adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 7 (7.10.2014)

உடுமலை முத்து

உடுமலை – 642146.
ராசி  செவ்,கே சந்,சுக்
சனி ரா  சூ
 குரு  பு
கேள்வி:
1954 முதல் 60 வருடங்களாக எழுத்துத் துறையில் ஈடுபாடு. எட்டு நூல்களும், சிறுகதைகளும் மேலே உள்ள பெயரிலும் உடுமலை எம்.கே.எம் என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன. லட்சுமிமணாளன் என்ற புனைபெயரும் இருக்கிறது. சினிமாவில் எழுத வேண்டும் என்பது என் லட்சியம். எந்தப் பெயரில் இயங்கினால் பெயர், புகழ் அடையலாம்? எதிர்காலம் எப்படி?
பதில்:
80 வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக லட்சியம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் கேள்வி கேட்கும் உங்களைப் பார்த்து இன்றைய இளைய தலைமுறையினர் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மிதுன லக்னம் கடக ராசியாகி லக்னாதிபதி புதன் நான்கில் உச்சம் பெற்று, மூன்றுக்குடைய சூரியன் ஆட்சியாகி, ஐந்தில் குரு அமர்ந்து லக்னத்தை பார்த்த ஜாதகம். இரண்டில் செவ்வாய், கேது, சந்திரன் சுக்கிரனும் எட்டில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள்.
லக்னாதிபதி உச்சம் லக்னத்திற்கு சுபர்பார்வை அஷ்டமாதிபதியே ஆயுள் காரகனாகி ஆட்சி பெற்றதால் உங்களுக்கு தீர்க்காயுள். எழுத்தைக் குறிக்கும் மூன்றாமிடத்தின் அதிபதி ஆட்சி பெற்றும், எழுத்தின்காரகன் புதன் உச்சமும் பெற்றதால் சிறுவயதிலிருந்தே எழுத்துத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டு எழுத்தில் சாதனை செய்துவிட்டீர்கள்.
பெயரில் ஒன்றும் தனியாக யோகம் இல்லை. ஷேக்ஸ்பியர் சொன்னதைப் போல ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜாவாகவே இருக்கும். நமது பழமையான சாஸ்திரங்கள் சொல்வதின்படிஉடலும் உயிரும் கொடுத்த தாயும் தகப்பனும் மண்ணாங்கட்டி என்று பெயரிட்டாலும் அதுவே நமக்கு அதிர்ஷ்டமான பெயர்.
ஏற்கனவே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அத்தனை பெயரிலும் நீங்கள் சாதித்துத்தான் இருக்கிறீர்கள். அதற்கேற்ற கிரகஅமைப்பும் உங்கள் ஜாதகத்தில் உள்ளது. ஆனால் சினிமா என்பது வேறுபட்டது. சினிமாவில் ஜெயிக்க சுக்கிரனும் ராகுவும் வலுவாக இருக்கவேண்டும். உங்களுக்கு ராகு சனியுடன் இணைந்து, சுக்கிரன் நீசசெவ்வாயுடன் இணைந்ததால் புத்தகத்தோடு நின்று விட்டீர்கள். ஆயினும் லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருப்பதால் வயதையும் மீறி உங்களால்எதிலும் வெற்றி காண முடியும். முயற்சியுங்கள். வெற்றி உங்களுக்கே.
ஜெ. பாரத்
சென்னை -101
கே ல குரு
ராசி  சூ
சந் பு,செவ் சுக்,சனி
 ரா
கேள்வி:
சில ஜோதிடர்கள் எனக்கு திருமணமே ஆகாது என்றும், சிலர் இரண்டாவது திருமணம்தான் நிலைக்கும் என்றும் சொல்கிறார்கள். 36 வயதாகும் எனது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து எப்பொழுது திருமணம் நடக்கும், பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று தயவு செய்து கூறுங்கள்.
பதில்:
மிதுனலக்னம் மகரராசியாகி, ராசிக்கு எட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய், சனி மறைந்தது தாரதோஷம். ஜாதகத்தில் செவ்வாய், சனி இணைந்தாலே திருமணம் தாமதம் ஆகும். உங்களுக்கு பாவகப்படியும் லக்னத்திற்கு இரண்டிலும், ராசிக்கு எட்டிலும் சனி இருக்கிறார்.
தற்பொழுது நான்காம் வீட்டில் இருக்கும் ராகுவின் தசையில் சந்திரபுக்தி நடக்கிறது. பாவகப்படி ராகுவும் செவ்வாயும் சுக்கிரனுடன் சேர்ந்து மூன்றாம் வீட்டில் இருப்பதால் ராகுதசையில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. லக்னத்திலிருந்து ஏழாம் வீட்டை பார்க்கும் குருவின் தசையில் 2017ல் திருமணம் நடக்கும்.
ஏ. ஹெச். காசிவிஸ்வநாதன்
எம். எம். நகர் - 603209.
பு ல சூ கே செவ் சனி
குரு சுக் ராசி
சந்
ரா
கேள்வி:
40 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. எப்பொழுது நடக்கும்? தோஷங்கள் உள்ளதா? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
மேலே உள்ள கேள்வியான ஜெ. பாரத்துக்கு சொன்ன பதில் உங்களுக்கும் பொருந்தும்.
மீனலக்னம், மகரராசியாகி நான்காம் வீட்டில் செவ்வாயும் சனியும் இணைந்து, லக்னாதிபதி குருவும், சுக்கிரனும் பனிரெண்டில் மறைந்த ஜாதகம். எதிரெதிர் தன்மைகளை உடைய தேவகுரு அசுரகுரு என்று வர்ணிக்கப்பட்ட குருவும் சுக்கிரனும் ஒரே பாவத்தில் இருந்தால் இருவருமே மோதிக்கொண்டு தங்களின் பலன்களை செய்யமாட்டார்கள்.
உங்கள் ஜாதகப்படி இருவரும் ஒரே டிகிரியிலும் இருப்பதால் சுக்கிரனால் தாம்பத்யசுகம் கொடுக்க இயலாத நிலைமையும், குருபகவானால் புத்திர பாக்யம் தர இயலாத நிலைமையும் இருக்கிறது. தற்பொழுது குருதசையில் சனிபுக்தி நடைபெறுகிறது. ஆறுக்குடைய சூரியன் குடும்ப வீட்டில் உச்சமாக இருப்பதும், ஏழுக்குடைய புதன் நீசமாகி இருப்பதும், கடுமையான தோஷம் என்பதால் லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யும்பட்சத்தில் அடுத்த புதன்புக்தியில் ஏப்ரல் 2016க்கு மேல் திருமணம் நடைபெறும்.
பெயர் வெளியிட விரும்பாத பெண்.
சென்னை.
சுக்,ல செவ் சூ பு
கே ராசி குரு
 சந்,சனி ரா
கேள்வி:
எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் இதை எழுதுகிறேன் குருஜி. பிறந்ததில் இருந்தே வீட்டில் மிகவும் மோசமான நிலை.கஷ்டம். நான் வேலைக்கு சென்று சம்பாதித்து வீட்டுக்கடனை அடைத்து திருமணம் செய்து கொள்ள 30வயது ஆகிவிட்டது. இப்போது மூன்று வயதில் மகன். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துணி வியாபாரம் செய்தேன். பெரிய நஷ்டம். என்ன தொழில் செய்தால் முன்னேறுவேன்? சொந்த வீடு அமையுமா?
பதில்:
மேஷலக்னம் சிம்மராசியாகி லக்னத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமர்ந்து, ராசியில் சனியும், ராகுவும் இணைந்து பாக்கியாதிபதி குரு உச்சம் பெற்ற ஒரு கோபக்கார நல்ல பெண்ணின் ஜாதகம். இதுவரை இருக்கும் கஷ்டமெல்லாம் போகட்டும். 2019 முதல் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை தரப்போகும் உச்சகுருவின் தசை ஆரம்பிக்க உள்ளது.
இளம்வயதில் மனதிலும் உடலிலும் துணிவு இருக்கும் நேரத்தில் கஷ்டப்படுவதில் ஒன்றும் தவறில்லை. வயதான காலத்தில்தான் யோகதசைகள் நடக்க வேண்டும். உங்களுக்கு இன்னும் நான்கு வருடங்களில் ஆரம்பிக்கஇருக்கும் பாக்யாதிபதி குருவின் தசை அவர் உச்சம் பெற்றிருப்பதால் மிகப்பெரிய யோகங்களைத் தரும்.
மகனின் ஜாதகமும் நல்ல யோகஅமைப்பில் உள்ளதால் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குருதசையில் சீட்டுப் பிடிப்பது, வட்டிக்கு விடுவது மகளிர்குழுக்கள் போன்றவைகளை செய்வீர்கள். சொந்தவீடு, வாகனம், குழந்தைகளின் நல்வாழ்வு போன்றவைகளை குருபகவான் தருவார்.
ஜோதிடர் ஆவேனா?
எம். ராம்விமல் ராஜா
திண்டுக்கல்.
பு சூ சுக் செவ் கே
ராசி  குரு
சனி  ல
ரா சந்
கேள்வி:
குருவிற்கு வணக்கம். ஜோதிடப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முழுநேர ஜோதிடராக ஆசை. எனக்கு ஜோதிடத்தொழில் நன்றாக அமையுமா? எப்பொழுது ஆரம்பிக்கலாம்?
பதில்:
உங்களுக்கு சிம்மலக்னம் விருச்சிகராசியாகி, லக்னாதிபதி சூரியன் உச்சம். புதன் நீசபங்கமாகி அவருக்கு வீடு கொடுத்த குரு உச்சம் பெற்று அவரைப் பார்ப்பதால் ஜோதிடத்தில் ஈடுபாடு. அதேநேரத்தில் புதனை ஆறில் ஆட்சி பெற்ற சனியும் பார்க்கிறார். சந்திர கேந்திரத்தில் புதன் இல்லை.
உங்களுக்கு இப்போது 23வயதுதான் ஆகிறது. பொதுவாக சிம்மலக்னத்திற்கு சூரியன் உச்சமாகக்கூடாது. தற்போது புதன்தசையில் பத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனின் புக்தி நடப்பதால் சொந்தமாக தொழில் செய்யும் நினைப்பும் அமைப்பும் உண்டாகும். ஆனால் புதனும் சுக்கிரனும் லக்னபாபிகளாகி சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெற்று தற்பொழுது ஏழரைச்சனியும் நடப்பதால் நீங்களே இந்த வாய்ப்பை தொழில் ஆரம்பித்து வீணடிப்பீர்கள்.
ஜோதிடம் என்பது ஒரு மனிதனை தன்னம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்தும் ஒரு தெய்வீகக்கலை. ஒரு மனிதனுக்கு கெடுதலே நடப்பதாக இருந்தாலும் அதை அவனுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி அவன் மனமொடிந்து போகாமல் அதிலிருந்து மீள்வதற்கோ அல்லது அதைத் தடுப்பதற்கோ உண்டான வழிகளைச் சொல்லி அந்த மனிதனை ஊக்கப்படுத்த வேண்டியது ஒரு நல்ல ஜோதிடரின் கடமை.
ஒரு முழுமையான ஜோதிடர் கெட்டதைக்கூட நல்ல வார்த்தைகளில் சொல்ல வேண்டும். உங்கள் ஜாதகத்தில் வாக்குஸ்தானம் எனப்படும் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்க்கிறார். வாக்குஸ்தானாதிபதி எட்டில் மறைந்து நீசம். ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். எனவே கெடுபலன் சொல்லவே உங்கள் மனமும், நாக்கும் துடிக்கும். சிறுவயதென்பதால் போகப்போக அனுபவத்தில் இதை மாற்றிக் கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.
டி. சந்திரசேகரன்
கோவூர், சென்னை – 122.
சுக்,பு சூ,கே செவ்
ராசி
சனி  ரா சந் குரு
கேள்வி:
இதுவரை சொந்தமாக தொழில், வீடு, வாகனம் அமையவில்லை தற்சமயம் கடன் அதிகமாக உள்ளது. மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். எனவே எனது ஜாதகத்தை கணித்து எதிர்காலம் எப்படி அமையும் என்று சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
சிம்மலக்னம் கன்னிராசியாகி லக்னாதிபதி சூரியன் உச்சம் பெற்றும், லக்னத்தை நான்காம் வீட்டில் அமர்ந்த சனியும், ஒன்பதாம் வீட்டில் அமர்ந்த செவ்வாயும் பார்த்த ஜாதகம். சிம்மலக்னத்திற்கு லக்னாதிபதி உச்சம் பெறுவது பலவீனம். கடந்த 19வருடங்களாக நான்காம் வீட்டில் அமர்ந்து நான்காம் வீட்டோனையும் பார்த்த சிம்மலக்னத்திற்கு வரவே கூடாத சனிதசை நடந்துள்ளது. வீடு, வாகனம், கல்வி, தாயார் இவற்றிற்குரிய பாவமான நான்கில் அமர்ந்த சனி அவற்றைக் கொடுக்காமல் உங்களை கெடுத்திருப்பார்.
மேலும் கடந்த ஏழரை வருடங்களாக உங்களின் கன்னிராசிக்கு ஏழரைச் சனியும் நடந்து வந்ததால் தாங்க முடியாத கஷ்டங்களும், கடன் தொல்லைகளும் இருந்திருக்கும். சனிதசை சமீபத்தில் முடிந்து விட்டதுதாலும் ஏழரைச்சனி வரும் நவம்பர் மாதத்தில் முடியப்போவதாலும் இனிமேல் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பதே உங்களுக்கு இல்லை.
நடைபெறும் தசாநாதன் புதன் இரண்டு பதினொன்றுக்குடையவராகி ஒன்பதாம் வீட்டில் இருப்பது தனயோகம் என்பதாலும் ஒன்பது, பத்துக்குடைய சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றது தர்மகர்மாதிபதி யோகம் என்பதாலும் லக்னாதிபதியை நண்பராகக் கொண்ட புதன்தசையில் படிப்படியாக நன்மைகள் நடந்து கடனை முற்றிலுமாக அடைப்பீர்கள். வாழ்க்கை இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நல்லப்படியாக நடக்கும்.
பெயர் வெளியிட விரும்பாத பெண்
சென்னை.
 கேள்வி:
என்னுடைய திருமணத்தில் பல தடைகள். எனக்கு விருப்பமானவரை என் வீட்டில் கூறி சம்மதம் பெற்ற போதிலும் நான் விரும்பியவர் வீட்டில் பல பிரச்னைகள். அவரது பெற்றோர் எங்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நான்கு வருடங்களாக காத்திருந்த என் பெற்றோர் இப்பொழுது எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். என்      திருமணம் நான் விரும்பியபடி நடக்குமா? எப்படி அமையும்? சொல்லமுடியாத மன வருத்தத்தில், குழப்பத்தில், வேதனையில் இருக்கிறேன். குருஜி அவர்கள் தெளிவான பதில் அளிக்க வேண்டுகிறேன்.
பதில்:
பிறந்ததேதி, மாதம் வருடத்தையும் மீனராசி ரேவதி நட்சத்திரம் என்பதையும் எழுதி அனுப்பிய நீ உன்னுடைய பிறந்த நேரத்தையும் இடத்தையும் குறிப்பிடவில்லையே அம்மா.

இருந்தாலும் உன்னுடைய ராசி மீனம் என்பதால் இன்னும் சில வாரங்களில் இப்பொழுது நடந்து வரும் அஷ்டமச்சனி உனக்கு முடியும் என்பதால் இனிமேல் நடக்கும் அனைத்தும் உனக்கு நல்லபடியாகவே நடக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மிகவும் நல்ல கணவரையும் நல்ல வாழ்க்கையையும் பரம்பொருள் உனக்கு அமைத்து தருவார் என்பது நிச்சயம். வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்வுடன் இருப்பாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *