adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

தனுசு:

வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமமாக அமைவதால் உங்களில் சிலர் எதிலும் குழப்பமாக இருப்பீர்கள். மீதி நாட்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கொடுக்காத வாரம் இது. குறிப்பாக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நிறைவேறும். இந்த நாட்களில் பெண்களினால் நன்மை உண்டு. 15 -ந்தேதி இரவு 8.39 மணி முதல் 18 -ந்தேதி காலை 7.56 மணிவரை சந்திராஷ்டமம் என்பதால், நீண்டதூர பிரயாணங்கள், புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

உங்களில் சிலருக்கு அதிகாரப் பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு. வேலை, வியாபாரம் சொந்த தொழில் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். சமீபத்தில் திருமணமானவர்கள் மனைவிக்கு அவர் ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு பொருளை வாங்கித் தருவீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

யோகாதிபதி சூரியன் மூன்றில் இருப்பதும், ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதும், இரண்டில் செவ்வாய் மங்கள யோகத்துடன் உச்சத்தில் இருப்பதும் தனுசுக்கு பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் பணவரவு கிடைக்கும் மாதமாக இருக்கும். தொழில் ஸ்தானமான 10 மற்றும் நான்காம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பது, தூர இடங்களில் உங்களை நஷ்டப்பட வைக்கும் ஒரு நிலை. வெளிநாடு வெளிமாநில விஷயங்களில் சாதகமற்றவைகள் இப்போது நடக்கும். குறிப்பாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி முன்கூட்டியே பணம் கேட்பவர்களை எக்காரணத்தை கொண்டும் நம்ப வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும்.


சூரியனுடன் இணைந்த சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொழில் இடங்களிலும், வீட்டிலும் உங்களை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டும் சம்பவங்களை நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். எதையும் நீங்கள் சங்கடமாக எதிர்கொள்ளும் மாதம் இது. பிற்பகுதி மாதத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடுத்தவரின் உதவி இன்றி காரியங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம்.

பனிரெண்டாம் இடம் வலுப் பெறுவதால் வீண்செலவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும் வருமானங்களும் கிடைக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி அதிகாலை 1.37 மணி முதல் 22-ம்தேதி அதிகாலை 1.27 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537