விமல், கிண்டி.
சுக் ரா | குரு | ல | |
சூ | ராசி | ||
பு | |||
செவ் சனி | சந் | கே |
கேள்வி :
வணங்கம். நான் உங்கள ஜோதிடாம் தொடரை மாலைமலர் படித்து இருக்கிறேன். எனக்கும் ஜோதிடாம் சற்று புரிந்தது. நன்றி. நான் B.E mechanical engineering படித்து முடித்து விட்டேன். எனக்கு எந்த நல்ல வேலை கிடைக்கவில்லை. அதனால் நான் என் பிறந்த குறிப்பு இணைத்து உங்கலுக்கு அனுப்புகிறேன். எனக்கு எந்த மாதிரி வேலை கிடைக்கும் என்று கூறுங்கள். நான் முயற்சி செய்தல் எனக்கு government வேலை கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா.
பதில்:
என்ஜினீயரிங் படித்த உங்களின் தமிழ்க் கடிதத்தைப் பார்த்தவுடன் தமிழின் எதிர்காலத்தைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே கவலை வருகிறது. கேட்டால் ஆங்கில மீடியத்தில் படித்தேன் என்பீர்கள். ஆயினும் தமிழிலேயே கேள்வி எழுத முயற்சித்த உங்களை மனமாரப் பாராட்டுகிறேன். இது போன்றவர்களையும் தமிழ்ப் படிக்கத் தூண்டுவதுதான் அன்று முதல் இன்று வரை தினத்தந்தி மாலைமலரின் பணி.
ரிஷபலக்னம் விருச்சிகராசியாகி லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றும் பத்தில் சூரியன் திக்பலம் பெற்றும் அமைந்த ராஜயோக ஜாதகம். என்னதான் யோகம் என்றாலும் உங்களுக்கு இப்போது ஏழரைச்சனி நடப்பதால் சனியில் யோகம் வேலை செய்யாது.
பொதுவாக சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு சம்பந்தம் பெற்று தங்களுக்குள் கேந்திரமாகவும் ஜாதகத்திலும் கேந்திரங்களில் இருந்தால் நிச்சயம் அரசுவேலை உண்டு. உங்களுக்கு ஏழில் சந்திரன், பத்தில் சூரியன் இருந்து 2016க்குப் பிறகு சூரியதசை ஆரம்பிக்க உள்ளதால் ஜென்மச்சனி முடிந்தவுடன் அரசுவேலை கண்டிப்பாகக் கிடைக்கும்.
கே. சுந்தர்ராஜா, திண்டுக்கல்.
ல | ரா | ||
ராசி | |||
சுக் | |||
சூ,சந் பு,கே | குரு | செவ் சனி |
கேள்வி:
அரசியல்தலைவர் ஆவேனா? அரசுவேலை மனைவி அமைவாளா? சமுதாய முன்னேற்ற அமைப்புகளில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். ஏதேனும் பயன் உண்டா? அரசு வேலை கிடைக்குமா? 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. பரிகாரம் ஏதேனும் செய்யவேண்டுமா?
பதில்:
மீனலக்னம் தனுசுராசியாகி லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து பத்தில் சூரியன் சந்திரன் இணைந்த ஜாதகம். எந்த ஒரு ஜாதகத்திலும் பத்தாம் வீட்டில் சூரியன் திக்பலமாக அமர்ந்தால் அவர் ஏதேனும் ஒரு சிறு அமைப்புக்காவது தலைவராக இருப்பார்.
உங்களுக்கு லக்னாதிபதி எட்டில் மறைந்து பலவீனமாகி ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி இணைந்து லக்னத்தைப் பார்க்கிறார்கள். லக்னாதிபதியும் லக்னமும் கெட்டுப் போனாலே இலட்சியங்கள் பேச்சளவில்தான் இருக்கும். செயலில் இருக்காது. ஏழில் செவ்வாய் சனி கடுமையாக தோஷ அமைப்பு என்பதால் 2016ம் ஆண்டு சந்திர தசை புதன்புக்தியில் திருமணம் நடக்கும். முறையான பரிகாரங்களை செய்யவும். அரசு வேலை பார்க்கும் மனைவி வாய்ப்பு குறைவு.
கோ. தாமோதரன், சென்னை-7.
சூ கே | |||
சந் | ராசி | ல,செவ் பு,குரு | |
சனி | சுக் | ||
ரா |
கேள்வி :
எனது மகனுக்கு அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைக்குமா? எப்போது திருமணம் செய்யலாம்? டாக்டர் மனைவி விரும்புகிறார். அமையுமா? எதிர்காலம், ஆரோக்கியம் எப்படி?
பதில்:
மகன் விக்னேஷிற்கு கடகலக்னம் (இணைக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சிம்மலக்னம் என தவறாக கணிக்கப்பட்டுள்ளது.) கும்பராசியாகி லக்னத்தில் உச்சகுரு நீசசெவ்வாய் புதன் இணைந்து, லக்னாதிபதி எட்டில் மறைந்து, ஏழில் அமர்ந்த சனி லக்னத்தை பார்த்த ஜாதகம். சூரியன் கேதுவுடன் இணைந்து பனிரெண்டில் மறைவு. தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடக்கிறது.
லக்னாதிபதி எட்டில் மறைந்ததாலும் எட்டிற்குடையவன் தசை நடப்பதாலும் லட்சியங்கள் நிறைவேற தடை உண்டு. ஜீவனாதிபதி நீசபங்கம் பெற்று வாக்குஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்ததால் சொல்லிக் கொடுக்கும் பணி அமையும். ஆனால் சூரியன் வலுவிழந்ததால் அரசுப் பணிக்கு தடை இருக்கிறது.
செவ்வாய், சனி நேருக்குநேர் பார்த்துக் கொண்டதாலும், ஏழில் சனி ஆட்சி பெற்றதாலும் தாமததிருமணம் 28 வயதில் அமையும். டாக்டர் மணப்பெண் அமையாது. ஆனால் வேலை பார்க்கும் பெண் அமைவாள். சனிதசை முடியும்வரை ஆரோக்கியம் சுமாராகத்தான் இருக்கும். ஆனால் பெரிதாக கவலைப்படும்படி நிச்சயம் இருக்காது. முப்பது வயதிற்கு மேல் மகனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
வி. விஸ்வநாதன், குடியாத்தம்.
சனி சந் | ல சுக் | ||
ராசி | கே பு | ||
ரா | சூ செவ் | ||
குரு |
கேள்வி :
மாலைமலர் வாயிலாக பல அரிய ஜோதிட ரகசியங்களை எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெள்ளத்தெளிவாக விளக்கி பெரிய சேவை புரிந்து வரும் குருஜி அவர்களுக்கு வணக்கம். நிரந்த வேலை உண்டா? சொந்தத்தொழில் செய்வேனா? என்ன தொழில்?
பதில்:
மிதுனலக்னம் ரிஷபராசியாகி லக்னத்தில் சுக்கிரனும் இரண்டில் புதனும் அமர்ந்து லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் உச்சம் பெற்ற ஜாதகம். அம்சத்தில் புதன் நீசம் பெற்றது பலவீனம். தற்போது ஏழில் தனித்து ஆட்சியாகி கேந்திராதிபதிய தோஷம் பெற்ற குருதசை என்பதால் குருதசையில் தொழில் அமைய வாய்ப்பில்லை. அடுத்து நடக்க இருக்கும் சனியும் பனிரெண்டில் மறைந்து செவ்வாய் சாரம் பெற்றதால் சனி தசையில் நிரந்தர வேலை உண்டு. தொழில் செய்தால் விரயம் வரும். வேலைக்கு போகவும்.
பெயர் வேண்டாம், ராமன்புதூர். நாகர்கோவில்.
