
கடகம்:
உங்களுக்கு நல்லது செய்யக்கூடிய குரு பத்தாமிடத்தில் ராகுவுடன் இருப்பது வேலை, தொழிலில் குழப்பங்களை ஏற்படுத்தி பின்னர் யோகங்களைத் தரும் அமைப்பு. அதே நேரத்தில் ராசிநாதன் சந்திரன் வாரம் முழுவதும் பவுர்ணமிக்கு நெருக்கமாக ஒளி நிறைந்து இருப்பதால் கவலைப்பட எதுவுமில்லை. உங்களில் பிறந்த ஜாதக வலுப் பெற்றவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வேலை, தொழில் விஷயங்களில் நன்மைகள் கடகத்திற்கு அதிகம் உண்டு.
சிலருக்கு கூட்டுத்தொழில் விஷயங்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஏமாற்றம் இருக்கும். பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் இருக்கும். பணவரவுக்கு இது ஏற்ற வாரம்தான். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கடகம்:
30 வயதுக்குட்பட்ட கடக ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் அமைப்புகளில் நல்ல அனுபவங்களை தரும் மாதமாக பிப்ரவரி இருக்கும். அதேநேரத்தில் 15 ம் தேதிக்கு பிறகே நன்மைகள் நடப்பதை உணர முடியும். மாத பிற்பகுதியில். மாபெரும் சுபர்களான குருவும் சுக்கிரனும் ஆட்சி, உச்ச நிலைகளில் பாக்கிய ஸ்தானத்தில் இணைவது. கடகத்திற்கு மிகப்பெரிய சிறப்பு. யோகாதிபதியான செவ்வாயும் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இதுவரை கிடைக்காத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெண்களிடம் உதவி கேட்டிருந்த இளையவர்களுக்கு இந்த மாதம் கேட்டது கிடைக்கும். மாத பிற்பகுதியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருங்கள். உங்களில் சிலருக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சாதாரண விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது.
எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. மனக் குழப்பத்தைத் தரும் சனி எட்டில் இருக்கிறார் என்பதை இளைய பருவத்தினர் நினைவில் கொள்வது நல்லது. வயதுக்கேற்ற வகையில் வேலை, காதல், நட்பு போன்றவற்றில் ஏமாற்றங்கள் இருக்கும். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தையால் மருத்துவச் செலவுகள் இருக்கும். தந்தையால் விரையம், தந்தையே விரையம் என்ற கிரகநிலை உள்ளது. கவனம்.
இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது கம்பெனி மாற்றம் இருக்கும். இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும் என்பதால் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது. சிலர் வேலை விஷயமாக வடக்கு திசை நோக்கி போவீர்கள். என்னதான் இருந்தாலும் சனி தாங்க முடியாத துன்பம் எதுவும் தர மாட்டார். மாத பிற்பகுதியில் நடக்கும் சனி, புதன் இணைவால் சிலர் தேவையற்ற பழக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை திசை திருப்பக்கூடிய நட்புகள் அறிமுகமாகும். எதிலும் அக்கறையும் கவனமும் தேவை. வழக்கு, கடன் தொல்லைகள், மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வேதனை போன்ற அவஸ்தைகளில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் மாதம் இது.
5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி அதிகாலை 1.14 முதல் 22-ம் தேதி அதிகாலை 1.11 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.