adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராகுவுடன் நெருங்கி இருப்பதால் மிதுனத்தினர் இந்த வாரம் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத கலக்கங்கள் வரும். சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் குழம்புவீர்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் மனநிலை இருக்கும். சுக்கிரன் ஆறாம் அதிபதி செவ்வாயுடன் இருப்பதால் பெண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. அவர்களால் வீண்பழி ஏதாவது வரலாம். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும்.

ஒன்பதில் உள்ள சனி கவனத்தை சிதற வைப்பார். வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள் என்பதால்  நிதானமும் எச்சரிக்கையும்  தேவைப்படும் வாரம் இது. குரு வலுப்பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிலருக்கு வங்கி, சிட்பண்டு போன்ற பணம் புரளும் துறைகளிலோ அல்லது பணத்தை எண்ணும் கேஷியர் போன்ற வேலையோ கிடைக்கும். அலுவலகங்களில் நல்ல சூழ்நிலை இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு தனிக்காட்டு ராஜாவாக இருப்பீர்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மிதுனம்:

அஷ்டமச்சனி விலகி விட்ட முதல் மாதமிது. வருடம் ஒரு முறை மட்டுமே நடக்கும் சிறப்பு நிகழ்வான உங்கள் யோகாதிபதி சுக்கிரனின் உச்ச நிலை இந்த மாதம் நடக்கிறது. கூடுதலாக அவருடன் குருவும் பத்தாம் இடத்தில் இணைந்திருக்கிறார். மிதுனத்தினரின் மனம் மகிழும் மாதம் இது. இதுவரை. இருந்துவந்த அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவதற்கான. எண்ணங்களும் செயல் திட்டங்களும் மனதில் வரக் கூடிய மாதம். இனி எல்லாம் நல்லபடியாக அமையும். பிப்ரவரி மாதம் உங்கள் வேதனைகளை விலக்கி முன்னேற்ற படிகளில் ஏற வைக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் புதன் எட்டில் இருப்பதால் மாத முற்பகுதி வரை எதிலும் தடைகள் இருக்கும். கிணற்றில் போட்ட கல்லாக எதையும் உணருவீர்கள். மாத பிற்பகுதியில் அனைத்தும் சரியாகும்.


 

எல்லா வகையிலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடிப்படைகள் ஆரம்பமாகும் மாதம் இது. கடந்த வருடம் இருந்த துயரங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. திருவாதிரை நட்சத்திரக் காரர்களுக்கு வருங்காலம் இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்தும் கையை மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இளையவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை.

வாழ்க்கைத் துணை மூலம் நன்மைகள் இருக்கும். சிலருக்கு துணை அமைவதற்கான ஆரம்பம் உண்டு. மனம் படிப்படியாக லேசாவதற்கான சம்பவங்கள் நடக்கும். கடன் தொல்லையால் கலங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. மேலதிகாரிகள் தொந்தரவுகள் இனிமேல் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். பணவரவிற்கு குறையில்லை. தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். வேலை, தொழில் போன்ற வருமானம் வரும் அமைப்புகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக குரு புக்தி நடப்பவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி அதிகாலை 1.48 முதல் 20-ம் தேதி அதிகாலை 1.14 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.