adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 22 (27.1.15)

.ஆர். சரவணன், கோபிசெட்டிபாளையம்.

கேள்வி :
சுக் சனி  ல
ராசி சூ,கே செவ்,பு
ரா
 சந் குரு
எனது திருமணம் பொருத்தம் பார்க்காமல் திடீரென நடந்தது. திருமணத்திற்கு பிறகு என்னுடைய புகழ், செல்வாக்கு, பொருளாதார நிலை படிப்படியாக சரிந்துவிட்டது. மீண்டும் முன்னேற்றம் அடைவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பைனான்ஸ் கன்சல்டிங், ஜென்ஸ் மசாஜ் சென்டர், தங்க நகை மதிப்பீட்டாளர் இவற்றில் என்ன தொழில் செய்யலாம்?
பதில்:
24-7-1972. 5.10am. ஈரோடு.
திருமணத்திற்குப் பின்னர் ஒன்றும் உங்கள் செல்வாக்கு சரிந்து விடவில்லை. உங்களின் மிதுன லக்னத்திற்கு வரக் கூடாத செவ்வாய் தசை 2010ல் இருந்து நடப்பதால்தான் நீங்கள் சாய்ந்து விட்டீர்கள். இன்னும் சொல்லப் போனால் இதைவிட மோசமான சரிவிற்குப் போகாமல் லக்னாதிபதி உச்சம்பெற்ற உங்கள் மனைவியின் ஜாதகம்தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அதேநேரத்தில் நீங்கள் தனுசு ராசி, மனைவி கடக ராசியாகி இருவருக்கும் சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் மனைவியைக் குறைசொல்லிக் கொண்டுதான் இருப்பீர்கள்.
2016ம் ஆண்டு வரை செவ்வாய்தசை நீடிப்பதாலும் அடுத்து நடக்க இருக்கும் ராகு தசையும் நீச செவ்வாயின் பார்வையில் எட்டாம் இடத்தில் இருப்பதாலும் மகனுக்கும் உங்களுக்கும் ஏழரைச்சனி வேறு ஆரம்பித்திருப்பதாலும் சொந்தத் தொழில் செய்யாமல் வேலைக்குச் செல்வது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி குருபகவானாகி சந்திரனுடன் இணைந்ததால் வங்கியில் தங்கநகைம திப்பீட்டாளர் வேலை உங்களுக்குப் பொருத்தமானது.
மீண்டும் கணவனுடன் சேருவேனா?
சுந்தரி, திருப்பூர் - 7.
கேள்வி :
தந்தை நிகர் குருஜி... காதல் என்ற சாக்கடையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்த நான் காதல் கணவனின் அடி, உதையால் மனம் வெறுத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் இன்னொருவனின் போலி அன்பில் மயங்கி தடம் புரண்டேன். இவனுக்கும் தேவை என் உடம்பு மட்டும்தான் என்பதை உணராமல் கணவனுக்குத் தெரிந்து போய் தற்போது என் வாழ்க்கை, என் மகள் எல்லோரையும் இழந்து மூன்று வயது மகனோடு வீட்டை விட்டு வெளியேறி ஒரு கடையில் குறைந்த சம்பள வேலையாளாக தனி மரமாக நிற்கிறேன். போலீசுக்குப் பயந்து திருமணமாகாத போலியும் என்னுடன் தான் இருக்கிறான்.
அப்பா தினமும் அடிக்கிறார், அம்மா என்னை மறந்துவிட்டு போய்விட்டாள் என்று பத்து வயது மகள் தினம் தினம் அழுகிறாளாம். பிள்ளைகளுக்காக கணவனிடம் சேர ஆசைப்படுகிறேன் . என்னை ஏற்றுக் கொள்வாரா? அல்லது மகளையும் என்னுடன் வைத்துக் கொள்ள முடியுமா? கூட இருப்பவனும் நான்கு வருடத்திற்கு பின் ஓடிவிடுவான் என்று ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள். செத்துச் செத்து வாழ்வதைவிட ஒரேடியாக போய்விடலாம் என்ற முடிவுடன் இருக்கிறேன். இந்த மகளுக்குப் பதில் சொல்லுங்கள்...
பதில்:
முத்து முத்தான கையெழுத்தில் பக்கம் பக்கமாக தெளிவாகக் கடிதம் எழுதத் தெரிந்த உனக்கு வாழ்க்கையில் தெளிவாக இருக்கத் தெரியாமல் போய்விட்டதே அம்மா...
இந்தப் பிறவியில் நடப்பது அனைத்தும் சென்ற பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் படியே என்று நமது மேலான இந்து மதம் சொல்லுகிறது. உன்னுடைய மகனின் ஜாதகத்தின்படி தந்தையை நிரந்தரமாக பிரியும் அமைப்பு அவனுக்கு இல்லை என்பதால் உன்னால் கணவருடன் மீண்டும் இணைய முடியும். அதேநேரத்தில் நீ அனுப்பியுள்ள உனது பிறந்தநாளின் படி உன் மேஷ ராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடப்பதால் உடனடியாக அது நடக்காது. இரண்டு வருடம் ஆகும். மனதைத் தளர விடாதே.
காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை. நடந்தவைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள். எப்பேர்ப்பட்ட தவறுக்கும் மன்னிப்பு உண்டு. குழந்தைகளுக்காக நீங்கள் இருவரும் சேர்ந்து வாழும் காலம் வரும். அதுவரை பொறுமையுடன் இரு.
எஸ். ராஜா, நாகர்கோவில் - 2.
கேள்வி :
சனி
 குரு கே ராசி
 ரா சந்
 சுக் பு சூ செவ்
பிளஸ்ஒன் படிக்கும் எனது மகள் ஹிந்திபண்டிட் தேர்ச்சி பெற்றுள்ளாள். பட்டம் பெற்று அரசு உத்தியோகம் செல்லயோகம் உள்ளதா? தாய், மகள் உறவு எப்படி இருக்கும்?
பதில்:
9-12-1998. 9.53am. நாகர்கோயில்.
மகர லக்னம் சிம்ம ராசி. இரண்டில் குரு, கேது. நான்கில் சனி. ஒன்பதில் செவ்வாய். பதினொன்றில் சூரியன், புதன். பனிரெண்டில் சுக்கிரன்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு அமர்ந்து சிம்மத்தையும், பத்தாம் வீட்டையும் பார்த்து இருபத்தைந்து வயதிற்குமேல் சூரியதசையும் வர உள்ளதால் உங்கள் மகளுக்கு அரசு உத்யோகம் உண்டு. நான்காம் வீட்டில் நீச வக்கிரசனி அமர்ந்து சந்திரன் ராகுவுடன் மிக நெருங்கி இணைந்ததால் தாய் மகள் உறவு சுமாராகத்தான் இருக்கும்.
ஆர். வரதராஜன், சென்னை - 73.
கேள்வி :
ரா  சூ
ராசி  பு சுக்
சந்
 குரு கே  செவ் சனி,ல
எனது மகனுக்கு முறைப் பெண்ணை திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில் பெண்ணிற்கு விருப்பமில்லை என்றதால் திருமணம் நின்றுவிட்டது. என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ன மாதிரியான பெண் அமையும்?
பதில்:
14-7-1984. 2.15pm. திருச்சி.
துலாம் லக்னம் மகர ராசி. லக்னத்தில் செவ்வாய், சனி. இரண்டில் கேது. மூன்றில் குரு. ஒன்பதில் சூரியன். பத்தில் புதன், சுக்கிரன்.
லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய் சனியும் ராசிக்கு ஏழாம் இடத்தை உச்ச சனியும் பார்த்து இரண்டு, எட்டில் ராகு, கேதுக்கள் சம்பந்தப்பட்ட உங்கள் மகனுக்கு தற்போது நடக்கும் ராகுதசை செவ்வாய் புக்தியில் ராகுவும் செவ்வாயும் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் 33வயதில் திருமணம் நடக்கும். ஏழுக்கு அதிபதி ஏழாம் வீட்டை பார்ப்பதால்நன்கு படித்த மகனை விட நல்ல அந்தஸ்தான இடத்தில் பெண் அமையும்.
ஜி. மாதவன், ஈரோடு.
கேள்வி :
கே சுக்,பு செவ் சூ குரு
ராசி சனி
ல சந் ரா
பேப்பர் கடை நடத்தி வருகிறேன். தொழில் மந்தம். வரவை விட செலவு அதிகம். வேலைக்குச் செல்லலாமா? அரசு வேலை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
பதில்:
3-6-1997. 7.42pm. ஈரோடு.
தனுசு லக்னம் தனுசு ராசி. நான்கில் கேது. ஐந்தில் சுக்கிரன் செவ்வாய் புதன். ஆறில் சூரியன், புதன். எட்டில் சனி.
லக்னாதிபதியும், புத்திரகாரகனுமான குருபகவான் சூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து அஸ்தமனமாகியும் ஐந்தாமிடத்தில் ஆறுக்குடையவனும், செவ்வாயும் அமர்ந்து ஐந்தாம் பாவத்தை சனியும் பார்த்து கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்ட ஜாதகம்.
களத்திரதோஷமும் கடுமையாக இருப்பதால் உங்களுக்கு தாமத திருமணம்தான் நடந்திருக்கும். குரு பகவானை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். நடைபெறும் செவ்வாய் தசையில் சூரியபுக்தியில் குருவை அஸ்தங்கம் செய்த சூரியன் குழந்தை பாக்கியத்தை தருவார். அரசு வேலைவாய்ப்பு இல்லை. ஏழரைச்சனி ஆரம்பித்துவிட்டதால் தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலைக்குச் செல்வது நல்லது.
எம். குமார், திருச்சி.
