adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 35 (28.4.2015)

என். சுப்புலக்ஷ்மி, பாளையங்கோட்டை.

கேள்வி:
செவ் சனி சந்
 ரா,சூ சுக் ராசி
பு  ல கே
 குரு
குருஜி அவர்களுக்கு இந்தக் கடிதம் நான்காவது முறையாக அனுப்புகிறேன். 45 வயதாகும் மகனுக்கு திருமணம் தாமதப்பட்டுக் கொண்டே வருகிறது. எண்ணற்ற பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லையே?  பலன் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
சிம்மலக்னம், ரிஷபராசி. மூன்றில் குரு, ஆறில் புதன், ஏழில் சூரி, சுக், ராகு எட்டில் செவ். ஒன்பதில் சனி.
தாய், மகன், நண்பன், என வாராவாரம் கடிதங்களாக எழுதி எழுதிக் குவித்து விட்டீர்கள். மகன் ஜெயக்குமாருக்கு எட்டில் செவ்வாய் ஏழுக்குடைய சனி நீசம், குடும்பாதிபதி புதன் ஆறில் மறைவு. அவரே அம்சத்திலும் நீசம் ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து களத்திரகாரகன் சுக்கிரனுடன் இணைவு. இவை அனைத்திற்கும் குருபார்வை இருந்து தோஷம் நிவர்த்தி என்ற வகையில் பார்த்தாலும் சுக்கிரனின் பகை வீட்டில் நீசசனியின் பார்வையில் இருந்து அம்சத்தில் நீசமான குருவின் பார்வைக்கு வலுகிடையாது. எனவே இங்கே குரு பார்க்கக் கோடி நன்மை என்ற விதி செல்லாது.
லக்னாதிபதி வலுவிழந்தால் வாழ்க்கைக்குத்தேவையான அடிப்படை சுகம் கிடைக்காது. இங்கே லக்னாதிபதி சூரியனும் ராசியில் ராகுவுடன் இணைந்து அம்சத்தில் நீசம் பெற்றிருக்கிறார். நீங்கள் இதுவரை செய்ததாக சொல்லும் காளகஸ்தி சர்ப்பசாந்தி திருமணஞ்சேரி, நவக்கிரகஸ்தலம், காசிகயா, திருவேணி சங்கமம், ராமேஸ்வர பித்ருஹோமம் இவையெல்லாம் பொதுவான பரிகாரங்கள்.
கடுமையான தாரதோஷமும், குருபகவானே புத்திரஸ்தானதிபதியும், காரகனுமாகி வலுவிழந்ததால் உண்டான புத்திர தோஷத்திற்கும் லக்னாதிபதியை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களும், தற்பொழுது சனி தசை நடப்பதால் சனிப்ரீத்தியும் ஸ்ரீகாளகஸ்தியில் முழு இரவு தங்கி ருத்ராபிஷேகமும் செய்யப்பட வேண்டும்.
பொதுவாக ஒருவருக்கு புத்திரதோஷம் இருந்தாலே சீக்கிரம் திருமணம் ஆகாது. இங்கே உங்கள் மகன் விஷயத்தில் முறையான பரிகாரங்களை செய்யும் பட்சத்தில் தற்பொழுது நடக்கும் சனிதசை சுயபுக்தியில் சனி ஏழுக்குடையவன் என்பதால்திருமணம் நடக்கும். முறையான பரிகாரங்களை எழுத மாலைமலரில் இடம் போதாது.
அ. ஆரோக்கியதாஸ், புனிததாமஸ் மவுன்ட்.
கேள்வி:
சூ,பு செவ் சுக்
குரு ரா ராசி  சந்
 கே ல
சனி
குடும்பம் முழுவதும் கத்தோலிக்க கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களான எங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது. எனது ராசி கடகராசியா? அல்லது வேறா? என்பதை குருஜி அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.
பதில்:
நீங்கள் கொடுத்துள்ள பிறந்தநாள் விபரங்களின்படி உங்களின் ராசி கடகம், நட்சத்திரம் பூசம்.
அ. சுரேஷ்ராஜ், கடையாறுமூடு.
கேள்வி:
பு,செவ் சுக் சூ
 கே ராசி சந் குரு
 சனி ரா
மிகவும் தாமதமாக 34 வயதில் திருமணம் ஆனது. திருமண நாளில் இருந்தே பெண் வீட்டாருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னையும் என் மனைவியையும் வீட்டிலிருந்து பிரித்து தனிக்குடித்தனம் போக வைத்தார்கள். பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்து அடிமைப்படுத்த நினைத்தார்கள். பிடிக்காமல் என் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டேன். என்னுடைய ஐ.டி கார்ட், பாஸ்புக் எல்லாம் பெண்வீட்டில் உள்ளது. மாமனார் என்னை ஜென்ம விரோதியாகப் பார்க்கிறார். மனைவி புத்திஸ்வாதீனம் இல்லாதவள். என்னோடு சேர்ந்து வாழ்வாளா?
பதில்:
கன்னிலக்னம். கடகராசி, ஏழில் புத, சுக், செவ், எட்டில் சூரி, பதினொன்றில் சந், குரு பனிரெண்டில் சனி, ராகு.
ஒரு ஜாதகத்தில் உச்சசுக்கிரனை உச்சகுரு பார்த்தால் சுக்கிரன் தன்னுடைய காரகத்துவங்களை முழுமையாக செய்யமாட்டார். ஸ்ரீராமபிரானின் நிலையும் இதுதான். வாழ்நாளில் மனைவுடன் அவர் சேர்ந்திருந்த நாட்களை விட பிரிந்திருந்த நாட்கள்தான் அதிகம். சுக்கிரதசையில் மணமான உங்கள் நிலையும் அதுதான்.லக்னாதிபதி புதன் உச்சனுடன் இணைந்து வீடு கொடுத்தவன் உச்சமானதால் நீசபங்கமானாலும் செவ்வாயுடன் ஒரே டிகிரியில் இணைந்து நீச பங்கம் கொடுத்த சுக்கிரன் குருவின் பார்வையால் வலுவிழந்ததால் புதனும் பலவீனம் ஆனார்.
அதோடு லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராசிக்கு இரண்டில் சனி என்றாகி இருவரும் குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பது குற்றம். அடுத்த வருஷம் ஆரம்பிக்க இருக்கும் சூரியதசையில் நீங்கள் வெளிநாட்டிற்கோ, வெகுதூர மாநிலத்திற்கோ வேலைக்கு செல்வீர்கள் என்பதால் மனைவி பிரச்னை தீர்வதற்கு நாளாகும். ஆனால் இருவரும் பிரிவதற்கு வாய்ப்பில்லை.
எஸ். ஆர். ராஜசேகர், திசையன்விளை.
கேள்வி:
குரு சுக் பு சூ ரா
ராசி
சனி செவ்
 கே  ல சந்
கலியுக ஜோதிட சக்கரவர்த்திக்கு வணக்கம். 27 வருடங்களாக பழக்கடை. சொந்தக்கடை, சொந்தவீடு, கணவன் மனைவி உழைப்பு. ஆனால் நிழல்போல கடன் தொல்லை தொடர்ந்து கொண்டு இருக்கிறது கூடுதலாக ஏதேனும் தொழில் செய்யலாமா? அல்லது கடையை லீசுக்கு விட்டுவிடலாமா? சனி பகவானின் சசயோகம் எனக்கு உள்ளதா? ஆயுள்பலம் எப்படி? நான்கு மகள்களின் தந்தையான எனக்கு நல் ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.
பதில்:
துலாம்லக்னம், கன்னிராசி, நான்கில் சனி, ஆறில் குரு எட்டில் சுக், புத, ஒன்பதில் சூரி, ராகு பதினொன்றில் செவ்.
துலாம் லக்னமாகி ஜீவனாதிபதி சந்திரன் குருவின் பார்வையில் உள்ளதால் சந்திரனுக்குரிய பழக்கடைத் தொழில். நான் அடிக்கடி எழுதும் துலாம் லக்னத்திற்கு வரக்கூடாத குருதசை பதினாறு வருடங்களாக 1991 முதல் 2007 வரை நடந்தது. குருபகவான் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருந்ததால் கடன் தொல்லைகளில் சிக்க வைத்தார். அதேநேரத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் எட்டாமிடத்தில் ஆட்சியாக இருப்பதால் அதை சமாளிக்கும் திறமையையும் தந்தார்.
2007ல் குருதசை முடிந்தவுடன் கடன்தொல்லை நீங்கி இருக்கும். ஆனால் உங்களின் கர்மவினைகளின்படி ஏழரைச்சனி ஆரம்பமாகி விட்டது. எனவே கடன் தொல்லையும் தொடர்ந்து விட்டது. தற்பொழுது ஏழரைச்சனி முடிந்து சனிதசையில் சுக்கிரபுக்தி நடப்பதால் கடையை லீசுக்கு விடவேண்டாம். தொடர்ந்து உங்களால் நடத்தமுடியும்.
ஆறுபேர் கொண்ட குடும்பத்தில் மனைவி, மகள்கள் யாருக்காவது விருச்சிக ராசி தனு சுராசி இருந்தால் இன்னொரு தொழில் செய்யவேண்டாம். யாருக்கும் சனி நடக்காவிடில் தொழில் செய்யலாம். சசயோகம் என்பது பெரிய யோகங்களை செய்யும் அமைப்பல்ல. சனிபகவான் சசயோகத்தின் மூலம் ஒருவரை உழைக்க வைத்தே பணம் தருவார். அதைத்தான் இப்போது நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். எட்டுக்குடையவன் ஆட்சிபெற்று ஆயுள்காரகனும் ஆட்சிபெற்றதால் எண்பது வயது தாண்டி தீர்க்காயுள் வாழ்வீர்கள்.
காதல் கை கூடுமா?
மு. ராஜவேல், திருநெல்வேலி
கேள்வி:
ரா குரு
ராசி சந்
சனி சுக் சூ,பு கே செவ்
இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவளும் காதலித்தாள். என் தங்கைக்காக எங்கள் திருமணம் தாமதமானது. தங்கை திருமணம் முடிந்து விட்டது. இப்பொழுது எங்களுக்குள் பல பிரச்னைகள். என்னைக் காதலி வெறுக்கிறாள். காதல் கை கூடுமா?
பதில்:
தன்னைவிட மூன்றுவயது மூத்தபெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஏழாமிடத்தில் சனி வலுவாக இருக்க வேண்டும் அல்லது ஏழாமிடம் வேறுவகையில் கெட்டிருக்க வேண்டும். 2012ம் ஆண்டு பிற்பகுதியில் சுக்கிரதசை ஆரம்பித்ததுமே நீ அந்தப்பெண்ணை காதலித்திருப்பாய். நீ மகரலக்னம் அந்தப்பெண் கும்பலக்னம் இருவருக்கும் ஒரே லக்னாதிபதி என்பதால் ஈர்ப்பு உண்டானது.
உனக்கு ஏழுக்கதிபதி சந்திரன் வலுவாகி ஏழாமிடத்திற்கு எவ்வித பாபர் சம்பந்தமோ பார்வையோ இல்லாத நிலையில் அந்த பெண்ணிற்கு ஏழாமிடத்தை சனி செவ்வாய் பார்த்து சுக்கிரன் செவ்வாயுடன் நெருங்கி இணைந்து ராசிக்கு ஏழில் சனி அமர்ந்ததால் நீங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கு ஜாதகப்படி வாய்ப்பில்லை.
அதுபோல உனக்கு சுக்கிரதசை சந்திரபுக்தியில் 2017ஆரம்பத்தில் திருமணம் நடக்கும். அந்தப்பெண்ணிற்கு வரும் ஜூலைமாதம் குருதசையில் சுக்கிரபுக்தி ஆரம்பிப்பதால் அடுத்த வருடமே திருமணம் நடக்கும். என்பதால் திருமண காலமும் ஒத்து வரவில்லை.
மூன்றுவயது மூத்தபெண்ணை திருமணம் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நடக்கும் சுக்கிரதசை உன் கண்களை மறைக்கிறது. அருமையான யோகஜாதகத்தை கொண்டுள்ள உனக்கு யோகதசையான சுக்கிரதசையும் ஆரம்பித்துள்ளதால் வரும் செப்டம்பர்மாதம் சுயபுக்திக்கு பிறகு வரும் அஷ்டமாதிபதி சூரியபுக்தியில் ஏற்படும் சில சம்பவங்களால் மனம் மாறி திடப்படுவாய்.
மற்றவர்களைப் போல நடக்க முடியுமா?
தங்கமாரீஸ்வரி என்ற நந்தினி , தூத்துக்குடி.
கேள்வி:
சந் சனி குரு ரா
ராசி
 செவ்
கே சூ,பு சுக்
ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்பதை நினைக்கும்போது சொல்ல முடியாத வேதனைப்படுகிறேன். பிறந்தது முதல் இதுவரை சரியாக நடக்க முடியவில்லை. யாராவது கையைப்பிடித்து வந்தால்தான் மெதுவாக நடக்க முடியும். இல்லையென்றால் நடக்க முடியவில்லை. நானும் மற்றவர்களைப் போல நடக்க முடியுமா ? என் தேவைக்கு ஏற்றார்போல் மெதுவாக நடந்தால் கூட போதும். முடியுமா ? முடியாதா ?
பதில்:
துலாம்லக்னம், மேஷராசி. மூன்றில் கேது. எட்டில் குரு, சனி. பதினொன்றில் செவ். பனிரெண்டில் சூரி, சுக், புத.
பிறக்கும்போதே மூன்று வயதுவரை நீசலக்னாதிபதி தசை. அடுத்து ஒன்பது வயது வரை பாதகாதிபதி தசை. அடுத்து இன்றுவரை அம்சத்தில் நீசமான சந்திரதசை நடக்கிறது. துலாம்லக்னத்திற்கு சுக்கிரன்நீசமாகி அவரை குரு வலுப்பெற்றுப் பார்த்தால் நடக்க இயலாத நிலையை உண்டு பண்ணுவார்.
ஆனால் லக்னாதிபதி சுக்கிரன் வர்க்கோத்தமம் பெற்றதால் நிச்சயம் உன்னால் உறுதியாக யார் துணையின்றியும் நடக்க முடியும் அம்மா. தற்போது உன் மேஷராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்து விட்டதால் இன்னும் இரண்டு வருடம் கழித்தே உனக்கு முன்னேற்றம் தெரியும்.

2017 முதல் லேசாக நடக்க ஆரம்பித்து சந்திரதசை முடியும் 2019-ல் ஓரளவிற்கு அடுத்தவர் துணையுடன் சமாளிப்பாய்.2020-ல் ஆரம்பிக்கும் செவ்வாய் தசையில் எவர் துணையும் இல்லாமல் உன் தேவைகளை நீயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு பரம்பொருளின் அருளினால் கண்டிப்பாக நிச்சயமாக நடப்பாய் அம்மா. இது உறுதி. வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 35 (28.4.2015)

  1. guruji namasakkaram your is reply very good from your question answer who are all having astrology knowledge (basic people like me)they are also learn from your answer.

    regards,
    gk mahadevan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *