adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (10.1.17)

ஜே. எஸ். சுப்புராம். மூலனூர், தாராபுரம்.

கேள்வி :
என்னுடைய குடும்பத்தில் பல சிக்கல்கள் உள்ளன. மகனுக்கு 34 வயதாகியும் பெண் அமையவில்லை. எப்போது அமையும்?
பதில்:
மகனுக்கு விருச்சிக ராசியாகி, ஜென்மச்சனி நடப்பதும், லக்னத்திற்கு இரண்டில் சனி அமர்ந்து ராசிக்கு எட்டில் ராகு இருப்பதும் திருமணத் தடை என்பதால் இந்த வருடம் கடைசியிலிருந்து அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் திருமணம் நடைபெறும்.
பி. லட்சுமி, கோயம்பத்தூர்.
சந்,சூ குரு,பு  சுக் செவ்
 ரா ராசி
 கே
 சனி
கேள்வி :
ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளைப் படிக்கும் பாக்கியத்தை வழங்கிய மாலைமலருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகன் பிளஸ்டூ படித்து விட்டு ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறான். அவனுக்காக எழுதப்பட்ட ஜாதகத்தில் லக்னம் கும்பம் எனவும், கம்ப்யூட்டர் ஜாதகத்தில் லக்னம் மீனமாகவும் உள்ளது. இதில் எது சரியானது என்று தெரிவிக்கவும். ஜாதகப்படி அவனுக்கு எப்போது திருமண யோகம் என்பதை சொல்லி குழப்பத்திற்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
(மீன லக்னம், ரிஷப ராசி. 3-ல் சூரி, புத, குரு. 4-ல் சுக், செவ். 6-ல் கேது. 10-ல் சனி. 4.6.1989, அதிகாலை 1.16., கோவை)
வாக்கிய பஞ்சாங்கப்படி எழுதப்படும் ஜாதகங்கள் தோராயமானவை மற்றும் பிழையானவை. வாக்கியப் பஞ்சாங்கம் சரி என்று சொல்பவர்களுக்கு ஒரு பஞ்சாங்கம் எப்படி கணிக்கப்படுகிறது, கிரக ஸ்புட நிலைகளின் அடிப்படை ஆதாரம் என்ன என்பது தெரியாது. திருக்கணிதப்படி கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட மீன லக்னம் என்ற ஜாதகமே சரியானது.
உங்கள் மகனுக்கு ராசிக்கு 2-ல் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி என்றாகி லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனி செவ்வாய் இருவரும் பார்ப்பது குற்றம். எனவே திருமணம் தாமதமாகிறது. வரும் மே மாதம் முதல் குரு தசை ஆரம்பிப்பதால் 28 வயதில் திருமணம் ஆகும்.
கா. கௌரிபாலன், சிவகங்கை.
சந்
 சனி ராசி  சுக்
சூ பு
ல ரா செவ் குரு
கேள்வி :
குருஜி அவர்களின் ரசிகர்களின் நானும் ஒருவன். எனக்கு என்ன தொழில் செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஏதாவது செய்வோம் என்று முயற்சி செய்தால் அதற்கு தடங்கலாகவே வருகிறது. எனக்கு என்ன தொழில் செய்ய வரும்? முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா? மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு நல்ல வழியைக் காட்டுங்கள்.
பதில்:
(விருச்சிக லக்னம், மீன ராசி. 1-ல் ராகு. 4-ல் சனி. 9-ல் சுக். 10-ல் சூரி,. 11-ல் செவ், குரு. 3.9.1993, மதியம் 1.03, சிவகங்கை)
தனக்கு ஆர்வமுள்ள விஷயத்தை தொழிலாகத் தேர்ந்தெடுத்தவன் ஒருநாளும் தோல்வி காண்பது இல்லை. அடுத்தவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, இன்னொருவர் இதைச் செய்து பணக்காரராகி விட்டார் என்பதற்காகவோ அந்தத் தொழிலை நாம் செய்ய முடியாது. முதலில் உங்களுக்கு எதில் ஆர்வம் என்பதை நீங்கள்தான் உங்களைக் கேட்டுக் கொள்ள   வேண்டும்.
ஜோதிடம் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே எனக்கு இதில்தான் ஆர்வம். இரவு இரண்டு மணிக்கு எழுப்பி ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல் என்றாலும் கடகட வென்று சொல்ல ஆரம்பித்து விடுவேன். அதைப்போல உங்களுக்கு எதில் சலிப்பில்லாத ஆர்வம் என்பதை உணர்ந்து அதை தொழிலாக வைத்துக் கொண்டு உறுதியாக உழைத்தீர்கள் என்றால் முன்னேறி விடுவீர்கள்.
ஜாதகப்படி உங்களுக்கு விருச்சிக லக்னமாகி சூரியன் பத்தாமிடத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் எலெக்ட்ரிக்கல் கடை, ஸ்பேர் பார்ட்ஸ், நெருப்பு, மின்சாரம் மற்றும் அரசாங்கம் சம்பந்தப் பட்ட வேலைகள், உங்கள் தந்தை செய்த தொழில், அறிவு சார்ந்த தொழில்கள் போன்றவைகளைச் செய்யலாம். தற்போது உங்களுக்கு எட்டுக்குடைய புதன்தசை நடப்பதால் எல்லாவற்றிலும் தடங்கல்கள் இருக்கின்றன. அடுத்த வருடம் புதன்தசை முடிந்ததும் சொந்தத் தொழில் செய்யலாம்.
ஆர். கோகிலா, பல்லடம்.
ரா
ராசி  சனி
சந் குரு சூ,கே பு,சுக் செவ்
கேள்வி :
பத்து வயதாகும் என் ஒரே மகன் முன்பு நன்றாக படித்தான். நல்லபடியாகவும் இருந்தான். இப்போது சரியாக படிப்பது இல்லை. பசங்களோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்றப் போகிறான். வீட்டிற்கு நினைத்த நேரத்திற்கு வருகிறான். சொன்ன பேச்சை கேட்பது இல்லை. எதிர்த்துப் பேசுகிறான். அன்பாகவும், புத்தி சொல்லியும் அடித்தும் பார்த்து விட்டேன். பிரயோஜனம் இல்லை. தீயவழியில் போய்விடுவானோ என்று அஞ்சுகிறேன். நன்கு படித்து நல்லவனாக வருவான் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன். நானும் வேலைக்குப் போய் விடுவதால் இவனை சரியாக கவனிக்க முடியவில்லை. இவனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(விருச்சிக லக்னம், துலாம் ராசி. 9-ல் சனி. 11-ல் சூரி, புத, சுக், செவ், கேது. 12-ல் குரு. 26.9.2006, காலை 11.45, கோவை)
மகனுடைய ஜாதகப்படி 15 வயதிற்கு மேல் எட்டுக்குடையவனின் நட்சத்திரத்தில் அமர்ந்த சனியின் தசை நடக்க இருக்கிறது. சனிபகவான் லக்னாதிபதியை பார்ப்பதோடு ஜலராசியான கடகத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே சிறு வயதிலேயே தகாத பழக்க வழக்கங்களுக்கு அவன் அடிமையாகும் அமைப்பு உள்ளது. லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர் பார்வையும் இல்லை.
ஜோதிடம் என்பதே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஓரளவிற்கு அறிந்து கொண்டு அதன்படி நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு நல்லபடியாக வாழ்வதுதான். உடனடியாக மகனின் மேல் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒரேமகன் என்பதால் உங்களுடைய முழு வாழ்க்கையும் அவனைச் சார்ந்துதான் இருக்கும். அவன் நன்றாக இல்லையென்றால் நீங்கள் கலெக்டர் வேலை பார்த்தாலும் நிம்மதி இருக்காது.   வேலைக்கு போவதும் அவனை நல்லபடியாக வைத்து கொள்வதற்காகத்தான் என்பதால் வேலையை விட மகனின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.
ஆர். ருக்மாங்கதன், ராசிபுரம்.
கேள்வி :
81 வயதாகும் நானும் என் மனைவியும் ஒரே மகனுடன் ஏற்பட்ட மன வேற்றுமையின் காரணமாக சொந்த வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். ஓய்வூதியம் பெற்று வருவதால் உயிருடன் இருக்கிறேன். உற்றார் உறவினர் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் இருந்தும் நிம்மதி இல்லை. இரண்டு பேரும் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகன் எங்களுடன் சேருவானா?
பதில்:
மகனுக்கு விருச்சிக ராசி, உங்களுக்கு துலாம் ராசியாகி ஏழரைச்சனி அமைப்பு நடந்து கொண்டிருப்பதால் கடந்த நான்கு வருடமாக உங்கள் குடும்பத்தில் நிம்மதி இருக்க வாய்ப்பில்லை. இந்த வருட தீபாவளிக்கு பிறகு மகனுடன் ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாவீர்கள்.
ராகு தோஷம், சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
சிந்துபைரவி, கொன்றைக்காடு.
கேள்வி :
ஜாதகத்தில் ராகுதோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? இதற்குரிய எளிமையான பரிகாரங்கள் என்ன?
பதில்:
ராகுதோஷம், சர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்ற வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படும் அனைத்தும் ஒன்றுதான். ஜாதகத்தில் ராகு-கேதுக்களால் திருமணத்திற்கு ஏற்படும் தடையை இந்த தோஷங்கள் குறிக்கின்றன. போன ஜென்மத்தில் பாம்புகளை அடித்ததால் இந்த தோஷம் வருவதாக சிலரால் சொல்லப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. உண்மையில் பாம்புகளுக்கும் இந்த தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை.
ஜோதிடத்தில் சில நுணுக்கங்கள் நமக்கு எளிமையாகப் புரிவதற்காக ஞானிகள் ஒன்றைப் போல இன்னொன்றை உருவகப்படுத்திய சில விஷயங்களில் இந்த ராகுகேதுக்களும் ஒன்று. சாயாக்கிரகங்கள் ஒரு வளையம் போல, பாம்புகளைப் போன்ற தோற்றத்துடனும், ஒரு பாம்பின் தலைக்குரிய விஷத்தை ராகுவும், வாலுக்குரிய சாதாரண தன்மையை கேதுவும் செய்வதால் இவை இரண்டும் பாம்புகளாக உருவகப்படுத்தப்பட்டு சர்ப்பக் கிரகங்கள் எனப்பட்டன. மற்றபடி பூமியில் வாழும் அப்பாவி ஜந்துக்களான பாம்புகளுக்கும், ராகுகேதுக்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு ஜாதகத்தில் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் 2, 7, 8 -ம் பாவங்களில் இவைகள் இருந்தாலோ, ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொண்டிருந்தாலோ சர்ப்பதோஷம் எனப்படுகிறது.
எளிமையான பரிகாரம் என்றால் என்ன? அடுத்த தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது வாரம் விளக்கேற்றுங்கள், நாகதோஷம் போய் விடும் என்று நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி நான் சொல்வதினாலும், பிள்ளையாருக்கு விளக்கேற்றுவதாலும் இந்த தோஷம் விலகி விடப் போவது இல்லை.
இன்னும் சொல்லப் போனால் பரிகாரம் சொல்லுகின்ற ஜோதிடர் ஒன்றும் கடவுள் இல்லை. அவரும் சாதாரண மனிதர்தான். ஒரு ஜோதிடர் வாய்க்கு வந்த பரிகாரத்தைச் சொன்னால் அது பலிக்காது. நமது மூலநூல்களில் ஆங்காங்கே பரிகாரத்தைப் பற்றிய சில விஷயங்கள் ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கின்றன. தன்னைத் தேடி வருபவர்க்கு அதை எடுத்து சொல்லும் தூதுவராகத்தான் ஒரு ஜோதிடர் இருக்க முடியும்.
பரிகாரம் எனப்படுவது கிரகத்தின் ஸ்தலம், நிறம், வாகனம், தான்யம், கல், சுவை போன்ற சில விஷயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ராகுஸ்தலமான ஸ்ரீகாளகஸ்தியில் சர்ப்ப சாந்தி பூஜையின் போது ராகு-கேதுக்களுக்குடைய தான்யங்களையும், அவற்றின் நிறமுடைய ஆடைகளையும், மலர்களையும் சமர்ப்பித்து வெள்ளி நாக உருவங்களுக்கு பூஜை செய்வதைக் கவனித்திருக்கலாம்.
தோஷத்தைத் தரும் கிரகம் இருக்கும் ராசி சர, ஸ்திர, உபயம் ஆகிய பிரிவுகளில் எதைச் சேர்ந்தது? அந்த ராசி நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகளில் எந்த வகையானது? கிரகம் இருக்கும் வீடு ஆண் ராசியா? பெண் ராசியா? என்பது போன்ற துணுக்கமான விஷயங்களை நன்கு ஆராய்ந்து, தன்னுடைய ஜோதிட ஞானத்தையும், மூலநூல்களில் ஞானிகள் சொல்லியுள்ள சூட்சுமங்களையும் புரிந்து கொண்டு ஒரு ஜோதிடர் பரிகாரம் சொல்ல வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஜோதிட அனுபவம் வேண்டும்.
நீங்கள் கேட்டுள்ள ராகு-கேது தோஷங்களுக்கு முதன்மை பரிகாரத்தலமாக ஶ்ரீகாளகஸ்தி, திருநாகேஸ்வரம், கொடுமுடி ஆகியவை விளங்குகின்றன. இவை தவிர்த்து நாகவல்லி, நாகநாத சுவாமி என்று பெயரில் அமைந்திருக்கும் பழமையான ஆலயங்களும் சர்ப்பதோஷம் நீக்குபவைதான். கேதுவிற்கென உள்ள சிறப்பு ஸ்தலம் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்.
ராகுவின் தான்யமான உளுந்து, கேதுவின் தான்யமான கொள்ளு ஆகியவற்றைக் கொண்டும், இவற்றின் கருப்பு, கருநீலம், இளம் சிவப்பு போன்ற நிறங்களைக் கொண்டும், இவைகளின் காரகத்துவங்களான விதவை, தாத்தா, பாட்டி, போன்றவைகளைக் கொண்டும் தானங்கள் சொல்லப்பட வேண்டும்.

இருக்கும் இடத்தைப் பொருத்தும் இவைகளின் தசையில் ராகுவிற்குரிய கோமேதகத்தையும், கேதுவிற்குரிய வைடூரியத்தையும் அணியலாம். இணையவே முடியாத இவ்விரண்டு கிரகங்களின் கற்களை ஒரே மோதிரத்தில் வைத்து அணிவது தவறு. மற்ற கிரகங்களுக்கு எதிராக சுற்றி வருபவை என்பதால் இடது கையில்தான் அணிய வேண்டும். விரைவில் ஒவ்வொரு கிரக நிலைக்கான முறையான பரிகாரங்களை மாலைமலரில் எழுதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *