adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 24 (10.2.15)
ஒரு வாசகர், வாலாஜாபேட்டை.
கேள்வி:
ரா
 குரு சந் ராசி
செவ்
சனி  பு சுக் சூ கே
 
இக்கடிதம் உங்கள் பார்வையில் படக் கடவுளை வேண்டுகிறேன். திருமணம் நடந்து இரண்டு வருடங்களாகிறது. இதுவரை இவள் எனக்கு மனைவியாக நடந்து கொள்ளவில்லை. இவள்மேல் எனக்கு சந்தேகம் உள்ளது. திருமணத்திற்கு முன் ஏற்கனவே இவளுக்கு காதல் இருந்ததால் என்னை ஏமாற்றித் திருமணம் நடத்தி இருக்கிறார்கள். ஐயா, இவள் நல்லவளா? கெட்டவளா? என்னுடன் கடைசி வரை இருப்பாளா? போய்விடுவாளா? மனம் உடைந்த நிலையில் உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
பதில்:
13-10-1986, 12.20pm, வேலூர்.
தனுசுலக்னம், கும்பராசி, இரண்டில் செவ்வாய், மூன்றில் குரு, சந்திரன், நான்கில் ராகு, பத்தில் சூரியன், பதினொன்றில் சுக்கிரன், புதன். பனிரெண்டில் சனி.
ஒரு பெண்ணை வாய்க்கு வந்தபடி பேசுவது சுலபம். அவளை வாழ வைப்பது மிகவும் கடினம். லக்னாதிபதி குருபகவான் குருச்சந்திர யோகத்தில் அமர்ந்து ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களை பார்த்து ஐந்துக்குடையவன் உச்சம் ஒன்பதுக்குடையவன் திக்பலம் என அருமையான அமைப்பைக் கொண்ட ஜாதகம் உங்கள் மனைவியுடையது.
இரண்டு வருடங்களாக அவர் உங்களுக்கு மனைவியாக நடந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவருக்கு கணவராக நடந்து கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் ஜாதகத்தையும் அனுப்பி இருந்தால் அதைக் கண்டுபிடித்திருப்பேன்.
கேள்வி அனுப்புபவர்கள் எல்லோரும் மனைவியைக் குறைதான் சொல்கிறீர்கள். விசாரித்தால் உண்மை வேறு வடிவில் இருக்கும். நமது கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் கூடுமானவரை திருமண பந்தத்தைக் காப்பாற்றவே முயற்சிப்பாள். தன்னால் தாங்க முடியாத பட்சத்தில்தான் வெளியேற நினைப்பாள்.
தனுசு லக்னத்தில் பிறந்து குரு வலுப்பெற்ற ஒரு அருமையான நல்ல பெண்ணை வீணாக சந்தேகப்பட வேண்டாம். சந்தேகம் என்பது கூட இருந்தே கொல்லும் நோய். எதுவானாலும் அடுத்தவர் சொல்வதை நம்பாமல் தாலிகட்டிய மனைவியிடமே மனம் விட்டுப் பேசித்
தீர்த்துக் கொள்ளுங்கள். நிம்மதி கிடைக்கும்.
வி. சுரேஷ் குமார், கோயம்புத்தூர்.
கேள்வி:
 ல
 சந் ராசி
 செவ் குரு கே சுக் சனி சூ பு
31 வயதாகியும் நிலையான தொழிலோ நிம்மதியோ இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு பெயர்மாற்றம் செய்தும் பலன் இல்லை. கல்யாணத்துக்கு பின்பு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மையா? திருமணம் எப்பொழுது நடைபெறும்?
பதில்:
6-10-1984, 11.19pm, கோவை.
மிதுனலக்னம் கும்பராசி. நான்கில் சூரியன் புதன், ஐந்தில் சுக்கிரன், சனி. ஆறில் கேது, ஏழில் செவ்வாய் குரு.
லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் உச்சம் பெற்று ஐந்துக்குடையவன் ஆட்சி பெற்ற யோகஜாதகம் உங்களுடையது. அவர்களின் தசையும் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. ஏழில் இருக்கும் செவ்வாயையும் குருவையும் உச்ச சனி பார்ப்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. நடக்கும் சனி தசை சுக்கிர புக்தியில் 2016 தைமாதம் ராகு அந்தரத்தில் திருமணம் நடைபெறும்.ஜோதிடர்கள் சொன்னது உண்மையே. சுக்கிரனுடன் சனி இணைந்து தசை நடத்துவதால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
க. வனிதாதேவி, மதுரை.
கேள்வி:
சூ,சந் செவ்,சுக் கே குரு
 ல பு ராசி
சனி ரா
எனது மகளின் ஜாதகம் கணித்தது சரியாக உள்ளதா? தாய் தந்தைக்கு இவளால் பாதிப்பு ஏற்படுமா? அவளின் எதிர்காலத்தைக் கூறி ஆசிர்வதித்து வாழ்த்தும்படி குருஜி அவர்களை பணிவுடன் கேட்கிறேன்.
