சு. தாணுமாலயன், கன்னியாகுமரி.
கேள்வி:
என் அப்பாவிற்கு நிறைய சொத்து உண்டு. என் மீது அவருக்குப் பாசமில்லை. என்னை சண்டை போட்டு விரட்டி விட்டார். சகோதரிகளும் என்னிடம் பேசுவதில்லை. வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு அப்பாவின் சொத்து கிடைக்குமா? பிள்ளைகளின் திருமணம் எப்படி நடக்கும் ?
பதில்:
மனைவி குழந்தைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நாளையும் நட்சத்திரம் ராசியையும் எழுதியுள்ள நீங்கள் யாருடைய பிறந்த நேரத்தையும் எழுதவில்லை. நான் அருள்வாக்கு சொல்லுபவன் அல்ல. ஒரு ஜோதிடனுக்கு பலன் சொல்லுவதற்கு பிறந்த நாள், நேரம் இட விபரங்கள் அவசியம் தேவை.
நிறையப்பேர் சரியான விவரங்கள் தராமல் கேள்வி கேட்பதனால்தான் என்னால் பதில் சொல்ல முடியாமல் போகிறது. கேள்விகளை அனுப்புபவர்கள் பிறந்தநாள், பிறந்த நேரம், பிறந்த இடக்குறிப்புகளை தெளிவாக அனுப்புங்கள்.
எஸ். சந்தோஷ், கோவில்பட்டி.
கேள்வி:
ரா | சந் | ல | |
குரு | ராசி | ||
செவ் | |||
சுக் சனி | சூ பு | கே |
கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சுவலி, தலைவலியால் அவதிப் படுகிறேன். மருத்துவர்கள் இதயம் நன்றாக உள்ளது. பயப்படாதே என்கிறார்கள். ஆனால் மரணபயம் அதிகமாக உள்ளது. தனியாக இருக்கும் பொழுது செத்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். 27 வயது ஆகியும் திருமணம் செய்யவும் பயமாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை தெரிவிக்குமாறு பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
19-10-1986, 8.28pm, நெல்லை.
ரிஷப லக்னம், மேஷ ராசி, ஆறில் சூரியன், புதன், சுக்கிரன், ஏழில் சனி. ஒன்பதில் செவ்வாய். பத்தில் குரு, பதினொன்றில் ராகு.
லக்னத்திற்கு ஏழு, பனிரெண்டுக்குடையவனான உச்சம் பெற்ற செவ்வாயின் தசை கடந்த ஏழு வருடங்களாக நடக்கிறது. செவ்வாய் மாரகாதிபதியான சந்திரனின் சாரம் வாங்கியிருக்கிறார். சனியுடன் பரிவர்த்தனை பெற்றதோடு சனியின் பார்வையும் அவருக்கு இருக்கிறது. செவ்வாயின் அசுபத்தன்மை உங்கள் ஜாதகத்தில் ஓங்கி இருப்பதாலும், லக்னத்தை சனி பார்த்து ராசியை செவ்வாய் பார்ப்பதாலும், தாழ்வு மனப்பான்மையும் பய உணர்வுகளுமே செவ்வாய் தசையில் உங்களை ஆட்டிப் படைக்கும். லக்னாதிபதி சுக்கிரன் ஆறில் மறைந்து வக்கிரம் பெற்றுள்ளதும், இதை உறுதி செய்கிறது.
அதனால்தான் செவ்வாய் தசையின் பிற்பகுதி மூன்றரை வருடங்களும் ஏழுக்குடைய பலன் நடந்து செத்து விடுவோமோ என்று பயப்படுகிறீர்கள். வரும் ஏப்ரல் முதல் செவ்வாய் முடிவடைவதால் இந்த எண்ணங்கள் ஒழியும்.
லக்னாதிபதி ஆட்சி பெற்று ராசிக்கு எட்டில் சனி அமர்ந்து அஷ்டமாதிபதி நவாம்சத்தில் ஆட்சி பெற்று வலுவான தீர்காயுள் ஜாதகம் உங்களுடையது. வயதாகி கிழப்பருவத்தில்தான் இறந்து போவீர்கள். கவலை வேண்டாம். அடுத்து நடக்க இருக்கும் பதினொன்றாமிட ராகு அனைத்து நல்லவைகளையும் செய்து வாழ்க்கையை வளமாக்குவார்.
பணக்கார விதவையுடன் சேர்ந்து வாழ முடியுமா?
சி. யோகேஸ்வரன், மதுரை
கேள்வி :
கே பு | சூ | சுக் | செவ் |
ராசி | ல | ||
சந் சனி | குரு | ரா |
ஞானமார்க்கத்தின் மூலமாக முக்திநிலையை அடைய விரும்பும் நான் திருமணமான அன்றைய தினமே விவாகரத்து பெற்றவன். வறுமையில் இருப்பதால் என்னுடைய செலவை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யாமல் என்னுடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொள்ளும் ஒரு விதவையுடன் சேர்ந்து வாழ்ந்து ஆன்மீகசாதனை செய்தல் அல்லது சன்னியாசம் பூண்டு பரதேசியாக யாத்திரை செய்தல் இந்த இரண்டில் எது என் ஜாதகப்படி துணை நிற்கும்? வந்திருக்கும் இரண்டாவது சுற்று ஏழரைச்சனி வாழ்க்கையை செட்டிலாக்கும் என்பது உண்மையா? விரும்புகிற பெண்ணோடு சேர்ந்து வாழ நடப்பு தசாபுக்தியில் யோகம் உள்ளதா?
பதில்:
27-4-1959, 1.01pm, விருதுநகர்.
ஜோதிடனாக இருப்பதற்காக முதல்முறையாக வெட்கப்படுகிறேன். சாமியார்களில் பஞ்சத்து ஆண்டி பரம்பரை ஆண்டி என்று இரண்டு வகை உண்டு. இதில் நீங்கள் இரண்டிலுமே சேராத சம்சாரஆண்டி போலிருக்கிறது. முதல் கேள்விக்கும் கடைசிக் கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா அய்யா? சாமியாராக விரும்புபவனுக்கு எதற்காக வாழ்க்கை செட்டில் ஆக வேண்டும்?
உழைத்துப் பிழைக்க விருப்பம் இல்லாமல் ஏற்கனவே ஒன்றும் அறியாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை திருமணத்தன்றே கெடுத்து விட்டு இப்போது 56 வயதிலும் பணமும், சுகமும் ஒரு பெண் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற நீங்கள் எப்படி பரதேசியாகப் போவீர்கள்?
கடக லக்னம், தனுசு ராசியாகி, லக்னாதிபதி சந்திரன் மூன்று டிகிரியில் சனியுடன் இணைந்து பனிரெண்டில் மறைந்த செவ்வாயின் பார்வையையும் பெற்ற எதிலும் நிலையில்லாத புத்தியை கொண்ட உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பதினொன்றில் ஆட்சி பெற்றாலும் குருவின் நேர் பார்வையை பெற்றதால் தாம்பத்ய சுகத்திற்கும் வழியில்லாமல் குருவுக்கு சுக்கிர பார்வையால் புத்திர பாக்கியத்திற்கும் வழியில்லாமல் வீணாகப் போனீர்கள்.
நீசபுதனின் பார்வையைப் பெற்ற மூன்றில் இருக்கும் தசாநாதன் ராகு புதன் புக்தியில் ஒரு ஒல்லியான விதவையின் தொடர்பைக் கொடுத்திருப்பார். திருக்கணிதப்படி வரும் ஜூன்மாதம் முதல் சுக்கிரபுக்தி ஆரம்பிப்பதால் அவள் மூலம் உடல் சுகம் கிடைக்கும். வேறு எதுவும் கிடைக்காது. லக்னாதிபதி கெட்டுப்போனால் எந்த ஏழரைக்குப் பிறகும் வாழ்க்கை செட்டில் ஆகாது.
டி. பழனிசாமி, கோவை - 3.
கேள்வி:
பு | சூ | சுக் | செவ் கே |
ராசி | குரு | ||
சனி ல | சந் | ||
ரா |
பி.காம் முடித்த மகன் சுறுசுறுப்பாக இல்லாமல் மதமதவென்று எது சொன்னாலும் கேட்காமல் ஊர் சுற்றிக்கொண்டு ஒரு பேப்பர் பார்க்காமல், செய்தி பார்க்காமல், சினிமா, டி.வி பார்த்துக்கொண்டு நல்ல வேலைக்கு போகாமல் மேக்கப் செய்துகொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். சூரியதசை நடப்பதால் அப்பா மகன் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது என்று ஜோதிடர் சொன்னார். தகப்பனாரை பாதிக்கும் என்றும் சொன்னார். நான்கு வருடமாக எனக்கு சுத்தமாக தொழில் செய்ய முடியவில்லை. கஷ்டமான நிலைமை. இவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்தை இவன்தான் பார்க்க வேண்டும். சொந்த வீடும் கிடையாது. குருஜி அவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
24-4-1991, 1.15am, கோவை.
மகர லக்னம், சிம்ம ராசி, மூன்றில் புதன் நான்கில் சூரியன், ஐந்தில் சுக்கிரன், ஆறில் செவ்வாய், ஏழில் குரு எட்டில் சந்திரன், பனிரெண்டில் ராகு.
மேலோட்டமாக பார்த்தால் லக்னாதிபதி ஆட்சி பெற்று ஐந்துக்குடையவன் ஐந்தில் அமர்ந்து ஒன்பதுக்குடையவன் ஒன்பதை பார்த்து லக்னத்தை உச்ச குரு வலுப்பெற்று பார்க்கும் ராஜயோக ஜாதகமாக தெரிகின்ற ஜாதகம். ஆனால், ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட லக்னத்தின் பகைவர்கள் வலுப்பெறக் கூடாது. அதோடு அந்த எதிரியின் தசையும் வரக்கூடாது.
மகர லக்னத்திற்கு வரக்கூடாத அஷ்டமாதிபதி சூரியனின் தசை நடப்பதால் உங்கள் மகன் மேலே சொன்னபடிதான் இருப்பார். அதே நேரம் நீங்களும் அவரும் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. அவருக்கு சூரியதசை முடியும்வரை உங்களின் தொழில் பாதிக்கத்தான் செய்யும். இருவருக்கும் உரசல்களும் இருக்கும். இன்னும் மூன்று வருடத்திற்கு உங்கள் மகனைப் பற்றி திருப்தியாக சொல்வதற்கு எதுவும் இல்லை.
எஸ். பாண்டியராஜ், மதுரை.
கேள்வி:
சந் பு | சூ | சுக் | |
கே | ராசி | ல | |
குரு,செ சனி,ரா | |||
ஒன்பது மாதங்களுக்கு முன்பு தொழிலை விரிவுபடுத்தி புதிதாக ஒரு கிளையை ஆரம்பித்தேன். மந்தமான நிலைதான் இருக்கிறது. கடன்களும், பேங்க் லோன்களுமாக மிகுந்த சிரமம். வீட்டிலும் அடிக்கடி சண்டை. எப்பொழுது சரியாகும்? சொந்த வீடு வாங்க முடியுமா?
பதில்:
13-4-1986, 12.55pm, ஊட்டி.
கடக லக்னம், மீன ராசி, இரண்டில் செவ்வாய், குரு, சனி, ராகு. ஒன்பதில் சூரியன், சந்திரன், புதன்.
மீன ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கும் பொழுது தொழிலை விரிவாக்கம் செய்தது தவறு. அதோடு எட்டுக்குடைய சனியின் புக்தியும் வருகின்ற ஆகஸ்டு மாதம்வரை உங்களுக்கு நடக்க இருக்கிறது. சனிபுக்தியும் அஷ்டமச்சனியும் சேர்ந்தாலே கடுமையான கடன்பிரச்னைகளும், கடுமையான பொருளாதாரச்சரிவும் இருக்கும்.
தற்பொழுது சனி முடிந்து விட்டதால் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் வரும். அதேநேரத்தில் குருபகவான் ஆறுக்குடையவனாகி ஆறாமிடத்தை பார்ப்பதால் கடன்கள் முழுவதுமாக அடைய வழியில்லை. இன்னும் ஏழு வருடம் கழித்து ஆரம்பிக்க இருக்கும் சுக்கிரதசையில் சொந்தவீடு அமையும்.
எஸ். சத்தியபாமா, கொரட்டூர்.
கேள்வி:
ரா | |||
ல | ராசி | ||
சுக் செவ் | |||
சந்,கே குரு | சனி | சூ பு |
எங்கள் திருமணம் பல தடைகளை மீறி நடைபெற்றது. என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. தீர்வதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் குருஜி. அவரும் என் மகனும் எப்பொழுதும் நலமாக இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வரும் ஏப்ரல் மாதம் வீடு கட்டலாமா?
பதில்:
10-10-83, 3.50pm, சென்னை.
கும்ப லக்னம், விருச்சிக ராசி, நான்கில் ராகு. ஏழில் சுக்கிரன், செவ்வாய், எட்டில் சூரியன், புதன். ஒன்பதில் சனி. பத்தில் சந்திரன், குரு.
கணவனுக்கு விருச்சிக ராசி உனக்கு துலாம் ராசி என்று இருவருக்குமே ஏழரைச்சனி நடப்பில் உள்ளதால் திருமணம் நடைபெறுவதற்கும் தடைகள் இருந்திருக்கும். நடைபெற்ற பின்னரும் பிரச்னை இருக்கும். 2017ல் உனக்கு சனி முடிந்தவுடன் ஒரு குறையும் இருக்காது. செவ்வாய் வலுப்பெற்று லக்னத்தைப் பார்ப்பதால் உன் கணவன் கோபக்காரன். ஜாதகம் நன்றாக இருப்பதால் நியாயமான விஷயங்களில்தான் அவனுக்கு கோபம் வரும்.
புருஷனுக்கு கோபம் வரும் நேரங்களில் எதிர்த்து வாயாடாமல் பொறுத்துப் போயேன். பிரச்னை எப்படி வரும்? ஒரு பெண் நினைத்தால் எப்பேர்ப்பட்ட பிடிவாதக்காரனையும், கோபக்காரனையும் அன்பால் தன் வழிக்குக் கொண்டு வர முடியும்.
கணவனுக்கு சுக்கிரதசை ஆரம்பித்து விட்டதால் வீடு கட்டுவீர்கள். சனி முடிந்ததும் சுக்கிரன் யோகம் செய்வார். உங்கள் இருவரின் வாழ்க்கையும் எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தையின் ஜாதகமும் ராஜயோகத்துடன் உள்ளது இதை உறுதி செய்கிறது. காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்று. இதுவே ஏழரைச்சனிக்கான பரிகாரம்.
எஸ். முருகேச முதலியார், தருமபுரி.
கேள்வி:
குருஜி அவர்களுக்கு வணக்கம். இத்துடன் ஜாதகநகலை அனுப்புகிறேன். 1972 முதல் நான் அதிமுகவில் உறுப்பினர். தருமபுரிநகர் 32வது வார்டு செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். எனக்கு வெற்றி கிடைக்குமா? தங்கள் பதிலை எதிர்பார்த்து மனுச் செய்ய உள்ளேன்.
பதில்:
கேள்வியை எழுதி விட்டு ஜாதக நகலுக்குப் பதில் நீங்கள் நடத்தும் தகவல் மையத்தை பற்றிய நோட்டீசை அனுப்பினால் நான் எப்படி அய்யா பதில் சொல்லுவது? தேர்தலில் ஜெயிக்கும் பரப்பரப்பில் உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லை போலிருக்கிறது.
ஆர். ஷங்கர், பெரம்பூர்.
கேள்வி:
குரு | செவ் சுக் | ல,சூ ரா | |
சனி | ராசி | சந் பு | |
கே |
கடன்கள் எப்பொழுது அடையும்? வாழ்க்கை எப்பொழுது சுபிக்க்ஷமாக இருக்கும்? புதிய தொழில் ஆரம்பிக்கலாமா?
பதில்:
11-7-1964, 5.30am, சென்னை.
ஆறுக்குடையவன் ஆறாமிடத்தை பார்ப்பதால் ஒரு கடன் மாற்றி இன்னொரு கடன் இருந்து கொண்டுதான் இருக்கும். சந்திரதசை சுயபுக்தி முடிந்தவுடன் தொழில் ஆரம்பிக்கலாம். இனிமேல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
too good to read your answers and articles, thanks