எஸ். பச்சையப்பன், சீல்நாயக்கன்பட்டி.
சுக் ல | சந் சூ,பு | ||
கே | ராசி | செவ் | |
குரு சனி | ரா | ||
கேள்வி :
அடுத்தவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து அவர்கள் என்னை ஏமாற்றியதால் நான் கடன்களை அடைத்துக் கொண்டிருக்கிறேன். என் கஷ்டம் எப்போது விலகும்?
பதில்:
மேஷ லக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று, கடனைக் குறிக்கும் ஆறாமதிபதி புதன் ஆட்சி பெற்ற நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை புதன் தசை நடந்ததால் கடன் தொல்லைகளில் சிக்கி இருப்பீர்கள். தற்போது கேதுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. கடனை தீர்க்கும் பதினொன்றாமிடத்தில் கேது அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சி பெற்று குருவுடன் இணைந்திருப்பதால், கேது தசை முடிவதற்குள் கடன் தொல்லைகள் விலகும்.
வி. முரளிதரன், தாதகாபட்டி.
ல | செவ் | ||
ராசி | குரு கே | ||
ரா | சந் | ||
பு,சுக் சனி | சூ |
கேள்வி :
எனக்கு காவல்துறையில் அதிகாரியாக பணி எப்போது கிடைக்கும்? அல்லது வேறு துறையில் கிடைக்குமா? அரசு வேலையே கிடைக்காதா? சொந்த தொழில் அல்லது அடிமைத் தொழிலா? உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது. எப்போது சரியாகும்?
பதில்:
(மேஷ லக்னம், சிம்மராசி. 2-ல் செவ். 4-ல் குரு, கேது. 8-ல் சூரி. 9-ல் புத, சுக், சனி. 7.12.1990, 4.10 மாலை, சேலம்)
காவல்துறையைக் குறிக்கும் செவ்வாயின் மேஷலக்னத்தில் பிறந்து, அரசு வேலையைக் குறிக்கும் சூரியன் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பதாலும், சூரியனை குரு செவ்வாய் இருவரும் பார்ப்பதாலும், அடுத்த வருடம் ஏப்ரலுக்கு மேல் நடக்க இருக்கும் சூரியதசையில் சுயபுக்தி முடிந்ததும் காவல்துறை அதிகாரி ஆவீர்கள். 28 வயதிற்கு மேல் உடல்நிலை சரியாகும்.
பி. ராஜன், சென்னை – 83.
சந் | சனி | கே | |
பு | ராசி | ||
சுக் சூ,குரு | |||
செவ் ரா | ல |
கேள்வி:
9.2.1973, நள்ளிரவு 1.25 மணிக்கு சென்னையில் பிறந்த எனக்கு ஜாதகம் எழுதாததால் பத்திரிகைகளில் வரும் ராசிபலன் படிக்க முடியவில்லை. நான் என்ன ராசி, என்ன நட்சத்திரம்?
பதில்:
மேஷராசி, பரணி நட்சத்திரம்.
பே. பிச்சையா, கோவில்பட்டி.
கேள்வி :
எனக்கு பிறந்த தேதியோ, நேரமோ தெரியாது. என்னுடைய சித்தப்பா மகன் பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு நான் பிறந்தேன். எனவே நானாக ஒரு ஜாதகம் எழுதி வைத்திருக்கிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடன் அதிகமாக உள்ளது. குருஜி அவர்கள் எனக்கு நட்சத்திரம், ராசி சொல்ல முடியுமா?
பதில்:
ஜோதிடம் என்பது கணக்குகளுக்கு உட்பட்ட ஒரு விஞ்ஞான சமன்பாடு. இதில் பிறந்த நேரம், நாள், இடம் மிகவும் அத்தியாவசியமானது. இவைகள் இல்லாமல் எந்த ஒரு ஜோதிடராலும் உங்களுடைய நட்சத்திரம், ராசியை துல்லியமாக சொல்ல முடியாது. ஆயினும் இது போன்றவர்களுக்கு ஓரளவு பொருந்தி வருவதற்காகவே பெயரின் முதல் எழுத்தை வைத்து ராசியை சொல்லும் முறை இந்த சாஸ்திரத்தில் உள்ளது.
அதன்படி உங்களுடைய பெயரின் முதல் எழுத்தான பி என்பதன் நட்சத்திரம் உத்திரம் அல்லது மூலம் என்பதாக வரும். இதில் நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் கன்னி ராசிக்கு பொருந்துவதால், தோராயமாக கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் என்பதாக பலன் பார்த்து கொள்ளுங்கள்.
எஸ். வாசுதேவன், சென்னை – 82.
கே | ல | ||
ராசி | குரு | ||
சனி | |||
சந்,பு செவ் | சூ சுக் |
கேள்வி :
38 வயதாகும் மகனுக்கு பல கோவில்கள் சென்றும், பல பரிகாரம் செய்தும் திருமணம் தள்ளிப் போகிறது. இரவும் – பகலும் இதே கவலையில் நானும் என் மனைவியும் சொல்ல முடியாத துயரத்தால் உடல்பாதிப்பு அடைந்து விட்டோம். தங்களது மேலான நல்வாக்கினை நல்கி அருள் புரியுங்கள்.
பதில்:
(மேஷ லக்னம், விருச்சிக ராசி. 4-ல் குரு. 5-ல் சனி. 6-ல் ராகு. 7-ல் சூரி, சுக். 8-ல் புத, செவ். 3.11.1978, 6.20 மாலை, வேலூர்)
மகனுக்கு குழந்தைபாக்கியத்தைக் குறிக்கும் ஐந்துக்குடைய சூரியன் நீசமாகி சனி பார்வை பெற்று, ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்ததோடு அல்லாமல், ராசிக்கு ஐந்தாமிடத்தில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு கடுமையான புத்திரதோஷ அமைப்பு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது.
லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் அமர்ந்து, ராசிக்கு ஏழாமிடமும், லக்னத்திற்கு இரண்டாமிடமும் ஒன்றாகி அதை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பது குடும்பம் அமைவதை தடுக்கின்ற அமைப்பு. தற்போது நீச சூரிய தசையும், விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியும் நடந்து வருவதால் 2018-ல் திருமணம் நடைபெறும். செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யவும்.
சு.சிதம்பரம், ரெட்டியார்பட்டி.
குரு சுக்,கே | சூ பு | ல | |
சந் | ராசி | செவ் சனி | |
ரா |
கேள்வி:
மகனுக்கு திருமணம் நடந்து பத்து வருடங்களாகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. என் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஜோதிடர் என் ஆயுளுக்குப் பிறகுதான் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொன்னார். அப்படியானால் எனக்கு எப்போது மரணம் ஏற்படும்? மகனும் வைத்தியம் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பலன்தான் இல்லை. அந்த ஜோதிடர் சொன்னது உண்மையா? என் ஆயுளுக்குள் பேரப் பிள்ளைகளை பார்க்க முடியுமா? தோஷங்கள் இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்:
ஒருவர் இறந்த பிறகுதான் இன்னொருவருக்கு குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. இப்படிச் சொல்வதும் தவறான ஒன்று. அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு பேரப் பிள்ளைகளை கொஞ்சும் பாக்கியம் இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியும்.
மகன் மருமகள் இருவர் ஜாதகத்திலும் லக்னம் ராசிக்கு ஐந்தாமிடத்தில் ராகு-கேதுக்கள் அமர்ந்து, அந்த ராகு-கேதுவிற்கு பாபக் கிரக பார்வை இருப்பது புத்திர தோஷம். அதேநேரத்தில் இருவர் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானாதிபதி வலுவாக இருப்பதாலும், குருபகவான் வலுவோடு இருப்பதாலும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக உண்டு.
மகனின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தி சென்று தங்கி அதிகாலையில் எம்பெருமான் காளத்திநாதனுக்கும், தாயார் ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். இதில் கலந்து கொள்வதன் மூலம் பகவானின் கருவறையிலும், அன்னையின் கருவறையிலும் உங்கள் மகனும் மருமகளும் ஒரு நாழிகை நேரம் இருக்க முடியும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் மருமகளின் கருவறையில் குழந்தை தங்க இருக்கும் தடை நீங்கும்.
மகனின் ஜாதகப்படி இப்போதைக்கு அவர் தகப்பனை இழக்கும் அமைப்பு இல்லை. பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள். நீங்களும் உடன் சென்று பரம்பொருளை மனதார வேண்டுங்கள். 2018 பிற்பகுதியில் மகனுக்கு பெண்குழந்தை பிறக்கும். இன்னொரு பெண் குழந்தையும் உண்டு. பேத்தியைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது.
காளியப்பன், சென்னை-51.
ரா சனி | |||
ராசி | ல,சந் குரு | ||
சூ | |||
பு | செவ் கே,சுக் |
கேள்வி:
உங்கள் கேள்வி - பதில்களை தவறாமல் படிக்கும் தீவிர வாசகன் நான். பேரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் மந்தமாக இருக்கிறான். அவனது எதிர்காலத்தைப் பற்றி பயமாக இருக்கிறது.
பதில்:
( கடக லக்னம் கடகராசி. 1ல் குரு, 5 ல் செவ் கேது சுக், 6 புத, 7 சூரி, 11 ல் சனி, 19.1.2003 மாலை 5.53 சென்னை )
உலகில் படித்தவர்கள் அனைவரும் சாதித்து விடுவதில்லை. படிக்காதவர்கள் அனைவரும் வீணாய்ப் போய் விட்டதில்லை. உண்மையில் மிகப் பெரிய தொழில் சாதனைகளைச் செய்தவர்கள், பெரும் பணக்காரர்கள் ஆரம்பக் கல்வியினைத் தாண்டாதவர்களே. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு பள்ளிக்கல்வி மட்டுமே காரணமல்ல. கல்வி அறிவை விட அவனது ஞானமும் ஊக்கமும்தான் அவனை முன்னேற்றுகிறது.
ஜோதிடப்படி நான்காமிடமும், அதன் அதிபதியும், புதனும் பள்ளிக் கல்வியைக் குறிக்கும் அமைப்புகள். உங்கள் பேரனின் ஜாதகப்படி நாலாம் அதிபதி சுக்கிரன் கேது செவ்வாயுடன் இணைந்து, சனி பார்வை பெற்று, கல்விக்காரகனான புதனும் ஆறில் மறைந்து வக்ரமானதால் படிப்பில் மந்தமாகத்தான் இருப்பான். தற்போது புதனின் தசையும் நடக்கிறது. அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கும் கேது தசையில் பேரனின் படிப்பில் முன்னேற்றம் தெரியும்.
அதேநேரத்தில் பேரன் பௌர்ணமி யோகத்தில் பிறந்திருப்பதாலும், லக்னத்தில் லக்னாதிபதி அமர்ந்து, கூடவே உச்சகுருவும் இணைந்து, ஐந்துக்குடையவன் ஆட்சி, ஒன்பதுக்குடையவன் உச்சம் என்ற அமைப்பில் யோகஜாதகமாக இருப்பதால் பேரன் எதிலும் சோடை போய் விட மாட்டான். பிற்காலத்தில் இன்னார் பேரன் என்று உங்கள் பெயரைச் சொல்லும் அளவுக்கு இருப்பான்.
ஒரு முறை கூட திருமணம் நடக்கவில்லை... எப்போது நடக்கும்?
சூ பு | ல | செவ் | குரு கே |
சுக் | ராசி | ||
ரா | சந் சனி |
ப. தனசேகரன், திண்டுக்கல்.
கேள்வி :
60 வயதாகியும் ஒருமுறை கூட திருமணம் நடக்கவில்லை. வாழ்க்கை வெறுத்துப் போய் சாகலாம் போல் தோன்றுகிறது. போகிற இடமெல்லாம் பெண் இல்லை என்று சொல்கிறார்கள். வயதாகி விட்டது என்று காரணம் காட்டுகிறார்கள். நான் காது கேளாதவன். ஆனால் படித்தவன். குடியிருக்க வீடு உள்ளது. கேரளாவிற்கு பெண் பார்க்க போகலாமா? பெண் கொடுப்பார்களா? எனக்கு இப்போது உயிர் வாழத் தேவை திருமணம் மட்டும்தான். குதிரை லாடம் வீட்டில் வைத்தால் பிரச்சினை தீருமா? இதற்கு என்ன பரிகாரம்?
பதில்:
(மேஷ லக்னம், துலாம் ராசி. 2-ல் செவ். 3-ல் குரு, கேது. 7-ல் சனி. 11-ல் சுக். 12-ல் சூரி, புத. 9.4.1955, காலை 8 மணி, நாமக்கல்)
லக்னத்திற்கு ஏழில் சனி, இரண்டில் செவ்வாய், ராசியில் சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய் என்றாகி 21 வயதிற்கு பிறகு அவயோக தசைகளாகவே நடந்து வந்ததால் இதுவரை திருமணம் நடக்கவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் கேதுதசை அடுத்த வருடம் முடிந்து, சுக்கிரதசை ஆரம்பித்ததும் ஒரு பெண் துணை கிடைக்கும். அதுவும் முறையான திருமணமாக இருக்காது. சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். சுக்கிரன் ராசிநாதன் என்பதால் இதுவரை நடந்த கெடுபலன்கள் நடக்காது.
இந்தப் பிறவியில் நடப்பது அனைத்தும் நமது முந்தைய பிறவியில் செய்த கர்மவினை என்றுதான் வேதஜோதிடம் சொல்கிறது. ஜாதகப்படி குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும் ஐந்துக்குடையவன் நீசனுடன் இணைந்து பனிரெண்டில் மறைந்து உங்களுக்கு வாரிசு தோஷம் இருப்பதால்தான் வாழ்க்கைத்துணை அமையவில்லை. மனதைத் தளரவிட வேண்டாம். இந்த வருடக் கடைசியில் ஏழரைச் சனி முடிவதால் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. சோறு பொங்கிப் போட்டு, ஒரு தலைவலி மாத்திரை வாங்கித் தருவதற்காகவாவது துணை அமையும். வாழ்க்கையின் கடைசிக்காலம் கஷ்டமாக இருக்காது.
Name : Mallika Arjun S
DOB : 20.05.1982
Time : 12:41 AM
star : Revathi, Meenam
Lagnam : Kumbam
When i will get married and go abroad ?
வணக்கம்
குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்
தேவி
ADMIN