ரா | |||
ராசி | |||
சந் | |||
ல கே | செவ் | குரு | சூ,பு சுக்,சனி |
கேள்வி :
இதுவரை 2600 ஜாதகங்களுக்கு மேல் என் மகளுக்கு பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. எப்போது திருமணம்? அந்த தோஷம் இந்த தோஷம் என வரும் எல்லா ஜாதகத்தையும் எங்கள் மாவட்ட ஜோதிடர்கள் ரிஜக்ட் செய்கிறார்கள். இத்துடன் ஒரு பையனின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். இங்கே ஆறு ஜோதிடர்களிடம் கேட்டு பொருந்தாது செய்ய வேண்டாம் என்கிறார்கள். சென்னையில் உள்ள பையனின் தந்தை எங்கள் ஜோதிடர் பொருத்தம் என்று சொல்லிவிட்டார் செய்யலாம் என்று விடாமல் கேட்கிறார். குருஜி அவர்கள் கொடுக்கலாம் என்றால் பெண்ணைக் கொடுக்கிறேன். நல்வாக்கு வேண்டுகிறேன்.
பதில்:
இந்தப் பையனுக்கு கொடுக்க வேண்டாம். ஜாதகம் சரியில்லை. கடுமையான முயற்சிக்குப்பின் உங்கள் பெண்ணிற்கு வரும் மார்ச் மாதத்திற்கு மேல் ஜூலைக்குள் திருமணம் நடந்து விடும். கவலை வேண்டாம்.
வீ .சம்பத்குமார், செவ்வாய்பேட்டை, சேலம்.
ல | குரு | ||
ராசி | கே | ||
சூ,பு சுக்,ரா | சந் | ||
செவ் சனி |
கேள்வி :
பட்டதெல்லாம் போதும். மனைவி, மக்கள், உறவு அனைவரும் கைவிட்டு ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறேன். வாழ்ந்தது போதும். எப்போதும் மரணம்? எப்படி நடக்கும்? சீக்கிரமாக நடந்தால் நல்லது. சாலைவிபத்தில்தான் இறப்பேன் என யூகம் செய்துள்ளேன். இதுவே என் வாழ்க்கையின் கடைசிக் கேள்வி. பதில் தாருங்கள். உங்களுக்கு கோடான கோடி புண்ணியம்.
பதில்:
இதுபோன்ற ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்ததும் கஷ்டப்படுகிற அனைவரும் கேள்விகளை எழுதிக் குவித்து விட்டீர்கள். இனிமேல் இதுபோல் மரணம் சம்பந்தப்பட்ட கேள்வி யார் கேட்டாலும் பதில் தரமாட்டேன். முதலில் நம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். கஷ்டம் வந்தவுடன் செத்துப்போக வேண்டும் என்றால் பூமியில் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.
மேஷலக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் ஏழில் உச்சசனியுடன் இணைந்து லக்னத்தை இருவரும் பார்த்த ஜாதகம். உங்கள் கோபமும் பிடிவாதமும்தான் உங்களுக்கு சத்ரு. மற்றவர்களுடன் ஒத்துப்போவதால் ஒன்றும் குறைந்து போகமாட்டீர்கள். தெய்வவழிபாடு அல்லது தியானத்தின் மூலம் உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
சனியின் வீட்டில் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெற்ற ராகுதசை 18 வருடங்களாக நடந்ததால் பிரச்னை. ராகு புதன் சுக்கிரனுடன் இணைந்ததால் சோதனை. ஆயினும் அவர் மகரராகு என்பதால் நன்மைகளையும் செய்திருப்பார். தற்போது குருதசை ஆரம்பித்துள்ளது. குருதசையில் அனைத்தும் தீர்ந்து நல்லபடியாக வாழ்வீர்கள். சனி உச்சம் பெற்று லக்னம் வலுப்பெற்றதால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் நிம்மதியான வாழ்வு உண்டு.
