adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 43 (23.6.2015)

வி.சி. மாரியப்பன் மதுரை - 2.

கேள்வி :
 ரா
 சந் ராசி
 செவ் கே சூ,சுக் பு.குரு  சனி
குருஜி அவர்களுக்கு தீவிர ரசிகனின் மகா வணக்கம். ஜோதிடம் பயின்று வரும் எனக்கு என் அக்கா மகனின் ஜாதகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவருக்கு ஏன் இன்னும் திருமணம் கை கூடவில்லை? தயவுசெய்து புரியவையுங்கள்.
பதில்:
(மகரலக்னம் கும்பராசி ஆறில் ராகு பத்தில் குரு சனி பதினொன்றில் சூரி சுக் புத பனிரெண்டில் செவ்)
ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு அந்த சம்பவம் நடந்தால் என்ன விளைவு உண்டாகுமோ அந்த விளைவு எப்போது நடக்கும் என்று இணைத்துப் பலன் பார்ப்பது ஜோதிடத்தில் பல விஷயங்களைத் தெளிவாக்கும்.
உதாரணமாக திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு நீடித்த தாம்பத்திய சுகத்திற்காகவும் அதன் மூலமான புத்திர பாக்கியத்திற்காகவும் நடைபெறுகிறது. எனவே ஒரு மனிதனுக்கு ஜாதகப்படி எப்போது அந்த சுகம் கிடைக்கும் அவன் எப்போது தந்தையாவான் என்பதை முதலில் ஆராய்ந்தால் திருமணம் எப்போது நடக்கும் என்பதை துல்லியமாக சொல்லிவிடலாம். இதற்கு ஜனனகால தசை அமைப்புகளையும் கோட்சார நிலைகளையும் ஒப்பிட்டு பலன் சொல்ல வேண்டும்.
உங்கள் மருமகனுக்கு பாவகத்தின்படி சனி எட்டில் அமர்ந்ததும் தற்போது ஆறுக்குடையவன் தசை நடப்பதும் சுக்கிரன் வலுவிழந்ததும் திருமண தாமதத்திற்கான காரணங்கள். கடந்த மார்ச் மாதம் முதல் பெண் சுகத்திற்கு காரணமான சுக்கிரபுக்தி ஆரம்பித்துள்ளதாலும் கோட்சாரப்படி குருபகவான் ஏழாமிடத்திற்கு மாறப்போவதாலும் சுக்கிரனே புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாகி சில சூட்சுமக் கணக்கின்படி 2017ல் ஒரு பெண் குழந்தையைத் தருவார் என்பதாலும் திருமணம் எப்போது நடக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
நா. மதன்குமார், கோவை - 24.
கேள்வி :
மத்தியஅரசு நிறுவனமான எல். . சி. யில் தற்காலிகப் பணியாளராக இருக்கிறேன். பணி நிரந்தமாக வாய்ப்புள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போது சரியாகும்?
பதில்:
முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு ஏழரைச்சனி கடுமையான பலன்களைச் செய்யும் என்ற விதிப்படி உங்கள் விருச்சிக ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக சனி நடந்து கொண்டிருப்பதால் நன்மைகள் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆனால் சனி முடிந்த பிறகு வாழ்க்கையில் எவ்வித சிக்கலும் இன்றி நிம்மதியாக செட்டில் ஆவீர்கள்.
மனைவிக்கு சாமி வருவது எப்போது நிற்கும்?
. அன்பழகன், சேலம் - 1.
கேள்வி :
ரா ல,பு செவ் சூ
ராசி  சந் சுக்
குரு  சனி
கே
பெண்களை நன்றாகப் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டேன். வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத அளவிற்கு கஷ்டம். இந்தச் சமயத்தில் மனைவிற்கு உடலில் ‘’பெரியாண்ச்சி சாமி’’ இருந்து வருகிறது. இதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடாகி பேசாமல் இருக்கிறோம். நானும் பலதடவை அன்பாக குடும்பநிலையை எடுத்துச் சொல்லியும் பிடிவாதம் குணம் மாறவில்லை. கோபமும் வெறுப்பும் அவளிடம் உள்ளது. அவளிடம் உள்ள “பெரியாண்ச்சி சாமி”வெளியே வந்தால்தான் எங்களுக்கு நன்மை கிடைக்கும். மற்றபடி அவளிடம் குறையேதும் இல்லை. இதற்கு உங்களுடைய வழிகாட்டுதலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பதில்:
(ரிஷபலக்னம், கடகராசி, லக்னத்தில் செவ், புதன். இரண்டில் சூரி. மூன்றில் சுக். நான்கில் சனி. ஐந்தில் கேது. ஒன்பதில் குரு.)
மனைவியைப் பற்றிய கேள்விக்கு அவருடைய ஜாதகத்தை அனுப்பாமல் உங்களுடையதை மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள். ரிஷபலக்னத்திற்கு ஒருபகுதி பத்துவருட சுக்கிரதசை யோகம் செய்யாது என்பதன்படி கடந்த சில வருடங்களாகவே கடுமையான பொருளாதாரக் கஷ்டம் உங்களுக்கு இருக்கும். அதிலும் தற்போது நடைபெறும் சூரியதசை ராகுவின் சாரத்தில் இருப்பதால் சில அமானுஷ்ய மந்திர தந்திர அனுபவங்களும் உங்களுக்கு நடக்கும். அதன்படி மனைவியின் சாமி விளையாட்டு நடைபெறுகிறது.
ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டு தன் மனதில் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனஅழுத்ததில் இருக்கும் அபரிதமான தெய்வநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இது போன்று அவர்களே தெய்வமாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்கு நீங்களும் ஒருவகையில் பொறுப்பாவீர்கள்.
மனைவியைப் புரிந்துகொண்டு அவளுடைய எண்ணங்களுக்கும் மதிப்பளித்து சரிசமமாக நடத்தும் கணவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படுவதில்லை.
இன்னும் சிலநாட்களில் அறுபத்தி ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் உங்களுக்கு இதுபற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. வயதான காலத்தில்தான் மனைவியின் அன்பும், ஆதரவும் ஒரு மனிதனுக்கு அதிகம் தேவைப்படும். எதற்கெடுத்தாலும் மனைவியைப் பேசவிடாமல் தடுப்பதைத் தவிர்த்து அவர் சொல்லும் பிரச்னைகளை உண்மையான அக்கறையுடன் காது கொடுத்து கேட்டு தீர்த்து வைக்க முயற்சி செய்தாலே அனைத்தும் சரியாகிவிடும்.
லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னத்தை சனிபார்ப்பதால் நீங்கள் மனக்கட்டுப்பாடு இல்லாதவராக இருப்பீர்கள். உங்கள் குறைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் மாறினால் அனைத்தும் மாறி மீதியுள்ள காலம் சந்தோஷம்தான்.
ஜி. தங்கவேலு, கோவை - 31.
கேள்வி :
ரா சந்
ராசி
குரு
சனி பு  சூ கே சுக் செவ்
குடும்ப ஜோதிடர் என் மகனது ஜாதகம் சிறப்பாக உள்ளதாகவும், நீசபங்க ராஜயோகம், சகலகலா பாண்டித்ய யோகம், குருசந்திர யோகம் என்றுநல்ல பலன்கள் உள்ளதாகவும் கூறுகிறார். பெண் வீட்டு ஜோதிடர்கள்எனது மகன் ஜாதகம் தோஷஜாதகம் என்றும், சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம், தாரதோஷம் உள்ளதாகக் கூறித் தட்டிக்கழிக்கிறார்கள். ராமேஸ்வரம்திருநாகேஸ்வரம், திருமணஞ்சேரி சென்று வந்தும் மகனுக்கு திருமணமாகவில்லை. குருஜி அவர்கள் எப்போது திருமணம் கைகூடும் என்று சொல்ல வேண்டுகிறேன்.
பதில்:
(மீனலக்னம், ரிஷபராசி. இரண்டில் ராகு. ஏழில் செவ், சுக். எட்டில் சூரி. ஒன்பதில் புதன், சனி. பதினொன்றில் குரு.)
நீசம்பெற்ற கிரகம் உச்சம்பெற்ற கிரகத்துடன் தொடர்பு கொண்டால்தான் ராஜயோகம் தரும். உங்கள் மகனுக்கு அந்த அமைப்பு இல்லை. தவிர லக்னாதிபதி வலுவிழந்தாலே ஜாதகத்தில் எந்த யோகமும் வேலை செய்யாது. அந்த ஜாதகனுக்கு எந்த அடிப்படை சுகமும் சரியான நேரத்தில் கிடைக்காது.
மகன் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் செவ்வாய். ராசிக்கு ஏழில் சனி. லக்னாதிபதி நீசம். ஏழுக்குடைய புதன் சனியுடன் இணைவு. இரண்டில் ராகு என கடுமையான தோஷ அமைப்புடன் தாம்பத்தியசுகம் தரும் சுக்கிரனும் நீசமாகி செவ்வாயுடன் இணைந்திருப்பதால் 2018-ல் நடக்க இருக்கும் ராகுதசை சுக்கிரபுக்தியில்தான் திருமணம் நடைபெறும். குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும். ஏற்கனவே நீங்கள் செய்திருக்கும் பரிகாரங்கள் பொதுவானவை. அவற்றால் பயன் இல்லை.
கே. சந்திரசேகரன், கோயமுத்தூர் - 2.
கேள்வி :
சூ,கே பு,செவ் ராசி  குரு
 சனி ரா
சந் சுக்
மகனுக்கு இன்டர்நெட் மூலமாக பெண் பார்த்து பலவித சங்கடங்களுடன்திருமணம் நடந்தது. இரண்டு வருடம் சேர்ந்து வாழ்ந்து நான்கு வருடமாக பிரிந்திருக்கிறார்கள். பெண்வீட்டார் வரதட்சணை கேஸ் போட்டு ஏகப்பட்ட செலவுகள் செய்து பொய் என்று நிரூபணமாகி தப்பித்தோம். விவாகரத்து கேட்டு வழக்கு நடக்கிறது. அந்தப்பெண் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு புத்தி சொல்லவில்லை. மகனுக்கு மறுமணம் செய்ய பெண் தயாராக உள்ளது. ஜோதிடர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மறுமணம் செய்யவில்லை என்றால் மறுமணமே கிடையாது என்று  சொல்கிறார்கள். எப்போது விவாகரத்து கிடைக்கும்?
பதில்:
(மகரலக்னம், தனுசுராசி. இரண்டில் சூரி, புதன், செவ். ஏழில் குரு. எட்டில் சனி, ராகு. பனிரெண்டில் சுக்.)
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். எட்டில் சனி, ராகு. ஏழுக்குடைய சந்திரன் களத்திரகாரகன் சுக்கிரனுடன் பனிரெண்டில் மறைவு. ஆறு, எட்டிற்குடைய சூரியனும் புதனும் குடும்ப வீட்டில் அமர்வு என கடுமையான தாரதோஷ அமைப்புள்ள உங்கள் மகனுக்கு திருமணம் நடந்ததே தெய்வச்செயல்தான்.
இப்படிப்பட்ட ஜாதக அமைப்பில் அவர் வாழ்க்கையில் நடந்தவைகளுக்கு அவரது செயல்தான் காரணமாக இருந்திருக்கும். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணிற்கு புத்தி சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல உங்கள் மகனுக்கு நீங்களும் புத்தி சொல்லியிருக்கலாம்.
விவாகரத்து எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அந்த பெண்ணின் ஜாதகமும் அவசியம். அதேநேரத்தில் ஜோதிடர்கள் சொல்லுவதைப் போல ஆகஸ்டு மாதத்திற்குள் திருமணம் நடந்தால் அதுவும் சிக்கல்தான். ஆகஸ்டிற்கு மேல் ஆரம்பிக்கும் ராகுதசை சுயபுக்தியில் 2016-க்குப் பிறகுதான் கேஸ் ஒரு முடிவிற்கு வரும். மகனுக்கு கடுமையான தோஷங்கள் இருப்பதால் உரிய பரிகாரங்களைச் செய்யவும்.
தரணி, சென்னை - 96.
கேள்வி:
 ல கே ராசி  செவ்
சனி ரா,குரு
 சந் பு சுக் சூ
மகன் இஞ்சினியரிங் முடித்து சிலகாலம் வேலை செய்தபின் சொந்தத் தொழில் தொடங்கி நஷ்டமடைந்து பிறகு எங்கு வேலைக்குச் சென்றாலும் ஓரிரு மாதத்தில் நின்றுவிடுகிறான். திருமணமாகவில்லை. இரண்டுமுறை நல்ல கல்லூரியில் மேற்படிப்பு சேர்ந்து பாதியில் விட்டுவிட்டான். அவனுக்கு எப்போது திருமணம்? மேற்படிப்பு படிக்கும் அமைப்பு உள்ளதா? தொழில் வேலை எப்படி அமையும்? சொந்த வீடு வாங்கி வாழ்வில் வளம் பெறுவானா?
பதில்:
(கும்பலக்னம் விருச்சிகராசி ஆறில் செவ் ஏழில் குரு சனி ராகு ஒன்பதில் சூரி சுக் பத்தில் புத)
மகனுக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் மூவரும் நீசம். கடந்த ஆறுவருடமாக நீசசூரியதசை நடந்து முடிந்து மார்ச் முதல் நீச சந்திர தசை ஆரம்பம். அவரது விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியும் நடக்கிறது. கும்பலக்னத்திற்கு சந்திரன் நீசமாவது மிகவும் நல்லது. ஆனால் இங்கே அவர் செவ்வாயுடன் பரிவர்த்தனையாகி வலுவானது குற்றம். கும்பத்திற்கு சந்திரதசை வரக்கூடாது என்று அடிக்கடி எழுதுகிறேன்.

இதுபோன்ற நேரத்தில் ஒரு மனிதனின் கையில் எதுவும் இல்லை. நடப்பவை அனைத்தும் அவனது சென்றபிறவி கர்மவினைகள்தான். நதி இழுத்துச் செல்லும் வழியில் செல்ல வேண்டியதுதான். உங்கள் மகனுக்கு சனி முடியும்வரை நல்ல வேலை கிடைக்கும் அமைப்புகள் இல்லை. கிடைத்தாலும் நிலைக்க மாட்டார். திருமணம் அடுத்த வருட பிற்பகுதியில் நடக்கும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவருக்கு எதுவும் சரிவராது. தெய்வவழிபாடு பரிகாரங்களே அவருக்குத் துணை புரியும்.