adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

விருச்சிகம்:

இந்த வாரம் விருச்சிகத்திற்கு சந்திராஷ்டம வாரம். தேய்பிறை அமைப்பில் சந்திரன் எட்டில் இருந்தாலும், சந்திரனுக்கு வீடு கொடுத்த புதன் உச்சமாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. இருந்தாலும் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யோகாதிபதி சூரியனும், ராசிநாதன் செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதால் நன்மைகள் நடக்க தடையில்லை. சிலருக்கு மட்டும் அலுவலகம், தொழிலில் எரிச்சலுட்டும் விஷயங்கள் நடக்கும். புத்திசாலித்தனமான வேலைகளைச் செய்யும் விருச்சிகத்தினர் நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டிய வாரம் இது.
 
இளைய பருவத்தினர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். தேவையற்ற வீண் சண்டைகள் வரும். வீட்டில் கணவன்- மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் முறைத்துக் கொண்டு இருப்பீர்கள். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவிகளைச் செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். 2,4 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம்தேதி காலை 6.59 மணி முதல் 7-ந்தேதி மாலை 5.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மையை தரும்.
 

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாயே ஆறாம் இடத்திற்கும் அதிபதியாகி, 12 ல் மறைந்து தன்னுடைய ஆறாம் பாவகத்தை பார்க்கும் நிலையில் அக்டோபர் மாதம் பிறக்கிறது. ஆனால் யோகாதிபதி குரு தன்னுடைய சுப பார்வையை அவருக்கு தந்து ராசிநாதனை வலுவாக்குகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் தீரும் மாதம் இது. குறிப்பிட்ட பலனாக கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் ராகுகேது பெயர்ச்சியின் மூலமாக, கேது மிகவும் நன்மைகளைத் தரும் பதினோராம் இடத்திற்கு வரப் போவதால், இந்த மாதத்தில் இருந்தே பணப் பிரச்சினைகள் உங்களுக்கு தீர ஆரம்பிக்கும்.
 
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத மாதம்தான். இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். அடுத்த மாதம் முதல் கேது பதினொன்றாம் இடத்திற்கு மாறுவதால்  அனைத்து விஷயங்களிலும் இந்த மாதமே வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும்.
 
பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். அதன் மூலம் மன அழுத்தமும் உண்டு. பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தனஸ்தானம் வலுவடைவதால் உங்களில் சிலருக்கு மறைமுகமான இதர வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.
 
3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 5-ம் தேதி காலை 6.59  முதல் 7-ம் தேதி மாலை 5.18 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம். 
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
 
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
 
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.