adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3A (8.9.2014)
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
டி.தெய்வநாதன்
எழும்பூர்
கேள்வி:
குருஜி அவர்களுக்கு வணக்கம். இன்று உனக்கு சந்திராஷ்டமம். எதுவும் செய்யாதே என்று ஜோதிடம் தெரிந்த என் நண்பர் பயமுறுத்துகிறார். அவர் சொன்னது போலவே அந்த நாட்களில் எனக்கு கெடுதலும் நடந்தது. நீங்களும் மாதராசிபலனில் இந்த நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள். மேலும் நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம். எனக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம்தான் கெடுதல் செய்யும் பிற்பகுதி கெடுக்காது என்கிறார் அதே நண்பர். மாலைமலரில் ஆரம்பம் முதலே தங்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தெளிவுபடுத்த  வேண்டுகிறேன்... 
பதில்:
ஒரு மனிதனின் மனதை பூமியின் துணைக்கோளான சந்திரன் கட்டுப்படுத்துகிறது என்கிறது வேதஜோதிடம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசையன்று கட்டுப்படுத்த இயலாதவர்கள் ஆவது நமக்குத் தெரிந்ததுதான்.
சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு சந்திரன் எட்டில் இருப்பது என்று பொருள். ஒரு கிரகம் எட்டில் இருக்கும்போது தனது வலிமையை இழக்கின்றது என்பதை அறிந்த நமது ஞானிகள் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் மறையும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று குறிப்பிட்டு அந்த நாட்களில் உங்களின் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகளையோ புதிய முயற்சிகளையோ நீண்ட பிரயாணங்களையோ செய்ய வேண்டாம் என  நமக்கு அறிவுறுத்தினார்கள்.
உங்கள் நண்பரைப் போலவே சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ராசியைவிட நட்சத்திரப்படி அந்த ஒருநாள்தான் சந்திராஷ்டமம் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. சந்திரன் ஒருவரின் ராசிக்கு எட்டில் இருக்கும் ஏறத்தாழ இரண்டேகால் நாட்களும் கெடுதலான நாட்கள்தான்.
உதாரணமாக ஒரு வாகன விபத்து என்பது ஒரே ஒரு நொடியில் நிகழும் ஒரு கெடுதல்தான். ஆனால் அந்த விபத்தை ஏற்படுத்தப்போகும் இரண்டு வாகனங்கள் கிளம்பும் நேரத்திலேயே கெட்டநேரம் ஆரம்பித்து விடுகின்றது. கெட்டநேரத்தின் உச்சநொடியில் விபத்து நடக்கிறது. அதற்காக விபத்து நடந்த அந்தக்கணம்தான் கெட்டநேரம். அதற்கு முந்தைய நேரம் நல்ல நேரம்தான் என்று சொல்வீர்களா?

கூடுதலாக ஒன்று சொல்கிறேன்.. சந்திராஷ்டம சந்திரனை வலிமை பெற்ற குருபகவான் பார்த்தால் கெடுதல்கள் நடக்காது. தற்போது உங்களின் மேஷம் மற்றும் மிதுன, சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த  அமைப்பு இருப்பதால் அடுத்த குருப்பெயர்ச்சிவரை இந்தராசிகளுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் செய்யாது.

6 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 3A (8.9.2014)

  1. guru paarthaal chandrashtamam valimai kuraiyum enbathu aaruthal ttharu kirathu. chandrashtama kararkal kalyanam seythu kondu vittal avarkalin nilamai enna? parikaram enna? athavathu simma raasiyum meena raasiyum inainthu vittal ?

    1. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  2. Regarding Chandrsthama effects, those born in Sthira Raasis, i.e. 1) Rishaba Raasi, Simha Raasi and Kumbha Rasi born natives, Chandrashtama augurs well. The reason being its lordship as, third, twelveth and sixth. This principle is as sixth, eighth and twelveth lords, they can either placed in the respective houses or in transit, they did not produce negative effects. Throw light on this !

  3. நன்றி தங்களின் சந்திராஷ்டமம்
    விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *