adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கன்னி:

மார்ச் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் நீச்ச நிலையில் இருப்பதோடு, ராகுவுடன் இணைந்து கிரகண தோஷத்தையும் பெறுகிறார். இது கண்டிப்பாக ஒரு பலவீனமான நிலை. அதேநேரம் ஒரு ஆறுதலாக அவர் தன்னுடைய சொந்த ராசியை பார்ப்பது, முதலில் சோதனைகளை தந்துவிட்டு அதற்கு பிறகு அதனை நிவர்த்தி செய்கின்ற அமைப்பு. மேலும் ஒரு நிலையாக, யோகாதிபதி சுக்கிரன், சனி, செவ்வாயுடன் இருப்பதும் யோகத்தை முழுமையாக அனுபவிக்க இயலாத நிலை. கன்னி ராசிக்காரர்கள் முயற்சிக்கு பின்பு வெற்றிகளை அடைகின்ற மாதமாக மார்ச் இருக்கும். ஐந்தாமிடத்தில் இருக்கும் உச்ச செவ்வாய், மற்றும் ஆறாம் இட சனியால் விடாமுயற்சியுடன் நீங்கள் செய்யும் செயல்களுக்கு உறுதியான பலன் கிடைக்கும் மாதம் இது. மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் செயல்கள் அனைத்திற்கும் பலன்கள் உண்டு. உங்களின் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும் மாதம் இது.


இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை வாய்ப்பு,  புத்திர பாக்கியம் போன்ற  பலன்கள் நடக்கும். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்டதூர பிரயாணங்களை வேலை விஷயமாக செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ஏற்கனவே யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேருவீர்கள். தொழில் சிக்கல்கள் சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள்.

கன்னிக்கு வாழ்க்கை இப்போது முன்னேற்றப் பாதையில் இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வேலை, தொழில்துறையில் இதுவரை இருந்து வந்த போட்டிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்கப் போகிறீர்கள். இதுவரை நல்லது நடக்க ஆரம்பிக்காத சிலருக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையே இனிமேல் புதிய பாதையில் நல்ல விதமாக செல்லத் துவங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள்.

1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி இரவு 8.29  மணி முதல் 14-ம்தேதி இரவு 10.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537