக்கிழமை தோறும் காலபைரவப் பெருமானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருக வேண்டுங்கள்.
சென்ற வருடத்தைப் போல கஷ்டம் இந்த வருடம் நிச்சயம் இருக்காது. 2018ம் வருடம் நான்தான் கஷ்டப்பட்டேனா என்று என்னைத் திருப்பிக் கேட்பீர்கள். யோகஜாதகத்தைக் கொண்ட உங்களால் எதையும் சமாளிக்க முடியும். இரண்டே வருடங்களில் கடனிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்கள் குடும்பமும் செழிக்கும். கடவுள் ஒருபோதும் உங்கள் குடும்பத்தைக் கைவிட மாட்டார் என்பது நிச்சயம்.
Thanks ji
Your all messages useful thank u guru ji