ஏ .எம்.எஸ். சென்னை-2.
செவ் | கே | ல சுக் | |
ராசி | சூ | ||
பு குரு | |||
ரா சந் | சனி |
கேள்வி :
உச்சம் பெற்ற ராகு இதுவரை யோகம் செய்யவில்லை. ராகுதசை அதிர்ஷ்டம் தருமா? கடன் எப்போது தீரும்?
பதில்:
விருச்சிகத்தில் இருக்கும் உச்சராகு யோகம் தரமாட்டார். எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரியை படியுங்கள். ராகு நல்ல பலன் தர வேண்டும் என்றால் ராகுக்கு வீடு கொடுத்தவர் வலிமை பெறவேண்டும். ராகுவும் சுபரோடு இருக்க வேண்டும். குறிப்பாக செவ்வாய், சனி சம்பந்தம் கூடாது.
உங்களுக்கு மிதுனலக்னமாகி ராகு ஆறாமிடத்தில் செவ்வாயின் வீட்டில் எட்டுக்குடைய சனியின் சாரத்தில் இருக்கிறார். அதோடு உங்களின் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியும் இப்போது நடக்கிறது. இந்த போன்ற அமைப்பில் ஏழரைச்சனியும் ராகுதசையும் சந்திப்பது நல்ல பலன் தராது.
அதாவது ஏழரை அஷ்டமச்சனிகள் நடக்கும்போது ஆறு எட்டு சம்பந்தம் பெற்ற தசைகள் நடந்தால் கெடுபலன் அதிகமாகும். ஆனால் உங்கள் விஷயத்தில் சாரம் தந்த சனிபகவான் பாக்யாதிபதியுமாகி உச்சம் பெற்றதால் பிற்பகுதி ராகுதசை யோகம் தரும். ஆறுக்குடைய செவ்வாய் பத்தில் திக்பலம் பெற்றதால் கடைசிவரை கடன் இருக்கும்.
வி .எம்.ராஜேந்திரன், வளவனூர்.
செவ் | கே | ||
ல | ராசி | சந் குரு | |
சூ பு | |||
சுக் ரா | சனி |
கேள்வி :
எனது லக்னத்திற்கு பதினொன்றில் ராகு, சுக்கிரன் உள்ளது. இப்போது ராகுதசை ஆரம்பம். இந்த தசை நன்மை அளிக்குமா?
பதில்:
கும்பலக்னம் கடகராசியாகி லக்னாதிபதி சனி உச்சம் பெற்று ராகுவுக்கு வீடு கொடுத்த குருவும் உச்சம் பெற்று சுக்கிரனுடன் இணைந்து சனி பார்வையை பெற்ற கேது சாரத்தில் உள்ள ராகுவின் தசை நடக்கிறது. அம்சத்தில் ராகு, மிதுனத்தில் புதன் சுக்கிரனுடன் இணைந்ததிருக்கிறார். சுபர் வீட்டில் சுபரோடு இணைந்து வீடு தந்தவர் உச்சம் பெற்றதால் இந்த ராகுதசை சுயபுக்திக்கு பிறகு நல்லயோகம் செய்யும்.
அதே நேரத்தில் எந்த ஒரு யோகத்தையும் முழுமையாக அனுபவிக்க லக்னாதிபதி சுபவலுப்பெற்று இருக்க வேண்டும். உங்கள் லக்னாதிபதி சனி பாபகிரகமாகி சூட்சுமவலு அடையாமல் உச்சம் பெற்றது பலவீனம். எனவே லக்னாதிபதியை சூட்சுமவலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் ராகுதசையின் முழு பலனை அடையலாம்.
பொதுவாக சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு சம்பந்தம் பெற்று தங்களுக்குள் கேந்திரமாகவும் ஜாதகத்திலும் கேந்திரங்களில் இருந்தால் நிச்சயம் அரசுவேலை உண்டு
இந்த விதி அனைவருக்கும் பொருந்துமா அய்யா