
துலாம்:
ராசியில் உள்ள கேதுவை நீச்ச செவ்வாய் பார்த்து, ராசிநாதன் நீச்சனுடன் இணைந்துள்ளதால் உங்கள் எண்ணங்களில் மாறுதல்கள் உள்ள வாரம் இது. திடீரென முகத்தை சிடுசிடுவென மாற்றிக் கொள்வீர்கள். நெருங்கிய நண்பர்களே உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள். செவ்வாய், சுக்கிரன் இணைந்திருப்பதால் மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
பெண்களுக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தாய்வழி சீதனங்கள் சொத்துக்கள் கிடைப்பதற்கான வழி பிறக்கும். வேலை விஷயமான பயணங்கள் இருக்கும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பணவரவு இருக்கும். அதேநேரத்தில் ராகு வலுவுடன் இருப்பதால் செலவு வைக்கக்கூடிய சம்பவங்களும் நடக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழியோ, வம்பு வழக்கோ வரலாம் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
துலாம்:
மாத பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையை அடைவதால் உங்களின் யோக மாதமிது. அதே நேரத்தில் அங்கே உங்களுக்கு எதிர்த்தன்மையுள்ள கிரகமான குருவும் ஆட்சியாகி இருப்பதால், பிடிக்காத ஒருவரோடு ஒரே இடத்தில். இருக்க வேண்டிய. கட்டாயத்தினை இந்த மாதம் துலாம் ராசிக்காரர்கள் உணருவீர்கள். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் உங்களுக்கு பிடிக்காத செயல்களை நீங்கள் செய்யும் செய்கின்ற மாதமிது. கோபக் காரகனான செவ்வாயும் எட்டில் இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தையும், எரிச்சலையும் உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் நடக்கும்.
எவ்வளவு நிதானமானவராக இருந்தாலும் கூட பொறுமையைக் கைவிடச் செய்யும் அளவிற்கு வம்புக்கு இழுக்கும் சம்பவங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் பேச்சிலும், செயலிலும் நிதானனமாக இருக்க வேண்டிய மாதம் இது. இது தவிர்த்து வேலை, தொழிலில் வேறு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பது யோகம் எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் துலாத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.
ராசிநாதன் வலுப்பெறுவதால் பிப்ரவரி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம்தான். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். ராசினாதனே ஆறாமிடத்தில் சுப வலு பெறுவது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு.
சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும்.
1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி காலை 10.14 முதல் 28-ம் தேதி இரவு 8.32 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.