adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும், யோகாதிபதி குருவும். ராசியை பார்க்கின்ற யோக மாதம் இது. ராசிக்கோ, ராசிநாதனுக்கோ குரு பார்வை கிடைக்கும் நிலையில் நல்லவைகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. அதன்படி மார்ச் மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்ப்பதும், ஏற்கனவே குருவின் பார்வை ராசிக்கு இருப்பதும் அதிர்ஷ்ட அமைப்பு என்பதால் மார்ச் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை தருகின்ற மாதமாக இருக்கும். அவரவர் வயது, இருப்பிடம் தகுதிக்கேற்றார் போல இதுவரை என்ன பாக்கியங்கள் கிடைக்காமல் தடைபட்டதோ  அந்தத் தடை நீங்கும் மாதம் இது.


சிம்மத்தினர் அந்தஸ்து, கௌரவம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களை இப்போது அடைவீர்கள். மாத ஆரம்பத்திலேயே வருமானங்களும், சந்தோஷங்களும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இருக்கும். இன்னும் சில காலத்திற்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு வெளிநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும்.

கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இப்போது அவர் மூலமாக  நல்லபலன்கள் கிடைக்கும்.  கோட்சார அமைப்புப்படி யோக காலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல் செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் நல்ல பலன்களும் நடக்கும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் இந்த மாதம்  செயலாற்றுவீர்கள்.

1,2,7,8,9,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி இரவு 8.40 மணி முதல் 12-ம் தேதி இரவு 8.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.  

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537