பதில்:
9-4-13, 3.40am, மதுரை.
கும்பலக்னம் மீனராசி. லக்னத்தில் புதன் இரண்டில் சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய். மூன்றில் கேது. நான்கில் குரு, ஒன்பதில் சனி, ராகு.
லக்னாதிபதி உச்சம் பெற்று லக்னத்தில் புதன் திக்பலத்துடன் அமர்ந்து ராஜயோகாதிபதி சுக்கிரனும் உச்சம் பெற்ற வலுவான ஜாதகத்தை கொண்டு உங்கள் மகள் பிறந்திருக்கிறாள். சனி, புதன், கேது, சுக்கிரன் என அடுத்தடுத்து யோகதசைகள் நடைபெற உள்ளதும் குழந்தை வளரவளர பெற்றோர்களின் செல்வச்செழிப்பு அதிகமாகும் என்பதைக் காட்டுகிறது.
பத்தாம் வீட்டை பரிவர்த்தனை பெற்ற குரு பார்ப்பதால் சொல்லிக் கொடுக்கும் துறை அல்லது வங்கியில் குழந்தை வேலை செய்வாள். தாய் தந்தையரைக் குறிக்கும் சூரியன் சந்திரன் இணைந்து சுக்கிரனும் வலுப்பெற்றதால் இந்தக் குழந்தையால் பெற்றோர்களுக்குப் பெருமை சேரும்.
ஜப்பானில் விஞ்ஞானியாக இருப்பேனா?
பி. விவேகானந்தன், சாணாரப்பட்டி.
கேள்வி:
சந்  கே
ராசி
சனி  குரு சுக்
 ரா ல சூ,பு செவ்
எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு பயோடெக்னாலஜி படிக்கிறேன். எனது கனவு லட்சியம் எல்லாம் நான் விஞ்ஞானியாக ஜப்பானில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் இது கண்டிப்பாக நடக்காத காரியம் என்று நண்பர்களும் உறவினர்களும் என் பெற்றோர்களும் சொல்லுவதோடு கேலியும் செய்கின்றனர். ஜாதகப்படி எனது லட்சியம் நிறைவேறுமா?
பதில்:
28-9-1991, 1.30pm, தருமபுரி.
தனுசுலக்னம், ரிஷபராசி, லக்னத்தில் ராகு, இரண்டில் சனி, ஒன்பதில் சுக்கிரன், குரு, பத்தில் சூரியன், புதன், செவ்வாய்.
லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்து இரண்டு யோகக்கிரகங்கள் திக்பலம் பெற்று லக்னத்தையோ ராசியையோ சனி பார்க்காமல், தர்மகர்மாதிபதி யோகமும், சுபக்கிரகங்கள் திரிகோணமும், பாவக்கிரகங்கள் கேந்திரமும் பெற்ற ராஜயோகஜாதகம் உன்னுடையது. உனது லட்சியம் நிறைவேறாமல் வேறு எவருடைய லட்சியம் நிறைவேறும்?
வெளிநாட்டைக் குறிக்கும் அஷ்டமாதிபதி உச்சம் பெற்றுள்ளதாலும் வெளிநாட்டிற்குச் செல்ல வைக்கும் ராகுவின் தசை தற்போது நடப்பதாலும் அடுத்து பாவகப்படி எட்டில் இருக்கும் குருவின் தசை நடக்க உள்ளதாலும், கிழக்குத்திசைக்குரிய சூரியன் தொழில்ஸ்தானத்தில் இருப்பதாலும் வருங்காலத்தில் நீ ஜப்பானில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருப்பாய்.
ராஜயோக ஜாதகத்தைக் கொண்ட உனக்கு யார் தயவும் தேவையில்லை. ஜப்பானுக்கு செல்ல பத்தில் உள்ள உச்சபுதன் உன் படிப்பின் மூலம் வழிவகுப்பார். இன்று கேலி செய்யும் அனைவரும் உன்னை அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பாய். எனது முப்பது வருடங்களுக்கும் மேலான ஜோதிடஅனுபவத்தின் பதில் இது. ஒருநாள் இந்த குருஜியை வெளிநாட்டில் நினைப்பாய். வாழ்த்துக்கள்.
கோ. ரெங்கையன் தேவர், தஞ்சாவூர் – 1.
கேள்வி:
சந் சூ,பு சனி செவ் சுக்
ராசி  ல கே
ரா
குரு
42 வயதாகியும் என் மகளுக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தடைக்கு என்ன காரணம்? திருமணம் எப்பொழுது?
பதில்:
7-6-1972, 9.21am, தஞ்சாவூர்.
கடகலக்னம், மீனராசி, ஆறில் குரு, ஏழில் ராகு, பதினொன்றில் சூரியன், புதன், சனி. பனிரெண்டில் சுக்கிரன், செவ்வாய்.
ஐந்துக்குடையவன் பனிரெண்டில் மறைந்து புத்திரக்காரகன் குரு ஆறில் மறைந்து வக்ரமும் பெற்று கடுமையான புத்திர தோஷமும், ஏழில் ராகு அமர்ந்து ஏழுக்குடைய சனி அஸ்தமனம் பெற்று களத்திரதோஷமும் ஏற்பட்ட ஜாதகம். இதைவிட குருவும் சுக்கிரனும் ஆறு, பனிரெண்டில் அமர்ந்து இருவரும் வக்ரம் பெற்று நேருக்கு நேர் பார்த்து கொண்ட அமைப்புதான் இதுநாள் வரை திருமணம் ஆகாததற்கு காரணம்.
சுக்கிரன் வக்ரம் பெற்றாலே தாம்பத்ய சுகம் கிடைக்க தாமதமாகும். அதிலும் அவரைக் குரு பார்ப்பது இன்னும் தடைதான். திருமணம் என்பதே சந்ததி விருத்திக்குத்தான் என்பதால் புத்திரதோஷமும் திருமணத்தை தடுக்கும். பரிகாரங்கள் செய்ததாக எழுதி இருக்கிறீர்கள் எல்லா ஜோதிடர்களும் சொல்லும் பரிகாரங்களும் முறையானவை என்று சொல்லமுடியாது. பரிகாரம் சொல்ல நீண்ட அனுபவம் வேண்டும். உங்கள் மகளுக்கு முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் எதிர்வரும் சந்திரதசை ராகுபுக்தியில் திருமணம் நடக்கும்.
மாரியம்மாள், கோயம்புத்தூர்.
கேள்வி:
 ல கே
ராசி  சூ குரு
சனி  பு,சுக் செவ்
 ரா சந்
குருஜியின் பதில்களுக்காக மாலைமலருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகன் எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அவனை ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்பது என் கனவு ஆவானா? அவனுக்கு ஏற்ற துறை எது?
பதில்:
13-8-91, 3.35am, சேலம்.
மிதுனலக்னம், கன்னிராசி, இரண்டில் சூரியன், குரு, மூன்றில் புதன் சுக்கிரன், செவ்வாய். ஏழில் ராகு, எட்டில் சனி.
மிதுனலக்னதில் பிறந்து ஜீவனாதிபதி குருபகவான் வெளிநாட்டைக் குறிக்கும் கடகத்தில் உச்சமாகி எட்டுக்குடைய சனியும், ஆறுக்குடைய செவ்வாயும் ஜீவனாதிபதிக்கு வீடுகொடுத்த சந்திரனும், பத்தாமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் மகன் கணினித்துறையில் வெளிநாட்டில் வேலை செய்வார். நடக்கும் ராகுதசையும், அடுத்தடுத்து நடக்க போகும் சரராசியில் இருக்கும் குரு, சனிதசைகளும் இதை உறுதிப்படுத்துகிறது.
எஸ். பிரபாகரன், திருச்சி – 1.
கேள்வி:
கே,பு சூ,சுக்  செவ்
ராசி  ல சந்
 குரு
சனி ரா
குருஜி அவர்களுக்கு வணக்கம். மாணவப்பருவத்தில் இருந்து (1973) உயரிய நிலையில் அரசியலில் இருந்த நான் 1989லிருந்து படிப்படியாக அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டேன். சொந்தச் செலவில் அரசியல் நடத்தியதால் சொத்தும் அழிந்தது. சூரியதசையில் வந்த உடல் நோய்கள் சந்திரதசை பிறந்தும் தொடர்கிறதே ஏன்? இனியாவது நிம்மதியாக இருப்பேனா? சொந்தமாய் சிறியவீடு கட்டிவாழ கிரகங்கள் அனுமதிக்கிறதா? உங்களின் சூப்பர் ஸ்டைல் பதிலை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
6.5.57, 11.29am, திருச்சி.
கடகலக்னம், கடகராசி.இரண்டில் குரு, நான்கில் ராகு, ஐந்தில் சனி, பத்தில் சூரியன், புதன், சுக்கிரன், பனிரெண்டில் செவ்வாய்.
பத்தாம் வீட்டில் சூரியன் திக்பலத்துடன் சந்திரகேந்திரத்தில் இருந்தும் கேதுவுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து அம்சத்தில் நீசமானதால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. ஆறுக்குடையவனின் பார்வை இருந்ததால் அவன் தசையில் நோயும் வந்தது.

திருக்கணிதப்படி சந்திரதசை வரும் ஜூலையில்தான் ஆரம்பிக்கிறது. லக்னாதிபதி தசை என்பதால் சந்திரதசை நோயின்றி நிம்மதியைத் தரும். ஆனால், அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெற்றதால் நிறைவு இருக்காது. சுக்கிரனின் பார்வையை பெற்ற ராகுவின் புக்தியில் 2017ல் வீடு கட்ட ஆரம்பித்து 2018 முற்பகுதியில் முடிப்பீர்கள். சந்திரதசையில் இருந்து தொல்லைகள் இன்றி இருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *