adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

தனுசு:

ராசிநாதன் குரு ராகுவுடன் இணைந்தாலும் ஐந்தாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் அமைப்பில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. தனுசு ராசிக்காரர்களின் திறமைகள் வெளிப்படும் வாரம் இது. போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க உங்களின் திறமையை சோதிக்கும் விஷயங்களும் இந்த வாரம் உண்டு. சிலர்  உங்களுக்கு பிடிக்காதவர்களை மறைமுகமாக நோஸ்கட் செய்து ஜெயிப்பீர்கள். இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்த நல்லவைகள் நடக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். தனுசுக்கு சிறப்பான வாரம் இது.

குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்றாலும் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பூராடம் நட்சத்திர இளைஞர்கள் சிலர் மட்டும் சில விஷயங்களில் இது பாம்பா கயிறா என்று தெரியாமல் குழம்பித் தவிப்பீர்கள். நடுத்தர வயதினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் இருக்கும். நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து அது சிக்கலில் முடிந்து கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

தனுசுக்கு குறை சொல்ல முடியாத மாதம் இது. கோட்சார நிலையில் கிரகங்கள் அதிர்ஷ்டங்களை தரும் அமைப்பில் இருப்பதால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்க இருக்கின்ற நன்மைகளை அடையாளம் காட்டும் விதமாக பிப்ரவரி மாதம் இருக்கும். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் குரு வலுவான நிலையில் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கு தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருந்த எதிரிகளின் கொட்டம் ஒடுங்கும். ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்கள் கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு ஆகியவற்றை சுலபமாக ஜெயிப்பீர்கள். இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் இருக்காது.


 

சுக்கிரன் வலுவாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை, நிறைவான லாபம் இப்போது தனுசுக்கு உண்டு. பெண்களால் லாபமும், உதவியும் இருக்கும், பெண்கள் வலிய வந்து உதவுவார்கள். சிலரிடம் பெண்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள். அவரவர் தகுதிக்கேற்ப நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த உபயோகமான பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். விரய ஸ்தானம் என்று சொல்லப்படும் பனிரெண்டாமிடம் சுபத்துவ அமைப்பில் குருவின் பார்வையில் இருப்பதால் செலவு செய்து நல்லவைகளை நீங்கள் அடையும் மாதம் இது.

வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு  வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் உங்களின் பேச்சை கேட்பார்கள். வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி அதிகாலை 2.31 முதல் 6-ம் தேதி மதியம் 3.03  வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.