adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

மீனம்:

ராசிநாதன் குருவும், யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதால் மீனத்திற்கு நன்மை தரும் வாரம் இது. இதுவரை முயற்சி செய்தும் கிடைக்காமல் இருந்தவைகள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் துணையுடன் கிடைக்கும். மீனத்தினர் சந்தோஷமாக இருக்கும் வாரம் இது. நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
 
சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. குலதெய்வ தரிசனம் கிடைக்கும். தகப்பனாரால் மனக் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள், அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும் லாபங்களும் இருக்கும்.

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

அக்டோபர் மாத இறுதியில் ஒரு நல்ல நிகழ்வாக, ராகுகேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இதனுடைய ஒரு மறைமுக லாபமாக, உங்களுடைய ராசிநாதன், குருபகவான் கிரகண தோஷம் விலகப் பெற்று, இரண்டாம் இடத்தில் இருக்க கூடிய நல்ல பலன்களை உங்களுக்கு முழுமையாக தருவார் என்பதால், பணவிஷயங்களில் இதுவரை நல்லவைகள் நடக்காத அத்தனை மீன ராசிக்காரர்களுக்கும், பொருளாதார மேன்மை கிடைக்க கூடிய நல்ல மாதமாக அக்டோபர் அமையும். பணம் வரும். தொழில் சிறக்கும். வேலை நன்றாக இருக்கும். வியாபாரம், விவசாயம் போன்றவைகளில் இனிமேல் மீன ராசிக்காரர்கள் சாதிக்க முடியும். ஏப்ரல் மாதத்திற்குள் ஏதேனும் ஒரு நல்லது, மீன ராசிக்கு நடந்தே தீரும். மாத பிற்பகுதியில் சூரியன்,  செவ்வாய் இருவரும். குருவின் பார்வைக்குள் வருவது நல்ல அமைப்பு என்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும்.
 
ஆறாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதால் சிலர் வெளிநாடு, வெளி மாநிலம் செல்வீர்கள். பிறந்தநாட்டை விட்டு வேறுநாட்டில் இருப்பவர்களுக்கு  நன்மைகள் நடைபெறும். பெண்களால் செலவுகள் உண்டு. ராகு சுபத்துவமாக இருப்பதால் அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் தொழிலில் உதவுவார்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்லவிதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம்.
 
வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.  மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நல்ல பணவரவு இருக்கும் என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் தொடர்பு கொள்வது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.
 
1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 15 -ம் தேதி காலை 5.21 முதல் 17-ம் தேதி மதியம் 2:19 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். 
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
 
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
 
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.