கேள்வி:
பு சூ செ,ல சனி,சுக்
ராசி கே
ரா  சந்
குரு
இருபத்தி ஐந்து வருடங்களாக சித்தப்பாவின் கடையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகிறேன். இடையில் அத்தைமகனுடன் கூட்டாகத் தொழில் தொடங்கி நஷ்டமாகி ஆறுலட்சம் கடன் என்மீது விழுந்துள்ளது. ஏற்கனவே கஷ்டஜீவனம். கடன் எப்போது அடையும்? பூர்வீகச் சொத்து கிடைக்குமா? சொந்தத் தொழில் அமையுமா? அடிமைத் தொழில் தானா?
பதில்:
23-4-1972. 8.47am. சிவகங்கை.
ரிஷப லக்னம், சிம்ம ராசி, லக்னத்தில் சுக்கிரன், சனி, செவ்வாய். எட்டில் குரு. ஒன்பதில் ராகு, பதினொன்றில் புதன், பனிரெண்டில் சூரியன்.
ஏழாமிடத்தை செவ்வாய் சனி பார்ப்பதால் கூட்டுத் தொழில் உங்களுக்கு ஒத்துவராது. 2017ல் ஆரம்பிக்கும் ராகு தசை உச்ச சூரியனின் சாரம் வாங்கி மகர ராகுவாக இருப்பதால் யோகதசையாக அமையும். ராகு முதல் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். முழுவதுமாக கடனை அடைத்து சொந்தத் தொழில் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தும் ராகு தசையில் கிடைக்கும்.
ஆர். செங்கேணி, சென்னை – 81.
கேள்வி:
சந் சூ,பு சுக் ரா
ராசி  ல
 குரு செவ் கே சனி
31 வயதாகும் மகளுக்கு மூன்று வருடங்களாக வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அமையவில்லை. ஜாதக நிலை எவ்வாறு இருக்கிறது? திருமணம் எப்பொழுது நடக்கும்?
பதில்:
28-4-1984. 12.45pm. சென்னை.
கடக லக்னம், மீன ராசி. நான்கில் சனி. ஐந்தில் செவ்வாய், கேது. ஆறில் குரு. பத்தில் சூரியன், புதன், சுக்கிரன்.
ராசிக்கு எட்டில் சனி உச்சமாகி மகளின் மீன ராசிக்கு அஷ்டமச்சனி கடந்த மூன்று வருடங்களாக நடந்ததால் திருமணம் செய்ய முடியவில்லை. தற்பொழுது தாம்பத்ய சுகத்தைத் தருபவரான சுக்கிரனின் தசை ஆரம்பித்து விட்டபடியால் வரும் ஜூலை மாதத்திற்குள் நிச்சயம் திருமணம் நடைபெறும். சுறுசுறுப்பாக வரன் பாருங்கள்.
கே. மணி, புதுச்சேரி – 11.
கேள்வி:
ல கே  குரு
ராசி  செவ்
 சந் சனி
 பு,சூ சுக் ரா
37 வயதாகும் எனது மகளுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? வரன்கள் வந்து பொருத்தம் இல்லாமல் தவிர்த்து விடுகிறது. எப்பொழுது திருமணம் என்று தயவு செய்து கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
5-11-1977. 4.12pm. பாண்டி.
மீன லக்னம், சிம்ம ராசி. நான்கில் குரு, ஐந்தில் செவ்வாய். ஆறில் சனி. ஏழில் ராகு. எட்டில் சூரியன், புதன், சுக்கிரன்.
கணவன் ஸ்தானாதிபதியான புதனும், திருமண சுகத்தைத் தரும் சுக்கிரனும், நீச சூரியனுடன் இணைந்து எட்டில் மறைந்து இவர்கள் இருவரையும் செவ்வாய் சனி பார்த்து கடுமையான தாரதோஷம் ஏற்பட்டதோடு ஏழில் ராகு நின்று புத்திர ஸ்தானாதிபதி சந்திரன் சனியுடன் இணைந்து ஆறில் மறைந்து புத்திர பாவத்தில் குடும்பாதிபதி செவ்வாய் நீசம் பெற்ற ஜாதகம்.
சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்தைத் தருபவரான செவ்வாய் நீசம். கணவனைத் தருபவரான புதன் நீசனுடன் இணைவுமற்றும் நீசனின் பார்வை. குழந்தையைத் தருபவரான சந்திரன் ஆறில் மறைந்து சனியுடன் ஒரே டிகிரியில் இணைவு என குடும்பம், குழந்தை, கணவன் அமைப்புகளே பலவீனமாகிப் போன ஜாதகம்.

ஏழில் நிற்கும் ராகுபகவானும் தோஷத்தை அதிகப்படுத்துவதால் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். ஒரு செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு ஒரு ஜாமநேரம் உங்கள் பெண்ணை கோவிலுக்குள் இருக்கச் செய்யுங்கள். ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் சனி ஹோரையில் நான்கு ஐயப்பபக்தர்களுக்கு உங்கள் பெண்ணின் கையால் கருப்பு வேட்டி கருப்புதுண்டு தானம் தரச் செய்யுங்கள். நடக்கும் சந்திரதசை புதன் புக்தியிலேயே ஜூலை மாதத்திற்கு மேல் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *