adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ரிஷபம்:

மூன்றாமிடத்தில் சுக்கிரன் நீச்ச செவ்வாயுடன் இணைந்து பாபத்துவம் பெறுவதால்  தேவையில்லாமல் எதையாவது செய்து வேண்டப்பட்டவர்கள் மனங்களை நீங்கள் நோக அடிக்கும் வாரம் இது.  குறிப்பிட்ட பலனாக ரிஷபத்தினர் இந்த வாரம் பேச்சிலும் கவனமாக இருக்க வேண்டியது இருக்கும். உங்களில் சிலருக்கு மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு சுமாரான நன்மைகள் உண்டு. முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும்.

சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு இது ஆறுதல் தரும் வாரம். சோதனைகளை மட்டுமே சந்தித்த சிலருக்கு இந்த வாரம் நல்லவேலை, திருமண முயற்சி வெற்றி என நற்பலன்கள் உண்டு. உங்களில் சிலர் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அம்மாவின் வழியில் நல்ல விஷயங்கள் நடக்கும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ரிஷபம்:

பிப்ரவரி மாதம் ரிஷப ராசிக்கான பலன்களை இரண்டு நிலைகளாக சொல்லலாம்.  மாத முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சனியுடன் இணைந்திருப்பதால் மாத முற்பகுதி வரை நீங்கள் எதிலும் சற்று சோம்பலாக முடிவெடுப்பதில் தயக்கம் உள்ளவராக இருப்பீர்கள். சிலருக்கு எதிரிகளாலும் பொறாமை கொண்டவர்களாலும் மாத ஆரம்பத்தில் தொல்லைகள் இருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்க்க முடியாமல் செய்வீர்கள். பிற்பகுதியில் இந்த நிலைமை மாறி ராசிநாதன் சுக்கிரன் குருவுடன் இணைந்து உச்சநிலையை அடைவதால் பதினைந்தாம் தேதிக்கு மேல் அனைத்தையும் சீர்செய்து கொள்வீர்கள். மாதம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதால் கடந்த காலங்களில் உடலிலும், மனதிலும் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்தவர்கள் உற்சாகம் அடைவீர்கள்.


ரிஷபத்தினர் இந்த மாதம் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள். ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளால் சந்தோசம் இருக்கும். எதையும் சாதிக்க முடியும் மாதம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள்  உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடுவார்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குரு வலுவாக உள்ளதால் சிலருக்கு திடீர் பணவரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும்.

கணவன்-மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். கூட்டுத் தொழில் சிறப்படையும்.  தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள்.  அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம்தான். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை 12.46 முதல் 18-ம் தேதி அதிகாலை 1.48 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளைக் கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.